இரண்டரை மாதங்களாக எதுவும் எழுதவில்லை.மனம் தொடும் நிகழ்வுகளே எழுத்து.60 நாட்களாகவா எதுவும் மனத்தின் ஆழமான பகுதியை அடையவில்லை ?அப்படி என்றால் அந்த நாள்கள் வாழ்ந்த கணக்கா வாழ்வில் இருந்த கணக்கா?வாழத்தான் பிடிக்கிறது.வாழ்க்கை என்பது எண்ணமா ,நம்மைச் சூழ்ந்துள்ள மனிதர்களா,தினப்படி நடக்கும் நிகழ்வுகளா?ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொன்று.எனக்கு வாழ்க்கை எண்ணம்தான்.எந்த ஒரு நிகழ்வு எந்த ஒரு நபர் எண்ண வடிவில் எனக்குள் புக முடியுமோ அவர்களுடன்,அவைகளுடன் நான் நடத்தின நாடகம்,என்னைக் கருவியாக்கி இறைவன் நடத்தின நாடகமே இந்த 50+ ஆண்டுகள் .
இன்று அப்பாவின் பிறந்த நாள்.அம்மாவும் அப்பாவும் வெறும் மனிதர்களல்ல.தெய்வங்களும் அல்ல . அப்பா என்பது ஒரு எண்ணம்.Feel .மனதை மென்மையாக்கி மனதை அமைதியாக்கி உருவம் காட்டாது வ்யாபித்துள்ள எண்ணம்.சென்ற வருஷம் இந்த நாள் தன் இறுதி நாட்களில் இருந்தார்.உண்மையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்திருக்கிறார்.மனிதன் எப்படி எதையும் உணரும் சக்தி அற்ற அற்ப ப்ராணி என்று எண்ணங்கள் ஒடுங்கிப் போகின்றன. "Many more happy returns அப்பா "என்று பிறந்த நாள் வாழ்த்து ,வாழ்த்த வயதில்லாததால் வணக்கம் சொன்னேன்.அதற்கு பொருள் என்ன?தம் வாக்கால் ஒன்று சொன்னால் நடக்கும் என்று உணர்ந்தவர் தவிர பிறர் கூறும் இந்த வார்த்தைகள் வெறும் ஓசை அன்றோ?நல்ல வார்த்தைகளே வெறும் ஓசைகள் என்றால்,நிஜமான ஓசைகள் கேட்கப் பிடிக்காது போவது தப்பில்லை.என் அப்பாவின் இறுதி நாட்கள் அப்படித்தான் ஆரவாரம் குறைந்து போய்,ஆசைகள் அற்றுப்போய் ,எல்லா ஒலிகளும் ஓசையாய் ஒலித்து ,சாப்பிடுவது ஒரு வேலையாகிப்போய்,குளிப்பது கூட நம்முடையது அல்லாத ஒரு பாத்திரத்தைக் கழுவும் வேலை போலாகி நகர்ந்தன.திட்டம் இட முடியாத இறுதிப் பயணமும் அதே போல் " கொஞ்சம் வெளில போய் வரேன்" என்பது போல் நிகழ்ந்தது.என்ன, "வரேன்" மட்டும் சொல்லவில்லை. "இந்த வாழ்வும்,,இந்தக் கூடும் இந்த எல்லாமும் போதும்.அனுப்பி வைத்தவன் வேறு நல்ல , ""விசையுறு பந்து போல் உடல் தருகிறேன்,வா"" என்று ஆசை காட்டி அழைக்கிறான் .சொல்லிக் கொண்டு புறப்பட்டால் மூக்கிலும் வாயிலும் ஒரு கருவி பொருத்தி ஹாஸ்பிடலில் ,நீங்கள் கடவுள் என நினைப்பவரிடம் என்னை அனுப்பி வைப்பீர்கள்.நைந்த இந்த தேகத்தில் இன்னும் கொஞ்சம் நாள்கள்,அர்த்தமற்ற சஞ்சலங்கள்,போதும் சாமி "என்று சட் என,நொடியில் நகர்ந்து விட்டார்.இன்று உன்னை ரொம்ப நினைத்துக் கொள்கிறேன் அப்பா.நான் கூறியபடி நீ எண்ணமாய் எனக்குள் நிறைந்திருந்தால் எங்கே போய் விடுவாய்?மறுபடி உன்னைப் பார்ப்பேன்.
எண்ண வடிவில்,ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்வுகள்,மனிதர்கள் உண்டு.புறச் சலனங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.வாழ்வு அகம் சம்பந்தப் பட்ட ஒன்றே.அகம் அழகானதொரு உலகம்.அதை சரியானபடி திறக்க இறை அருள் தேவை என்றாலும்,போனால் போகிறது என சாவியை பகவான் நம் கையில் கொடுத்து வைத்துள்ளார்.தொலைத்து விட்டுத் தேடக் கூடாது.எண்ணமாய் நிறைந்த சிலருடன்,அதிக மக்கள் தொகை அற்ற நாடுகள் போன்றதொரு அக உலகம் சுகம். சாவியை குறைவாக,பயன்படுத்தினால் நிம்மதி.அது நம் சாய்ஸ். தத்துவம் மாதிரி தோன்றினாலும் எளிமையான உண்மை இதுதான்.வாழ்வு என்பது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களில் நிறைந்தவர்கள்,நிறைந்தவைகளே.வெளியே நிகழும் சந்திப்புகள்,நம் தொடர்புகள்,நிகழ்வுகள் எல்லாம் சினிமாதான்.பொழுதுபோக்குத்தான்.ஆமாம்,பொழுதுபோக்குக்காக எத்தனை நேரம் செலவிடலாம்?......தொடரும்?.......
ரஞ்ஜனி த்யாகு

Mother Protects
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக