புதன், 11 பிப்ரவரி, 2015

அனுமதிக்கப்பட்ட 'டேட்டிங் '

 திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. அவ்வாறு  நிச்சயிக்கப்பட்ட திருமணம் பூமியில் நடந்தேறி, ஒரு ஆயுள் பந்தமாக மாறி, பிரமாதமாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது நிறைய காதல் கல்யாணங்களும் நடக்கின்றன. காதலித்து மணம் புரிந்து மிக நல்ல முறையில் வாழ்ந்து காட்டி, திருமண பந்தத்தின் புனிதத்தை நிலை நாட்டுபவர்களும் பலர் உள்ளனர். ஆனால் சமீப காலமாய் ஒரு இரண்டும் கெட்டான் நிலை, (போக்கு) ஏற்பட்டு உள்ளது. அதையே 'அனுமதி வழங்கப்பட்ட டேட்டிங்' என்று அழைக்கத் தோன்றுகிறது.

திருமண வலைத் தளங்களில் வரன் வேண்டி பதிவு செய்யும் பெற்றோர், மகன் அல்லது மகளுடன் சேர்ந்து அந்த வலை தளங்களை அலசி, தங்களுக்கு  விருப்பமான வரனைத் தேர்வு செய்து, தங்கள் குழந்தைகளை அந்த வரனுடன் பேசச் சொல்கிறார்கள்.

பையனை  மட்டும் கலந்து பேசி, பெண்ணின் விருப்பத்தையே கேளாது திருமணங்களை பெரியவர்கள் முன்னின்று நடத்திய காலம் இருந்தது.

பின்னர் எண்பதுகளில், பெற்றோர் ஒருவருக்கொருவர் பேசி நம் குழந்தைக்கு இந்தப் பெண்ணோ அல்லது பையனோ சரியான துணை என முடிவு செய்து, பிறகு சம்பிரதாய பெண் பார்க்கும் படலம் நடக்கும், அதில் ஒரு சில நிமிடங்கள் பெண்ணும் பையனும் பேசிக் கொள்வார்கள். அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து திருமணம் உறுதி செய்யப்பட்டது. ஒரு சில நிமிட சம்பாஷணையில், பெரிதாக எதுவும் தெரிந்து கொள்ள இயலாது என்றாலும், அனுபவம்மிக்க, அக்கரைமிக்க பெற்றோர் கணிப்பு அநேகமாக சரியாய் இருந்து அத்தகைய திருமணங்கள் மிகவும் வெற்றிகரமாகவே அமைந்தன.

ஆனால்  இப்போது நடைமுறை என்ன? பெண்ணும் பையனும் பெற்றோர் வழங்கிய லைசென்சுடன் ஓயாது ஒரு நாளின் பாதி நேரம் முகநூல் (Facebook) மூலமும், கைபேசி மூலமும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். இந்தப் பேச்சுகளில் இனிமை வழிவதில் வியப்பென்ன? தங்களுடய இன்னொரு முகத்தை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வதே இல்லை எனலாம்.

'வளவள' என்று பேசி, சேர்ந்து புகைப்படம் எடுத்து முகநூலில் அப்லோட் செய்து அதற்கு எத்தனை லைக்ஸ் வருகிறது என்று எண்ணி, சகஜமாகத் தொட்டுப்பேசி என்று இவையெல்லாம் திருமணத்திற்கு முன்பே நடந்து விடுகிறது. எதற்கு இவ்வளவு நெருக்கம்? கல்யாணத்திற்குப்பின் நடக்கும், முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், சேர்ந்து உண்ணும் முதல் விருந்து, முதல் இரவு, இதிலெல்லாம் இவர்களுக்கு என்ன புதுமை இருக்கும்? தானாக வரும் காதலிலாவது, பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற  பயம் மனதில் நெருஞ்சி முள் போல உறுத்திக் கொண்டிருக்கும். ஆனால் இந்தத் தனிப் பிரிவினர் விஷயத்தில் எல்லாம் பெற்றோருக்குத் தெரிந்தல்லவா நடக்கின்றது? இனிமையான - திருமணத்திற்குப் பின் வாழ வேண்டிய தருணங்களை முன்னால் வாழ்ந்து விட்டு, பின் என்ன நடக்கிறது? வாழ்வின் நிதர்சனம் முகத்தில் அறைகிறது. ஒரு வேலையும் பழகாது அம்மாவை அதிகாரம் செய்து வேலைக்குப்போய் வருவதே பெரிய விஷயம் என நினைத்த பெண்கள் இரட்டை பாரம் சுமக்க ஆரம்பிக்கும் போது கணவனிடம் கோபம் வருகிறது, மாமியார் நாத்தனாரைக்  குறை கூற  ஆரம்பிக்கிறார்கள், கசப்பு வருகிறது.

காத்திருப்பது சுகம், அதுவே ஆழமான பந்தத்தின் அடையாளம், தொடக்கம். நாலு மாதத்தில் நாற்பது தடவை சந்தித்தால் புளித்துப் போகும். அதிக நெருக்கம் சங்கடங்களில் கொண்டு விடும்.

திருமணத்திற்கு முன் விலகி இருந்து பின் நெருங்குவதே முறை. ஆனால் தலைகீழாக, முன்னால் நெருங்கி பின்னால் மனதளவிலாவது விலகிச் சென்று விடும் குழந்தைகளின் போக்கிற்கு, பெற்றோரே காரணம். பெற்றோர் ஏன் ஒரு கோடு போடக் கூடாது?!

இது தவிரவும் வேறு ஓர் ஆபத்தும் உள்ளது. நிச்சயதார்த்தம் ஆன பிறகு சில திருமணங்கள் நின்று விடுகின்றன, ஏதோ காரணங்களால். அப்போது இவர்கள் எடுத்த படங்கள், பழகியது, பேஸ்புக்கில் போட்டு ஊரறிய வைத்தது இவையெல்லாம் என்னாகும்?

இது ஒரு ஆபத்தான போக்காகவே உள்ளது. இளம் பெண்களும், பெற்றோரும் யோசிப்பது நல்லது.

Mother Protects 

ரஞ்ஜனி த்யாகு  

Appeared in மஞ்சுளா ரமேஷின் சினேகிதி, அக்டோபர் 2014

1 கருத்து:

  1. Refer your blog post on “Arranged Dating”:

    “‘வளவள' என்று பேசி, சேர்ந்து புகைப்படம் எடுத்து முகநூலில் அப்லோட் செய்து அதற்கு எத்தனை லைக்ஸ் வருகிறது என்று எண்ணி, சகஜமாகத் தொட்டுப்பேசி என்று

    இவையெல்லாம் திருமணத்திற்கு முன்பே நடந்து விடுகிறது. எதற்கு இவ்வளவு நெருக்கம்?”
    மேற்கண்ட வரிகள் படித்தேன். நம்மில் பலர் நாம் வாழும் இந்தியா ஒரு “ஒரே வட்டத்தில் இருக்கும்” இந்தியா என தவறாக எண்ணுகிறோம்.

    உண்மை அதுவல்ல. கும்பகோணதிலிருந்து 15 KM மாட்டு வண்டியில் உள்ளே சென்றடையக்கூடிய ஒரு குக்கிராமத்தில் இருப்பது ஓர் இந்தியா. சேலம் போன்ற சிறு நகரம் வேறு. கோவை, திருச்சி முதலிய பெரிய நகரங்கள் இன்னொரு வகை. சென்னை, அஹ்மெடாபாத் போன்றவை தனி ரகம். மும்பை, பெங்களூர் – கேட்கவே வேண்டாம். தவிர, ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு இந்தியாக்கள் உண்டு!

    நீங்கள் எழுதியிருப்பது சில இந்தியாக்களுக்குப் பொருந்தும். ஆனால், மயிலாப்பூரிலிருந்து பெசன்ட் நகர் சென்றால் கூட தங்கள் எழுத்துக்கள் விநோதமாக பாவிக்கப்படும். சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்றால், தம் எழுத்துக்கள் பத்தாம்பசலித்தனமான கருத்துக்கள் என கருதப்படக்கூடும்!

    To put things in perspective, when two boys or two girls can “touch” each other, take snaps, roam around, post selfies on the net, etc., the more modern India would rightly ask you:

    • What’s wrong if a boy and a girl do exactly what a boy and a boy or a girl and a girl do together as friends?

    • What’s wrong in “getting close” with an “arranged fiancée” in comfortable settings?

    • What’s wrong in even “getting physical” before marriage?

    • So what if the நிச்சயதார்த்தம் gets cancelled subsequently?

    • If a prospective subsequent bride / groom is unable to accept “such snaps” from a previously engaged person, what kind of a person is he/she likely to be as my partner – Won’t I be better off without such an antiquated individual as a life partner?

    In my opinion, the institution of marriage, while appearing to be in danger, has grown much stronger in one sense and has evolved into an elegant partnership of genuine equals who truly care for each other. There are enough examples that each of us can think of in our own circles of many such wonderful marriages.

    When an emancipated person like you portray such thoughts, those who read your blogs will start getting “straight-jacketed” ideas about our society, which, I’m sure, is not your intention!

    Regards,

    Naren

    பதிலளிநீக்கு