நம்மை மற்றவர் நிலையில் வைத்துப் பார்த்தல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது பற்றிய சில விமர்சனங்கள், இந்தக் கட்டுரை. ஒரு யானை,ஒரு பூனை இரண்டையும் எடுத்துக் கொள்வோம். இரண்டிற்கும் மற்றதின் நிலை புரியவில்லை. உடனே பூனை, யானையின் ஷூவிற்குள் போய் நின்று அது எப்படி நினைக்கும் என்றெல்லாம் உணர்கிறது. ஆனால் யானை அதையே செய்ய எத்தனித்த போது, பூனையின் ஷூ, யானையின் காலடி பட்டு நசுங்கி விடுகிறது. ஏன்?தெரியாது. அது அப்படித்தான். அப்போது பூனைகள் புரிந்து கொள்ளவும் மிதிபடவும் பிறந்தவையா? யானைகள் தன்னிச்சைப்படி வாழ லைசென்ஸ் பெற்றவையா? அப்படி என்றால் யானை பூனையை விட விசேஷமானதா?ஆனால், எலியிடம் கேட்டால் என்ன சொல்லும்? அதற்கு யானையிடம் பயம் இல்லை. பூனையிடமே பயம். இவை எல்லாம் என்ன வாழ்க்கைப் பாடங்கள் தருகின்றன?
பூனையும் யானையும் நம் ஈகோ என்று உருவகப் படுத்திக் கொண்டால்,பூனை அளவு சிறியதாக நம் ஈகோ இருப்பின் மற்றவரை அறிதல் சுலபம். யானை போல் ஈகோ பெரிதானால் நாம் அறியாமையில்தான் இருப்போம் என்று கூறலாம். ஆனால் அதெல்லாம் எதற்கு? ஏன் நான் மற்றவர் செருப்பை அணிய வேண்டும்? எனக்கு வேண்டாமே! என் பழைய செருப்புதான் வசதி.சுகம். (செருப்பு நைந்தால் வேறு மாற்றிக் கொள்ளணும். ஆனால் அதுவும் நமக்கே நமக்கான செருப்பு) மற்றவர் , மாற்றான் போல நம்முடன் ஒட்டிப் பிறந்த பிறப்பானாலும் கூட, அவர் ஷூ நமக்கு கச்சிதமாகப் பொருந்தும் சாத்தியக் கூறுகள் இல்லை. மனித இனம் ,பொதுவில் எல்லா ஜீவராசிகளுமே என்று கூடச் சொல்லலாம்,மற்றவர் சூழ்நிலையை அறிந்து, அனுசரணையாக அணுகும் தன்மையுடன் படைக்கப் படவில்லை என்றுதான் கூறுவேன். சிலர் இருக்கிறார்கள். எல்லோரையும் அனுசரித்து,இதம் காட்டி,ஒத்து வாழ்பவர்கள். அவர்கள் அப்படி இருப்பது , இயல்பாலே அன்றி, அத்தனை பேர் சூழ்நிலையையும் புரிந்து கொண்டதால் அல்ல. மேலும் அப்படிப் பட்டவர்கள் ஒரு முறை, ஒரே ஒரு முறை, யாரும் தங்களைப் புரிந்து கொள்ளவில்லையானால் கூட மன அழுத்தம் அடைகிறார்கள்.
நமக்கு நம் வேலை உள்ளது. யானைக்கும் பூனைக்கும் அதன் வேலை. சுயதர்மங்கள். அதை செய்தால், ஒழுங்கு தப்பாமல் செய்தால் போதும். யாரையும் நம் கோணத்தில் இருந்து புரிந்து கொண்டால் போதும். கொஞ்ச நேரம் பூனை யானையானால், எலி பிடிக்காது. அப்போ எதை சாப்பிடும்?யானை உணவை சாப்பிட்டால், பூனைக்கு செரிக்குமா? நான் நீயில்லை.நீ நானில்லை. கம்பீரமாக நின்று கொண்டு யானை சொல்லலாம். "பாவம்,குட்டிப் பூனை.எவ்வளவு அழகு! மியாவ் என்று கத்துவது எவ்வளவு இனிமை. ஆனால் சுத்த பயந்தான்கொள்ளியாக இருக்கிறதே! என்ன பண்ணும். சின்னக் கூடு. சத்தம் கேட்டாலே பயப்படும் ஜீவன்".
இப்போ பூனை என்ன நினைக்கும்? "எவ்வளோ கம்பீரமான யானை! கோவில் வாசலில் நின்றால் யாரும் போட்டோ எடுக்காமல் போவதில்லை. ஆனால் பாவம். ஏன் காசு கேட்கிறது? தன்னை விட சின்ன மனுஷன் பேச்சை எல்லாம் கேட்க வேண்டி உள்ளது! ரொம்ப பெரிய உடம்பு. அதைத் தூக்கிக் கொண்டு நடக்கணும் ".
என்ன தெரிகிறது? பார்வைகள் வேறு. எல்லோரையும் அன்போடு நோக்க மட்டும் தெரிந்து கொண்டால் போதும். அவர்கள், சரியா தவறா என்ற ஆராய்ச்சி தேவை இல்லை. அவர்கள் சூழ்நிலையில் நம்மை வைத்துப் பார்ப்பதென்பது வெறும் பேச்சு. நம்மைச் சுற்றி ஆயிரம் பேர். அவர்களுடைய பல சூழ்நிலைகள். ஒவ்வொன்றிலும் பொருந்திப் பார்த்து அவர்களைப் புரிந்து கொள்ளும் வெட்டி வேலை செய்வதற்கு பதில், எல்லோரையும் சரியாகப் பார்த்து விடலாமே? சத்தம் ஏன் தன்னைப் பதுங்க வைக்கிறது,தன் முந்தைய அனுபவங்கள் என்ன என்பதை பூனையே அறியும். சத்தம் யானைக்கு தமாஷ். பூனைக்குத் தலைவலி. பாகன் பேச்சுக் கேட்டு பைசா வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் வழங்கும் யானைக்குத்தான் தெரியும் அதன் பிரச்சினை. மற்றவரிடம் நாம் காட்டும் இரக்கம்,தற்பெருமை இரண்டும் தராசின் சமமான இரு தட்டுகள். யாரையும் பார்த்து , 'ஐயோ பாவம் ' சொல்லாதீர்கள். அத்தனை ஜீவராசிகளுக்கும் தற்காப்பிற்காக ஏதோ கொடுத்துள்ளான் இறைவன். உதாரணம் வேண்டாம் அல்லவா? கொம்பு,ஓடு போன்ற பல. அப்போது,எல்லா உயிரினங்களையும் விட மேல் எனக் கூறிக் கொள்ளும் மனிதனை விட்டு விடுவானா? அதுதான் அறிவு தந்துள்ளான். ஆபத்து நேரம் ஓட்டை பயன்படுத்தாத ஆமை உண்டா? பிற விலங்குகள் துரத்தினால் வேகமாய் ஓடாத மான்கள் உண்டா? அப்படியானால், பிரச்சினை வந்தால் எல்லா மனிதனும் உபயோகிக்க வேண்டிய அறிவு அவனிடம் உள்ளதே? அவன் ஏன் பாவம்? அதே போல் ,' நானாக இருந்தால் இப்படி பண்ணி இருப்பேன்' என்ற தற்பெருமை இருக்கிறதே,அது ரொம்பவும் மோசம். மான் ஓடும் போது கால் ஒடிந்தால் விதி. நல்ல நிலையில் உள்ளவர்கள், கண்டிப்பாக துன்பத்தில் இருப்போரிடம் சுய தம்பட்டம் அடிக்கவே கூடாது. நிலைமைகள் மாற, நிமிஷம் கூட தேவை இல்லை.
மற்றவர் செருப்பை அணிந்தால் தடுக்கி விழுவோம். அவை என்ன, ஸ்ரீராமர் பாதுகைகளா , உள்ளொளி நல்க? அமைதியாய் ,உண்மையாய் அன்பு செலுத்தினால் போதும். அன்பே சிவம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக