போதும் என்பதுதான் இன்று நான் அறிந்த நல்ல வார்த்தை.மூன்றெழுத்து வார்த்தைதான் ஆனாலும் சொல்வது எளிதல்ல.எப்போது போதும் சொல்லலாம்,எதற்கு போதும் சொல்லலாம்,சொல்லி விட்டு மாற்றலாமா,அல்லது சொன்னால் சொன்னதுதானா? தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால் மன அமைதிக்கும் இந்த வார்த்தைக்கும் தொடர்புண்டு. எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை அமைதியை நெருங்குகிறோம்.
வழக்கம் போல் இடைவெளி.இன்று போதும் என்ற தலைப்பு வேண்டும் என மாறி இருக்கக் கூடுமோ என்றால் இல்லை. என் மொழி புரியாத உலகு.அது பற்றிக் கவலை இல்லை.மற்றவர்களுக்கு எதைப் புரிய வைக்க எனது பயணம்? என்னை யார் என்று புரிந்து கொள்ள அல்லவோ இப்பயணம்!சரியாக சிந்திப்பதே போதும்.சரியான சிந்தனை கொண்டவளாகத் தென்பட எதற்கு ஆசை? திமிர் இல்லாது இருந்தால் போதும். திமிர் அற்றவளாகக் காட்டிக் கொள்ள என்ன அவசியம்? வெளி தோற்றங்கள் மட்டுமே புரிந்து கொள்ளப் படும் சாபம் பெற்ற பூமி. மௌனம் புரியா பூமி.ஒன்றும் ஒன்றும் இரண்டுதான் என்பதற்கு கூட ஆதாரம் காட்டச் சொல்லி கேட்கும் பூமி.மொத்தத்தில் கடவுளின் அடுத்த மூவ் என்ன என்று பொறுமை காக்க முடியா பூமி.
இதில் வந்து பிறந்த பிறகு காயப் படாமல் பாடம் கற்க இயலாது. காயங்கள் கவனம் கற்றுத் தர வேண்டும். ஆயாசம் போதும். ஆத்திரம் போதும். ஆரவாரங்கள் போதும். அநாவசிய ஆராய்ச்சிகள் போதும்.அதிகப் படியான எல்லாம் போதும்............
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக