இன்று நவம்பர் 9ம் தேதி, 2016. நேற்று இரவு, இனி 1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். வெளியில் வந்து கொண்டிருப்பது பதுக்கப் பட்ட பணமா, மனிதர்களின் முகமா? இத்தனை பெரிய நாட்டில், காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை உள்ள, 1000 ரூபாய் நோட்டை, கண்ணால் மட்டும் பார்த்துள்ளவரிடம் இருந்து, அதை 10 பைசா போல அனாயாசமாய் பயன்படுத்துபவர் வரை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினையை, சொந்தப் பிரச்சினை போல் எடுத்துக் கொண்டு அமைதி தொலைப்பவர்களை வருத்தத்துடன் நோக்குகிறேன். தொலைக்காட்சி சேனல்களில் பேசும் மக்கள் முகங்களில் பரபரப்புக்காக, ஒப்புக்காகப் பேசும் தன்மையையே பார்க்கிறேன். புஜ் பூகம்பத்தில், சுனாமியில் ஒரு நொடியில் எல்லாம் மண்ணானது. இப்போ மோடி அவர்கள் ரூபாயைக் கொளுத்தவா சொல்லி இருக்கிறார்? மாற்றிக் கொள்ளலாம் என்றுதானே சொல்கிறார்? நேற்றிரவு ஏ டி எம் அனைத்தின் முன்னும் வெகு நீள க்யூ. ஏன் நம்மால் பொறுமை காக்கவே முடிவதில்லை?
நாலு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதையும், விமானம் காணாமல் போனதையும், விவசாயிகள் தற்கொலையையும் எங்கோ நடக்கும் செய்தியாக மட்டும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு டின்னர் சாப்பிடும் கூட்டம்தான் நாம். குழந்தைகள் கார்ட்டூன் சானல் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது போல் நமக்கு செய்தி சேனல்கள். ஏ டி எம் முன்னால் நின்றவரில் பாதிப்பேருக்கு பதட்டம். மீதிப்பேர் வேண்டுமானால் தேவைக்காக நின்றிருக்கலாம். எப்போது கற்போம்? வாழ்வை ஏன் பரந்த நோக்கில் பார்க்க முடியவில்லை?யாரோ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நான் கஷ்டப் பட்டு விடக் கூடாது. "தானும் தன் சுகமும் பெரிது" என நீ நினைக்க மாட்டாயா என்று கேள்வி எழும் . சரியான கேள்விதான். தனக்கு மிஞ்சி தானதருமம் என்ற வாக்குப்படி,நம்மை முதலில் கொள்வது மன்னிக்க இயலாத குற்றம் அல்லதான். ஆனால், வரையறை உள்ளது. பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சில சிரமங்களுக்கு உள்ளானவர்களைப் பட்டியல் இடுகிறேன். கல்யாணங்கள் நடக்கும் வீடுகள், மருத்துவ விடுதியில் யாரையாவது சேர்த்து விட்டு பணம் பெருமளவில் கட்ட வேண்டியிருப்போர், இழப்பு நடந்த வீடுகள் இவர்களெல்லாம் எத்தனை கஷ்டப் படுவார்கள்?அவர்கள் எல்லாம் கூட அரசாங்கத்தைத் திட்டினால் தப்பு. நாட்டின் ஒட்டு மொத்த நலன் கருதி எடுக்கப் பட்ட நடவடிக்கை, தங்கள் இக்கட்டின் போது மாட்டியதே என்று வருத்தம் வேண்டுமானால் அடையலாம். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் என்று வள்ளுவர் அதைத்தான் கூறுகிறார். அவ்வாறெனில் இந்தக் குறுகிய காலத்தில், எந்த முக்கிய நிகழ்வுகளும் இல்லை என்பவர் சந்தோஷம் அல்லவா பட வேண்டும்? நமக்கு ஏன் நன்றி இல்லை? இறையிடமும் இயற்கையிடமும்!
இயற்கைப் பேரழிவுகளை கண் முன்னால் பார்த்தவர்களுக்குத் தெரியும், மறுநாள் எதுவும் நடக்கலாம் என. ஒலிம்பிக்கில் வெள்ளி வாங்கின சிந்துவுக்குத் தெரியும் கடைசி நொடி எத்துணை முக்கியம் என. என் ஆட்டிஸக் குழந்தையின் 28 வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடின எங்கள் குடும்பத்திற்குத் தெரியும் 28 வருஷங்கள்,28 நொடிகளாய் ஓடும், எந்தப் பெரிய அற்புதங்களையும் காணாமல் என. எதற்குப் பதட்டம்? பதறினால் சுனாமி வராதா? பதறினால் சிந்துவுக்கு வெள்ளிக்கு பதில் தங்கம் கிடைத்திருக்குமா இல்லை வெள்ளியும் இல்லாது போயிருக்குமா? பதறினால், என் ராகவன் பேசி இருப்பானா? என்ன தெரிகிறது? விலக்க வேண்டியது பயம். விதைக்க வேண்டியது நம்பிக்கை. ஆனால் என்ன செய்கிறோம்? எதற்கெடுத்தாலும் பயம் கொள்கிறோம். எல்லாரையும் சந்தேகப் படுகிறோம். பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் என்ன ஆகும் என்று ஏன் பயம்? இடுப்பு பிடிக்க ஆள் இல்லாதவர் கவலைப் படுவதில்லை. தும்மினால் கூட ஓடி வர நாலு பேர் உள்ளவர்கள் அந்த நலம்விரும்பிகளை நம்புங்கள். அரசாங்கத்தை நம்புங்கள். நாளைப் பொழுதை நம்புங்கள். அதை நமக்களித்த கடவுளை நம்புங்கள். பயம் ஒரு நோய். நோயுடன் உங்களை அணுகுபவர்களுக்கு தைரியத்தை மருந்து போல் கொடுங்கள். கால் நோவுடன் ஒருவர் வந்தால் மருத்துவரும் சேர்ந்து " உன் கால் நோகிறதே" என அழுவதா சரியான தீர்வு? முதியவர்கள் பாவம் என்கிறார்கள். என்ன பாவம்? உதவ யாரும் அற்ற முதியவர்கள் வேண்டுமானால் பாவம். அது கூட உதவ ஆயிரம் நல்லவர்கள் உள்ளார்கள். குடிகாரக் கணவன் அறியாது, அரிசிப் பானையிலும் புளிப்பானையிலும் சிறுவாடு சேர்த்துவிட்டு, அதை மாற்ற அந்தக் குடிகாரக் கணவனையே நாட வேண்டிய நிலையில் உள்ள இந்தியாவின் ஏழைத் தாய்க்குலம் உண்மையில் பாவம். அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏ சி அறைவாசிகள் புலம்பினால் அது அவர்கள் தேர்வு. வினாத்தாளில் சுலபமான கேள்விகளைத் தேர்ந்தெடுக்க பள்ளியில் இருந்தே பழகிய நமக்கு, வளர்ந்த பின் எளிய வழிகளை வாழ்க்கை பாதையாய்த் தெரிவு செய்ய என்ன குழப்பம்? சக்கனி ராஜ எனத் துவங்கும் கரஹரப்ரியா கீர்த்தனையில் தியாகராஜ ஸ்வாமிகள் பாடுகிறார், "ராஜபாட்டை போன்ற அகலமான வீதிகள் உள்ள போது ஒரு சின்ன சந்தை தேர்ந்தெடுத்து அதில் பயணிப்பேனா" என்கிறார். 2026ம் வருஷம் இந்தக் கட்டுரையை யாரேனும் படிக்க நேர்ந்தால்,இது எவ்வளவு முக்கியமற்ற விஷயமாகிப் போயிருக்கும்!