பூமித் தாயின் மடியில் வந்து விழுந்த கணம் முதல் நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் உறவுதான்.எல்லாரும் உறவுதான்.நம் பிறப்பு விளைவது ஒரு புனிதமான உறவால்.நாம் கர்பக்ருஹத்தில் 9 மாதம் குடி இருக்க ஜீவித்திருக்க முடிவது அம்மா என்ற இணையற்ற உறவால் . மனத்தகத்து ஆத்மாவாய் வீற்றிருக்கும் இறைவனுடன் ஏற்படுவது ஒரு உறவு, இயற்கை அன்னையுடன் ஏற்படுவதொரு உறவு ,நமக்குப் பிறவி தந்தவர்களுடன் ஒரு உறவு ,நம் உடன்பிறப்புகளாக இறைவன் அனுப்பி வைத்துள்ள ஜீவன்களுடன் ஒரு உறவு ,நாம் தேர்ந்தெடுக்கும் துணையுடனொரு உறவு ,நம்மைக் கருவியாக்கி ஆண்டவன் விளையாடியதால் பூமிக்கு வர சந்தர்ப்பம் பெற்ற நம் உயிரினும் இனிய நம் குழந்தைகளால் ஒரு உறவு,நம் அறிவுக் கண் திறக்கும் ஆசானுடனொரு உறவு ,வாழ்வு முழுதும் எதிர்பார்ப்பே அற்றுக் கூட வரும் நண்பர்களால் ஒரு உறவு என என்னைச் சுற்றிலும் மிக அழகிய உறவுகளே இருக்கக் காண்கிறேன்.பின் எந்த நேரம் ஒரு திருடன் போல் நமக்குள் மனச் சஞ்சலங்கள் நுழைகின்றன?எந்த வயதில்?நமக்குத் தெரிந்து அது நடக்கிறதா?அல்லது தெரியாமல் நடக்கிறதா?அதற்கு வேறு யாரும் காரணமா,நாமேதானா? ஒருவரை வெறுக்கலாம் என யார் சொல்லித் தருகிறார்கள்?குட்டிக் குழந்தை யாரைப் பார்த்தாலும் சிரிக்கிறதே?அந்த சிரிப்பு எப்போது மாறுகிறது?அதில் எப்படி விஷம் கலக்கிறது?
யாரையும் வெறுக்காமல் ,எந்த மனத்தாங்கலும் கொள்ளாமல் நீரோட்டம் போல வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு வாழ்ந்து முடித்தவர்கள் இருக்கிறார்கள்.அப்படி ஒருவரை சந்திப்பதே அபூர்வம்.அவருடன் சில ஆண்டுகளாவது தொடர்பில் இருந்திருந்தால் அது பாக்கியம்.என் பெரிய பாட்டி(என் அம்மாவின் அம்மா)அப்படி ஒரு அதிசயப் பிறவிதான்.என் மாமா தன் மெயிலில் Negative affinity என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார்.முரண்பட்ட கருத்துக் கொண்ட அந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து உருவான சொல் தொடர் மிக அழகாக இருந்தது.Affinity என்பது ஒரு ஈர்ப்பு.சிலரிடம் அது நமக்கு ஏற்படும்.Negative affinity க்கு எதிர்மறை ஈர்ப்பு எனப் பொருள் கொள்ளலாம்.அது யாரிடமும் ஏற்படாதிருந்தால் நலம். ஆனால் பொதுவாக மற்றவர் செயலுக்கு எதிர் வினையாகவே நாம் பெரும்பாலும் ஒருவர் மேல் விருப்பையும் வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறோம்.
சிலர் மிகச் சுலபமாக மற்றவர் பற்றி எடை போடுவதும் கருத்து ஏற்படுத்திக் கொள்வதும் அதை மிகக் கடுமையாய் வெளிப் படுத்துவதும் ஏன் புரியவில்லை. Casual ஆக நாம் பயன்படுத்தும் இன்னொரு வாக்கியம்,'தப்பா எடுத்துக் கொள்ளாதே'.தப்பாக ஏதோ இருந்தால் தப்பாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.குற்ற உணர்ச்சி உள்ளவர்கள்தான் அடிக்கடி எந்த கட்டுப்பாடும் அற்று பேசிவிட்டு மற்றவரிடம் தவறாக நினைக்க வேண்டாம் என வேண்டுகிறார்கள்.சரியான எண்ணங்கள் கொண்ட ஒருவரை ஏன் தவறாக நினைக்கப் போகிறோம்?சரி, ஏன் தவறாக யோசிக்க வேண்டும்? மனதுகளைப் படிக்கும் சக்தி அற்று உள்ள நாம் எதற்காக ஊகங்கள் செய்து கொள்ள வேண்டும்?எளிமையாக,பறவை போல லகுவாக இருந்து விட்டுப் போகலாமே?யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றெல்லாம் ஏட்டில் படிக்கிறோம்.ஆனால் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்ட எண்ணங்களுடன்தான் அடுத்தவரை அணுகுகிறோம்.Preconceived notions,we say in English.தவறு மற்றவரிடம் இல்லை.அவரவர் மனதில் இருக்கிறது.Let us just get out of wrong thinking.உலகமும் உறவுகளும் எவ்வளவு அழகானவை என விளங்கும்.நாம் வாழ்வதை அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது.யாரையும் தவறாகவே நோக்காத பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தைகள் better persons ஆக இருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆனால் அதைத் தாண்டி peer pressure ,outside influence எல்லாம்தான் உள்ளது.தினம் சில நொடிகள் உள் நோக்கிய பயணம் செய்வதும் பெருமளவில் உதவும்.Let us not go to bed any day with an argument unsettled.அதே போல் மழைக்குப் பின் பளிச்சென வெளிவாங்கும் நிர்மலமான வானம் போன்ற தெளிந்த மனதுடன் ஒவ்வோர் நாளும் துயில் எழுவோம்.நன்றாகப் பூட்டிய இடத்தில் திருடன் நுழைய முடியுமா?தவறான எண்ணங்கள் நுழைய முடியாது தாழிடப் பட்ட மனத்தில் கீழான எண்ணங்களும் நுழைய முடியாதுதானே?
ரஞ்ஜனி த்யாகு

Mother Protects