சிவபெருமான் மேல் காதலாகிக் கசிந்துருகுவோர்க்கே கிரிவலம் செய்யும் பாக்கியம் அமைகிறது.உடற்பயிற்சிக்காக,மூலிகைக் காற்றை சுவாசிக்க என்று வேறு காரணங்கள் கற்பித்துக் கொண்டு கிரிவலம் செய்வோரும் அவன் மேல் மனம் கசிந்து போகாமல் இருப்பது சாத்தியமில்லை.நினைத்தாலே முக்தி அருளும் தலமாம் திருவண்ணாமலையில் கால் பதிக்கும் போதே ஒரு அமைதி நம்மைச் சூழ்கிறது.எங்கு திரும்பினும் லிங்க மயம் .லிங்க வடிவம் பற்றி ஒன்று கூற விருப்பம்.பிள்ளையார் வடிவத்திற்கும் லிங்க வடிவிற்கும் மனதை ஒருமுகப் படுத்தும் சக்தி அதிகம் உள்ளதாய் எப்போதும் தோன்றும்.ஒரு ராமர் படத்தையோ லக்ஷ்மி படத்தையோ காலண்டரில் அல்லது வேறு இடங்களில் பார்க்கும் போது என் .டி .ஆரோ நயன்தாராவோ மனதில் சில சமயம் எட்டிப் பார்ப்பதுண்டு.சில பெண்களைப் பார்த்து "அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கிறாய் "என்று பொய் சொல்வோம்.ஏதோ அந்த தெய்வத்தை ஒரு தடவை பார்த்து வந்தார் போல் .வரலக்ஷ்மி விரதம் பூஜை செய்யும் போது சம்பந்தம் அற்று அந்தப் பெண் முகம் மனதில் நிழலாடும்.லிங்க வடிவில் சிவனைத் த்யானிக்க இந்த பிரச்சினை இல்லை.
கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் சிறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன.வலம் வருவோர் அநேகமாக எல்லா லிங்கங்களையும் தரிசித்துச் செல்கிறார்கள்.இந்திர லிங்கம் முதலாவது. ஈசான லிங்கம் கடைசி.அண்ணாமலையார் திருக் கோவில் வாசலில் தொடங்கி அதே இடத்தில் முடிக்க வேண்டும்.14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையின் நீளம்.வேறு விஷயங்களுக்கு வருவோம்.டாகுமென்ட்ரி மாதிரி ஒலிக்கிறது.
நம் மனதிற்குள் ஏற்படும் பதிவுகளை நம் விருப்பப் படி interpret செய்து கொள்ளலாம்.இதில் சொல்ல வருவது அந்த ஐந்தரை மணி நேரம் நான் அடைந்த உணர்வுகள்.கிரிவலம் மேற்கொள்ளும் பாக்கியம் பெற்ற உங்களில் பலர் இன்னும் உயர் நிலையில் இருந்து யோசித்திருக்கலாம்.முதலில் நந்திகேஸ்வரர்.பல நந்திகள் வழி பூர.எல்லாம்,எந்த மூலையில் இருந்தாலும் அண்ணாமலையாரை நோக்கிக் கொண்டிருக்கின்றன.நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதில் அவனை மட்டுமே நினை என்பதைத்தான் அவை உணர்த்தின.கிரிவலத்தை அதி காலை அல்லது அந்தி மங்கும் வேளையில்தான் பொதுவாகத் தொடங்குகிறார்கள்.இல்லையென்றால் very simple .கால் சுடும்.திருவோடு மட்டும் உடைமையாய்க் கொண்ட பக்கிரிகள் பலர்.எல்லோரும் இறையுடன் ஒன்றினவர்களா தெரியாது. ஆனால் வேறு ஓர் உலகம் உள்ளது.அவர்களில் சிலர் realised souls ஆக இருக்கலாம்.திருவோடு சுமந்து திரிய வேண்டாம்.But பணம் பண்ண அலையவும் வேண்டாம்.எது வசதி?ஒவ்வொருவருக்கு ஒரு பொருள் .தேவைகள் --அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியாகாத பேரைக் கொண்ட பூமியில் ஆசைகளுக்கு வரையறை வகுத்துக் கொள்ளவில்லை என்றால் சிவன் நினைவு எப்போ வரும்?
இயற்கையுடன் ஒன்றின நிலை.முழு அமைதி.இயற்கை அன்னை கடவுள்தானே.சுற்றுப்புறம் முழுமையும் பிரபஞ்சம் முழுதும் ஒம்காரத்தால் நிரம்பி உள்ள உணர்வு.பேசத் தோன்றுவதில்லை. சும்மா இரு சொல்லற என்பது எத்துணை உண்மை! இது மாதிரி இன்னொரு ஐந்து மணி நேரம் வாய்க்க இன்னும் எத்தனை நாள் காக்க வைக்கப் போகிறாய் பெருமானே என்று தோன்றாமல் கிரிவலத்தை முடிப்பது சாத்தியம் இல்லை.இடு காட்டின் வழி நடந்துதான் ஈசான லிங்கத்தை அடைகிறோம்.சமரசம் உலாவும் இடமாம் இடுகாடு தாண்டி ஈசான லிங்கத்தை தரிசிக்கும் வினாடி மார்க்கண்டேயன் போல் போய்த் தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது.மன ஏக்கம் கண்ணீராய் வெளிப் படுகிறது.இந்த உலகமும் உறவுகளும் அந்தஏக்கத்தைப் போக்க முடியுமா என்ன? மேலே எழுத வரவில்லை.மறுபடி பேசலாம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக