சுதந்திர தினம் அன்று அடிமைகள் பற்றி எழுதலாமா,அடிமைத்தனம் பற்றி எழுதலாமா? உலக நடப்பைத்தானே எழுத முடியும்? எது குறித்து,யார் குறித்து நாம் பயம் கொள்கிறோமோ அவைகளுக்கு,அவர்களுக்கு நாம் அடிமைகள். இதில் என்ன நூதனம் ? அடிமைத்தனம் என அறியாமலே நம்மைப் பணிய வைக்கும் புது உத்திகளுக்கு இரையானோர் நூதன அடிமைகள். என்ன, அவர்களுக்கு தாம் செய்வது , பழைய காலம் அரண்மனைகளில் இருந்த அடிமைகள் செய்த தொழில்தான் என உணரக்கூட நேரமும் உணர்வும் இருப்பதில்லை. பாவம்.
கார்ப்பரேட் பூதங்களால் விழுங்கப் பட்ட, பணம் பண்ண சமூக அழுத்தத்தால் உந்தப் பட்ட, போதும் என்ற மனம் ஏற்படவே முடியாது தேவைகளைப் பெருக்கிக் கொண்ட , எது ஒன்றையும் மனத்தால் அன்றி மூளையால் மட்டுமே சிந்திக்கப் பழக்கப் படுத்தி கொண்ட, வாழ்வின் முக்கியமான பருவங்களை மற்றவருக்கென,மற்றவரைத் த்ருப்திப் படுத்தவென மட்டுமே செலவிட்ட, மற்றவர் மதிப்பெண் கொடுத்துத்தான் சுயமதிப்பை உணர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட,வாழ்க்கையை கொடுக்கல் வாங்கல் வ்யாபாரமாக்கிய, வாழ்வை டைம்டேபிள் போட்டு வாழ்ந்து பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடைக்கும் அழகை, இலவசமாய்க் கிடைக்கும் நிம்மதியை நொடி நேரமும் அனுபவிக்காத, எல்லோரும் நூதன அடிமைகள்தான்.
அடிமைகள் உருவாகிறார்களா உருவாக்கப் படுகிறார்களா என்பதும் கேள்வியே. அல்லது நிர்பந்தமா? யாரறிவார்? இது பெரிய விவாதம். நிர்பந்தத்தால்,வாழ்வின் சூழ்நிலைகளால் சிலர் இந்த வட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. ஆனால் அவர்கள் சிந்தனை தெளிவாக இருப்பின், இந்த வ்யூகத்தினின்று வெளிவருவது அசாத்தியமான செயல் அல்ல. உருவாக்கப் படுகிறார்கள் என்பதும் சரியல்ல. தனிமனிதனின் எண்ணங்களே அவனது வாழ்வை பெரும்பாலும் நிர்ணயிக்கின்றன. சரியான நேரத்தில் விழித்துக் கொள்ளுதல்,சரியான இடத்தில் கோடு போடுதல் காப்பாற்றி விடும். அடிமைகள் உருவாகிறார்கள் என்பதே சரி. நாம் எஜமானா அடிமையா என தீர்மானிக்க வேண்டியது நாம்.பூமியில் எவர்க்கும் அடிமை செய்யாமல் இருந்தால்தான் ஆடலாம்,பள்ளுப் பாடலாம். மஹாகவி பாரதியார் அப்படி இருந்ததால்தான், ஆங்கிலேயன் வெளியேறுமுன்னரே ஆனந்தசுதந்திரம் அடைந்து விட்டோமென்று கூத்தாடினார்.
இன்னும் சில பதிவுகள்.எஜமான வர்க்கத்தினருக்கு. பணம் கொடுத்தால் என்ன வேலை வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம் என்பது இறுமாப்பு. பத்து ரூபாய் நோட்டும் நூறு ரூபாய் நோட்டும் நமக்கு வேலை பண்ணி தருமா? அதைக் கை நீட்டி வாங்கும் மனிதன்தானே வேலை செய்ய வேண்டும்? அவர்களை இப்படி நடத்தலாம் என வரைமுறை உண்டு. மீறக்கூடாது. அன்புப் பிணைப்பு, அன்பால் அடிமை கொள்ளலாம் என்ற வழக்குகள் உண்டு. அதுவும் தேவை அற்ற ஒன்றே. பிணைப்பது வேண்டாம்.பிணைக்கப் பட வேண்டவே வேண்டாம்.பேசலாம்.......
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக