MOTHER PROTECTS
புது வருஷ வாழ்த்துக்கள்.நாங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறோம்.120 வீடுகள் இருக்கும்.புதுவருஷக் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான பரிணாமம் கொண்டுவிடுகின்றன.மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட மேடை.மைக் செட்.ஸ்பீக்கர்.உணவு அளிக்கும் (காசு கொடுத்தால்தான்)ஸ்டால் ,அலங்கார பொருள்கள் விற்பனைப் பிரிவு ,தம்மை முன்னிலைப் படுத்தி காட்ட கூடிய உயர்தர உடை அணிந்த ஆண்,பெண்,குழந்தைகள்.சமீபத்திய திரைப்படங்களில் இருந்து குத்துப் பாட்டுகள்,அதுவும் அதிகபட்ச வால்யூமில் ,அதற்கேற்ப நடனமாடிய தோழர்கள் ......கொண்டாட்டம்தான் போங்கள் .மகிழ்ச்சி தொற்று .சந்தோஷமான சூழ்நிலை நம்மையும் மகிழ்வூட்டுகிறதுதான்.ஆனால் எவ்வளவு நேரம் தொடர இயலும்?தேடல் வெளியே நடந்து கொண்டுள்ள வரை ,கமா போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.புள்ளி வைப்பது அவசியம்தானே ?இல்லை என்றால் ,முடிவு தெரியா நாவல் போல குறுகுறுப்பாக இருக்கும் அல்லவா?நாம் இருக்கிறோம்.நமக்கு உள்ளே ,வெளியே என இரு இடங்கள்.மகிழ்ச்சியை வெளியே தேடுகிறோம் என்றால்,உள்ளே அது இல்லை என்பதே பொருள்.இன்னும் துல்லியமாகச் சொன்னால் ,தேடல் நடக்க வேண்டியது வெளியேதான் என்று முழுமையாய் நம்புகிறோம்.பொன்னையும் பொக்கிஷத்தையும் பூமிக்கடியில் புதைத்து விட்டு,வீட்டு அலமாரியில் தேடினால் அகப்படுமா?
விழாக்கள்,பண்டிகைகள் மட்டும் கொண்டாட்டமா?இருப்பே கொண்டாடப் பட வேண்டிய ஒன்றுதானே!காலை கண் விழித்தால் ,நான் இன்று இருக்கிறேன் என்பதே பெரிய விஷயம் அல்லவோ? ஆனால் சொல்லும் அளவு உள்தேடல் சுலபமில்லை.நல்ல மாற்றங்கள் ஏற்படும்,அவ்வப்போது.ஆனால்,அவை irrevocable ஆக இருப்பது கஷ்டம்.தேடல் பெரும்பாலும் பெரிய catastrophes நடந்த பின் ,பெரிய வலிகளுக்குப் பின்னரே தொடங்குகிறது.நாம் ஏன் இங்கு உள்ளோம் என்ற எண்ணம் வந்தால் நல்லது.அதுவே அடிப்படை.பள்ளி சென்றால் அது படிக்க,குளியலறை சென்றால் குளிக்க,கடைக்கு சென்றால் சாமான் வாங்க,திரையரங்கு சென்றால் கேளிக்கைக்காக,கோவில் சென்றால் சாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ள ,உணவகம் சென்றால் சாப்பிட என்று ஒவ்வோர் இடத்துக்குச் செல்லவும் நமக்கு காரணம் தெரியும் போது உலகத்திற்கு வந்தது எதற்கு என அறியாமல் போய்ச் சேரலாமா?
நேற்று கொண்டாட்டங்களின் போது அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.Obvious ஆக food stall அருகில்.அந்தப் பெண்ணால் காசு செலவழித்து எந்த உணவும் வாங்க இயலாது.ஏனெனில் அந்த ஒரு நாள் கூத்துக்கு செலவழிந்த மின்சாரத்துக்கு சேர்த்துதான் சோளா பூரிக்கு ரேட் .அவள் எங்கே போவாள்,பாவம்!சீதையைக் கவர நடந்த மாரீச மான் போல,சாப்பிடுபவர்களின் கவனம் ஈர்க்க அக்குழந்தை நடை போட்டது.சீதா ப்ராட்டி தெய்வம்.எளிய மானுட வடிவெடுத்த தெய்வம்.காலமோ வால்மீகி காலம்.மாரீசனை மான் என நம்பினாள் .நாமோ டெக்னாலஜியைக் கைக்குள் வைத்திருக்கும் உயர்மட்ட மனிதர்கள்.அக்குழந்தைக்கு உணவைப் பார்த்து ஆசை வரும் என்பது போன்ற விஷயங்களைக் கூட மனதால் யோசிப்போமா?தெரிந்த வழியையே GOOGLE MAP அல்லவா சொல்ல வேண்டும்!நம் முழங்கால் உயரம் கூட இல்லாத சிறு மனிதன் ,அவனா முக்கியம்,2017 ஐ வரவேற்பதை விட?இயேசு கிறிஸ்து அவதரித்து 2017 ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்னும் 2000 ஆண்டுகள் போகட்டும்.இன்னொரு அவதாரம் வேண்டுமானாலும் நிகழட்டும்.நான் தேடிச் சோறு நிதம் தின்று,சின்னஞ் சிறு கதைகள் பேசி வேடிக்கை மனிதனாக கதையை நடத்தி விட்டுப் போகிறேன்.வருத்தமாக இல்லையா?ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் கேள்வி எழும் .கேள்வி வந்தால்தான் பதில் யோசிக்கத் தோன்றும்.
ஏன் காதைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்?ஏன் பாடம் பெற வாழ்க்கையில் அடி வாங்க வேண்டும்? வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பாடமல்லவா?எத்தனை மஹான்கள் நடந்த வழித் தடங்கள் கண் முன்னே தெரிகின்றன.Is it not very easy to be a follower than be a leader? கேளிக்கைகள் தவறில்லை.ஆனால் கால அவகாசத்திற்குட்பட்டவை.அன்று மேடையில் ஒரு நடிகரை இமிடேட் செய்து ஒரு சிறுவன் ஆடினான்.உலகமே நாடக மேடை.நாடகத்திற்குள் ஒரு நாடகம்.என்ன பயன்?கேளிக்கைகள் மூலம் ஏதேனும் செய்தி சொன்னாலாவது தேவலை என்றிருந்தது.நித்தம் நம்மை அமைதியாக,ஆனந்தமாக வைத்துக் கொள்ளத்தான்,கொஞ்சம் நேரம் செலவழித்து சிந்திக்க வேண்டும்.Celebration சந்தோஷம் .Life முழுமையும் celebration ஆனால் நிரந்தர சந்தோஷம் .ஆமாம், நிரந்தரம் என்று பேச எது உள்ளது?ஒரு இடைச் செருகல்.அடுத்த போஸ்ட்டின் வித்தும் கூட.அந்தக் குழந்தைக்கு,மாரீச மானுடன் ஒப்பிட்டேனே அந்தக் குழந்தைக்கு சிலர் சாப்பிட ஏதோ வாங்கித் தந்தனர்.அவர்களுக்கு என் மன ஆழத்தில் இருந்து வணக்கம்.ஆனால் அன்ன தானம்தான் சிறப்பு என்கிறார்களே,அதில் என்னால் உடன்பட முடியவில்லையே?போதும் என சொல்ல வைக்கக் கூடியது என்கிறார்கள்.சரிதான்.ஆனால் அந்த வேளைக்கு மட்டும்தானே வயிறு போதும் என்று கூறும்.?அடுத்த பசி?So வேறு ஏதோ தானம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்.நீங்களும் யோசியுங்கள்.நானும் யோசிக்கிறேன்.மறுபடி பார்க்கலாம்.
ரஞ்ஜனி த்யாகு

ஆங்கில SMS படிக்க சிறமப்படும் நமது சகோதர சகோதிரிகளுக்கு SMS ஐ தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் பயன்பாடு. முடிந்த வரை பகிரவும்.https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil&hl=en
பதிலளிநீக்கு