உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள் சந்திக்கும் போது பொதுவாக அதிகம் அவசியமற்ற விஷயங்கள் பேசப் படுகின்றன என்பதே என் எண்ணம்.எது அவசியம்,எது அவசியம் இல்லை என்பது வேறுபடலாம்.இன்று எனக்கு ஏற்பட்ட சந்திப்புகள்,பாதிப்புகள்,விவாதங்களே இந்த போஸ்ட்.எல்லா காலங்களிலும் speech silver , silence gold தான். உங்களுக்கு,எனக்கு,ஏன் எல்லாருக்கும் சில விஷயங்கள் பேசி பலனில்லை என்று தெரியும்.ஆனாலும் பேசுவோம்.பகவான் விஷ்ணுவின் அடிமுடி காண இயலாத அளவு ஒரு பிரச்சினை முதியோருக்கும் இளையவர்களுக்கும் நடுவில் நடக்கும் மனப் போராட்டங்கள். இன்று என் தங்கை கேட்டாள் , "குழந்தைகளுடைய சிறுவயதில் ஆசை ஆசையாக எல்லா இடத்துக்கும் பெற்றோர் கூட்டிச் செல்கிறார்கள்,தளர்நடை பயிலும் செல்வங்களைக் கைப் பிடித்து அழைத்துச் செல்வது இன்பம் தருகிறது.ஆனால் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி,பெற்றோரை அப்படி அழைத்துச் செல்வதிலும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் அந்த அளவு இன்பம் காண்பதில்லையே,ஏன்? " சரியான கேள்வி.அம்மா,அப்பாவை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட மனசாட்சியிடம் சற்றுப் பேசிப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படும்.முதியவர்களை குழந்தைகளிடம் காட்டும் அதே பாசத்துடன் அணுகுகிறோமா?சற்றும் சலிப்பில்லாமல்? ஆமாம் என்று சொல்லும் யாரையும் நான் நம்ப மாட்டேன்.நம் குழந்தைகளுடன் நமக்கு உள்ள கெமிஸ்ட்ரி வேறு.பெற்றோரிடம் உள்ளது வேறுதான். காரணம் என்ன?
அறியாய் பருவத்தில் இருக்கும் குழந்தையும்,எல்லாம் அநேகமாக அடங்கிய முதியோரும் சார்ந்து இருப்பவர்கள்.யாரோ ஒருவரை சார்ந்து செயல்பட வேண்டி உள்ளவர்கள்.இரண்டு சார்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளே சலசலப்புகள்.குழந்தையை நம் விருப்பப் படி எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்வோம்.என் குழந்தைக்கு கோவில் என்றால் உசிர் என்று நாமே முடிவு செய்த ஒன்றை குழந்தை மேல் திணித்து நாம் விரும்பும் இடங்களுக்கு சென்று வருவோம்.நம் நம்பிக்கைகளே பெரும்பாலும் நம் குழந்தைகளின் நம்பிக்கை.இளம் குழந்தைக்கு யோசிக்கும் திறன் வளர நாளாகிறது.மனதளவிலும் உடலளவிலும் அது நம்மால் வழி நடத்தப் படுகிறது.நமக்கு ,நம் ஈகோ நிறைந்த மனசுக்கு அது சந்தோஷம் தருவது வியப்பில்லை.ஆனால் முதியவர்கள்! அவர்களுக்கு தேர்வு செய்யத் தெரியும்.எங்கே செல்ல வேண்டும்,எங்கே தங்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கத் தெரியும்.பண்ண வேண்டிய மனம் சம்மந்தப் பட்ட முடிவுகளைத் தாம் செய்கிறார்கள்.தங்கள் பாதுகாப்புக்கு இளையவர்களைச் சார்ந்துள்ளார்களே தவிர அவர்கள் பற்றி வேறெதையும் யோசிக்கும் மனநிலை பெரும்பாலான பெரியவர்களுக்கு இருப்பதில்லை.ஏன் பிரச்சினை வராது? Decisions எல்லாம் Lead பண்ணுபவரிடம் இருந்தால் தகராறு இல்லை.முடிவை நான் எடுப்பேன்,நீ கதையை நடத்து என்றால் சலிப்புதான் வரும்.அதுவே - நாம் உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் அந்த சலிப்பே பெரியவர்கள் தாம் ignore பண்ணப் படுவதாய் நினைக்க முக்கியக் காரணம்.
இதில் மாற வேண்டியது முதியோர்தான்.குழந்தைகள் இயல்புப் படி நடந்து கொள்கிறார்கள்.நடுவயது மனிதர்கள்,சிலர் தவிர பெரும்பாலானோர் நன்றாக நடந்து கொள்ளவே முயற்சி செய்கிறார்கள்.அவர்கள் அடையும் ஆயாசமும் வயதிற்கு இயல்பாக வரும் ஒன்றே.இயல்புக்கு முற்றிலும் புறம்பானவை செய்யும் முதியோர்தான் யோசிக்க வேண்டியவர்கள்.நான் முதியவர்களுக்கு எதிரி அல்ல. பட்டாம்பூச்சி பறப்பது போல் நிமிஷமாகப் பறந்து சென்ற என் அன்பு அப்பா போல், துறக்க வேண்டியவற்றை நிச்சலனமாகத் துறந்து அமைதி அனுபவிக்கும் முதியோருக்கு நான் எதிரி அல்ல.குழந்தை எப்படி உலகிற்கு வருகிறது?அப்படியே உலகை விட்டு நீங்குபவர்களுக்கு மட்டும்தான் அமைதி கிடைக்கும்.Second childhood என்றால் உடலளவில் மட்டுமா?மனத்தாலும்தானே? ஆயிரம் எண்ணங்கள் அலைமோதுகின்றன.எழுத முடியாது என்று தோன்றுகிறது. குழந்தை தனக்கென தனிமனது பெறும் நொடி அதன் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன.முதியவர்கள் தன் தனிமனதை இழந்த நொடி அவர்கள் போராட்டங்கள் முடிவடைகின்றன.
இன்று அரவிந்த அன்னையின் அவதாரத் திருநாள். பிப்ரவரி 21 ம் நாள்.என்றோ தொடங்கிய போஸ்ட்.இன்று முடிக்கிறேன்.தெய்வங்களும் குழந்தைகளாகவே பிறக்கின்றன.மனத்தால், பல வருஷங்களுக்கு முன் ஜனித்த அந்த தெய்வ குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.மனத்தின் ஆழங்களுக்கு பயணிக்கும் போது எல்லாமே அமைதி என்று தெரிகிறது. சலனங்கள் வெளியேதான்.தெய்வத்தின் அருள் கொடை கற்பக வ்ருக்ஷம் போல . We can receive it in the silence of the heart.இன்றுள்ள மனநிலையில் தலைப்புடன் தொடர்பாக ஏதும் பேச இயலவில்லை. நாம் விரும்புவது போலவே வாழ்வு அமையும் என்ற உத்தரவாதம் யார் தர இயலும்? நம்மால் வேறெதுவும் செய்ய இயலாது என்ற கடைசி நாட்களுக்காக உள்ளே செல்லும் பயணம் ஒத்திப் போடப்பட்டால் அது முட்டாள்தனமல்லவா?சாக்ரடீஸ் விற்பனைக்காக பரப்பப் பட்டிருந்த பல ஆடம்பர பொருள்களை பார்த்து அதிசயித்தாராம்!"உலகில் எனக்கு வேண்டாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன"என்று.இரண்டாம் குழந்தைப் பருவத்தில் ஒவ்வொன்றாக விடத்தானே வேண்டும்? உறவுகள் ஆசைகள்,செல்வம்,பதவி,புகழ்,தேவையற்ற எண்ணங்கள் என்று குழந்தை ஒவ்வொன்றாக சேர்க்கத் தொடங்குவது போல ,மறுபடி குழந்தைகளாகி விட்டோம் என்பவர்கள் ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்க வேண்டும் அன்றோ?என்னைத் திட்ட முடியாது. நான் வாழ்வின் இரண்டாம் பாகத்தில்தான் இருக்கிறேன்.சொல்பவை அனைத்தும் முதலில் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்.
தளர்நடையும், பொக்கைவாயும்,ஒருவரை மறுபடி குழந்தை ஆக்குவதில்லை.மனசு என்று ஒன்று உள்ளதே அதுதான் குழந்தை ஆக்குகிறது.பின் ஏன் சிலரைப் பார்த்து அவருக்கு குழந்தை மனசு என்கிறோம்? நிஜமான குழந்தை போல உள்ள முதியவர்கள் குழந்தை அடையும் அத்தனை சலுகைகளையும் அடைந்து,Second Childhood ஐ கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் திண்டாடுகிறார்கள்.அதற்கு அவரவரே பொறுப்பு.உலகில் குழப்பங்கள் இல்லை.எல்லாக் குழப்பங்களும் மனதில் மட்டுமே.ஒரே உலகம் சிலருக்கு சொர்கமாகவும் சிலருக்கு நரகமாகவும் தெரிந்தால் குறுக்கிடுவது மனம்தான் என்று உணர்வோம் . Seneca writes to his friend Lucillius,"நேரம் தவிர வேறெதுவும் உலகில் நம் சொந்தமில்லை.ஆனால் வேண்டாத பல விஷயங்கள்,மனிதர்கள் நம்மிடம் இருந்து அதை திருடி விட இயலும்.திருடினவர் நினைத்தாலும் திருப்பித் தர முடியாத ஒன்று என்பதே அதன் சிறப்பு.நம்முடையது என்ற ஒரே பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? Certain moments are torn from us.Some are gently removed.சீக்கிரம் விழித்துக் கொள் நண்பனே " என்று.Life span நூறு வருஷம் என்றால்,ஐம்பது யோசிக்க சரியான வயதுதானே ? சொல்லப் போனால் லேட் .பேசுவோம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
ஆங்கில SMS படிக்க சிறமப்படும் நமது சகோதர சகோதிரிகளுக்கு SMS ஐ தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் பயன்பாடு. முடிந்த வரை பகிரவும்.https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil&hl=en
பதிலளிநீக்கு