வருஷம் பூர ஒவ்வொரு நாளுக்கும் ஏதேதோ பெயர் கொடுத்து கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.வாழ்க்கையே celebration தான் என்பது போல.அது உண்மையும் கூட.அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதிலும் கூன் குருடு செவிடு நீங்கி ஒரு பிறவி அடைதல் அதனினும் அரிது எனும் போது எல்லா நாள்களுமே கொண்டாட வேண்டியவைதான்.இந்த வருஷம் தீபாவளி அன்று உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள எண்ணினேன்.முடியவில்லை.நான் எழுதினாலும் அன்று நீங்கள் படிக்க முடிய வேண்டும் அல்லவா?சரி உணர்வுகளின்வேகம் குறையும் முன் எழுதலாமே என்பதால் மதிய குட்டித் தூக்கத்திற்கு " டா டா "காட்டி ஆயிற்று.
நம் இளைய வயது தீபாவளியின் நினைவுகள் மனதை வருடிப் போவதை மறுக்க மாட்டேன்.ஆனால் இறந்த காலத்தில் மனதை அடிக்கடி கொண்டு நிறுத்துவது தேங்கிய நீர் போல காலம் செல்ல செல்ல மணம் மாறும்.எதற்கு?நல்ல நினைவுகளே ஆனாலும் இறந்த காலம் பற்றி யோசிக்க சில நிமிடங்களுக்கு மேல் செலவழிப்பது சந்தோஷம் சங்கடம் எது தரினும் விரயமான நேரத்தைத் திருப்பித் தராது.நம் அனுபவங்களே எழுத்து.என் இவ்வருட தீபாவளி அனுபவம் இது.If you are able to identify yourself with me I am happy.If not just read in a very casual manner as you will see an episode of a television mega serial.
வழக்கம் போல் கங்கா ஸ்நானம் முடித்து நமஸ்காரம் பண்ணி ஆசி வாங்கிவர என் அம்மா வீட்டிற்கு சென்றோம்.அந்த நாள்களில் என்னை என் தம்பி தங்கையைக் கூட்டிக் கொண்டு கடை வீதி உலா சென்று எங்கள் கை போன திசையில் சென்று நாங்கள் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்த அப்பா கட்டிலில் ஓரமாய் பூனைக் குட்டி போலப் படுத்திருந்ததைப் பார்த்த போது கண்ணில் புறப்பட யத்தனித்த கங்கையை ,"தீபாவளிதான் ஆனாலும் குளிக்கும் போதுதான் வந்து விட்டாயே இப்போ எதற்குக் கண் வழி வர யத்தனிக்கிறாய் உள்ளே போ" என்று கூறி விட்டேன்.கங்கை கண் வழி வெளிப்பட்டால் அந்த அறையிலேயே மௌனத் தவம் புரியும் என் அம்மாவையும் அல்லவோ அது பாதிக்கும்?அம்மா இரும்பு மனுஷிதான்.ஆனால் சூரியகாந்தி பூ போல துணையை சார்ந்து தன் தேவைகளை நிர்ணயம் செய்து கொண்ட இந்தியப் பெண்தான்.
ட்யூஷன் பெண்களைப் பார்க்க தலையை brush and iodex கண் மை கொண்டு டை பண்ணி மடிப்பு கலையாத வெள்ளை வேஷ்டி சட்டையுடன் எப்போவும் ட்ரிம் ஆகவே நாங்கள் பார்த்த அப்பாவா இது? பாட்டி அத்தையுடன் சேர்ந்து முகத்தில் சோர்வே தெரியாமல் அல்லது இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வண்டியை இழுத்த அம்மாவா இது ? தினமும் மனதில் ஒரு பாட்டு காரணம் இன்றி உட்கார்ந்து கொள்ளும்.இன்று என்ன தெரியுமா?"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்" .துடுப்பும் பாரமாகிப் போன ஓடமாக நாமும்தானே மாறுவோம் என்றிருந்தது.
பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம்.என் தோழி ஒரு குறும் செய்தி அனுப்பினாள் .நாம் விரும்பும் மதிக்கும் ஒருவருக்காக நேரம் தருவது ரொம்ப உயர்வாம்.ஏனென்றால் நம்மால் திரும்பிப் பெற இயலாத ஒன்றை அவர்களுக்காக செலவு செய்வதால்.பல நாள்களாக என் அப்பா ஓரிரு வார்த்தை தவிர பேசுவதில்லை.என்னை உறுதியாகத் தோளில் இள வயதில் தூக்கி இப்போ மெலிந்து பஞ்சு போல் உள்ள அப்பாவின் கைகளைப் பிடித்து "இன்னிக்கு தீபாவளி இன்றாவது ஏதான பேசுப்பா" என்ற போது நிமிர்ந்து பார்த்து அப்பா புரிந்த புன்னகையும் அதன் reaction ஆக அம்மா முகத்தில் ஒரு மணித்துளி தோன்றிய மத்தாப்பூ வெளிச்சமும்தான் இந்த தீபாவளி special எனக்கு. இன்னும் சில சிறப்புகளும் உண்டு.மனதில் தித்திக்கும் அவை நேரம் வரும் போது எழுத்திலும் வரும்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக