இது சென்ற போஸ்டின் தொடர்ச்சி.அனாவசியமான பேச்சுகளைத் தவிர்ப்பது பற்றிய என் கருத்துக்கு இரண்டுதோழர்கள் இரு வேறு கருத்துக்கள் கூறி உள்ளனர்.சிறப்பாக மனதில் உள்ளதை சொல்லத் தெரிந்தவர்,அதை நன்கு கேட்கக் கூடியவர்,பேசப் படும் உயர்ந்த கருத்துக்கள் ,பேசப் படும் சூழ்நிலை இவையெல்லாம் சரியாக அமைந்தால் அது நல்ல communication,அது போன்ற உரையாடல்கள் அவசியமே என்று ஒருவரும் எப்படி இருந்தாலும்வார்த்தைக் குறைப்பு நலமே என்று இன்னொருவரும் சொல்கிறார்கள்.முதல் கருத்துப் படி நல்ல உரையாடல் நடக்கிறதா என்றால் என்னளவில் இல்லை என்பதே பதில்.கேட்பவர்கள் மிகக் குறைவான பேர்தான்.கேட்கப் படுவதை விரும்புவோர் எண்ணிக்கையே அதிகம். பயனற்ற செய்திகளை விடுத்து வேறு விஷயம் மட்டும் பேசுவோர் பல சமயங்களில் வேற்று க்ரஹ மனிதர்கள் போல் நோக்கப் படுகிறார்கள்."இன்று என்ன சமையல்,உன் பையன் எப்படி இருக்கிறான்,உன் பெண் புக்ககத்தில் எப்படி உள்ளாள் ,அலுவலகத்தை நேரத்தில் சென்றடைந்தீர்களா ,ஏன் உங்களுக்கப்புறம் வேலையில் சேர்ந்தவருக்கு முதலில் ப்ரமோஷன் வந்தது "இதெல்லாம் விட்டால் பேச வேறு ஏதும் இல்லையா என்ன?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவதொரு கற்பனை பதில் சொல்லிப் பாருங்களேன்.அந்த பதில் எதுவானாலும் கேள்வி கேட்டவருக்கு அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.அப்போ அந்தக் கேள்விகளின் அர்த்தம்தான் என்ன?
இந்த ஒரு சில மாதங்களில் பல முறை யோசித்து விட்டேன் சிலருடன் நானே சென்று உரையாட முயல்வது அவசியம்தானா என்று.சரி ,உரையாடுவது நம்மை இன்னும் யோசிக்க வைக்கும் வேறொருவரின் பார்வை எப்படி இருக்கிறது என்று தெரியும் என்பதெல்லாம்தான் பேச்சின் நோக்கம்.எனக்குத் தெரிந்த ஒருவர், அவரிடம் என்ன பேசினாலும் " இல்லேம்மா " என்றுதான் மறுமொழி கூறத் தொடங்குவார்.எதற்கும் மாற்றுக் கருத்தே அவரிடம் இருக்கும்.ஒட்டிய பேச்சே கிடையாது.அதாவது பரவாயில்லை.Indifferent ஆக இருப்பது இன்னும் மோசம்.எத்தனையோ பேர்களில் ஒருவர் வேண்டுமானால் நம் அலை வரிசையில்
இருக்கலாம்.பேசலாம்.எல்லோரையும் ஒரே மாதிரியான உரையாடல் interest பண்ணுவதில்லை.அதில் ஆச்சரியமும் இல்லை.ஆனால் நம்மை எந்த மாதிரியும் சலனப் படுத்தாத செய்திகள் பற்றியும் நம் அறிவிற்கப்பாற் பட்டவை பற்றியும் என்ன பேசுவது?எதற்காகப் பேசுவது?அதனால்தான் தோன்றுகிறது,communication தேவையா என்று.ஐந்து நிமிட உரையாடலானாலும் (எல்லா வகை communication ஐயும் உள்ளடக்கியது உரையாடல் என்ற வார்த்தை) அது நம்மை சிந்திக்கத் தூண்டினாலோ மகிழ்ச்சியளித்தாலோ அன்றி பேச்சு அல்லது எந்த உருவில் செய்யும் உரையாடலும் வீணே.
ரஞ்ஜனி த்யாகு
தப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்ளப் படும் மற்றொரு விஷயம் நகைச் சுவை.நாலு பேர் உட்கார்ந்து பேசினால் எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு செய்தியோ விமர்சனமோ பரிமாறிக் கொள்ளப் பட்டால்,அது சிரிப்பையும் வரவழைத்தால் அதன் பேர் நகைச் சுவை.மற்றதன் பேர் கிண்டல்.அது தவிர்க்கப் பட வேண்டியதே. .மற்றவரின் அந்தரங்கங்களை ஐ விமர்சித்து அதை ஒரு ஜோக் போல எண்ணி சிரிப்பதெல்லாம் நன்றாகவா உள்ளது?.எப்படி நல்ல communication வளரும்?அடுத்தது-ஒருவர் நமக்குக் கூறும் செய்தியை கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது உணர்ந்தாலும் அதைப் பற்றி அலட்சியம் காட்டுதல்.இதை எல்லாம் எழுதினால் சம்மந்தப் பட்ட நபர்கள் வருந்துவார்களோ என்று எண்ணுகிறேன்,ஒரு சமயம் அவர்களிடம் இந்தக் குணங்கள் இருப்பின்.ஆனால் சொல்லத்தான் விரும்புகிறேன்.ஒரு செயல் உண்டென்றால் அதற்கு விளைவு உண்டு-ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு பதில் உண்டு என நினைத்தே பேச விரும்புபவர்களிடம் பொதுவாக தொடர்பு கொள்வோம். Basic courtesy demands that acknowledgement.நீங்கள் அது போல் நினைக்கவில்லையா? Here again I don't mean the feedback you could give to the stuff I write in my blog.தினப்படி நாம் செய்து கொள்ளும் சாதாரண உரையாடல்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.நேரம் இல்லை,ஞாபகம் இல்லை என்பது indifference ஐயே காட்டுகிறது.நிமிர்ந்து நோக்காமல் பேசுவது,கண்ணைப் பார்க்காமல் பேசுவது ,உதட்டளவிலேயே எப்போதும் பேசுவது தொலைபேசி அழைப்புகள் அலைபேசி,மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகளை receive செய்வது மட்டுமே நம் வேலை என்ற நினைவு எல்லாம் நல்ல உரையாடல் நிகழத் தடையே.அர்த்தமற்ற ஆயிரம் செய்திப் பரிமாற்றங்கள் 24 மணி நேரமும் smart phone மூலம் நடக்கும் உலகில் உண்மையான உபயோகமான communication க்கு நேரம் கிடைக்காதுதான்.
இந்த ஒரு சில மாதங்களில் பல முறை யோசித்து விட்டேன் சிலருடன் நானே சென்று உரையாட முயல்வது அவசியம்தானா என்று.சரி ,உரையாடுவது நம்மை இன்னும் யோசிக்க வைக்கும் வேறொருவரின் பார்வை எப்படி இருக்கிறது என்று தெரியும் என்பதெல்லாம்தான் பேச்சின் நோக்கம்.எனக்குத் தெரிந்த ஒருவர், அவரிடம் என்ன பேசினாலும் " இல்லேம்மா " என்றுதான் மறுமொழி கூறத் தொடங்குவார்.எதற்கும் மாற்றுக் கருத்தே அவரிடம் இருக்கும்.ஒட்டிய பேச்சே கிடையாது.அதாவது பரவாயில்லை.Indifferent ஆக இருப்பது இன்னும் மோசம்.எத்தனையோ பேர்களில் ஒருவர் வேண்டுமானால் நம் அலை வரிசையில்
இருக்கலாம்.பேசலாம்.எல்லோரையும் ஒரே மாதிரியான உரையாடல் interest பண்ணுவதில்லை.அதில் ஆச்சரியமும் இல்லை.ஆனால் நம்மை எந்த மாதிரியும் சலனப் படுத்தாத செய்திகள் பற்றியும் நம் அறிவிற்கப்பாற் பட்டவை பற்றியும் என்ன பேசுவது?எதற்காகப் பேசுவது?அதனால்தான் தோன்றுகிறது,communication தேவையா என்று.ஐந்து நிமிட உரையாடலானாலும் (எல்லா வகை communication ஐயும் உள்ளடக்கியது உரையாடல் என்ற வார்த்தை) அது நம்மை சிந்திக்கத் தூண்டினாலோ மகிழ்ச்சியளித்தாலோ அன்றி பேச்சு அல்லது எந்த உருவில் செய்யும் உரையாடலும் வீணே.
ரஞ்ஜனி த்யாகு
Mother Protects
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக