தலைப்பு ஆங்கிலம் ஆனாலும் போஸ்ட் தமிழில்தான்.நிச்சயமாக நான் சென்னை traffic பற்றி பேசப் போவதில்லை என உங்களுக்கே தெரிந்திருக்கும்.சில பேருக்கு சீரியசாகப் பேசினால்தான் நிம்மதியான தூக்கம் வரும்ஆழ்ந்து யோசித்தால் ,சீரியஸான மனிதர்கள் எளிமை ஆனவர்கள்.அவர்கள் குழப்பம் அடைவதில்லை.அவர்கள் மனதில் இப்போது சாலைகளில் பெருகி உள்ளது போன்று அதிகப் போக்குவரத்துக்கள் இருக்காது.இரண்டு வாகனங்கள் உரசிக் கொள்வது போல் உரசல்கள் இருக்காது.,ஐந்து விரல்கள்,ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்,இரண்டு நாள்கள்,எதுதான் ஒன்று போலுள்ளது,இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரி இருக்க?யாரும் உசத்தி,தாழ்த்தி என்று கூற வரவில்லை.மனிதன் ஒரு மிக அற்புதமான creation .வித்தியாசம்தான் அழகும்,ஆச்சரியமும் கூட.அப்படி என்றால் போஸ்ட் என்னதான் சொல்லப் போகிறது,எதற்கு இந்த எழுத்து?சிந்துபைரவி படத்தில்,ஜனகராஜ் கதாபாத்திரம் ஒன்று வரும்.அதற்கு,ஒரு உண்மை தெரிந்து அதைத் திரித்துப் பேசுபவர்களைக் கண்டால் தலை வெடிப்பது போல் ஆகி விடும்.அது மாதிரி,சகமனிதர்கள் பற்றி யோசித்து அதைப் பதிவு செய்யாமல் விடுவது எனக்கும் சாத்தியம் இல்லை.
உண்மையில் குழப்பங்கள் அற்றதுதான் வாழ்க்கை.தெளிவாக,நம் பிராரப்த கர்மத்திற்கேற்ப ஒரு வாழ்வே நம் அனைவருக்கும் வந்தமைகிறது.அப்படி நீரோடை போன்ற வாழ்வில் தோன்றும் சலனங்களுக்கு நாமும் நம் நினைவுமே பொறுப்பு.ஒரு ideal வாழ்வு வாழ முயற்சியாவது செய்யத்தான் வேண்டும்.இல்லை என்றால் மனிதப் பிறவி தந்த பலன் ஏதும் இல்லை.இன்று என்னமோ மனம் தெளிவற்று உள்ளது.நேற்று நன்றாக இல்லையா என்றெல்லாம் பேசுகிறோம்.நேற்று சாப்பிட்டோம்,இன்று பட்டினி கிடக்கலாமே ?ஏன் இருப்பதில்லை?நேற்று குளித்தோம்.இன்றும் எதற்கு?அப்படி ஆனால் நமக்கே தெரிகிறதல்லவா?தினப்படி செய்ய வேண்டிய சில உண்டென்று.அவற்றுள் முதன்மை ஆனது மனத்தை செம்மையாக வைத்துக் கொள்வது.பெருமை,மேன்மை என்று மை யில் முடியும் பல சொற்களில் தலையாயது செம்மை.மஹாகவி பாரதியார்,நெஞ்சில் உரமும் இன்றி பாட்டில் சொல்கிறார்,சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காராடி கிளியே செம்மை மறந்தாரடி என. அவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தை.
சின்னஞ் சிறு கதைகள் பேசி,தேடி சோறு நிதம் தின்று வாழும் வாழ்வை பாரதி பழித்தால் அதைப் படிக்க மட்டும்தான் முடியுமா நம்மால்?ஏன்?ஏன் பாரதியும் வள்ளுவனும் டைனோசர் போல extinct ஆன ஜீவன்களா?அந்த மாதிரி இருக்க முயல்பவர்களை ம்யூஸியத்திற்கு அனுப்பி விடலாமா?ஒரு நாளில் எதற்காக chit chat பண்ண வேண்டும்?அதில் என்ன கிடைக்கும்?குழந்தைகளுக்கு ஏன் ideal மக்கள் பற்றி மட்டும் சொல்லக் கூடாது?கார்ட்டூன் காண்பித்து,violence பிரதானமாக இருக்கும் குஸ்தி சானல்களைக் காண்பித்து ஏன் சோறூட்ட வேண்டும்?நில்லாமல் ஓடி வந்த,மலை மேல் ஏறி மல்லிப்பூ கொண்டு நமக்கெல்லாம் தந்த நிலா மறைந்தா விட்டது?அப்போது,மாறியது நிலாவா,நாமா?மாற்றியது கடவுளா,நம் மனமா? அவள் அல்லது அவன் கல கல எனப் பேசும் டைப்.மனசில் ஏதும் இருக்காது என்று சில பேருக்கு நற்சான்றிதழ் வழங்குவோம்.எனக்கு உடன்பாடில்லை.மனதில் ஒன்றும் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம்.உள்ளிருப்பதே வெளி வரும்.அகத்தின் அழகையே முகம் காட்டும்.வெளியில் எக்கச்சக்கமாகப் பேசுபவர்கள் மிக நல்லவர்களாக இருக்கலாம்.ஆனால்---அவர்கள் ஆழ் மனதும் traffic நிறைந்ததே.மனதில் போக்குவரத்து குறைந்தால் ஆழமற்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவது தானாக நின்றே தீரும்.
ஆழமான விஷயம் ஒன்றுதான்.அது பற்றி பேசினால் போஸ்ட் ஆன்மீக வேஷம் போட்டுக் கொள்ளும்.எனக்கு முழுமையாய்த் தெரியாத ஒன்று பற்றி நான் என்ன எழுத?சில சமயங்களில் நம்மால் deal செய்ய இயலாத அல்லது அவ்வாறு நாம் எண்ணுகிற,சுருங்க கூறின் நமக்கு அப்பாற்பட்ட சக்தியால் சில நிகழ்வுகள் நம் அனைவர் வாழ்விலும் நிகழ்கின்றன. கொஞ்சம் நிதானமாக யோசித்தால், அவற்றை நம்மால் என்ன செய்ய முடிகிறது,சொல்லுங்கள்! அதைக் கடப்பது தவிர?புலம்பி வலிமை தொலைப்பதற்கு பதில்,எனர்ஜியைத் திரட்டி அமைதியாக முயலலாம்.இன்னொன்று.சொன்னால் சுயநலவாதி போல் தெரிவேன்.பரவாயில்லை.வேறு யார் வாழ்விற்கும் நாம் பொறுப்பில்லை என்பதே கலப்பற்ற உண்மை.மனதின் போக்குவரத்துக்கு யார் காரணம் என்றாலும் அவர்களை,அந்த எண்ணங்களை ரெட் லைட் போட்டு நிறுத்தியே ஆக வேண்டும். நாம் யார் பிரச்சினையையாவது தீர்க்கிறோம் என்று நினைப்பது மாயை.நிச்சயமாக மாயை.பிறந்த குழந்தை பாலுக்கழுவது கூட தன் பசியைத் தீர்த்துக் கொள்ள அது செய்யும் பிரயத்தனம்.யாரும் நம்மை நம்பி இல்லை.நாமும் யாரையும் நம்பி இல்லை.குழந்தை முதல் முதியவர் வரை அவரவர் பிரச்சினையை அவர்களேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.கடவுள் அதற்கு அருள வேண்டும். சம்பந்தம் இல்லாது சாலையில் சும்மாவேனும் வாகனங்கள் போனால் அவசியத்திற்காகப் பிரயாணிப்பவர் எப்படி செல்வது?அதே விதிதான்.மனதில் அனாவசிய போக்குவரத்து ஏற்பட்டால் நம் உண்மையான பயணம் நிதானப் படும்.வேண்டாமே?
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS