ஏதோ ஒன்றைத் தேடுவதே வாழ்க்கை. சரியான இடத்தில் தேடினால் புதையல் கிடைக்கும். தவறான இடத்தில் தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. எங்கு தேட வேண்டும் , எதை நாட வேண்டும் என்பதே மிகவும் தீர்கமானதொரு முடிவு. வயிற்றுவலி வந்த ஒரு ஆண், மகப்பேறு மருத்துவரிடம் சென்று தீர்வு கேட்பது போல கேலிக்குரியது தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறான நபரிடம் நிகழ்த்தும் தேடல். தேடலுக்கு மூலம் எதுவாகவும் இருக்கலாம். பொருள் தேடல், துணை தேடல், அன்பு தேடல், ஆதரவு தேடல், புகழ் தேடல், இறை தேடல் என பல வகைத் தேடல்கள் உண்டு. அந்தோ, நம்மில் பலர் வேண்டாத இடத்தில், தவறான நபரிடத்தில், தேடி, சலித்து வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்து விட்டு ரத்தம் சுண்டியபின் உணர்கிறோம், உணர வாய்ப்பே இன்றி பயணத்தை நிறைவும் செய்கிறோம்.
நேற்று காரில் சென்று டிராஃபிக் ஜாமில் மாட்டினோம் . சைக்கிள், கட்டை வண்டி,எல்லாம் எங்களைக் கடந்து சுகமாய் சென்றன. கார் , அது எத்தனை லட்சம் பெறுமானமான கார் ஆனாலும் அது என்ன வேகத்தில் செல்லலாம் என ரோட்டில் போகும், மற்ற, விலை குறைந்த வாகனங்கள் தீர்மானிக்கின்றன. பெரிய கார் இருந்தால் போகும் இடம் அடைவது சுலபம் என்று அர்த்தமில்லை. எந்த இடத்துக்கு ஷேர் ஆட்டோ இன்னும் சரியான வாகனம் என்பது கூட ஒரு முக்கியமான முடிவுதான். வாழ்க்கைச் சூழ்நிலைகள் டிராஃபிக் ஜாம் போன்றவை. சிக்னல் காத்திருப்புகளின் போது மற்றவரைப் பார்த்து வசை பாடாமல் காத்திருப்பது அமைதி தரும். எழுத தலைப்பும் தரும்.
பாகற்காயைப் பார்த்து இனிப்பாக இரு என முடியுமா? தேளே, கொட்டாதே என முடியுமா? கல்லுக்குள் ஈரம் காண முடியுமா? ஈரம் அறியா இதயங்களிடம் அன்பைப் பெற முடியுமா? எங்கு எதைத் தேட வேண்டுமோ அங்கு அதைத் தேடினால் ஏமாற்றம் வருமா? அதிர்ச்சி வேண்டுமானால் வரும். பாகற்காய் பாயசம் போல இனித்தால் அதிர்ச்சி இல்லையா என்ன!! ஆனால், நம் தேடல்கள் முடிவதில்லை. சிலர் சரியாகத் தேடி, வேண்டியதை அடைகிறோம்தான். ஆனால், அது அடுத்த தேடலின் ஆரம்பமே. தேட வேண்டியது ஒன்றே. அது சுலபமாகக் கிடைக்கும் வஸ்து இல்லை. அன்பெனும் பிடிக்குள் மட்டும் அகப்படும் மலை அல்லவோ!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக