வரும் காலத்தைப் பார்க்க முடியாது. ஆனால், கண்ணை இறுக்க மூடிக் கொண்டாலும், இறந்தகாலம் நம்முன் தெரியவே செய்கிறது. பாடங்களை சரியாகப் பயின்றால் வரப்போகும் தேர்வை செம்மையாக எழுதலாம். அரைகுறையாகக் கற்றால், பாஸ் மட்டும் செய்யலாம். கசடறக் கற்றாலே 100 மதிப்பெண்ணுடன் தேறலாம். அதுவும் கூட, வரப்போகும் கேள்வித்தாளை பொறுத்து. எதிர்பாரா வினாக்கள் வருவதுண்டு. அவற்றிற்கு ஏதோ பதில் எழுதி வைப்போம். ஆசிரியர், பாவம் பார்த்து ஏதோ மதிப்பெண் போடலாம். அதுவும், கருணை உள்ள ஆசிரியர். அப்படிப்பட்ட ஆசிரியர்தான் கடவுள். வாழ்வெனும் நீண்ட புத்தகத்தைக் கொடுத்து, சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ற மாதாந்திர குட்டி டெஸ்ட் எல்லாம் வைத்து நம்மைத் தயார்ப் படுத்துகிறார். நாம் ஊக்கம் குறைந்த மாணாக்கர் போல் வாழ்வைப் படிப்பதில்லை. படிக்கும் காலம் கேளிக்கைவயப்படும் மாணவன் போல் வாழும் காலம் புலன்கள் வயப்பட்டு ஒரே பரீட்சையைத் தவற விடுகிறோம்.அந்தோ பாவம். அரியர்ஸ் வைத்து மறுபடி எழுதக் கூட வாய்ப்பில்லை.
பல வீழ்ந்த சாம்ராஜ்யங்கள் மண்ணாசையைப் போக்கவில்லை. ராவணன் அழிவு போன்ற நிகழ்வுகளை பற்றிப் படிப்பதும் கேட்பதும் பெண்ணாசையைப் போக்கவில்லை. சண்டை போட்டு மண்டை உடைத்துக் கொள்ளும் குடும்பங்களின் அருகாமை , குடும்பப் பாசத்தைப் போக்கவில்லை, சொந்தங்களின் இழப்பு, பொருள் சேர்க்கும் ஆசையைப் போக்கவில்லை, பெரிய பதவிகள் வகித்தோரின் கடைசி காலங்கள் பதவி ஆசையைப் போக்கவில்லை, சுனாமியும் நிலநடுக்கமும் வந்து வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட மக்கள் நிலை, வங்கி கணக்கில் பத்து ரூபாய் கூடினால் தரும் ஆனந்தத்தைப் போக்கவில்லை. ஏன்? ஏன் என்றால் இறந்த காலத்தைப் பார்க்க விருப்பம் இல்லை. அது முடிந்து போனது என்ற வறட்டு வேதாந்தம். வரும்காலம் யாருக்குத் தெரியும் என்ற அதே வேதாந்தம். அப்படியாவது நிகழ்காலத்தை ஒழுங்காக நடத்துகிறோமா? இல்லை. அது ஏன்? கடந்தவை பற்றி மதிப்பில்லை. வரப்போவது பற்றின வணக்கத்துடன் கூடிய பயம் இல்லை. மஹான்கள், இறந்த காலம், வரும்காலம் பற்றி நினைக்காதே என்று சொன்னது பற்றிய தவறான புரிதல்.
கணக்கு நன்றாகத் தெரிந்தவனுக்கு மூன்றும் இரண்டும் என்ன என்று சந்தேகம் வருமா? அந்த அளவு எளிது குழப்பம் அற்று சிந்திப்பது, வாழ்வது. நமக்கு பெற்றோர் இருப்பது போல், குழப்பத்திற்கும் அம்மா உண்டு. அதன் பெயர் அறியாமை. எனக்கும், உங்களுக்கும் எல்லாருக்கும் குழப்பம் வரலாம். வந்தால் அது நம் உணர்வின் தவறே அன்றி, வேறு யாரும் பொறுப்பல்ல. நம் அறியாமை என்ற தாய் பிரசவிக்கும் குழந்தையே மனக்குழப்பம். வாழ்வு முழுதும்சுமை சுமந்து, திண்டாடக் கூடாது. சரி, சொல்ல வந்ததைச் சொல்கிறேன். நம்மை இன்னாராக உணர்தல், இன்னாராக மட்டும் உணர்தல்,வித்தியாசம் என்ன?
இன்னார் என்பது அடையாளம். நான் இன்னார் மட்டும் என்பது வட்டம் போட்டுக் கொண்டு வெளியே வர இயலாத நிலை. அந்த வட்டம் நமக்குள்ள பரந்த பார்வையை, தொலைநோக்கை மழுங்க வைக்கிறது. வாழ்வில் ஒருவருடன் ஏதோ மனவேறுபாடு என்று வைத்துக் கொள்வோம். அதனால் என்ன? அவர் எய்யும் ஒவ்வொரு சொல்லம்பையும் கவனமாக கேட்ச் பிடித்து திருப்பி அடிக்க வேண்டாம். நாம்,நம்மிடம் மாறாக நடப்பவர், அல்லது அப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பவருடன் நமக்குள்ள உறவை மட்டும் முன்னிலைப் படுத்தி சிந்திக்கிறோம். என் மகன் இப்படி சொல்லலாமா? என் தோழன் இதை செய்யலாமா? என்றெல்லாம் குழம்பி அமைதி தொலைக்கிறோம். தப்பு. உங்கள் மகன் பேச்சு கடுமையாக இருந்தால் அவன் பேசின போது உங்கள் மகனாக இல்லை. உலகில் அவனது பல கதாபாத்திரங்களில் வேறு யாரோவாக இருந்துள்ளான், உணர்வு நிலையில். அதே போல் நம்மிடம் கோபப்படுபவன் நம் நண்பன் மட்டும் என்றால் வருத்தம். அவன் ஒரு கணவன், மகன், தந்தை . அவனுக்கு ஆயிரம் பாத்திரங்கள் வாழ்வெனும் நாடகத்தில். யாரோ ஒருத்தியின் கணவன், மகன், அப்பா என்ன பேசினால் நமக்கென்ன?
ஆனால் அறியாமை கண்ணை மறைக்கும். ஒரு நொடி நிதானப்பட்டால் போதும். சரியாக யோசிப்போம். அதே போல சூழ்நிலைகள். நிதானமாக கடினமான நொடிகளைக் கடப்பவர் உண்டு. ஆனால், ஆழ்மனக் கசப்புகளாக அவற்றை சுமப்பின் பொருள் இல்லை. அதன் பேர் புரிதல் இல்லை. யார் மீதும் எதன் மீதும் கசப்பு வந்தால் பலன் இல்லை. இதையெல்லாம் பண்ண மகாத்மாவாக இருக்கத் தேவை இல்லை. மனிதனாக இருப்பின் போதும். எது செய்தாலும், யாருடன் இருந்தாலும், மற்ற அனைவரையும்,அனைத்தையும் புறம் தள்ள வேண்டாமே? அதே போல் விலகல் இயல்பாக, கசப்பின்றி அமையலாமே ? தள்ளி இருந்தால் காந்தம் இரும்பை ஈர்க்காது . கிட்ட வந்தால் ஒட்டிக் கொள்ளும். வாழ்வு வன்மம் வளர்க்கவல்ல.
எளிய மனிதர்களிடம் உள்ள பல நல்ல தன்மைகள் ஆசைவயப்பட்ட பெரியமனிதர்களிடம் இல்லை. எங்கள் வீட்டில் வேலை செய்யும் அமுதா, நேற்று, "அக்கா, நகை பிரிப்பதில், சொத்து பிரிப்பதில் என் தம்பிகள் தொந்தரவு கொடுக்கிறார்கள். அம்மாவின் நகையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன் " என்று கூறினாள். எத்தனை பவுன் தெரியுமா? மொத்தமே ரெண்டு பவுன். 20 லட்சம் செலவில் கல்யாணம் நடத்தும் நமக்கு ரெண்டு பவுனை நாலு பேருக்குப் பிரித்தால் வரும் அரைப் பவுன் அவர்களுக்கு அத்தனை பெரிது என்று உணரவாவது முடியுமா?தெரியாது. கோடியுடன் லட்சத்தை இணைக்க சொந்த அண்ணன் தம்பியைக் கோர்ட்டில் நிறுத்தும் பெரியவர்களுக்குக் குழப்பம்தான். எதுவான கூட எடுத்துப் போக முடியுமோ, அதற்கும்தொழில்நுட்பம் ஏதாவது கண்டுபிடித்து விட்டால் நாம் ஏமாறக் கூடாதே எனும் தவிப்பு. அறியாமை. அமுதாவிற்கு பாவ புண்ணியம் பற்றிய அறிவு இல்லாதிருக்கலாம். பகவத்கீதை தெரியாமல் இருக்கலாம். எது செய்தால் அமைதி வரும் என்ற தெளிவு உள்ளதே? முகம் ஒரு நாள் கூட சோர்வையும் குழப்பத்தையும் வெளிப்படுத்துவதில்லையே? எது திறம்பட வாழும் வாழ்வு? விடை தெரிந்த வினா !!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக