கவனத்துடன் கையாளவும் என்ற வாசகத்தைப் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.உண்மையாகச் சொல்லுங்கள்,அந்த வாசகம் உங்களை சற்று டென்ஷன் ஆக்குகிறதா இல்லையா?என்னை ஆக்குகிறது.இது சாதா விஷயம் இல்லை.எங்கெல்லாம் அந்த வாசகம் பார்க்கிறோம்?கண்ணாடி,பீங்கான் சாமான்கள் Delicate சமாச்சாரங்கள் இருக்கும் இடத்தில்தானே ?ஏன் எச்சரிக்கப் படுகிறோம்?கொஞ்சம் கவனம் தப்பினாலும் மறுபடி சரி செய்ய இயலாத அளவு Damage ஆகி விடும்.நீங்கள் எல்லாம் எப்படி தெரியாது.நான் அவை பக்கமே திரும்ப மாட்டேன்.எதற்கு வம்பு?கவனம் நல்ல குணம்தான்.ஆனால் எப்போதும் ஏதோ Sindhbad and the sailor போல ஜாக்கிரதை உணர்வை மூட்டை போல மனசில் சுமக்க இயலாது.அவசியம் இல்லையே.கண்ணாடியுடன் புழங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்,அல்லது carefree ஆக இருக்கணும்.உடைந்தால் உடையட்டும்.அதன் தன்மை உடைவது.நான் உடைக்கலை என்றால் வேறு யாரோ கைதவறி போடும் போது உடைந்தே தீரும்.சாதாரணமாகப் பயன்படுத்துவோம்.உடையாமலே இருக்கவும் 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதே ?அதிக ஜாக்கிரதை அழுத்தம்.நான் கண்ணாடி கையாள விரும்பாமைக்குக் காரணம்,எனக்கு அழுத்தம் பிடிப்பதில்லை.உடைப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது என்னால் இயலவே இயலாது.தூர இருந்து ரசிப்பதுடன் சரி.
மனிதர்களில் கண்ணாடிப் பாத்திரம் போன்றவர் உண்டு.அவர்களுடன் பழகுவது கொஞ்சம் கஷ்டமே.பலர் தள்ளியே இருப்பார்கள்,அவர்களிடம் இருந்து.ஆனால் அந்தக் கண்ணாடி மனிதனோ பெண்ணோ நாம் அவசியம் தொடர்பில் இருக்க வேண்டிய நபரானால்,என்ன நடக்கிறது?எப்படிக் கையாளலாம்?ஏற்கெனவே கூறி விட்டேன்.இது டயரி.என்னைக் கண்ணாடிப் பாத்திரமாக எண்ணிக் கொண்டு ஒரு பார்வை.மனிதரில் பல நிறங்கள், "இது ஒரு விசித்திர வண்ணம் "என்று எண்ணிக் கொண்டு நட்பாக இருக்கலாம்.ஏதும் பிரச்சினை வந்தால் வரும் போது எதிர்கொள்ளலாம்.ஆனால் எப்போதும் ஜாக்கிரதையாகவே அவர்களிடம் நடந்து கொண்டால் அதை மனம் உணர்கிறது. மொழி ஏதும் இன்றி ஏதோ குறைவதாக உணர்கிறது.பயம் கலந்த அன்பாக அது அவர்களை அடைகிறது..Delicate ஆக இருப்பது மற்றவரை பயமுறுத்தும் விஷயமா?ஏன் அப்படி? முதலில் கூறினாற் போல் தேவை இல்லை என்றால் சுத்தமாக விலகி இருக்கலாம்.ஆனால் கடவுள் ஆன்மாக்களை இணைத்திருந்தால்?பயத்துடன் அணுகுவது அவஸ்தை அல்லவோ? ஒரு நிமிடம் கூட இயல்பை வெளியிட முடியாத அவஸ்தை.எதற்கு? நாம் இயல்பாய் இருந்தால் கண்ணாடி மனிதர்கள் முதலில் கஷ்டப்பட்டாலும் என்றேனும் மாறலாம்.இயல்புக்கு மாறாய் ஜாக்கிரதை உணர்வு பிரதானமாக செயல்பட்டால் இரு சாராருக்கும் கஷ்டம்.அது திரை.கண்ணால் பார்க்க இயலாத திரை.
பொருள்களைக் கையாள கவனம் தேவை.மனிதர்களுடன் பழகவும் கவனம் தேவையே.ஆனால் உணர்வு குறுக்கீடு என்று ஒன்று உண்டு.கண்ணாடி உடைந்தால் ஒட்டாது.வறட்டு வைராக்கியங்கள் அற்ற மனித மனம் மாறலாம்."மிக கவனத்துடன் பழகவில்லையெனில் ஆபத்து" என்ற பிரிவு மனிதர்களை ,தொடர்பில் வைப்பது தேவை இல்லை எனில்,உறுதியாக மனசு, வாழ்வில் இருந்து விலக்கி விட வேண்டும். ஆனால் தவிர்க்க இயலாது வாழ்வில் இணைந்த உறவுகளை,Please,don't handle with care.ஆமாம் எதெல்லாம் தவிர்க்க இயலாத உறவுகள்? தன் இருப்பை விட இல்லாமையால் நம்மை நெருக்கமாக உணர வைப்பவர்கள்,நம் சந்தோஷங்கள் மட்டும் இன்றி வருத்தங்களையும் உணர முடிபவர்கள்,அன்பை கொடுக்கல் வாங்கல் என்ற வட்டத்துக்குள் அடக்காதவர்கள் ,யார் இல்லை என்றால் பாட்டரி இழந்த கடிகாரம் போல் இயக்கமே கேள்விக்குறியாகுமோ அவர்கள்,எந்த நிலையிலும் நம்மை விட்டுத் தராதவர்கள்.......இவர்கள் எல்லாம் தவிர்க்க இயலா உறவுகளே. யாருடைய அருகாமையில், நான் தனியாக இருந்தால் எப்படி இருப்பேனோ அப்படி இருக்க முடியுமோ அவர்கள்தான் என்னைப் பொறுத்தவரை நெருக்கமானவர்கள். அவர்களுடன் மட்டும் தொடர்பிருந்தால் போதும்.ஆனால் நாம் அப்படி நினைக்கும் நபர் அதே போல் நினைத்தால் Equation = . இல்லை எனில் நமக்கு அமைதி உண்டென்றாலும் Harmony missing தான். இறைவன் சமப்படுத்த வேண்டிய Equations !
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக