இந்த வருடத்தின் கடைசி போஸ்ட் .எப்போதும் கடந்து விட்ட காலங்கள் இனிமையானவை என்கிறோம்.மெட்ராஸ் மழைக்குப் பின் எத்தனை சென்னைவாசிகளுக்கு இந்தசொற்றொடர் உண்மை எனத் தெரியாது.மேல்தட்டு கீழ்த்தட்டு மனிதர்கள் என்ற பாகுபாடுகள் எனக்கு இல்லை.எல்லாரும் மனிதர்கள்.ஆனால் சமூகத்தின் பார்வையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை மட்டும் பாதித்த இத்தனை வருட மழை போல் அன்றி மேல் தட்டு என்று சொல்லிக் கொள்பவர்களையும் திண்டாட வைத்து உண்மையிலேயே தெருவில் நிறுத்தியது இந்த வருட மழை.ஆனால் மனிதர்களையும் மனிதத்தையும் அடையாளம் காட்டியது.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஓடி வந்து உயிர்களைக் காப்பாற்றியவர்கள் எத்தனை பேர் .உதவியவர்கள் எத்தனை பேர் .பாதிக்கப் பட்ட குடியிருப்புகளில் ஒன்றின் வாசி என்ற முறையில் என் அனுபவங்கள்.
தொடங்கினேனே தவிர முடிக்க கை வரவில்லை.வேலைகள்.பெண்களுக்கு சில சுதந்திரங்கள் உள்ளதா அல்லது அவற்றை எடுத்துக் கொள்ளவே அவர்கள் விரும்புவதில்லையா தெரியவில்லை.கட்டுப்பாடுகளுடன் வாழவே விரும்புகிற மனநிலையைக் கடவுள் பெண்ணுக்குள் வைத்தான்.ஆதாம் ஏவாள் காலம் தொட்டே.எந்த விஷயமும் கட்டுப் படுத்தாது என்று சொல்லிக் கொள்ளும் பெண்கள் கூட மனமூலையில் ஒரு குற்ற உணர்வாவது கொண்டே வாழ்ந்து முடிக்கிறார்கள்.எழுதுவது மிட்டாய் உண்பது போல் இனிமையானது.ஆனால் அந்த நேரத்தில் துணி மடிப்பேன் வீடு பெருக்குவேன் டாய்லெட் கழுவுவேன் மழை பண்ணின அட்டகாசங்களால் புரண்டு கிடக்கும் வீட்டை சரி செய்வேன் ஆனால் பத்து நிமிஷம் எழுதினால் மஹாபாவம் என்று யாரும் எனக்கு சொன்னார்களா என்ன!
சரி சுயபுராணம் கிடக்கட்டும்.இரண்டு செட் துணியுடன் படகில் ஏறிய போது இன்னும் 25 நாள் பொறுத்தே இந்த வீட்டிற்குள் வருவோம் என்ற எண்ணம் துளியும் இல்லை.அகதிகளைப் பற்றி எல்லாம் செய்தித் தாளில் படித்து விட்டு ஒரு உச் கொட்டி விட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுகிறோம்.பக்கத்து அபார்ட்மெண்ட் அகதி முகாம் போல் ஆனது.உணவு வழங்கப் பட்டது.தோசை இன்னும் முறுகலாக இல்லை என்று முணுமுணுப்பவர்கள் எல்லாம் அமைதியாக உப்புமாவும் ஊறுகாயும் சாப்பிட்டது அந்த கஷ்ட வேளையிலும் ரசிப்பிற்குரியதாய் இருந்தது.என்ன அடுத்த முறை மனைவி அம்மா ஆகியோரிடம் அனுசரணையாய்ப் பேச உப்புமா உதவி இருந்தால் சரி.உதவிகள் குவிந்தன.எந்த எதிர்பார்ப்பும் அற்று உதவியவர்கள் எத்தனை பேர்!தன் ப்ரச்சினை போல் நினைத்து கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது கருமமே கண்ணாயினார் என்பது போல் வேலை செய்தனர்.அந்த நன்றியை அதே ரீதியில் சொல்ல வாய்ப்புத் தருமாறு அவர்களுக்கு எந்த கஷ்டமும் வர வேண்டாம் என்று பிரார்த்திப்பது மூலம் மட்டுமே நன்றி சொல்ல இயலும்.மழை சொன்ன பாடங்கள் பற்றிய பகிர்வுகள் சிலவற்றுடன் இந்த போஸ்ட்டை முடித்தால்தான் அடுத்த கட்டம் போகலாம்.இதோ பாடங்கள்.
1 .நம்மால் மிகவும் குறைந்த பொருள்களுடன் வாழ முடியும்.
2 .எந்த சூழலிலும் வாழ்வு நடக்கும்.
3 .எந்த உணவையும் உண்ண இயலும்.
4 .டி வி ,தொலைபேசி இப்போது அத்தியாவசிய தேவை போல் ஆகி விட்டாலும் ,மொபைல் போன் உறவினர் நண்பர்களுடன் நம்மைப் பிணைத்து பேருதவி செய்கிறது என்பது உண்மையாயினும் ஓரிரு நாள்கள் அந்த சேவைகள் இல்லை எனில் எதுவும் நமக்கு ஆகிவிடாது.
5 .நம்மிடம் உள்ள உடைகளும் ஆடம்பர பொருள்களும் தேவைக்கு அதிகமாக நாம் வைத்துள்ள சொத்துக்களே.
6 .பணம் உள்ளது.ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பது இயல்பே.வைத்துக் கொள்வோம்.இன்னும் இல்லையே மற்றவர் அளவு இல்லையே என்ற ஏக்கங்களாவது தவிர்க்கப் பட வேண்டியவையே.
7 .மற்றவர் காட்டும் நல்ல தன்மையை ஆத்மார்த்தமாய் உணர வேண்டும்.சாமார்த்தியமாக சுயநலத்துடன் இன்னும் இன்னும் எதிர்பார்த்து அவர்களை சங்கடப் படுத்தி விடக் கூடாது.
8 .யாரிடம் உதவி பெறலாம் என்பதைக் கண்டிப்பாக பகுத்துணர வேண்டும்.
இன்னும் எவ்வளவோ.மறுபடி வந்து கூட்டிற்குள் அடைந்தாயிற்று.பென்சில் பதிவுகளாய் அழிந்து போகாமல் பேனா பதிவுகளாய் அனுபவங்கள் இருந்தால் நன்று.இந்த மழைக்குப் பின் என்னிடம் பேசிய தோழர்கள் சிலர் தாங்கள் குறிப்பிடத் தக்க மாதிரி எதுவும் பண்ணவில்லையே பலர் ஓடி ஓடி செய்ததைப் பார்த்த போது சற்று கூச்சமாய் இருந்தது என்றார்கள்.அந்த எண்ணம் தேவை அற்றது.நம் இயல்பு வேறுபட்டதாக இருக்கலாம்.வெளிப் பார்வைக்கு ஓடிக் கொண்டு உள்ளே நான் செய்கிறேன் என்ற ஈகோ தலைதூக்கினால் பலன் இல்லை.மனமும் செயலும் ஒன்றுபட்டு செய்யக் கூடியவற்றை செய்து கர்மம் புரிதலே இனிது.நன்று.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக