வியாழன், 14 மே, 2015

எழுத்து



மே மாதத்தின் முதல் எழுத்து.சென்ற வாரம் சற்றே slow ஆகி விட்டேன்.Blog எழுதுகிறேனா எல்லோரையும் வாக்குவாதத்திற்கு அழைத்து அதில் இன்பம் காண்கிறேனா என்று சந்தேகம் வந்து விட்டதே காரணம்.கருத்துப் பரிமாற்றங்கள் பலன் தரும் செயலா ,தெரியவில்லை.பொதுவாக யாரும் சொல்லி நம் எண்ணங்களை மாற்றிக் கொள்ள மனித மனம் விரும்புவதில்லை.இந்த வாழ்க்கையின் goal இதெல்லாவற்றையும் விடப் பெரிய ஏதோ ஒன்று.எப்படிப் பட்ட வாழ்வு வாழ்பவரும் கடைசியில் அடைய வேண்டிய -- விரும்புகிற இலக்கு ஒன்றுள்ளது.அதற்கு நம்மைத் தயார்ப் படுத்துவதாக நாம் புரியும் மற்ற செயல்கள் இருக்கலாமே அன்றி காலம் வெட்டியில் கழிந்து விடக் கூடாது.இது எனக்கு நானே எழுதிக் கொள்ளும் கடிதம் போலத்தான்.Sustained interest ஒரு விஷயத்தில் வைத்துக் கொள்வது எத்துணை சாத்தியம் .?எழுதுவது கூட அப்படித்தான் என்று உணர்கிறேன்.வைரமுத்து மாதிரி,வாலி மாதிரி நினைத்தால் எழுத முடியும் வரம் வாங்கி வருபவர்களுக்கு தினம் சொல்ல ஏதோ செய்தி உள்ளது.ஆனால் சாமானியர்களுக்கு?எழுத வேண்டும் என duty மாதிரி செய்தால் ஒன்றும் எழுத வராது.மேலும் தான் என்ற எண்ணத்தை அவ்வளவு சுலபமாகக் கடக்க முடிவதில்லை. முயற்சிப்பதாய் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.எனக்கு நானே எழுதிக் கொள்வதாய் சொன்னாலும் யாரேனும் படித்துக் கருத்து சொன்னால் சந்தோஷமாகத்தானே இருக்கிறது?யார் படிக்கப் போகிறார்கள் அப்படியே படித்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற நினைப்பு கொஞ்சம் என்னை நிதானப் படுத்தி விட்டது எனலாம்.(படித்து விட்டு என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு சிலர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)

வெளியிலே தெரியும் பெரிதாகப் பேசப்படும் வெற்றிகள் தவிர நம்மை நாமே வெற்றி கொள்ளும் செயல் ஒன்றுண்டு.Aurobindo Mother says" Controlling a desire gives more satisfaction than satisfying it". மேலே குறிப்பிட்டது போல் self love உணவு,உடைகள் மீது உள்ள பற்று ,எல்லாமே மனதின் மூலையில் உள்ள desires தான்.நேற்று வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன்,இப்போதிருப்பதை விடவும் கொஞ்சம் consciousness அதிகம் பெற்று  அடுத்த படிக்கு செல்ல விரும்புவோரின் அடிப்படை தகுதி என்று எதைக் குறிப்பிடலாம்?எனக்குத் தோன்றியது எதற்கும் மனச் சோர்வடையாததொரு நிலை. இது கஷ்டம் போல் தோன்றினாலும் ப்ரயத்தனத்தால் அடையக் கூடியதுதான்.ஆனால் என் தம்பி சொன்ன பதில்தான் சரி போல் தோன்றியது.Avoiding unnecessary communication என்றான்.வார்த்தைகள் குறைய உடல் மொழி நிதானமாகிறது.அது மனத்தையும் கண்டிப்பாய் அமைதியாக்குகிறது.இதெல்லாம் நடந்தால் மனச் சோர்வு தானே மறைகிறது,எனவே நீ சொன்னது நாலாவது step என்றான்.எல்லா வழி communication க்கும் இது பொருந்தும்.மின்னஞ்சல்,குறும் செய்திகள்,வாட்சப் ,முகநூல் எல்லாம்தான்.இந்த வாரம் Hindu Open Page ல் வாட்சப் பற்றி ஒருsenior citizen எழுதியதைப் படிக்கச் சொல்லி நண்பர் கூறினார்.அவ்வளவு எதார்த்தமாக இருந்தது அந்த எழுத்து.ஒரு நாளில் நூற்றுக் கணக்கான ,அதிகம் அறிமுகமற்ற மனிதர்களுக்குக் கூட ஏதேதோ செய்திகள் வாட்சப்பில் அனுப்பிக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் கடிக்காத குறையாய்ப் பேசுகிறோம்.

வாழ்வின் முதல் 10 வருடங்கள் அறியாக் குழந்தைப் பருவத்திலும் அதிக நாள் வாழ்ந்தால் கடைசி காலங்கள் நினைவுகள் மங்கியும் செலவாகிறது.எண்பதுகளில் உள்ள என் பெற்றோருடன் 6 நாள்கள் இருந்து வந்தேன்.I must say it is a spiritual experience.தான் வைத்ததே சட்டம் என்றிருந்த என் அப்பா" நான் இப்போ என்ன செய்ய?குளிக்கவா சாப்பிடவா" என்று கேட்பதும் நடை பழகும் குழந்தையின் தடுமாற்றத்துடன் என் அம்மா நடப்பதும் பார்த்து மனத்தின் ஓசைகள் அடங்கி விட்டதாய் உணர்கிறேன்.நேற்று சந்தித்து வந்த -கீழே விழுந்து முகமெல்லாம் அடி பட்டுக் கொண்டிருந்த ,நண்பரொருவரின் அப்பா.எப்படி வயதானால் ஒவ்வொன்றாய் கழன்று போகிறது?ஆனால் இதையெல்லாம் பார்ப்பது வாழ்க்கையை அணுகும் முறையைக் கற்பிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்..There is nothing to get depressed.நேபாளில்,சுனாமி தாக்கிய போது -புஜ் பூகம்பத்தின் போதெல்லாம் எத்தனை மரணங்கள்?அது போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிலும் சிக்காமல்,வறுமை போன்ற கொடுமைகள் இல்லாது நம் பெற்றோர் 80 வயதைக் கடந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி.

A mental preparation is needed to face the evening years of life.அது இல்லாது போனால் நமக்கும் கஷ்டம்.நம்மைக் கவனித்துக் கொள்வோருக்கும் கஷ்டம்.வாழ்க்கை எல்லாவற்றையும் balance செய்யத் தெரிந்தவர்களுக்கே .ஒவ்வொரு நிகழ்வையும் உணர்வு பூர்வமாக மட்டும் இல்லாது தள்ளி வைத்துப் பார்ப்பவர்களுக்கே.நாம் active ஆக இருக்க வேண்டிய காலத்தை எல்லாம் கவலைகளில் மூழ்கடித்து விட்டால் வயது முதிர்ந்த பின் வரக் கூடியதல்ல மன அமைதியும் மன முதிர்ச்சியும்.அதைத்தான் பாரதியார் நின்னைச் சரணடைந்தேன் பாடலில் சொல்கிறார்.நாம் கவலைப் படும் பல விஷயங்கள் நடக்காது போகலாம்.நடந்தே தீரும் என்ற விஷயங்கள் நேரும் வரை கவலைகளை ஒதுக்கி வைக்கலாம்.மேயின் முதல் எழுத்தே கடைசியும் ஆகிப் போனது.பேசுவோம்...

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects

1 கருத்து:

  1. //...யார் படிக்கப் போகிறார்கள் அப்படியே படித்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை ....
    படிக்கும் அனைவரும் பின்னூட்டம் இடப்போவதில்லை. அதை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்றுதான் உங்கள் வலைப்பூ பற்றி அறிந்து கொண்டேன். இங்கு எப்படி வந்தேன் தெரியுமா? இணையத்தில் best Tamil blogs to read என தேடினேன். உங்கள் வலைப்பூவினை ஒரு பொறியியல் மாணவன் படிப்பதற்கு பரிந்துரைத்திருந்தான்.
    Courtesy: Quora.com
    உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் தங்கள் வலைப்பூவினை இணையுங்கள், அதிகமான வாசகர்கள் கிடைப்பார்கள்.

    பதிலளிநீக்கு