அவ்வையார் ஆத்திச் சூடியில் நேர்பட ஒழுகு என்கிறார்.அப்பீல் இல்லாத விஷயங்கள்தான் ஆத்திச்சூடி முழுமையும்.ஒரு நேர்கோடு போட்டுக் கொண்டு வரும் போது ஸ்கேல் விலகினாலோ நம்மிடம் சிறு அதிர்வு ஏற்பட்டாலோ கோடு தடம் மாறும்.கோணலாகும் .சாக்பீஸ் பென்சில் கோடுகள் தப்பாகும் போது அழித்து மறுபடி நேராக்கலாம்.பேனாவால் போட்டால் ஒயிட்னர் தேவை.அது இங்க் கரையை மறைக்கும்.ஆனால் கோடு எங்கே தப்பியது என்று முழுமையாய் மறைக்காது.பர்மனன்ட் மார்க்கர் என்ற ஒன்றுண்டு.அதால் கோணல் கோடு போட்டால் பக்கம் வீண்தான். அவ்வயாருக்கு நேர்பட ஒழுகு என உள்ளிருந்து குரல்(என்னைப் பொறுத்த வரை இறையின் குரல் ) கேட்டது.Effortless ஆக எழுதி விட்டார். சாமானியர்களுக்கு பேப்பர் பென்சில் என்று ஆரம்பித்துத்தான் யோசிக்க முடியும்.சரிதானே?
நேர்பட ஒழுகுதல்,பேசுதல் தானாக பிரயத்தனங்கள் இன்றி நடைபெற வேண்டியது.அதன் திரிபு ஆச்சரியம் தருகிறது.ஏன் என்ற கேள்வி தருகிறது.முக்கியமாக,பேச்சு.உதாரணங்கள்."இப்பதான் எங்கள் வீடு வர வழி தெரிந்ததா"என்ற ஒரு வழக்கு உள்ளது.முதல்முதல் இந்த வாக்கியம் கேட்ட போது எனக்கு அர்த்தம் விளங்கவில்லை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். இப்போது தெரியும்.உலகம் இதெல்லாவற்றையும் தெரிய வைத்தே தீரும்.சென்ற வாரம் என் கஸினுக்கு தொலைபேச அழைத்தேன்."என் வீட்டிற்கு ஒருவர் வந்திருக்கிறார்.பேசிக் கொண்டுள்ளேன்.நானே கூப்பிடட்டுமா"என்றான்.இது ஒன்றும் தப்பில்லை.கூடவே," அந்த ஒருவர் உனக்கும் தெரிந்தவர்" என்று கூறி முடித்தது இப்போது தமாஷாக உள்ளது.சில ஆண்டுகள் முன் எரிச்சலாக இருந்தது.நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லத் தேவையில்லை.ஆனால் "உனக்குத் தேவையில்லை என் விஷயம் " என்று அவசியம் தெரியப் படுத்துவதன் நோக்கம் ரொம்ப உயர்ந்ததாகத் தெரியவில்லை.இதைத்தான் கோணல் கோடு என்கிறேன்.மன விகாரம்.நம் செயல்பாடுகள் பிறர் அறியக் கூடாது என்றால் அவை பற்றி வாயே திறவாதிருப்பதல்லவோ உத்தமம்.?
இன்னும் பல.உங்களால் ஒருவருடன் தொடர்பில்லாமல் இருக்க முடியாதா?எளிமையாகத் தொடர்பு கொள்ளுங்கள்.இது வியாபாரம் அல்ல.15 ரூபாய் கொடுத்தால் ஒரு கிலோ தக்காளி என்பது போல.நான் நாலு தடவை உன்னை வந்து பார்த்து விட்டேன்.அடுத்தது உன் முறை என்றால் கோட்டின் ஸ்கேல் நகர்வது எனப் பொருள்.நினைப்பதை மட்டும் வெளிப் படுத்துவதுதான் நேர்மை. ஆனால் நினைவே நேராய் இருப்பதே உண்மை.செம்மை.நீயெல்லாம் என்னைக் கண்டுகொள்ள மாட்டாய் ,என்னுடன் பேச மட்டும் உனக்கு நேரம் கிடைக்காது,இன்னும் நான் இருக்கேனா என பார்க்க வந்தாயா,விமானப் பயணம் கொடுத்து வெச்சிருக்கணும்,வெளிநாட்டு யோகம் உனக்கிருக்கு எனக்கில்லை,......இந்த புலம்பல்கள் எல்லாம் அமைதி தொலைந்ததின் அறிகுறிகளே. பேசுவது புலமையின் தைரியத்தின் அடையாளம் என நினைக்கிறோம்.ஆனால் கேட்பதற்குத்தான் இவை அதிகம் வேண்டும்.நேர்பட யோசித்தால் நேர்படப் பேசவும் செய்வோம்.நேராகப் பேச தொடங்கினால் வார்த்தைகள் குறையும். தானாக மௌனமான நேரங்கள் அதிகரிக்கும்.ஆற்றல் சேமிப்பு ஏற்படும்.நேராகப் பேச யோசிக்க வேண்டாம்.நேரம் மிச்சம்.கோணல் பேச்சுகளை முதலில் மனம் உற்பத்தி செய்து ,மூளை அதை process செய்து நாள் பூரா இயங்கும் வாய் அவற்றை உமிழ்ந்து என கிட்டத்தட்ட ஒரு இண்டஸ்ட்ரியே இயங்க வேண்டும்.
இன்னும் பற்பல அதிர்ச்சிகள் அனுதினம்.ஆனால் அதிர்ச்சி ஏற்படுவது நம்மிடம் ஒளிந்து கொண்டுள்ள குறைகளை, நாமே அறியாது பதுங்கி உள்ள குறைகளை நாம் அறியும் வழியே.உண்மையில் நேர்பட ஒழுகுபவர்கள் அதிர்ச்சி அடைவதே இல்லை.அவர்களுக்கு, தான் ஒழுங்காக இருப்பதே இன்னும் அவசியம். எல்லாவற்றில் இருந்தும் கற்க அவர்களுக்கு ஏதோ உள்ளது.ஒவ்வொரு நொடியும் தான் செய்ய வேண்டியது ஏதோ உள்ளது.சரியாகப் பார்த்தால்,ஒரு பெரிய stupidity, {அதாவது,நம்முடைய அல்லது பிறருடைய அறியா செயல்கள்},நேரம் கடந்தாவது மிகவும் தெளிவாக நாம் அறிய வேண்டியதை விளக்கக் கூடும். SRI AUROBINDO MOTHER SAYS,"ANY EXAGGERATION,ANY EXCLUSIVENESS,IS A LACK OF BALANCE AND A BREACH OF HARMONY,AND THEREFORE AN ERROR" யாருக்கு?நேர்பட ஒழுக விரும்புவோருக்கு.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக