தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மைகள் பிரசித்தம். மிக அழகாகத் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டும். சிவப்பு கலரில் எங்கள் வீட்டில் மூன்று தலையாட்டி பொம்மைகள் உண்டு. வேகமாக ஆட்டி விட்டால் வேகமாய் ஆடும். இல்லை என்றால் நாம் சொன்ன வேகத்திற்கு ஆடும். ஆனால் விழவே செய்யாது. கீழே குண்டாக. மேலேயும் குண்டுதான். ஆனால் சற்றுக் குறைவான குண்டு. அணுகுண்டு போடப்பட்ட ஜப்பான் தன் நிலைக்கு மீண்டாற் போல மறுபடி தன்னிலை அடையும். இந்த பொம்மைகள் சிறு வயது முதலே என்னிடம் பேசுகின்றன. அவற்றிற்கு பாகுபாடில்லை. உங்களுடனும் பேசும். உற்றுக் கேட்கும் யாருடனும் பேசும். அவை ஏதோ செய்தி சொல்ல வருவது எனக்கும் அதற்கும் புரியும்.
நம்மை என்ன பண்ணினாலும்,மனிதர்களோ, சூழ்நிலைகளோ , மறுபடி நம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்பது அவை தரும் முதல் செய்தி. நாம் ஆட்டம் காண, யார் காரணமானாலும், இயல்பு நிலை அடைவது நம் கையில்தான் . தஞ்சாவூர் பொம்மையை ஆட்டி வேடிக்கை பார்ப்பவர் யாரேனும் அதை நிறுத்தப் பார்க்கிறார்களா? சும்மா போகிற போக்கில் அதை சிலர் ஆட்டுவார்கள் .சிலர் அது ஆடுவதை ரசிக்க ஆட்டுவார்கள். அதெல்லாம் அது யோசிப்பதில்லை. 'நீ ஆட்டிக்கோ . ஆடுகிறேன்.ஆனால் விழப் போகிறேன் என்று எண்ணினால்,நீதான் முட்டாள்.ஆடிய சுவடு கூட இன்றி நின்று விடுவேன் '. இந்த வாழ்க்கைச் செய்திதான் எனக்கு இத்தனை நாள் பிடித்தது.புரிந்தது.
எல்லாம் பழையன கழிதல் ,புதியன புகுதல். தலைமுறை மாற்றங்கள். பொம்மைக்கு தலைமுறை இடைவெளி உண்டா? ஏன் இல்லை? நேற்று வீடு தேடி ஒரு பொம்மை வந்தது, அன்பளிப்பாக. அந்த பொம்மையிடமே , அதை ஸ்லாகித்துப் பேச, அது இந்தக்கால இளைஞர்கள் போல , என் எண்ணம் மாற்றம் காண வேண்டிய நேரம் வந்துவிட்டதை சொல்லிற்று. பொம்மைக்கு , தலைமுறை இடைவெளி என்று நான் குறிப்பிடுவது,ஏதோ வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதற்காக இல்லை. உண்மை. பொம்மை செய்யும் கலைஞன்,சிற்பி ஆகியோரின் உணர்வுநிலை அந்தந்தப் படைப்பிற்குள் செல்கிறது. கலைஞனின் எண்ணம், படைப்பின் உயிர். ஒரு தாத்தா,அப்பா,மகன் என்று மூன்று தலைமுறைகள் பொம்மை செய்தால், பொம்மைகளும் மூன்று தலைமுறை காண்கிறது என்று அர்த்தம்.
'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பது 2000வருடங்களாக நமக்களிக்கப் பட்ட பாடம். 'ஆமாம் போடு, தலையாட்டு, யார் என்ன செய்தாலும் சரி சரி என்று கூறப் பழகிக் கொள் . ஆனால் உறுதியாக இரு ' என்பது, தாத்தா கால பொம்மை சொன்ன பாடம். நேற்று வீடு வந்த பொம்மை தலையாட்டுவது வேறு பொருளில். அது "மாட்டேன்" என்று சொல்கிறது. "பிடிக்காத விஷயத்திற்கெல்லாம், 'இல்லை' சொல், சொல்லி விட்டு குற்ற உணர்வற்று அசையாத மனத்துடன் இரு" என்று சொல்கிறது. "ஆட்டுவிக்கும் உனக்குப் பிடித்ததெல்லாம் எனக்கும் பிடிக்கும்,என்றாவது சரி சொல்வேன், அல்லது வீழ்ந்து போவேன் என நினைக்காதே , என் வாழ்வும் இருப்பும் நான் நிர்ணயிக்க வேண்டியது, தள்ளி நின்று கொள்" என்கிறது. ஆமாம், இன்று தலையாட்டி பொம்மையுடனா குழந்தைகள் விளையாடுகின்றன? அவை, பகட்டான கண்ணாடி பதித்த அலமாரிகளில் சீந்துவாரற்று நிற்கின்றன. குழந்தைகள் விளையாடத்தான் பல விலைகளில் மொபைல் உள்ளதே?
ஆனால் ஒரு சிறு நெருடல் எனக்கு. பொம்மை தலையாட்டலில் 'நோ 'என்பதே செய்தி என்று உணர்ந்தவர்கள், அந்தக் காலத்திலும் உண்டு. இந்த நூற்றாண்டிலும், பொம்மை எல்லோருக்கும் தலையாட்டச் சொல்கிறதாக்கும் என்று ஆயாசத்துடன் தலையாட்டுபவர்கள் உண்டு. எப்படியாயினும் தன்னிலையை அடையும் வரை சரிதான். ஸ்வபாவங்கள் மாறாது. வாசனைகள்.கரு உருக்கொள்ளும் போதே கூட வரும் பதிவுகள். மாற மனம் வைத்தாலும், இறைவன் அருள் இன்றி எதுவும் செய்ய இயலாது என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை பறைசாற்றும் பதிவுகள்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
தஞ்சாவுா் பொம்மை, யாா் எப்படி ஆட்டினாலும் எதிர்ப்பதில்லை. ஆனாலும், அது பலராலும் அலைக்கழிக்கப்பட்டாலும், இறுதியில் தன் சமநலை மாறுவதில்லை. சில மனிதர்கள் நம்மைவிட, வலியவர்களாக (உடல் வலிமையால்/பணத்தால்/மனத்தால்) இருந்து, நாம் சொல்வதை கேட்கும் மனநிலை இல்லாதவர்களாக இருப்பின், அனாவசியமாக போராடி நாமே துன்பப்படுவதைவிட்டு, அவர்கள் சொல்வதை ஆமோதிக்காமலும் ஆட்சேபிக்காமலும் "அப்படியா" என்று கேட்டுவிட்டு நகர்தல் நலம். எல்லாருமே இறுதியில் அவர்கள் கருத்தால் நல்ல விளைவுகள் நிகழவேண்டும் என்று எண்ணி சொல்லும்பொழுது, நாம் நன்கு ஆராய்ந்து, நம் வழியில், நன்கு செயல்பட்டு, நல்ல விளைவுகள் நிகழ்ந்தால், அவர்கள் ஆனந்தம் அடைவர். எப்படி செய்தீர்கள் என்று அவர்கள் கேட்டால், "நீங்கள் சொன்னபடி" என்று சொல்லலாம். வாழ்க்கையில் ஒவ்வொருவருடனும் போராடி நம் சக்தியை வீணாக்கவேண்டாமே.
பதிலளிநீக்குஆங்கில SMS படிக்க சிறமப்படும் நமது சகோதர சகோதிரிகளுக்கு SMS ஐ தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் பயன்பாடு. முடிந்த வரை பகிரவும்.https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil&hl=en
பதிலளிநீக்கு