இன்னும் இரண்டு நாள்களில் தீபாவளி.50 ம் வருஷத்தில் இருந்து 80 ம் வருஷத்திற்குள் பிறந்தவர்கள் மத்தியில் வாட்சப்பில் மிகவும் உணர்வுபூர்வமான பகிர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.தாத்தா பாட்டியில் தொடங்கி நண்பர்கள் வரை,எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடிய அந்தக் காலத்து தீபாவளி எப்படி எல்லாம் இனித்தது என்ற சோகமான பகிர்வுகள். மிகவும் அழகான எழுத்து.ஆனால் அது தாண்டி யோசித்தால்,இதில் சோகப்பட என்ன உள்ளது தெரியவில்லை.என் மாதிரி கோபப்பட வேண்டுமானால் விஷயம் உள்ளது.சும்மா வெட்டியாய் அந்த தீபாவளி காணாமல் போச்சு கண்டுபிடித்துத் தாருங்கள் என்றெல்லாம் புலம்புகிறார்களே.தொலைத்தவர்கள் அல்லவா கண்டுபிடிக்க வேண்டும்.அந்த அளவு precious ஆன ஒன்றை ஏன் தொலைத்தார்களாம்?பத்திரமாக வைத்துக் கொள் என்று அந்த அத்தனை நல்ல பழக்கவழக்கங்களையும் குழந்தைகளிடம் சேர்ப்பிக்காது இப்போது எதற்குப் புலம்பல்?பாட்டி தாத்தாவுடன் இருந்தவர்கள்தானே நாம்?நம் பெற்றோர் போல் பெரியவர்களுடன் நேரம் செலவிடுகிறோமா நாம் ?நாம் வாழ்ந்து காட்டாத ஒரு வாழ்வை குழந்தைகள் எங்கிருந்து கற்பார்கள்?நாம் பணத்தைத் துரத்தினால் நம் செல்வங்கள் இன்னும் அதிகப் பணத்தைத் துரத்துகிறார்கள்.வெள்ளைக் காகிதம் போன்ற குழந்தைகள் மனதில் தவறான எழுத்துகள் எழுதி விட்டு ,என் பிள்ளை தீபாவளிக்கு கூட 7 மணிக்குத்தான் எழுந்திருப்பான் என்று அலட்டி விட்டு ,நேரம் காலமில்லாமல் பண்டிகை அன்றும் 10 மணி பட்டிமன்றத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு ,தீபாவளி ரிலீஸ் படம் பார்ப்பதுதான் கொண்டாட்டத்தின் உச்சம் என நினைத்து விட்டு,சாஸ்திரம் என்ற பெயரில் துணி வாங்கி,
(எத்தனை செட் வாங்குவது சாஸ்த்திரம்) எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு நாம் பழக்கி விட்டு 50 வயது தாண்டி என்ன ஞானோதயம்? தங்கத்தை,வெள்ளியை,பரம்பரை சொத்தான வீட்டை சந்ததிகளுக்கு விட்டுச் செல்வார்களாம்.எதைத் தர வேண்டுமோ அதை,அந்த values எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுவார்களாம்.
இந்தக் காலக் குழந்தைகள் கேட்பதில்லையாம்.ஏன்?குழந்தைத் தனம் மாறி, பொறாமை,சுயநலம்,கோபம்,பொறுமையின்மை,அஹங்காரம் ,எடுத்தெறிந்து பேசுவது இன்னும் எத்தனையோ குணங்கள் முதலில் தென்படும் போது அதைக் களைவதை முதல் வேலையாய்க் கொண்டால் குழந்தைக்கு நாம் சொல்வதின் முக்கியத்துவம் புரியும்.முதல் தப்பு செய்யும் போது கண்டறியப்படும்,கண்டிக்கப் படும் குழந்தைகள் பாடம் பெறுகின்றனர்.அந்தத் தவறுகள் தெரியாத அளவு வேறெதிலோ பிஸியாக இருந்து விட்டு திடீரென விழித்துக் கொண்டால்,அல்லது தெரிந்தாலும் சின்னக் குழந்தைதானே பிறகு சொல்லலாம் என்று ஒத்திப் போட்டால் யார் தவறு?பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் வயது கூடுமா குறையுமா?அப்போ அறிவும் அதிகமாக வேண்டும்.தவறுகளை ஞாயப் படுத்த, வளரும் சிறு மனிதனுக்கு குழந்தை பட்டம் கொடுத்துக் கொண்டிருப்பது வீண்.
போஸ்ட் பாதை மாறுகிறது.என் weakness .அடுத்த தலைமுறை என் weakness .நம்மை விட அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தாபம்.வளர்ச்சிதானே சந்தோஷம் ?மறுபடி தீபாவளிக்கு வருவோம். முடிந்து விட்ட காலம் எப்போதும் இனிமையாகத் தோன்றும்.நமக்கு அந்தக் காலம் மாதிரி,இப்போது கொண்டாடும் தீபாவளி நம் குழந்தைகளுக்கு ஒரு நாள் கடந்து போன ஒன்றாயிருக்கும்.இந்த நாள் பற்றின நல்ல நினைவுகள் அவர்களுக்கும் இருக்கும்.காலங்கள் மாறும் போது ,அப்போ எல்லாம் என்று தொடங்கும் பெரியவர்களை கண்டாலே இளையதலைமுறையினர் ஓட்டம் பிடிக்கிறார்கள். எண்ணை தேய்த்துக் குளிப்பதும்,பறவைகளையும் மிருகங்களையும் பயமுறுத்தும் வெடி வெடிப்பதும்,வீடு வீடாக பலகாரம் எடுத்துப் போய் விழுந்து கும்பிடுவதும் ,சர்க்கரை அளவை ஏற்றும் அளவு இனிப்புண்பதும் இன்றைய தலைமுறையின் தீபாவளியில் இல்லை.எது குறைந்து போனது?வெடிக்காவிட்டால் சப்தம் குறையும்.இனிப்பு குறைவாக உண்டால் உடல்நலம் பேணப்படும்.தீபாவளி என்றில்லாமல் எப்போது வேண்டுமோ அப்போது துணி வாங்குகிறார்கள்.அதில் என்ன தவறு?துணி பற்றின craving இல்லை.பலர் முதியோர் இல்லங்களில் அனாதைக் குழந்தைகள் விடுதியில் பொருளுதவி செய்து அவர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள்.
மறுபடி மனசு சம்பந்தப் பட்டதுதான் எல்லாம்.பாருங்களேன் இந்த போஸ்ட்டில் நான் யார் பக்கம் என்று கணிக்க முடிகிறதா?இல்லை அல்லவா?பண்டிகைக் கால சம்பிரதாயங்களுக்கும் சிறு நிகழ்வுகளுக்கும் அப்பாற்பட்டது வாழ்வு.எப்படி இருந்தேன் இப்படி ஆகிட்டேன் என்று வருந்துவது அவரவர் பிரச்சினை.நினைவுகளை அசை போடுவதானால் மகிழ்ச்சியாக செய்து விட்டுப் போவோம்.அந்தக் காலம் வருமா வருமா என்றால் வராதுதான்.பாட்டியும் தாத்தாவும்,10 ரூபாய்க்கு சரவெடியும் சிவாஜி படமும் வராது.ஆனால் வந்தால் புலம்புவோர் எல்லாம் தாங்குவார்களா?Santro car க்கு பதில் மாட்டு வண்டி ஓகேவா ?மின்விசிறி,ஏசி இல்லாமல்,கயிற்றுக் கட்டிலில் கொல்லைப்புறம் தூங்குவது ஓகேவா ?பெண்கள் ஹேண்ட்பேகில் இருந்து அலட்சியமாய் 1000 ரூபாய் நோட்டை வீசி எறிந்து பலகாரம் வாங்காமல் அடுப்படியில் வேலை செய்யத் தயாரா? அட அதெல்லாம் விடுங்கள் மனைவி குழந்தையுடன் மட்டும் ரகசியமாய் உணவகம் கிளம்பும் சமயம் அண்ணன் பெண் வந்து தீபாவளி வாழ்த்து சொன்னால் மனசார மறுபடி வாழ்த்துவார்களா " நேரம் கெட்ட நேரம் இவ எதுக்கு வரா" என்று தங்கள் மன வக்ரத்தை குழந்தைகளுக்கு முன் வெளிப்படுத்தி அவர்களுக்கு முன்னோடியாய் இருப்பார்களா?
பண்டிகைகள் சம்பிரதாயங்களில் இல்லை.கொண்டாடப்படும் உணர்வில் இருக்கிறது.விவசாயிகள் நலம் பெரும் நாளெல்லாம் பொங்கல் பண்டிகைதான்.தீமை அழிந்து நன்மை வெற்றி பெரும் நாளெல்லாம் தசராதான்.இயேசு கிறிஸ்துவின் அவதார குணங்களுடன் ஒரு பிறப்பு நிகழும் நாட்கள் க்ரிஸ்மஸ்தான். சூரசம்ஹாரம் முருகப் பெருமான் நிகழ்த்தினது போல் நம் கெட்ட குணம் ஒன்று மறையும் நாள் கந்தசஷ்டிதான்.மனசின் எல்லா மூலைகளிலும் விளக்கெரிந்தால் கார்த்திகைதான்.லலிதா சஹஸ்ரநாமமும் சௌந்தர்யலஹரியும் பாராயணம் செய்யும் நேரம் அம்பாள் மனச் சிம்மாசனத்தில் ஓடி வந்தமரும் நாளெல்லாம் லக்ஷ்மி பூஜைதான்.ஒழுங்காக வாழ்ந்தால் எல்லா நாளும் நல்லனதான் .அப்படி என்றால் இந்த வருடம் அக்டோபர் 29 மட்டும் அல்ல.தினமும் தீபாவளிதான்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
ரஞ்சனி அக்கா!! பின்றேள். இத அனுப்பினா கண்டிப்பா publish ஆகும். - Gayatri from CBE.
பதிலளிநீக்குரஞ்சனி அக்கா!! பின்றேள். இத அனுப்பினா கண்டிப்பா publish ஆகும். - Gayatri from CBE.
பதிலளிநீக்கு