தொலைத் தொடர்பு சாதனங்களில் தலையாயதாய்க் கருதப் படும் தொலைபேசி என்னைப் பொறுத்த மட்டில் தொல்லையான ஒரு சாதனமே.என் ஸ்மார்ட் போன் ஒரு வாரமாக சரியில்லை.அது சரியில்லை என்பதை ஒரு வழியாகப் புரிய வைத்து ரிப்பேர் பண்ண கொடுப்பதற்குள் முழு எனெர்ஜியும் போய் விட்டது.வீட்டில்,நேற்று பிறந்த என் நாத்தனார் பேரன் தவிர எல்லோரிடமும் போன் உள்ளது.அந்த குழந்தை கூட தூக்கினால் முதலில் கையில் உள்ள போனைத்தான் பிடுங்கி வாயில் வைத்துக் கொள்கிறது.அதனால் போன் சரியில்லை என்ற என் புலம்பலைக் காதில் வாங்கவே வீட்டாருக்கு நாலு நாள் ஆனது.தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.அவரவர் தங்கள் போனுடன் வழக்கம் போல் ஆசை ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.போனைப் பார்க்கும் கண்ணில் தெரியும் அந்த அன்பை இப்போதெல்லாம் யாரும் நேரில் உள்ளவர்களிடம் காட்டுவதில்லை என்பதே வருத்தமான உண்மை.அந்த போனும் சற்றும் நன்றி இன்றி இத்தனை நாள் பயன்படுத்திய என்னை விட மற்றவர்களிடம் சரியாக நடந்து கொண்டது.அவர்கள் உபயோகித்துப் பார்த்த போது அமைதியாய் வேலை செய்து என்னை கேலி பொருளாக்கிற்று.கடைசியில் அது சுத்தமாக ஸ்ட்ரைக் பண்ணி தங்கள் தேவைகளுக்காகக் கூட வீட்டார் என்னைத் தொடர்பு கொள்ள இயலாமல் போன போது ரிப்பேர் கடை சென்றது.
போன் இல்லாத இந்த சில மணி நேரங்கள்.தொலைபேசி அத்தியாவசியமான சாதனம் அல்ல.என் பாட்டி சொல்வார்கள் செய்தி எதுவும் வராதிருந்தால் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருப்பதாகப் பொருள் என்று. சரிதானே?வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றால் அவர்கள் பத்திரமாய் வீடு திரும்ப வேண்டும் என இறைவனிடம் மட்டும் சொல்லி விட்டு வேலையைக் கவனித்தது அந்த காலம்.அவர்கள் வாசல் சென்று ஓலா டாக்சி பிடித்து ஏறி உட்கார்ந்ததில் இருந்து தெரு முக்கு திரும்பும் முன் எங்க இருக்கே என்று கேட்பது இப்போ ட்ரெண்ட்.அது என்ன புஷ்பக விமானமா ஏறின உடன் destination அடைய.தெருமுக்கில் உள்ளேன் என்ற பதில்தான் வரும்.அதுவும் சென்ற மழையில் பழுதுபட்டு இன்னும் செப்பனிடப் பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் சாலையில் பயணித்தால்,இதோ அடுத்த அபார்ட்மெண்ட் தாண்டிவிட்டேன் என்றுதான் சொல்ல முடியும்.இன்று என்ன சமையல் என்பதில் தொடங்கி வம்பு பேசும் சாதனம் அல்ல அது.வாழ்வு இருமைகளால் ஆனது.சந்தோஷம் அல்லது வருத்தம் பகிர படுகிறது,தொலைபேசி மூலம் என்று வைத்துக் கொள்வோம்.சந்தோஷமான செய்தி தெரிவிக்கப் பட்டால் சரி.அதற்கு மேல் பேசும் எதுவும் அதிகப் பொருளில்லாமல் நாம் செய்யும் வார்த்தை ஜாலங்கள்.தொலைபேசி செய்தித் தொடர்பு சாதனம்தான்.நம் உண்மை உணர்வுகளைச் சொல்ல அது பயன்படுவதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்பவும் உள்ளது.மனசு விரிவுபட்டால் சொல்லின் தேவை குறையும்.நீ ஒரு தடவை பேசினால் நான் ஒரு தடவை பேசுவேன் என்று கணக்குப் போட்டு பேசுவோர் அதைத் தவிர்த்தே விடலாமே.ஏர்டெல் வழங்கி உள்ள சேவைகளால் மனம் மகிழ்ந்து ஒரு நிமிடத்திற்கு 10 பைசா என பூஸ்டர் போட்டுக் கொண்டு பேசுகிறோம்,வேண்டிய,வேண்டாத அனைத்தையும்.மனசில் சந்தோஷம் பொங்கும் நேரம் பூஸ்டர் முடிந்து விட்டால் சந்தோஷம் பகிர படக் காத்து நிற்குமா?வோடாபோனும் ஏர்டெல்லும் புத்திசாலியா நாமா?அடுத்து வருத்தங்கள்.நேரில் பேசும் போதே நாம் சொல்வதை மூளையில் process கூட பண்ணாது,காது கொடுக்காதவர்கள்,காது இருப்பினும் கேட்க தெரியாதவர்கள் அதிகம்.நம் வருத்தங்கள் எதிராளியை அதே அளவு பாதிப்பதில்லை.இது உண்மை.நேரில் சாதிக்க முடியாததை தொலைபேசி மூலம் சாதிக்க முடியாது.நல்லபடியாக சொல்லப் போனால்,நம் எண்ணங்களை போன் போட்டு ஒருவருக்கு சொல்லி அவர்களை வருத்தப் படுத்த வேண்டாமே?கண்ணால் காண முடியாத தொலைவில் உள்ள நம் சொந்தமும் நலம் விரும்பிகளும் நம் பிரச்சினையை நேரில் அறியும் வரை நிம்மதியாக இருக்கட்டுமே?
இன்று காலை என் தோழியிடம் இதை விவாதித்தேன்.அட எப்படி உனக்குத்தான் போன் இல்லையே என்கிறீர்களா?Landline எதற்குள்ளது?நாம்தான் மூச்சுக்காற்று போல போனை நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தைச் சேர்ந்தவர்களே ! உடனடியாய் மாற்று ஏற்பாடு செய்ய மாட்டோமா?அவள் சொன்னாள் நீ செய்யாத ஒன்றை எழுதாதே என்று.மிகவும் சரி.தொலைபேசி இல்லாமல் நிம்மதியாக இருந்தேன் எனில்,அந்த அமைதியை நாடுவதுதானே சரி.எனக்கு personal ஆக பல காரணங்களால் தொல்லை உண்டாகிறது.வாட்சப் என்ற குறும் செய்திப் பரிமாற்றங்களில் mindless forwards அனுப்பப் படுகின்றன.பொதுவாக இம்மாதிரிக் குறும் செய்திகள் படிக்கும் போது நன்றாக இருந்தாலும்,உடனே மறக்கப் படுகின்றன.அனுப்பும்,படிக்கும் நேரம் வேஸ்ட்.அடுத்தது,நான் யார் கூடவாவது பேசிக் கொண்டுள்ள போது என்னைத் தொலைபேசியில் யார் அழைத்தாலும்,என் எதிரே உள்ளவருக்குத்தான் முதல் இடம்.தொலைபேசியில் அழைத்தவரிடம் மறுபடி அழைப்பதாகக் கூறி,பேச்சைத் தொடர மாட்டேன்.அதை மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.என்னை அருகே வைத்துக் கொண்டு,ஒரு நபர் வேறு ஒருவருடன் பேசுவது பிடிப்பதில்லை.அதாவது தொலைபேசியில் பேசுவது பிடிப்பதில்லை.அது என்ன விஷயமானாலும்.உடனடித் தீர்வை நம்மிடம் எதிர்நோக்கும் ஒருவர் எங்கோ இருந்து போனில் பேசிக் கொண்டிருப்பாரா?எங்கிருந்தோ தொலைபேசியில் மட்டும் பகிர படும் செய்தி,காதுக்கு மட்டுமே.அப்படிப் பட்ட விஷயங்கள் நம் முன்னால் உயிருடன் உட்கார்ந்துள்ளவரை விட எப்படி முக்கியம்.?அரை மணி தாமதிக்க முடியாத அளவு ஏன் முக்கியம்?இது போல் Telephone conversation க்கான என் code மற்றவருடன் ஒத்துப் போவதில்லை.
ஆயிற்று இன்று போன் வந்து விடும்.சென்ற வருட மழைக் காலம் அகதிகள் போல் அலைந்த வரை உண்மையில் நமக்கு எத்தனை செட் உடை தேவை என்பதை யோசிக்க முடிந்ததில்லை.கண் முன்னால் அன்பான உயிர்கள் மடிவது கண்டும் வாழ்வு சமநிலை அடையவில்லை.முதியோர் இல்லங்கள் பெருகுவது கண்டும் குழந்தைகளை சார்ந்திருப்பதை விட முடிவதில்லை.இது போல் முடிவதில்லை என்ற பட்டியலும் முடிவதில்லை.தொலைபேசி ஒரு Necessary evil ஆகி விட்டது.அதை இனி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது.கத்தி காயும் நறுக்கும்.கழுத்தையும் அறுக்கும்.எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பது கத்தி பிடித்தவன்தான் முடிவு செய்ய வேண்டும்.நான் காய் நறுக்குவதுடன் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக