கருவறையில் தொடங்கி கல்லறையில் முடியும் பயணம். தொடக்கம் தெரிந்து முடிவு பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாப்பயணம். பயணத்தை ரசிக்கத் தொடங்கும் முன் இறங்கும் இடம் வரலாம். அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கையில் பாதியில் முடியலாம். எப்போது இறங்கும் இடம் வரும் என்று ஆயாசம் வந்த பின் நிதானமாகப் பயணம் முடியலாம். நிம்மதியாகப் பயணப் பட்டு சரியான நேரத்தில் ஊர் சென்றடையும் ரயில் போல் ,வந்த வேலை முடிந்தது போல் விடை பெறலாம். எப்படி வாழ்வில் இருந்து விடை பெறுகிறோம் என்பது ஏற்கெனவே எழுதப் பட்டு அந்த எழுத்தை தலையில் தாங்கியே ஜனிக்கிறோம் .வினாத்தாள் தெரிந்து விட்டால், பரீக்ஷைக்கு முன் ஏற்படும் குழப்பம்தான் உண்டாகும் எல்லோர் தலை எழுத்தும் முதலிலேயே தெரிந்து விட்டால். வாழ்க்கை என்றால் 100 வருடம் என்பது போல் விதிகள் இல்லையாதலால், தனி நபர் சம்மந்தப் பட்டதுதான் பயண காலம். வாழ்க்கையைப் பிறவிப் பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர். நீர்க்குமிழி என்கிறார்கள் தற்போதைய கவிஞர்கள். எது சரி? எப்படி எடுத்துக் கொள்வது அமைதி தரும்? வாழ்வு நீண்டதோ குறுகியதோ வேறொருவர் சொல்லி நடத்தும்,வேறொருவர்இயக்கும் நாடகம் அல்ல என்பதில் மட்டும் நாமனைவரும் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.
நமக்குத் தெரிவது ஒரு வாழ்வுதான். யாரும் சென்ற பிறவியில் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா என்றோ, என் போன பிறவி மனைவி எவ்வளவு அழகு தெரியுமா என்றோ பேசுகிறார்களா என்ன? எழுதும் போதே தமாஷாக உள்ளது. நம் வாழ்க்கையின் முக்கியமான எத்தனையோ பேரை அருகில் இல்லாத ஒரே காரணத்தால் மனதில் இருந்தும் விலக்கி விடுகிறோம். இதில் போன பிறவி, அடுத்த பிறவி என்றெல்லாம் பேசி என்ன பயன்? இப்போது செய்யும் ஒரு செயல் அடுத்த பிறவியில் பலன் தரும் என்றால் அது புண்ணிய வடிவு கொள்ளப் போகும் நற்செயல் மட்டுமே. அது கூட மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு.
குலத்தில் இரண்டே பிரிவுகள். இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர், என்பது போல், வாழ்வின் தன்மை இரண்டு வரிகளில். எந்த நல்ல செயல் செய்ய நினைத்தாலும் வாழ்வு குறுகியது, இன்றே செய்து விட வேண்டும் என எண்ணிக் கொள்ளலாம். எந்த தீயசெயல் செய்யும் எண்ணம் வந்தாலும், ஓ, வாழ்வு நீண்டது, இந்தத் தீமை புரிந்தால், நம் ஆயுள் முடியும் முன் நம்மைத் திருப்பி அடிக்கும், எந்த உருவிலாவது தாக்கியே தீரும் என உறுதியாக நம்பலாம். கடன் வாங்குபவருக்கு, தானங்கள் செய்ய நினைப்போருக்கு, குடும்பத்திடம் அன்பு காட்ட விரும்புவோருக்கு, இயற்கையை ரசிப்பவர்களுக்கு, புதிதாய்க் கற்க,படைக்க நினைப்போருக்கு, பகைமையை மறக்க எண்ணுவோருக்கு, இறைவனுக்கு நன்றி செலுத்தி எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடிக் களிப்பவருக்கெல்லாம் வாழ்வு சிறிதே. நாளை என்பது இல்லாதது போல் நடந்து கொண்டால் அன்றி, பல நல்ல செயல்களை ஒத்திப் போடத் தோன்றலாம்.
இன்று கோபுரத்தில் உள்ளோம், நாளை வாழ்வு நம்மைப் புரட்ட வாய்ப்புள்ளது என்ற அடக்கம் தோன்றட்டும். பகைமை பாராட்டத் தோன்றும் போது நீண்ட வாழ்வின் மகிழ்ச்சியை அழிக்கும் அமிலம் அது என எண்ணிக் கொள்வோம். நாளை என்ற ஒன்று உண்டு என்றால்தான், சில தவறுகள் தவிர்க்கப் படும். வாழ்வு குறுகியது என்ற பயத்தை விட, வாழ்வு நீண்டது என்ற நிம்மதியே நம்மைப் பல நேரம் நல்வழிப் படுத்துகிறது. வாழ்க்கைப் பயணம் சிறிதானால், அவசர அவசரமாக நல்லதெல்லாம் செய்யணும் என்ற பதட்டமும் வருகிறது.ஆனால் பிறவியைப் பெரும்கடலென எண்ணும் போது, நிதானமாகத் தீயவைகள் தவிர்க்கப் படுகின்றன. நல்லது செய்வதை விட, தீயவை விலக்கல் முதற்படி.
வாழ்வில் நமக்கு கிடைத்த அனைத்திற்கும் நாம் பாதுகாவலர்கள்தான். உரிமையாளர்கள் அல்ல. பணத்தில் தொடங்கி எல்லாவற்றிற்கும். அந்த நினைவு வந்தாலே, தானாக, எங்கு நிதானப் பட வேண்டும், எதற்கு அவசரப்பட வேண்டும் என்பது விளங்கும். வாழ்க்கை எந்த தூரம் போக சீட்டு வாங்க வேண்டும் என்பதை ஆண்டவன் நிர்ணயிக்கும் பயணம். ஏறவும் இறங்கவும் நம்மிடம் சக்தி இல்லாது அவன் கூட்டிச் செல்லும் பயணம். ரயில் பயணத்தின் இறுதியில் மூட்டை முடிச்சுடன் இறங்குவோம். வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் மூட்டையாவது ஒன்றாவது, ஒட்டுத் துணியும் உருவப் பட்டு பஞ்சபூதங்களில் ஒன்றுடன் ஐக்கியமாகிறோம். நாற்பது வயதில் நீண்ட பயண அனுபவம் பெறலாம். நூறு வயதில் எதையும் அறிய முயலாது பயணம் முடியலாம். வாழ்க்கை நீண்டதோ குறுகியதோ உற்று நோக்க வேண்டியது. பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக