இந்த வருடத்தின் முதல் சந்திப்பு.எல்லோரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் யாமொன்றறியேன் பராபரமே. அது ஒரு மனசு.மேன்மை தவிர --பாருங்களேன் மென்மை என்று டைப் செய்தேன் அது மேன்மை என்று டைப் ஆகி விட்டது.இரண்டும்தான் சரி.மென் மனசுக் காரர்கள்.மென்மை weakness அல்ல.வைரம் போன்ற உறுதியான உள்ளங்களே மென்மையையும் வெளிப் படுத்துகின்றன.சிவபெருமான் மேல் காதலாகிக் கசிந்துருகின அடியார்கள் மற்றவற்றின் மேல் பற்றை விட எத்துணை உறுதி வேண்டும் ! அதன் பின் காதல் பிறக்கிறது.அது கசிந்து உருகச் செய்கிறது.அதுதான் சொன்னேன் மென்மைக்கு உறுதி உண்டு என்று. மென்மையான உள்ளங்களால்தான் எல்லோரும் இன்பம் கொள்வதை அவ்வாறு நோக்க இயலும்.சரணாகதி என்று தலைப்பிட்டு விட்டு இது என்ன முன்னுரை என்றுள்ளதா?மேலே செல்லுங்கள் ப்ளீஸ் .
ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் தொண்டை கட்டும்.கீழே விழுந்தால் அடி படும்.நெருப்பைத் தொட்டால் சுடும்.அடித்தால் திருப்பி அடி விழும்.பந்து சுவற்றில் போட்டால் திரும்பி வரும் இவை போன்று சொல்லிக் கொண்டே போகலாம் அல்லவா? தீய வினைகள் பலன் தரும் என்றால் நல்ல வினைகளும் பலன் தந்தே ஆகணும் .அதனால் என்ன அறிகிறோம்?.நம் வாழ்க்கையின் எதிர்கால நிகழ்வுகளை நாமே நிர்ணயிக்கிறோம்.எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் வேறு உருவில் பெறுகிறோம்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ," எல்லாம் அவனால் நடக்கிறது" என்று கூறுவதைக் கேட்கிறோம். எனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளதுதான்.ஆனால் மனத்தகத்து இறைவன் வீற்றிருந்தால் அது உண்மை எனில் தானாக நம் செயல்களில் மாற்றம் இருக்கும்.அன்பே சிவம்.எல்லாவற்றையும் துறப்பதும் அல்லது நினைப்பதை எல்லாம் அடையச் செய்யும் போராட்டமும் சரணாகதி இல்லை.அவன் தருவதை எளிமையாக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதே சரணாகதி.பெரும்பாலான நேரம் கடவுள் பொற்காசுகள் தரத் தயாராய் இருக்கும் போது நாம் அவரிடம் போய் மண்டியிட்டு ," அரைக் கிலோ கத்திரிக்காய் தரமாட்டாயா" என அழுது வாங்கி வந்து அப்போதைக்குத் த்ருப்திப் பட்டு மறுபடி கத்திரிக்காய்க்கு சமமாக எதைக் கேட்கலாம் என யோசிக்கிறோம்.உண்மையில் வரும் காலத்தை அவன் நடத்துவான் என்ற எண்ணம் இருந்தால் கத்திரிக்காய் வாங்கிக் கொள்ளும் போதும் காசு வாங்கிக் கொள்ளும் போதும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும்.
ஆசைகளும் அவற்றை அடைவதும் ஒரு தெளிவற்ற நிச்சயமற்ற கலப்படம் நிறைந்த முழு த்ருப்தி அற்ற சந்தோஷத்தைத்தான் தரும் என அறிவது முதல் நிலை.பகுத்து அறிய முடிந்தவர்கள் எது ஆசை எனப் பிரித்தறிந்து அதை அடையச் செய்யும் அனாவசியப் ப்ரயத்தனங்களை நிறுத்த முயல்வார்கள்.இரண்டாவது நிலை அது.In Sri Aurobindo Mother's words.
" There is an infinitely greater delight in conquering and eliminating a desire than in satisfying it.Every sincere and steadfast seeker will realise after sometime sooner or later at times very soon,that this is an absolute truth,and that the delight felt in overcoming a desire is incomparably higher than the small pleasure,so fleeting and mixed."
நம் வாழ்வின் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைப்பது மனதால் உணர்வால் அல்லது வாழ்க்கை சூழ்நிலைகளால் நடக்கிறது. சரணாகதி முழுமையாகும் தருணம் எல்லாம் தாளம் தப்பாது நடக்கும்.நம் ஆற்றலை விரிவு படுத்துவது சரணாகதி.அது மட்டுமே உண்மையான emotional protection ஆக இருக்க வல்லமை வாய்ந்தது.Detailed Perfect Surrender என்று குறிப்பிடலாம்.நம் வாழ்க்கையின் எல்லாவற்றையும் முக்கியமற்றவை என்ற பிரிவில் அடங்கும் சிறிய விஷயங்களைக் கூட அவன் பாதங்களில் வைத்து விடுவது .எந்த மனிதனாவது உன் கஷ்டத்தை எல்லாம் என்னிடம் விட்டு விடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்மிடம் கூறுகிறார்களா அப்படிக் கூறினாலும் அது நடக்குமா?நாம் முழுமையான சரணாகதிக்குத் தயாரா என்பதை சோதிக்க வாழ்க்கை ஒரு தருணத்தையாவது நமக்குத் தராமல் போகாது.அதை ஒரு spring board போலப் பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.
Swami Aurobindo says in his great work " The synthesis of yoga ", "we must always go beyond.always renounce the lesser for the greater,the finite for the infinite:we must be ready to proceed from illumination to illumination , from experience to experience,from soul state to soul state,so as to reach the utmost transcendence of the Divine"
ஆமாம் நாள்,வினை,கோள்,கொடுங்கூற்று இவை எல்லாம் என்ன செய்ய முடியும் நம்மை?எதுவும் செய்யாது.எப்போது?குமரேசர் இரு தாளும் சதங்கையும் நமக்கு முன் வந்து தோன்றிடின். (கந்தரலங்காரம்). மாணிக்கவாசகர் (9ம் நூற்றாண்டு;திருவாசகம் எழுதிய மஹான் ; சைவத் திருமுறையின் ஒரு பகுதி இவரால் எழுதப் பட்டதே.) கூறியது போல் சிக் கெனெப் பிடித்தேன் உன்னை.எங்கெழுந்தருள்வது இனியே என்று சிவன் பாதம் பற்றிக் கொள்வோம்.இந்த முதல் பதிவு அரவிந்த அன்னைக்கு சமர்ப்பணம்.சேர்ந்து பயணிப்போம்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக