நாம் அனைவரும் உண்மையில் எப்படி இருக்கிறோமோ அதை விட, எப்படி வெளிப் படுத்திக் கொள்கிறோமோ அந்த விஷயங்களால் அதிகமாக அறியப் படுவதை விரும்புகிறோம் . காலை கண் விழிப்பதில் இருந்து யோசித்துப் பாருங்களேன். காலை எழுந்தவுடன், நான் பூஸ்ட்தான் குடிப்பேன், காப்பியா, அடித் தொண்டையில் கசப்பாக டேஸ்ட் பண்ணுமே அந்த ட்ரின்க்கா என்பதில் தொடங்கி, என் பொண்ணு சீரியல்தான் சாப்பிடுவா, இட்லியைப் பார்த்தாலே, ஓ திஸ் ரைஸ் கேக், நீயே சாப்பிடுன்னு சொல்லிட்டா என்பது, நல்ல சோப்பை விட, சினிமா ப்ரபலங்களால் அறிமுகப் படுத்தப் பட்ட அழகு சோப் உபயோகிப்பதாய் சொல்லிக் கொள்வது, நகரப் பேருந்துகளில் போவதை இது வரை செய்ததே இல்லை, படி இறங்கினால் கார்தான் என்பது, வருஷம் 18 லக்ஷத்திற்கு குறைவாய் சம்பளம் இருந்தால் ஜீவாதாரமே கஷ்டம் என்ற ரீதியில் பேசுவது, சவுகரியத்தை விட ஆடம்பரத்தைப் பறைசாற்ற மட்டும் உடை அணிவது, வயதைக் கம்மியாகக் கூறிக் கொள்வது, பெரிய மனிதர்கள் என்று சமூகத்தின் பார்வையில் உள்ளவர்கள் தங்களுக்கு நெருக்கம் போல் காட்டிக் கொள்வது, தமக்குக் கீழே உள்ளவர்கள் என்று நினைப்போரிடம் அதிகாரம் செய்வது, ஸ்டார் ஹோட்டல் உணவுதான் விருப்பம் என்று சொல்லிக் கொள்வது, பேட்டா செருப்புதான் பாத்ரூமுக்கு கூட போட்டுப்பேன் என்று சொல்வது, வெளிநாட்டில் உறவினர்கள் இருப்பதாக பறை சாற்றுவது , ஏ சி இல்லாமல் தூக்கம் வராது என்று பொய் சொல்வது, ஆன்மீக வேஷம் போடுவது இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் கோவிலுக்கு 100 ரூபாய் காணிக்கை அளித்து விட்டு, ட்யூப் லைட் உபயம் என்று தன் பெயரைப் பொறித்துக் கொள்வது, இது போல் தினம் சந்திக்கும் தமாஷிற்கும் போலி முகங்களுக்கும் அளவில்லை. நேதாஜிக்கும், காந்திஜிக்கும், மேலே பேசினவற்றிற்கும் யாது சம்பந்தம்? உள்ளது.
நேதாஜியும் காந்திஜியும் இரு துருவங்கள். இருவரின் கனவும் இந்திய நாட்டின் சுதந்திரமே. இருவரும் மிக உயர்வான மனிதர்கள். ஆனால் ஒருவர் மஹாத்மா ஆனார். மற்றவர் ஒரு பேசப்படாத நாயகன்தான், நம் வரலாற்றில். ஏன் என யோசிப்பதுண்டு. நான் அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் நேதாஜியின் கொள்கைகளையே ஆதரித்திருப்பேன், என்று தோன்றும். அஹிம்சையை ஆயுதமாகக் கொண்டு காரியம் சாதிக்க வேண்டும் என்றார் மஹாத்மா. நேதாஜியோ , அடிக்க வேண்டியதை அடி என்றார். முதல் பகுதியில் சொன்னது போல், தன்னை அமைதி விரும்பியாகக் காட்டிக் கொள்வதற்கே எல்லோரும் மஹாத்மா வழி என்று கூறிக் கொள்கிறார்களோ என நினைக்கிறேன். நேதாஜிதான், பொதுஜனத்தை பிரதிபலித்தவர். நேதாஜி, காந்திஜி இரண்டு வேறு முகங்கள் போல் மனிதன் ஒவ்வொருவனும் இரு முகங்கள் கொண்டவன் என்பதற்காக, தலைப்பு கொடுத்தேன். வித்தியாசமான தலைப்பென்றால் உள்ளே என்ன என்று யோசிக்க வைக்கலாம் என்ற அல்ப ஆசை. மற்றபடி கூகிள் சொல்பவற்றை தமிழில் மறுபடி எழுதுவது நேர விரயம். கூகிள் கடுகு பாக்கெட்டைத் திறந்து கொட்டினார் போல் தகவல்களைக் கொட்டுகிறது.
அஹிம்சாவாதிகள் என்பவர்கள், அமைதி விரும்பிகள் என்பவர்கள், உண்மையில் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். உடம்பு ஒரு கோவில். அதுவே கர்மம் புரியத் துணை செய்யும் க்ஷேத்திரம். உண்ணாவிரதங்கள், உடலை அவமதிப்பது . மரத்தடியில் இருந்து உண்ணாவிரதம் இருப்பது பெரிய நிகழ்வுகளுக்கு எவ்வாறு வித்தாகும் ?வெளிநாட்டுப் பொருள்கள் எரிக்கப் பட்டன. அழிக்கப் பட்டன. பொருள்களின் அழிவு எப்படி ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு வித்தாகும்? தீமையை மட்டும்தான் அழிவுக்கு உட்படுத்தலாம் அல்லவா? ஒரு மாபெரும் ஆக்ரமிப்பு நடத்தி இருப்பவர்களிடம், தயவு செய்து வெளியே போகிறாயா என்றா கேட்போம்? நாம் நாலு நாள் இல்லாத போது, அல்லது அசந்த போது, நம் வீட்டில் யாராவது வந்து குடியேறினால், ஒரு மூலையில் சாப்பிடாமல் உட்கார்ந்து அவர்களாக வெளியே போகும் வரை கோஷமா எழுப்பிக் கொண்டிருப்போம்? நாடு பெரிய வீடுதானே ? மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வது போல் அவசியமானால் களமிறங்குவதுதானே சரி?
இந்தக் கட்டுரை எண்ணங்களின் கலவை. இப்போது, நேதாஜி பற்றி வரும் பத்திரிகைச் செய்திகள். இங்கிலாந்திற்கு அடிமைப் படுத்தப் பட்டிருந்த போது, அவர்களுடையது எல்லாம் விலக்க வேண்டியவை என நினைத்தோம். இப்போது சுதந்திரம் வந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், மேற்கத்திய மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கிலேயர்களால், அவர்கள் ஆட்சியில் அடிமையாக இருந்தும் நாம் பெற்ற சில நல்ல பாதிப்புகளை மறுத்தல் சாத்தியம் இல்லை. ஆங்கிலமும் , ரயில் போக்குவரத்துத் துறை கண்ட முன்னேற்றங்களும் போதாதா? அப்போது வெள்ளையனே வெளியேறு கோஷம் போட்டு, பாரத மாதாவுக்கு நல்ல புதல்வர்கள் என்று சொல்வது பெருமைக்குரிய விஷயமாய் இருந்தது. இப்போதோ நமக்கு சற்றும் பொருந்தாத அவர்களுடைய சில பழக்க வழக்கங்களை பின்பற்றுவது பெருமையாய் உள்ளது. ஆனால் எது சரியான நிலை? எதை யாரிடம் இருந்து எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை அப்போது, அதுவும் அவசியமானால் எடுத்துக் கொள்வது. அவர்களுடைய திட்டமிடல்-Meticulous planning , பாதகமான சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் திறமை, Rational approach அதையெல்லாம் விட்டுவிட்டு , சரியாக யோசிப்பவர்களுக்கு தீவிரவாதி முத்திரை குத்தி விட்டு,எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக அணுகிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது உணவு,உடை எல்லாவற்றிலும் கண்மூடித் தனமாய் அவர்களைப் பின்பற்றுகிறோம்.
நாம் பார்க்கும் அனைவரும், நம் சுற்றுப்புறமும் நம்மைப் பாதித்துக் கொண்டே இருந்தால் நம்மிடம் ஏதோ தவறு. ஒரு நிமிடமும் விடாது முதன்மைப் படுத்தி கொள்ளும் எண்ணம் மனித மனதின் கோளாறாக உள்ளது. சுத்தமாக அது அழிந்தால்தான் நன்று. எதற்காக உலகத்தின் பார்வையில் நல்லவனாக, பணக்காரனாக, அழகனாக, சமூக சேவாரத்னமாக, ஆன்மீகவாதியாக, அஹிம்சாவாதியாக, பன்முக அறிவு கொண்டவனாக, இரக்கமுள்ளவனாக காட்டிக் கொள்ள வேண்டும்? அட உலகம் கிடக்கட்டும். அவரவர் பழகும் சிறுவட்டத்திற்குள் மாத்திரம் என்ன நடக்கிறது? எதற்கு நம்மைப் பற்றி ஒரு வரியேனும் உயர்வாகப் பேசிக் கொள்ள வேண்டும்? சும்மா இரு, சொல்லற என்பதல்லவோ உயர்வு!!உண்மையான இருப்பை விடவும், வெளியே எவ்வாறு தெரிகிறோம் என்று கவலைப் படுபவர்கள்தான் சுற்றுப்புறத்தில் இருந்து அதிகஅதிர்வுகள் எடுத்துக் கொள்கிறார்கள் என எண்ணுகிறேன். நாம் நாமாக இருந்தால் என்ன? ஏன் யாரோ ஒருவர் போல் மாற வேண்டும்? அவர் நல்லவரானால் கூட!மனது கண்ணுக்கு தெரியாது எங்கோ உள்ளது. சும்மா இருக்கப் பழக வேண்டும். பரிபூரணர்களாகி விட்டோம் என்ற எண்ணம் வந்தால் கண்டிப்பாக LKG ல் தான் இருக்கிறோம். நம் வேலையைக் கவனமாக செய்வது அமைதி தரும். மற்றவர் பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பது அதிக அமைதி தரும். அவர்களிடம் இருந்து நல்ல, தவறான அதிர்வுகள் எதையும் எடுத்துக் கொள்ளாதிருப்பது அமைதியைத் தங்க வைக்கும். முக்கியமாக, உள்ளே நேதாஜி ஆதரவாளனாக இருந்து கொண்டு வெளிப்பார்வைக்கு மஹாத்மா வழி அஹிம்சாவாதி போல் காட்டிக் கொள்ளாதிருப்பது பொய்மையை முற்றும் விலக்கும் . பொய்க்கலப்பற்று இருத்தல் நன்று. தூக்கத்தில் உளறினால் கூட உண்மையே வரும். அதுவே நன்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக