Spiritual என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ்ப் பதம் ஆன்மிகம் என்று கொள்ளலாமா?சமயம் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் பேச முற்படுவது குருமஹராஜ் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினது போல் உப்பு பொம்மை கடல் ஆழம் காணச் செய்த முயற்சியே.நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது.இயற்கைச் சூழலில் மனம் ஒன்று பட்டு இருந்த அனுபவத்தை நண்பர் ஒருவர் வர்ணித்து இருந்தார்.பறவைகளும் விலங்குகளும் தத்தம் வேலையைப் பார்த்துக் கொண்டு ஆனந்தமாய் சுதந்திரமாய் இருப்பதாகவும் நாம் அதாவது மனித இனம் அவ்வாறு இல்லை என்பதே அந்த எழுத்தில் தொனித்த செய்தி.மேலும் சுற்றுப் புறம் வளமாக இருக்க எல்லா உயிரினமும் அளிக்கும் பங்கும் அதிகம் மனிதன் அதே சுற்றுச் சூழலை மாசு படுத்தச் செய்யும் பங்களிப்பும் அதிகம் என்பதெல்லாம் அவர் வாதம்.இது ஒரு செய்தியாக மட்டும் இருந்திருந்தால் படித்து விட்டு விட்டிருப்பேன்.ஆனால் ஆன்மீக நாட்டம் என்ற சொல் குறுக்கிட்டதே இதை எழுதத் தூண்டியது.
விதி வலிமையானது.கடவுளிடம் கொள்ளும் இடையறா சிந்தனை விதியின் வலிமையைக் குறைக்கும் ஆனால் முழுதும் மாற்றாது. நான் சொல்வது சில்லரையான விஷயங்களை விதி என்ற சொல்லில் அடக்குவதல்ல.நம் பிறப்பு,சூழ் நிலைகள் ,தானாக ஏற்படும் உறவுகள் போன்ற பொதுவான விஷயங்களை மட்டுமே.ஏன் இந்த நாட்டில்,இந்தப் பெற்றோருக்கு,ஏழையாக அல்லது பணக் காரனாகப் பிறக்கிறோம் ஏன் சிலருக்குப் பிறப்பு முதலே உள்நோக்கும் பாவம் வருகிறது பிறர் ஏன் superficial ஆகவே வாழ்வை வாழ்கிறார்கள் என்பதெல்லாம் நம்மால் அறிய முடியாதவைதானே?அது மட்டுமல்ல.ஒவ்வொரு நிகழ்வுமே நமக்கு மேற்பட்ட சக்தியால் நடக்கிறது என்பதே ஆன்மீகவாதிகளின் கோட்பாடு.மதி விதியை வெல்லுமானால் சமயத்தில் அதை அருள்பவனும் இறைவனே என்றுதான் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர்களால் நினைக்க இயலும்.
சமூக அக்கறை தேவைதான்.நம்மை முதலில் மாற்றிக் கொள்வதுதான் செய்ய முடிந்த சுலபமான செயல்.பின் மற்றவரை influence செய்ய முயலலாம்.ஆனால் அதை எந்த அளவு கொண்டு செல்ல முடியும் என்பது நம் கையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.அதற்காக உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் எல்லாம் தேவை இல்லை என வாதம் புரியவில்லை.அவரவர்க்கு ஒரு கடமை உள்ளது.சிலர் உலகில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்கள் அந்த mission உடன் உலகிற்கு வந்துள்ளார்கள் என்று பொருள்.ஸ்வாமி அரவிந்தர் அனைத்தயும் அன்னையிடம் ஒப்படைத்து விட்டு வெகு சீக்கிரமே பொது வாழ்வில் இருந்து விலகி விட்டார்.குரு மஹராஜ் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அவதாரம் சொல்லும் செய்தி வேறு.ஸ்வாமிஜி விவேகானந்தர் அவதாரம் சொல்லும் செய்தி வேறு.அதே போல் சமூக அக்கறை வேறு .உலகம் ஒழுங்காக இல்லையோ என்ற கவலை வேறு.
Rhythm தவறாமல்தான் உலகில் அனைத்தும் நடக்கின்றன.ஆனால் தவறான மனிதர்களும் உலகில் உள்ளார்கள்.திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல வெளியில் இருந்து யார் என்ன சொன்னாலும் அந்தந்த மனிதன் மனதில் ஒரு பல்ப் எரிய வேண்டும்.அப்போதுதான் நல்லது நடக்கும். அதற்கு அவன் கர்ம வினையே காரணம்.பறவை போல் சுதந்திரமாய் இருக்க ஏன் மனிதனால் இயலவில்லை என்றும் நண்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.பறவையாவது சிந்திப்பதில்லை.மனிதன் சிந்திக்க முடிந்தவன்.ஒரு சூழ்நிலைக்கு நாம் அடிமை என்ற எண்ணம் நம்மை அடிமையாக்குகிறது.அதே சூழ்நிலைக்கு நாம் எஜமான் என நினைத்தால் நாம்தான் Boss .எண்ணங்கள்தான் காரணம்.
எளிய விஷயங்கள் ஒரு பிரமிப்பு ஏற்படுத்துவதையும் உண்மையில் பிரமிக்கத் தக்க விஷயங்கள் குடத்துள் இட்ட விளக்கு போல் அமைதியாய் இருப்பதையும் பல முறை வாழ்வு நமக்குக் காட்டி இருக்கும்.நம் மனம் மொழி செயல்கள் ஒன்று பட்டு Let us just live .நாம் மற்றவர்களை விட எந்த விதத்திலும் நம்மை உயர்வாக நினைப்பது ஒரு அறியாமையே.மிக அதிக உயரத்தைத் தொடும் போதுதான் மனித மனதின் சாதாரண ஆசா பாசங்களைக் கடந்த போதுதான் நம்மை சுதந்திரமானவன் என்று நினைத்தாவது கொள்ளலாம்.சாதாரண சமூக விதிகளின் படி மிகவும் நேர்மையாளராக,reasonable ஆக இருப்பவர்கள் நம்மை அறிவு ஜீவிகள் என எண்ணிக் கொள்கிறோம்.நம் அதீத அறிவு என்று நாம் எண்ணுவது ஒரு மாயையே.எண்ணங்களின் சங்கமம் debate என்றுஅறியப் படுகிறது.அதில் பெரும்பாலும் ஒரு பகுதியே உண்மையாக உள்ளது.வாதம் புரிவதில் வல்லவர்கள் இது போன்ற கருத்துப் பரிமாற்றங்களில் வெற்றி காணலாம்.அந்த வெற்றியால் நாம் சொன்னது சரி என எண்ணியும் கொள்ளலாம்.ஆனால் மற்றவர் சொன்னது உண்மைக்கு நெருங்கினதாக இருக்கும் பட்சத்தில் அதை யோசிக்கும் வாய்ப்பைக் கூட இழந்து விடுகிறோம்.அறியாமை நிறைந்த,எதிர்பாராதவை எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ள இந்த உலகில் ஒரு துளி உண்மை wisdom இறைவனால் அருளப் பட்டால் அது ஒரு சமுத்திரத்திற்குச் சமம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக