நேற்று மதுரை சென்று திரும்பினோம்,ஒரே நாளில்.ரைட் சகோதரர்கள் உபயம்.மனதில் கோடீஸ்வரராகவும் இக வாழ்வில் நான்கு இலக்க பணப் புழக்கத்தை அறியா எளிய மனிதராகவும் வாழ்ந்து மறைந்த என் உயிர்த் தாத்தா ராமநாத சாஸ்த்திரிகள் வம்சத்தில் வந்த நான் ஒரு நாள் விமானப் பயணம் செய்வோம் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.இந்த போஸ்டின் High Light தாய் மீனாக்ஷி என்பதால் இந்தத் தலைப்பு.ஆனால் இது ஒரு பயண அனுபவமே.Flight ஐ நான் ஒரு airbus என்றுதான் எப்போதும் கூறுவேன்.மற்ற போக்குவரத்து சாதனங்களின் வேகத்தை விட அதிகமாயும் மனதின்எண்ண ஓட்டத்தை விட மெதுவாயும் செல்லும் என்பது தவிர பயணம் பற்றிக் கூற என்னைப் பொறுத்த மட்டில் அதிக விஷயம் இல்லை.ஆனால் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பஞ்சுப் பொதியாய் நுரை நுரையாய் விரவி இருக்கும் மேகக் கூட்டத்தைப் பார்க்கும் போது மனம் சட் என்று உள்ளே போகிறது.பிரபஞ்சத்தின் எத்துணை சிறு துளி நாம்! நாம் உலக வாழ்வில் சந்திக்கும் அனைவரும் தொடர்பில் உள்ள அனைவரும் நம்மை விட்டு மறைந்து போன நம் பாசத்திற்குரிய நம் forefathers ம் நாமும் ஆத்மாவாக அந்த மேகங்கள் நடுவில் இருந்து வந்து மறுபடி அதில் ஒன்றியவர்கள்தானா? இது போன்ற போக்குவரத்து எத்துணை பிறவிகள் தொடரும்? எப்போது நிரந்தரமாக அங்கேயே தங்கும் வரம் பெறுவோம்?பகவான் க்ருஷ்ணரைத் தவிர யார் பிறப்பின் ரகசியம் அறிவார்? எந்த ஆத்மாவுடன் ஒரு பிறவியில் தொடர்பில் இருக்கப் போகிறோம் என்பதை நம் ஆத்மா தீர்மானிக்கிறதா அல்லது அந்தத் தீர்மானம் ஒரு ஆன்மாவிற்குக் கடவுளால் வழங்கப் பட்டு பூமிக்கு வருகிறோமா? "காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்றல்லவோ பட்டினத்தார் பாடினார்? அப்படி என்றால் உலக வாழ்வை எவ்வாறு நடத்துவது சரி?பயண நேரம் முழுதும் என் முன்னோர்கள் யாரும் எங்குமே போகாது வான வெளியில்,என்ன நமக்கு சற்று மேலே சுற்றிக் கொண்டுள்ளார்கள்,நேரம் வந்தால் மறுபடி ஒரு கர்பவாசம் செய்ய வரத்தானே போகிறார்கள் என்று தோன்றிய வண்ணமே இருந்தது.
இதை என் பக்கத்தில் அமர்ந்திருந்த என் மகனிடம் பகிர்ந்து கொண்டேன்."ரொம்ப feel பண்ணாதேம்மா .உன் தாத்தா இதே flight ல் jeans T shirt சகிதம் நமக்குப் பின்னாலேயே கூட உட்கார்ந்து வராரோ என்னமோ "என்றான்.Flight இறங்கும் போது மனமும் மேகக் கூட்டத்தில் இருந்து விடுபட்டு அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களுக்குத் தாவியது.அதற்கு நமக்கு அடுத்த தலைமுறை மாதிரி யாரும் உதவ முடியாது.
தூங்கா நகரம்.மக்கள் தொகை ,ஜன நெருக்கடி அதிகம்.எல்லாம் மீனாக்ஷி ஆட்சி.சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து போகும் மக்கள்.மதுரை மல்லி.சில க்ஷேத்ரங்கள் பற்றி கடவுள் அழைப்பு இருந்தாலன்றி அந்த மண்ணை மிதிக்கவும் இயலாது எனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். எந்தப் புனிதத் தலத்திற்குத்தான் அந்த வார்த்தை பொருந்தாது?இதோ தெரு முக்கில் உள்ள வேம்புலித் தாயை அவள் அழைத்தாலன்றி தரிசனம் செய்ய முடியுமா என்ன? நேற்று மீனாக்ஷி கருணை மிகக் கொண்டு அழைத்தாள் .செல்ல முடிந்தது.மக்கள் வெள்ளம்தான் எப்பவும் கோவிலில்.மதியம் குறைந்த நேரம்தான் அம்மனுக்கு rest .நடை 4 மணிக்கே மறுபடி திறக்கப் படுகிறது.சும்மா பள்ளிக் கட்டுரை போல எழுதிக் கொண்டிருப்பதாய் நினைக்கிறீர்களா?அதுதான் இல்லை.இதற்கு மேல் எழுத்தில் வெளிப் படப் போவது மனசு.
தர்ம தரிசனத்திற்காக எளிய மக்கள் சிவனே (மீனாக்ஷியே என்று வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள்) என்று கால் கடுக்க நிற்கிறார்கள்.ஆனால் பணம் படைத்தவர்கள் 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு 90 சதவிகித மக்களை முந்திக் கொண்டு மூலஸ்தானத்திற்கருகில் சென்று விடுகிறார்கள்.அதற்கும் அரை மணியாவது க்யூவில் நின்றே ஆக வேண்டும் என்பது வேறு கதை.நாங்களும் flight ஐ miss பண்ணி விடுவோம் என்ற போலி சமாதானம் சொல்லிக் கொண்டு அதே தவறைச் செய்தோம்.உண்மையில் தரிசனம் செய்யணும் என்றால் அவசரமாகப் போகக் கூடாது.யார் இந்தக் காசு வாங்கிக் கொண்டு தரிசனம் செய்விக்கும் முறையைத் தோற்றுவித்த மஹானுபாவர் தெரியவில்லை.இதோ அருகில் வந்து விட்டோம்.இரண்டடி உயரத்தில் ரம்யமாக சக்தியின் உருவமாக விளக்கின் ஒளியில் அருளை அள்ளி வழங்கிக் கொண்டு மதுரைக்கு மட்டுமா உலகிற்கே அரசியாய் நின்று கொண்டிருக்கும் மீனாட்சியைத் தரிசித்த கணம் ,இந்தத் தரினத்திற்காக எது செய்தால்தான் என்ன என்றுதான் தோன்றியது.ஆனால் அவள் நம் எல்லோருக்கும் தெய்வம் அல்லவா? ஒரு அரசன் கட்டிய நிஜக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னால் வர முடியாது என்று சிவபெருமான் கூறி அருளின கதை நமக்குத் தெரியாதா?ஏன் அப்படிச் சொன்னார்?பூசல நாயனார் கட்டின மனக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அதே திருநாளில் செல்ல வேண்டும் என்பதற்காக.தந்தைக்கே அந்தப் பரிவு என்றால் மீனாட்சித் தாய்க்கும் அந்தப் பரிவு எளியவர் மேல் இருக்காதா என்று தோன்றியது.ஆனால் பணம் தன் வேலையைக் காட்டாது எல்லோரும் அவள் கடைக் கண் பார்வை பெற என்ன வழி?
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS