உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பள்ளித்தோழிகள் எங்க அம்மா அப்பா அண்ணா நான் என்று பதிலளிப்பார்கள். அப்போ தாத்தா பாட்டி அத்தை எல்லாம் உனக்குக் கிடையாதா என்று கேட்ட ஞாபகங்கள் இன்னும் இருக்கின்றன. இதை ஏதோ எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. பாட்டியும் தாத்தாவும் இல்லாத ஒரு வீடு இருக்கலாம் என்று கற்பனை செய்யக்கூட அப்போது முடியவில்லை.நான் கூறும் காலம் 1967-1984. வீட்டுடைய தூண்கள் அல்லவா அவர்கள்? ஆனால் இப்போது முதல் வரிக்கேள்வியை ஒரு குழந்தை தோழியிடம் கேட்டால் அது கேள்வி கேட்ட குழந்தையை ஏற இறங்கப் பார்த்து விட்டு என்ன பதில் கூறும் தெரியுமா? இது கூடத்தெரியாதா?நான் அம்மா அப்பாதான். இப்போது கேள்வி கேட்கும் குழந்தையின் turn . அப்போ உங்க பாட்டி தாத்தா? Now the other child. அவங்க, அவங்கவீட்டுல இருக்காங்க. கூட்டுக் குடும்பங்கள் சுத்தமாக மறைந்து விட்டஇந்த நிலைமைக்கு tolerance கொஞ்சமும் அற்றுப்போன நாம்தான் காரணம்.
ஈகோவைத் தூக்கி எறியத்ராணியற்ற அனைவரும். வீட்டில் அடி எடுத்து வைத்த மறு நாளே மாமியார் VRS வாங்கி விட வேண்டும் அதுவும் வீட்டு வேலைகளில் இருந்தல்ல. தன் உரிமைகளிலிருந்து மட்டும். நேற்று வரை அவர்கள் பையனாய் இருந்தவன் தாலி கட்டி விட்டதனால் இரண்டே நிமிஷத்தில் முழுதாய் வேறு ஒருத்திக்கு சொந்தமாவது ரசாயன மாற்றம் போல நிகழ முடியுமா என்ன? இது வாழ்க்கை அல்லவா?
இனி மருமகள் பக்கப்பார்வை. மனதிலிருந்து சொல்கிறேன்.பெரியவர்கள் very rigid. அவர்களால் நிறுத்த முடியாத விஷயம் பழம் பெருமை. அதை கேட்க மகனுக்கே மனசும் நேரமும் இல்லை என்றால் மருமகளுக்கு எங்கிருந்து வரும்? உங்கள் ஆட்சிதான் இத்தனை நாள் நடந்து விட்டதே? ஒரு ஆட்சி மாற்றம் போல நினைத்துக்கொண்டுஏன் வேடிக்கை பார்க்க கூடாது? அதைக்கூடத்தாங்க முடியாது அல்லவோ தனியாய் இருக்க ஆசைப்படுகிறீர்கள்? அல்லது வீட்டிற்குள்ளேயே தீவு போல தனிமைப்படுத்தி கொள்கிறீர்கள்? சில வீடுகளில் மகனும் மருமகளும் தங்கள் ரூம் போய் கதவைத் தாளிட்டுக்கொள்வதும் உண்டு. Grumble பண்ணாது தனியாய் இருப்பதையாவது மன்னிக்கலாம்.தானே தேர்ந்தெடுத்த ஒன்றைப் பற்றி ஒரு தடவை புலம்பினாலும் தப்புதான். துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.
மனம் ஒரு குரங்கு என்றுதானே கூறுவோம். அது மந்திரச்சாவி என்கிறார் சுகி சிவம்.மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் அன்றோ? சேர்ந்திருக்க பொன் போன்ற ஒரு மனம் வேண்டும். அது இப்போது அரிய பொருள். நம் பிள்ளைகள் அறியாப்பொருளும் கூட ".என்மாமியார்
மிக நல்லவர்கள்தான் ஆனால் ஒரு space வேண்டும் என்று தனியாய் உள்ளார்கள்" என்று சொல்லும் மருமகள்களையும், "மருமகள் தங்கம் அவள் சூழ்நிலை அப்படி" என்று உதட்டளவில் சொல்லும் மாமியார்களையும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுவோர் என்றுதான் என்னால் நினைக்க முடியும். 0 tolerance ன் result தான் தனிக்குடித்தனங்கள்.
Mother protects
ரஞ்ஜனி த்யாகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக