சனி, 25 ஏப்ரல், 2015

திருமணங்கள்-இரண்டாம் பாகம்

திருமணங்கள் பற்றிய என் கருத்துகளுக்கு சில மறுப்புகளும் சில ஒட்டிய கருத்துகளும் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளன.ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல வேண்டிய பதில் நீளமாய் உள்ளதால் இந்த இரண்டாம் பாகம் எழுதுகிறேன்.இதை உங்களுக்கு நான் அனுப்பும் பிரத்யேகக் கடிதமாய் கருதும் படி வேண்டுகிறேன்.என் கருத்துக்கு தீவிர மறுப்புத் தெரிவித்தவர்களுக்கு மனதில் இருந்து நன்றி.அது என்னை இன்னும் சிந்திக்கத் தூண்டுகிறது.

திருமணம் என்ற புனிதமான பந்தத்திற்கு நான் எதிரியல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்,please .ஆணுக்கும் பெண்ணுக்கும் நெறிப் படுத்தப் பட்ட ஒரு உறவை ஏற்படுத்தும் Marriage என்ற Institution ஐ கேலி பேச அந்த blog எழுதப் படவில்லை.ஸ்ருஷ்ட்டிக்காக கடவுளால் ஏற்படுத்தப் பட்ட ஒரு பந்தம் திருமணம்.அதற்கு எதிராகப் பேச அல்ப மானுடர்கள் நாம் யார்?நான் கூற வந்தது யாதெனில் திருமணத்தில் விருப்பம் இல்லாது இருப்பவர்களை விட்டு விடுங்கள்.விநோதமாக நோக்கும் அளவு அது ஒன்றும் கொலைக் குற்றம் அல்ல என்பதுதான்.ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டு திருமணத்தால் எந்த சுகமும் அடைய மாட்டோம் என்று நினைப்பவர்களை,திருமணம் பண்ணிக் கொண்டால் இரு தலைக் கொள்ளி எறும்பு போல் கஷ்டப் படுவோம் என்று ஊகித்து பயப் படுபவர்களை எல்லாம் வற்புறுத்தி" உன் பாட்டி உன் கல்யாணத்தைப் பார்த்துட்டுத்தான் போகணும்னு சொல்றா" என்றெல்லாம் blackmail பண்ணி திருமண பந்தத்தில் ஈடுபடுத்த அவசியம் இல்லை அல்லவா?அவ்வாறு pressure கொடுக்கப் பட்டு நடந்த சில திருமணங்கள் தோல்வி அடைந்ததைப் பார்த்து வருத்தம் அடைந்தே எழுதினேன்.ஆசையாக திருமணம் புரிய விரும்புபவர்கள் பண்ணிக் கொள்ளட்டும்.இணையும் இருவரில் ஒருவர் எண்ணங்கள் வேறு மாதிரியாய் இருந்தால் அவருடைய துணை வாழ்நாள் முழுதும் அன்றோ கஷ்டப் பட வேண்டி இருக்கும்?

அடுத்து செலவுகள் பற்றிய கருத்துக்கள்.செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.செலவு செய்யச் செய்ய பணம் சேரும்.பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதில்தான் கருத்து சொல்லி உள்ளேன்.ஆடம்பரத்துக்கு நான் எதிரிதான்.கல்யாணத்தில் முக்கியமான வைதிகச் சடங்குகளுக்கு செலவழிக்க மூக்கால் அழும் பலர் beautician க்கு ஆயிரங்களில் கொடுப்பது சரி என நீங்கள் நினைத்தால் ஆமாம்போடநான் தயாரில்லை.மைலாப்பூர் கபாலி கோவில் வாசலில் உட்கார்ந்து இருக்கும் ஏழை வைதிகர்களைப் பார்த்திருக்கிறீர்களா?அவர்களுக்கு சில ஆயிரம் அதிகமாகக்  கொடுத்தால் அவர்கள் கொள்ளைக் காரர்கள் என்பது போல் comment அடிக்கிறோம்.இதுவே கல்யாணமான அடுத்த வருடமே குண்டாகும் பெண்கள் தூக்கிப் பரணில் போடப் போகும் டிசைனர் பிளவுசுக்கு மறு பேச்சின்றி 4000 ரூபாய் கொடுக்கிறோம்.ஏதாவது பேசினால் டெய்லர் நேரத்துக்குத் தர மாட்டார் என்று பயம்.அப்படித்தானே?எனக்கு இதில் உடன்பாடு  இல்லை.

அடுத்து சாப்பாடு.கல்யாண சாப்பாடு போடுபவர்கள் எல்லாம் அன்னதானப் ப்ரபுவும் இல்லை.சாப்பிடுபவர்கள் ஒரு நல்ல சாப்பாட்டைக் கூடக் காணாது பஞ்சத்தில் அடிபட்டவர்களும் இல்லை.சாப்பிட உயிர் வாழ்கிறோமா இல்லை உயிர் வாழச் சாப்பிடுகிறோமா?உணவே மருந்து என்கிறார்கள்.பணம் படைத்த பாதிப் பேர்களுக்கு நினைத்தபடி சாப்பிட முடியாது ஆயிரம் health problems .மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் உண்மையா இல்லையா?இரண்டு நாளில் நாம் எட்டு வேளை சாப்பிடுவது மணப் பெண்ணின் அப்பா பர்ஸுக்கு நல்லதோ இல்லையோ சாப்பிடும் நம் வயிற்றுக்கு நல்லதில்லையே?இது common sense தானே?பாதிப் பெரியவர்களும் குழந்தைகளும் பல திருமணங்களுக்குப் பின் வயிற்று உபாதைகளுக்கு ஆளாவதைப் பார்க்கிறேன்.இருப்பவர்கள் செலவழித்தால் என்ன என்று என்னை சாடி இருக்கிறீர்கள்.இருப்பவர்கள் ஏன் இல்லாதவர்களுக்கு செலவு பண்ணக் கூடாது?எத்தனை பேர் திருமணத்தன்று ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ ஒரு முதியோர் இல்லத்திற்கோ ஒரு நாள் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்கிறோம்?அந்த இல்லங்களில் உள்ள முதியோர் திருமணத்திற்கு அழுது கொண்டே மொய் எழுத வரும் பலரை விட உங்கள் குழந்தைகளை இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்த்துவார்கள்.

Vegetable carving என்று ஒன்று இப்போதெல்லாம் வரவேற்பில் வைக்கிறார்கள்.அதன் தேவை என்ன என்று யாராவது சொல்லுங்களேன்?மலர்ச் செண்டு கொடுப்பது வெறும் ஸ்டைல் இல்லை என்று யாராவது சொல்லுங்கள்.யாரும் கேட்காது அவமதிக்கப் படும் கச்சேரிக் கலைஞர்களுக்கு கொடுக்கப் படும் பணம் அவசியமா சொல்லுங்களேன் .அர்த்தமற்ற காதைக் கிழிக்கும் சினிமாப் பாட்டு நிகழ்ச்சி எதற்காக?"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்லே ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிகிடலாமா" என்ற பெரும் தத்துவப் பாடல் முழங்க வேண்டிய இடம்தான் நீங்கள் எல்லாம் புனிதமாக மதிக்கும் கல்யாணம் நடந்த மேடையா சொல்லுங்களேன்.அதற்காக ஒரு கம்பெனியின் எம் டி வீட்டுத் திருமணமும் ப்யூன் வீட்டுத் திருமணமும் ஒரே மாதிரி நடக்குமா என்பீர்கள்.நடக்காது.நடக்கணும் என்று சொல்லவில்லை.ஆனால் எல்லோரும் மனித இனம்.சிவப்பு ரத்தமே உடம்பில் ஓடுகிறது எனும் போது சில விஷயங்கள் பொது அல்லவா?வரவுக்கு ஏற்றாற் போல் செலவழியுங்கள்.ஆனால் பெண்ணின் அப்பா எம் டி ஆனாலும் ப்யூன் ஆனாலும் மாப்பிள்ளைகளின் அப்பாக்கள் செலவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.Interestingly all the responses I got were from parents who don t have daughters .எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா?இதை எழுதின காக்கைக்குத் தெரியும்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

திருமணங்கள்

சற்றுமுன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பினோம்.இப்போதெல்லாம் திருமணங்கள் சென்று வருவது பெரிய excitement ஐ ஏற்படுத்துவதில்லை.இப்போதெல்லாம் என்பது சரியா என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.சிறு வயது முதலே திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மேலேழுந்தவாரியாய் உண்டாகும் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவிர வேறு மாதிரியான ஒரு உணர்ச்சியே மனதில் மேலோங்கி இருந்து வந்ததாய் உணர்கிறேன்.(சந்தோஷம் என்று குறிப்பிடுவது கூட மாமா சித்திகள் எல்லோரையும் சேர்த்து ஓரிடத்தில் பார்க்கலாம் என்பது மட்டுமே.வேறு எதுவும் இல்லை.) இந்த write up தெளிவற்று இருப்பதாய் நீங்கள் நினைக்கவும் கூடும். மனம் நினைப்பதை உண்மையாய் எழுதினால்தான் தெளிவு பிறக்கும்.ஆனால் உண்மையை சற்று refined ஆகத்தானே வெளியிட முடிகிறது?அந்த முயற்சியில் தெளிவு காணாமல் போய்  விடுகிறது.

திருமணங்களில் பிடிக்காதவற்றைப் பட்டியலிடுகிறேன்.முதலில் ஆடம்பரம்.அதனால் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்படும் செலவு.ஆடம்பரமாய் திருமணம் நடத்த என்ன அவசியம்?உலக வழக்கம் என்பது வெட்டிப் பேச்சு.எளிமையான திருமணங்கள் நடத்த ஏன் தயக்கம்?பிறருக்கு தங்கள் பண பலத்தைக் காண்பிக்கவா குழந்தைகள் கல்யாணத்தை நடத்துகிறோம்?கல்யாணத்திற்கு ஒரு பெண் ஒரு பையன் பெற்றோர்கள்தானே முக்கியம்?சரி ஊருடன் கூடி வாழணும் என்று தத்துவம் பேசுவார்கள்.ஊரை கூப்பிடுங்கள்.But எத்தனை வேளை சாப்பாடு போடுவீர்கள்?
உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் கழிவாய் வெளியேறப் போகும் விஷயத்திற்கு எத்தனை லக்ஷங்கள் செலவழிப்பீர்கள்?அடுத்து புடவை நகை.இந்தக் கால ஜீன்ஸ் யுவதிகள் முகூர்த்த நேரம் மட்டும் கட்டி பின் தொடவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் 25000த்திற்கு முகூர்த்தப் புடவை வாங்க வேண்டும்?மாப்பிளை வீட்டு pressure என்பது கதை.அப்படி ஒரு புகுந்த வீடு தேவையா நம் பெண்ணுக்கு என்று ஏன் யோசிப்பதில்லை யாரும்?

இப்படிப் பேசினால் பெண்ணை நாமே வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தோன்றும்.அதிலும் எதுவும் தப்பில்லை.கல்யாணம் நடத்துவதும் பண்ணிக் கொள்வதும் மட்டும்தான் சாதனையா என்ன?கிருஹஸ்தாச்ரமம் சந்யாசாச்ரமம் என்று இரண்டுதான் உண்டு.சந்யாசியும் ஆகாமல் கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் இருப்பது மாபாதகம் என்று பேசுவதும் ஏனோ தெரியவில்லை.சின்ன வயதிலேயே உனக்கு இதெல்லாம் தோன்றி விட்டதா என்று கேட்கிறீர்களானால் இல்லை.அது வேறு கதை.பெண்ணை  மட்டும் திருமணம் ஏன்  பெற்றோரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பது என் சிறிய வயது மனதில் இருந்து கொண்டே வருத்திய கேள்வி.இந்த எண்ணம் தோன்றவும் ஒரு குறிப்பிட்ட வயது ஆனது.At least பெண்தான் இடம் பெயர வேண்டும் என்ற உலக வழக்கம் தெரிந்த பின்தானே எண்ணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? திருமணத்தின் நிறைவில் ஒரு குடும்பம் குதூகலித்துக் கொண்டு [கண்ணில் இட்ட மை கரைய அழுது கொண்டு, கலக்கத்துடன் நேற்று வரை யார் எனவே தெரியாத ஒருவன் பின்னால் வரும்] பெண்ணை கடத்துவது போல் கூட்டிச் செல்ல அத்தனை சுமைகளையும் ஏற்றுத் திருமணத்தை நடத்தி முடித்த பெண்ணின் பெற்றோர் பெண் அங்கே போய் எப்படி நடத்தப் படுவாளோ என்ற கலக்கத்துடன் வழி அனுப்பும் காட்சிகள் I have hated .

இவை எல்லாம் சேர்ந்து ஒரு mixed emotions தான் இன்று வரை திருமணங்கள் சென்று வந்தால் எனக்கு ஏற்படுகிறது.பட்டுப் புடவைகளும், பகட்டும், சினிமாப் பாடல்களின் உரத்த சப்தமும், வீணாகும் உணவும் ,அனாவசியமாய் மலர்ச்செண்டுகள் பெருமைக்காக அளிக்கப் பட்டுத் தூக்கி எறியப் படுவதும் ,நூற்றுக் கணக்கில் க்ளிக் செய்யப் படும் புகைப்படங்களும், மற்ற நாள்களில் ஏன் என்று கூடக் கேட்காத உறவுகள் சும்மாவேனும் அந்த இரண்டு நாட்கள் மட்டும்  கட்டித் தழுவிக் கொள்வதும் மொத்தத்தில் உண்மையை விட நடிப்பே ப்ரதானமாக நடத்தப் படும் திருமணங்கள் வியப்பையும் சலிப்பையுமே உண்டாக்குகின்றன.இப்போது பையனின் பெற்றோர்கள்தான் பயப்படுவதாய் சொல்கிறார்கள்.பெண்கள் பையனின் பெற்றோர் பற்றிக் கேட்க,They are in the hall or on the wall எனக் கேட்கிறார்களாம்.உண்மையாய் இருக்கலாம்.ஆனால் நான் கேள்விப் பட்ட வரையில்  திருமணங்களில் பையன் வீட்டார் வைத்ததுதான் சட்டம்  என்பது போல்தான் உள்ளது..செலவுகளைக் குறைத்து,பகிர்ந்து கொண்டு  நடத்தினால்தான் பெண் தருவோம் என ஒருவராவது   சொல்ல மாட்டார்களா? இல்லை அவர்களே விரும்பித்தான் இந்த ஆடம்பரங்களுக்கு உடன்படுகிறார்களா?தூக்கம் கண்களைத் தழுவுகிறது.இன்று சென்று வந்த கல்யாணத்தால் இணையும் இருவரும் நன்றாக இருக்கட்டும் என்ற ப்ரார்த்தனையுடன் Good Night சொல்லிக் கொள்கிறேன்.எப்படியோ ரெண்டு பேரையும் மாட்டி விட்டாயிற்று.அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தால் மகிழ்ச்சி.மற்ற என் புலம்பல்கள் அவர்களுக்குத் தேவையற்றதே.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

On the nature of success

There have been numerous attempts to define success. This is what Wikipedia, arguably the largest online encyclopedia, has to say about success (1) - attainment of higher social status, achievement of a goal, the opposite of failure (in this particular order). The last of the three definitions seemed to be a rather queer way of defining success. This probably mirrors the popular perception that success is the  absence of failure. It is commonly acknowledged that success means different things to different people, though a good section of the Indian populace have pathetically narrow conceptions of success and betray an unwillingness and rigidity to expand their worldviews. The quintessential Indian parent has an unshakable faith in the infallibility of the IIT-MS_in_US and the IIT-IIM combinations in churning out "successful" individuals and it would be downright sacrilegious to suggest even the slightest deviation from this divine path. The rest of the post sketches my Utopian dream of an ideal perception of success.

J.K Rowling, the famous author and mother of the fictional boy wizard Harry Potter, expressed in one beautiful sentence the role of failure in life -  
"It is impossible to live without failing at something, unless you live so cautiously that you might as well not have lived at all – in which case, you fail by default."  (2)
A rigid dichotomy between success and failure governs societal perceptions. The human mind struggles to see success and failure in the same spirit. As Sri Aurabindo holds, reason divides and separates (3). In the womb of every failure is hidden the potentiality of a success, and behind every success lurks a failure that spurs greater success. Lives of giants attest this selfsame fact and there is even a tinge of melancholic euphoria (a beautiful phrase that I came across recently) associated with such stories - what sacrifices and apparent failures lie behind that phenomenal success! If only we could remove the veil of superficiality that envelopes our perceptions, to what great heights might not our minds soar!

In the following discussion it would be expedient to rope in the idea of travel and compare it with the road to success. Success is like a souvenir that you collect as you travel. Remember that you do not travel to procure souvenirs, nor do you stop travelling having pocketed a particularly costly one. You continue to travel not because you wish to buy more, but to explore further. The joy is in discovery. At each new destination you collect a new souvenir. Though you fondly cuddle your souvenirs in silent retrospection, it is the experience and learning that preceded the purchase that you respect the most. Incontrovertibly travel is loads more fun than the souvenir. Each time you look at it, your heart will skip a beat and your mind will undoubtedly rejoice at the great experience. What a  wonderful trip! Never will it proclaim, looking at the souvenir – what a great purchase this was, so lovely and much costlier than what my neighbour managed.

To conclude the analogy, travel as much as you wish, pick up many a souvenir on your way but let that not be your goal, for travel will then become a burden. The world has not seen a traveller who has had this as his goal, the reason being that each one who has succeeded knows how invaluable the path that led him to success actually is. He who knows not this profound secret has not tasted success or is under a trance: the magnificence of the treacherous souvenir beguiled him so much that he has permitted it to entrust him into the hands of complacence. Entrenched in his inflated ego, he flounders in the dark. Let the Divine find this wretched being and deliver him from the curse that he has wrought upon himself.

PS : Needless to say, I am quite aware that I would in all probability be tagged a hypocrite in days to come, at which point even I may not be able to deny that allegation. This piece has been addressed to my ideal self and the general reader may completely deny my ramblings. We shall agree to disagree.

Let thy will be done

பின் குறிப்பு : இந்த Post என் son கார்த்திக் எழுதியது.இதைத் தமிழ்ப் படுத்தவே முதலில் எண்ணினேன்.ஆனால் எழுதுபவர்களின் spirit , translation ல் miss ஆகிவிடும் என்பதால் அப்படியே publish செய்யப் பட்டுள்ளது.




செவ்வாய், 14 ஏப்ரல், 2015

Power Distance Index

பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அதிகாரம் எனப் பொருள் கொள்ளலாம்.ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கினால் அதிகாரம் தலைவனிடம் (சில வீடுகளில் தலைவியிடம்)உள்ளது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர்.வங்கியில் மானேஜர் ,தொழிற்சாலைகளில் மானேஜிங் டைரக்டர் நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் அல்லது அதிபர் இப்படி பட்டியல் தொடரும்.இந்த எழுத்து அதிகார வர்கத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் கீழே உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அலசலே.எதுவும் எழுத்தில் வர ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டும்.எனக்கு அந்தத் தூண்டுதலாய்  அமைந்த நிகழ்வு என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் தனி மனித வழிபாடும் எளிய மக்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களை அணுக இயலாது தவிக்கும் தவிப்பும் நம் நாட்டில் புதிதல்ல.கொஞ்ச நேரம் உற்று கவனித்து உலகைப்  பார்த்தால் நாம் அனைவரும் எழுத்தாளர்கள்தான்.


POWER DISTANCE INDEX என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் படும் சொல் தொடரைத் தமிழ்ப் படுத்துவதை விட PDI என்று குறிப்பிட்டுக் கொள்வோம்.ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை ஒட்டி அந்த நாட்டின் PDI அதிகமாகவோ குறைவாகவோ உள்ளது.நம் இந்தியாவின் PDI மிக அதிகம்.
U S A ன் PDI மிகவும் குறைவு.இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை?அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் இருக்கும் இடைவெளி அதிகம் உள்ள நாடுகள் PDI அதிகமுள்ள நாடுகளாய்க் கருதப் படுகின்றன.விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ,அரசியல்வாதிகள் நம் நாட்டில் கொண்டாடப் படுவது போல் வேறெங்கு கொண்டாடப் படுகிறார்கள்?மத குருமார்களைக் கூட ஒரு லெவலுக்குப் பிறகு நம்மால் நெருங்க முடியாது.உண்மையைச் சொல்லப் போனால் நாம் எதேனும் குறிப்பிட்ட Spiritual Belief வைத்துக் கொண்டிருந்தால் அதை மனதுடன் வைத்து கொள்வதே மேல்.ஒரு cult ல் நம்பிக்கை வைத்து மடத்திற்கோ கோவிலுக்கோ செல்பவர்கள் தலைமைப் பீடத்தில் உள்ளவர்களை நெருங்கக் கூட இடையில் உள்ளவர்கள் விட மாட்டார்கள்.எல்லாவற்றையும் துறந்தவர்களே இப்படி என்றால் மற்றவர் பற்றிப் பேச என்ன உள்ளது?

சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற கொள்கை நமக்குக் கிடையாது.அதிகாரம் சமமாக இல்லை- இருக்க முடியாது- அது தேவையும் இல்லை என்பது நம் கலாச்சாரம்.கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றையும் Boss உத்தரவின் படி செய்தே நமக்குப் பழக்கம்.வேலை கொடுப்பவர்களுக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நமக்கு இயல்பாகிப் போன ஒன்றே.தனக்கு ஒரு படி மேலே உள்ளவர்களை வேண்டுமானால் guidance க்காக அணுக முடியும்.அதற்கும் மேலே உள்ளவர்களைப் பார்ப்பதும் அரிதே.Work Life ல் மானேஜ்மெண்ட்டுக்கு பணிவான பணியாளர்களே தேவை.பழைய காலத்தில் நல்ல செய்தி கொண்டு வரும் பணியாளுக்கு ராஜா முத்துமாலை பரிசளிப்பது போல loyal ஆக உள்ளவர்களுக்கு incentive வழங்கப் படும்.கட்டுப் படுத்தப் படுவதை நம்மில் பலர் ரசிக்கிறோமோ இல்லையோ ஆனால் வெறுப்பதில்லை.ஏணிப் படியின் மேலே உள்ளவர்களுக்கு,கீழே உள்ளவர்கள் எதையும் சொல்லிப் புரிய வைப்பது மிகக் கடினம்.நம்முடையது Male dominated society ம் கூட.வீடுகளில் பொதுவாய் சிதம்பர ராஜ்ஜியம்,திருமணங்களில் பிள்ளை வீட்டுக்காரர்களின் domination .இப்போது எல்லாம் மாறிவருகிறது என்று சொல்கிறோம்.ஆனால் பெண்ணுடைய பெற்றோர்தானே வாழ்நாள் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவழித்துத் திருமணம் நடத்துகிறார்கள்?வீட்டில் இருந்து நாடு வரை அதிகாரம் செய்பவர்கள்,அதைக் கேட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.மாற்றம் வருமா தெரியாது.

நம்மை விடவும் PDI அதிகம் உள்ள நாடுகளும் உள்ளன.கொலம்பியா ஒரு உதாரணம்.பிரேசில் தென் கொரியா மெக்சிகோ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும்தான்.அமெரிக்காவிற்கு அடுத்தபடி அயர்லாந்த் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் PDI குறைவான நாடுகள்.இன்று ஒரு நண்பருடன் இது பற்றிப் பேச நேர்ந்தது.சமூகத்தின் மேல் நிலையில் அல்லது ஒரு குடும்பத்தின் தலைவனாய்  உள்ளவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களின் கருத்துக்களை முதலில் கேட்டறியும் வழக்கம் மஹாபாரத காலத்தில் இருந்தே இருந்து வருவதாய்க் கூறி ஒரு கதையும் கூறினார்.தர்மபுத்திரர் ஒரு முறை ஏதோ விஷயத்தில் கருத்து கூற வேண்டியிருந்த போது தம்பிகள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்பி முதலில் சஹாதேவனைக் கேட்டாராம்.ஏனென்றால் தான் ஏதாவது சொன்னால் அதை தம்பி தவறாயினும் மறுதலிக்க மாட்டான் ,அதனால் முதலில் அவன் சொல்வதைக் கேட்டறிவோம் என்ற எண்ணமாம்.என்னைப் பொறுத்த வரை High PDI உள்ள இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றிரண்டு தருமபுத்திரர்கள் இருந்தாலும் கீழே உள்ள சஹாதேவர்கள் அண்ணனுக்கு எது பிரியம் என்று ஊகித்து அறிந்து முடிந்தவரை அவனுக்குப் பிரியமானதையே தன் பதில் போல் கூறுவார்கள்.மன்னனுக்கு இடித்துரைத்த மந்திரிகள் இருந்திருக்கிறார்கள்.இப்போதும் கருத்துக்கள் கேட்கப் படுகின்றன.ஆனால் distinct ஆக அதிகார வர்க்கம் ஒன்றும் ஆமாம் போடும் வர்க்கம் ஒன்றும்தான் நான் கண்ட இந்தியாவில் உள்ளன.


எரிச்சல் உண்டாக்கும் அளவுக்கு PDI அதிகமே,நம் நாட்டில்.HERO WORSHIP ஹீரோக்களைத்தானே பண்ண வேண்டும்? அதற்குத் தகுதியானவர்களை மட்டுமா கொண்டாடுகிறோம்? மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம்?நெருங்கவே முடியாத அளவு நம்மை விட இன்னொரு ஜீவன் ஏன் உசத்தி? PDI குறைவான நாடுகள் என்ன கெட்டுப் போயிற்று? உண்மையில் நாம் மிக மதிக்கும் ஒருவரை நெருங்கித் தொடர்பு கொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? நம் நாட்டில் அப்படியே உல்டா.நமக்கு மனதுக்கு நெருங்கிய ஒருவரை நடுவில் உள்ள பலரைத் தாண்டி ஒருக்கால் நெருங்கினாலும் அவருடைய உண்மை முகத்தின் தரிசனத்தைத் தாங்குவோமா தெரியாது.இந்த topic நீளமானது.We shall have another part .Please reserve comments till then .(இது தவறாமல் கருத்து சொல்லும் என் dear friends க்கு )


ரஞ்ஜனி த்யாகு



MOTHER PROTECTS 

வியாழன், 9 ஏப்ரல், 2015

மறைவுக்கு நாள் குறிக்கப் பட்டுவிட்ட மணி ஆர்டர்

மணிஆர்டர் சேவைகள் நிறுத்தப் பட நாள் குறித்தாயிற்று.அதை செய்திகளில் கேட்டு விட்டு என்னால் உங்களுடன் பேசாமல் இருக்க இயலுமா?தந்திச் சேவையும் இப்படி ஒரு நாள் திடீரென நின்று போனது.அஞ்சலகமே இல்லாது  போகுமா,தெரியவில்லை. ஆனால் இன்டர்நெட் சென்றடையாத குக்கிராமங்கள் இன்னும் உள்ளன.அவைகள் என்ன செய்யும் இதெல்லாம் எனக்கு விவரம் தெரியவில்லை.இது போன்றதொரு சேவையின் முடிவு,காணாமற் போன பல விஷயங்கள் மாதிரி மனதைத் தொடுவதால்  கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணுகிறேன்.மற்றபடி என்ன செய்வது?நம் பேரப் பிள்ளைகளிடம் எங்க காலத்தில் மணி ஆர்டர் என்று ஒன்று இருந்தது தெரியுமா என்று சில வருஷங்கள் கழித்துக் கதை பேச வேண்டியதுதான்.

சில செய்திகள் சேகரித்தேன்.130 வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்து வரும் சேவை.ஆனால் eM O ,i M O ஆகியவை உண்டாம். Electronic money order ,Instant money order.  உண்மையில் நம் வேலை இன்னும் எளிதாக்கப் பட்டுள்ளது.என்ன personal touch கொடுக்க நாலு வரி எழுதுவோமே அது முடியாது.standard message தான்.அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.கைபேசி இல்லாத மக்கள் ரொம்பக் குறைவான பேர்தான்.விஷயத்தைச் சொல்லி விட்டு பணத்தைeM O செய்ய வேண்டியதுதான்.இதுவும் அஞ்சலகம் சென்றுதான் செய்ய வேண்டும் ஆதலால் பொதுமக்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை.

மணி ஆர்டரைக் கொஞ்சம் மறந்து விட்டு மனிதர்களுக்கு வருவோம்.மணிஆர்டர் போல்தான் மனிதர்களான நமக்கும் ஒரு நாள் குறிக்கப் பட்டுள்ளது.மனிதன் குறித்த நாள் தெரிந்து விடுகிறது.இறைவன் குறித்த நாள் மறைபொருளாய் உள்ளது.முடிவு உண்டு என்று தெரிந்தும் தெரியாதது போல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதது போல் நடந்து கொள்கிறோம்.நான் எனக்கேதான் சொல்லிக் கொள்கிறேன்.அதை உங்களிடம் பகிர மட்டுமே செய்கிறேன்.செய்ய வேண்டியவை இன்னும் எவ்வளவோ உள்ளன..Miles to go before I sleep ன் தமிழாக்கம் மாதிரி தெரிந்தால் நான் என்ன செய்ய?Robert Frost  நினைத்தது போல நாமும் நினைக்கக் கூடாதா? ஒவ்வொரு வினாடியும் உபயோகமாய்ச் செலவழிக்க வேண்டியதே.திரும்பிப் பார்ப்பதற்குள் நாட்கள் கடந்து போய் விடும்.அனாவசியமாக யோசிக்க,விவாதிக்க நேரம் இல்லை.எந்த விஷயத்திற்கும் மனச் சோர்வடைவதும் தேவையற்றதே.Depression kills a person . ரோஜாச் செடியின் முள் போல எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை? நாத்திக வாதம் பேசுவோர் கூட மறுக்க இயலாத ஒன்று உண்டென்றால்,நமக்கு வாழ்க்கை அளித்துச் செல்லும் நல்ல,மற்ற எதற்கும் நாம் பொறுப்பில்லை.ஏதோ நமக்கப்பாற்பட்ட சக்தியால் நடத்தப் படுகிறோம்.அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது.இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது.அவன் தடுப்பதை வேறு யாரும் கொடுக்கவும் முடியாது. பின் எதற்கு சஞ்சலம்?

நமக்கு நடக்கும் நல்லதிற்கு நாமே காரணம் போல ரொம்பக் குதூகலிக்கவும் தேவையில்லை.அதிகப் படியான சந்தோஷம் வருத்தம் இரண்டும் வாழ்வின் சமநிலையை பாதிக்கவே செய்கின்றன.மண்ணாந்தை மாதிரி உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டாம்.ஆனால் உணர்சிகளே உருக் கொண்டது போலும் நடந்து கொள்ள வேண்டாம்.நாலணா காயினை, தந்தியை, இதோ ,மணி ஆர்டரை ,கடிதம் எழுதுவதை, பெண்கள் பாவாடை தாவணியை ,கல்லுரல், அம்மியை, விறகடுப்பை, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வருவதை இன்னும் எத்தனை எத்தனை விஷயங்களைச் சவுகரியமாய் மறந்தாயிற்று? ஏன் மறந்தோம்?இப்போ அது தேவை இல்லை.அதன் இடத்தை இட்டு நிறப்ப வேறொன்றுள்ளதால்.அதே போல தேவை இல்லாதவை வாழ்க்கையில் இருந்து தானே போய் தேவையானது எஞ்சி நிற்கிறது.ஒன்று  நமக்குத் தேவையா இல்லையா என்ற முடிவை இறைவன் நம்மிடம் விடுவதில்லை.அவனிடமே வைத்திருக்கிறான்.சில சமயங்களில் அது நம்மை வருத்துகிறதுதான்.நாம் ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே? நம்முடையது very very limited vision . கண்டிப்பாய் அவனது தீர்ப்புதான் நம்முடையதை விடச் சரியாக இருக்கும்.அதனால் நல்லது நடக்க வேண்டும் என்பதை விட,நடப்பதெல்லாம் நல்லதற்கே இருக்கட்டும் என்பதே சரியான பிரார்த்தனை.அணுகுமுறையும்.

இன்று இதை எழுத என்ன காரணம்?சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்.சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்.நேற்று நான் எஜமான் (எஜமானி?)ஸ்தானத்தில் இருந்து சற்றே இறங்கி என் பேச்சை எனக்கு எஜமானாக விட்டுவிட்டேன்.இப்படித்தான் பலநாள் கஷ்டப் பட்டு சேர்த்ததை (சேர்த்த நல்ல அனுபவங்கள்,composure ,I mean )  ஒருநாளில் ,சிலவேளை ஒரு நிமிடத்தில் இழந்து விடுகிறாற் போல் ஏதான நடந்து விடும். அதன் விளைவு மனச் சோர்வு.அதன் விளைவு எழுத்து. surf excel விளம்பரத்தில் கறை நல்லதுதான் என்பது போல் எழுத்து நல்லதுதானே?  அப்போ,எழுது முன் ஏற்பட்டு எழுதிய பின் மறைந்த மனச்சோர்வும் நல்லதுதான்.அதான் முன்னமே சொன்னேன் நடந்த எல்லாம் நன்றே.Bye Bye 

ரஞ்ஜனி த்யாகு 

Mother Protects

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

எது சுதந்திரம் ?

திருமணத்தால் இணையும் இரண்டு பேரில் யாராவது ஒருவர் சற்றே more powerful ஆக இருக்கிறார்கள். என் எண்ணங்களின் வேகம் கைக்கு இல்லை.டைப் அடிப்பதும் slow ஆக உள்ளதால் மனதில் தோன்றும் பல எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கிடைப்பதில்லை.மனித மனங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தேவையோ இல்லையோ அவற்றை சுலபமாக நிறுத்த முடிவதில்லை. Emotional issues பற்றி எழுதுவது சிலர் ஆர்வம்.current affairs ,general things பற்றியும் எழுதலாமே என ஒரு கருத்து வந்ததால் யாமறிந்த மொழிகளிலே எழுதி கடும் விமரிசனத்திற்கு உள்ளானேன்.அதில் எது controversial என இன்னும் புரியவில்லை.current affairs சொல்லத்தான் பல ஊடகங்கள் உள்ளதே? Moreover I am not qualified enough to write such stuff .

Comfort-zone என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.நாம் சில இடங்களில்,சிலர் presence ல்தான் நாமாக இருப்போம்.எல்லார் கூடவும் எல்லா சூழ்நிலைகளிலும் இயல்பாய் இருப்பது வெகு சிலருக்கே சாத்தியம்.அப்படி ஒருவரை இது வரை சந்தித்ததாய் ஞாபகம் இல்லை.யாருடைய அருகாமை நம்மை இயல்பிலிருந்து மாற வைப்பதில்லையோ   அப்படி ஒரு துணை கிடைப்பது வரம்.Spouse க்கு  முன்னால்  நடிக்க வேண்டியிராமல் தானாகவே இருக்கும் தைரியத்தைஒரு துணை  தர முடிந்தால் உத்தமம்.கணவன் தன் கண்பார்வையில் இருந்து நகரவே கூடாது என்று முந்தானையில் முடிந்து வைத்துள்ள ,அவனைத் தன் குடும்பத்தில் இருந்தே அந்நியமாக்கி விடுகின்ற ஒரு பெண்ணைக் கதைநாயகியாய்க் கொண்ட ஒரு படம்தான் இதை எழுதத் தூண்டியது.அதில் என்ன சுகம் இருக்கும்? Supportive ஆன ஆண்கள் இல்லையென்றாலும் குடும்பம் நடந்து விடும்.ஆனால் பெண்கள் சண்டைக் குணத்துடன் இருப்பின் ஆண்கள் எதுவும் செய்ய இயல்வதில்லை.கல்யாணமான சில வருடங்களில் மனைவி தாய் ஸ்தானம் கொண்டு விடுகிறாள்.அவள் இன்றி அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.சர்வம் சக்தியே.சக்தியற்ற சிவத்திற்கு ஒன்றும் பவர் இல்லை. யாருடன் அதிகத் தொடர்பில் உள்ளோமோ அவர்களைச் சார்ந்தே மனித வாழ்க்கை சுழல்கிறது.தன்னுடன் வாழ்க்கை முழுதும் வரப் போகிறவன் அவனைச் சேர்ந்தவர்களுக்காக கொஞ்சம் நகர்ந்தால் என்ன? மனைவியின் சொந்தங்களை தன் சொந்தங்களாய் நினைப்பது அற்புதமான குணம்தான்.ஆனால் எந்த extent ற்கு ?அவளைத் திருப்தி செய்ய தன் பெற்றோரை உற்றோரை ரெண்டாம் பட்சமாக நினைக்கும் அளவிற்கா?


மனைவி முன்னால் சகோதரியிடம் பேசக் கூட பயந்த கணவர்கள் பாவம் இல்லையா?  அப்படி என்ன possessiveness வேண்டிக்கிடக்கிறது?..கல்யாணத்திற்கு முன்னால் பெற்றோரை பாடாய்ப் படுத்தும் பெண்களுக்கு கல்யாணம் பண்ணிப் புக்ககம் போய் விட்டால் பெற்றோர் பாசம் பொங்கி வழிய ஆரம்பிக்கிறது.Blood is thicker than water என்பது  பெண்களுக்கு மட்டும் சொல்லப் பட்டதா,அவனுக்கும் நாம் வரும் முன்னேயே ஒரு குடும்பம் இருந்திருக்கிறது. ஏற்கனவே, கல்யாணம் பல ஆண்களின் நிலைமையை தர்மசங்கடமாக்குகிறது.மத்தளம் மாதிரி ரெண்டு பக்கம் அடி வாங்கும் அப்பாவிகள்தான் ஜாஸ்தி.When you love something ,set it free If it comes back to you it is yours .  (எங்கோ படித்ததுதான்.)இல்லையென்றால் it was never yours .Children grow or decay in spite of parents என என் மாமா ஒரு மெயில் போட்டிருந்தார்,ஆனால் நல்ல விதைகள் நல்ல பலனே தரும்.மறுபடி என் அப்பாவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை(.பெண்ணுக்கு மட்டும்  அப்பாதான் ஹீரோ,எப்போதும்.அம்மாக்கொண்டு பையன்கள் கூட திருமணமானது முதல் முக்கால்வாசிப்பேர்   மனைவி பக்கம்தான் .ஆனால் பெண்கள் தங்கள் பெற்றோரை விட்டுத் தருவதே இல்லை. son is a son till he gets a wife . Daughter  is a daughter all her life ).

நான் படித்தது பெண்கள் பள்ளி. கல்லூரிப் படிப்பும் பெண்கள் கல்லூரியில் நான் படிக்க வேண்டும் என்ற என் அப்பாவின் நினைப்பு நடக்காமல் coeducation institution ல்தான் கல்லூரிப் படிப்பு அமைந்தது.My dad is very straight forward and he expected his daughters to be like that and he had great belief in us ஒரு விடுமுறையின் போது என் classmate ஒரு பையன் கோயம்புத்தூரில் இருந்து தன்  ஊர் போக எங்கள் ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும்.அவனுக்கு எங்கள் ஊரில் இறங்கி என்னை,என் பெற்றோரை,பார்த்துப் போக ஆசை.பஸ் ஸ்டாண்டில் இறங்கி விட்டான்.முகவரி எல்லாம் எதுவும் அவனுக்குத் தெரியாது.ஊரில் வேறு யாரையும் தெரியாது.எப்போதோ என் அப்பா பணிபுரியும் பள்ளியின் பெயர் மட்டும் கூறியிருந்தேன் போலிருக்கிறது.நேராக அந்தப் பள்ளிக்குப் போய் விசாரித்திருக்கிறான்.சின்ன ஊர்தானே,யாரோ ஆசிரியர் என் அப்பாவை அடையாளம் காட்டி விட்டார்,அன்று என் அப்பா பள்ளியில் இருந்து மதியம் சாப்பிட வந்த போது அவனைத் தன்  சைக்கிளின் பின்னால் உட்காரவைத்துக் கூட்டி வந்து உன் friend வந்திருக்கான்ம்மா என்று casual ஆக எங்களுடன் பேச உட்கார்ந்தது என் அப்பாவின் personality யை காட்டிய ஒரு நிகழ்ச்சி.

இப்போது உள்ள இளைஞர்கள் இதைப் படித்தால் கேலி பேசுவார்கள்.தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கட்டிப் பிடித்துதான் வெற்றியைக் கொண்டாட வேண்டுமா என தோன்றும். அந்த அளவு,  எதுவும் தவறில்லை என்ற இன்றைய காலகட்டத்தில்  நான் சொன்னது ஒருசாதாரண நிகழ்வே.ஆனால் 1979ல் பெண்கள் ஆண்  நண்பர்களுடன் பேசுவதும் பழகுவதும் viceversa ம் taboo .எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் நாம் அன்பு செலுத்தும் ஒருவரின் பின்னாலேயே செல்ல வேண்டிய தேவை இல்லை.என் பெண்ணை எனக்குத் தெரியும் என்று என் அப்பா நினைத்தாற்  போல் தன் கணவன் பற்றிப் பெண்கள் அறிய வேண்டும்.chess board ல் ஒவ்வொன்றிற்கும் ஓரிடம் உள்ளது அல்லவா?ஒன்றின் இடத்தில் இன்னொன்று இருக்க முடியாது.அது மாதிரிதான் வாழ்க்கை.மனைவி என்ற இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தாயிற்றே?பின்  Why should the wife try to tie her man to the apron ?

இரட்டை மாட்டு வண்டி போல வாழ்வை இருவரும் சேர்ந்து இழுத்தால் சரியாக ஓடும்.அவரவர்க்கு அவர்கள் வளர்ந்த விதம் நெருக்கமானது.மனத்தைக் காயப் படுத்துவதற்காகக் குடும்பத்தைத் தாக்குவது,  தன்  கணவன் எடுப்பார் கைப்பிள்ளை என்று கண்டு கொண்டு தலையணை மந்திரம் ஓதுவது எல்லாம் refined people செய்யும் செயலல்ல.அதற்கெல்லாம் அசையாத supermen இருக்கிறார்கள்.மற்றவர்கள் பாவம்தான்.இதெல்லாம் சொல்வது சுலபம்.எல்லாம் சரியாக அமைந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று தோன்றுகிறதா?அப்படி bed of roses ஆக யார் வாழ்வும் இருக்காது.சந்திக்கும் சவால்கள் நம் பிராரப்த கர்மத்திற்கேற்ப மாறுபடும்.அவ்வளவே.கலீல் கிப்ரான் சொன்னது போல்,Let us be together like the pillars of the temple .Live and let live .மற்றவர் சுதந்திரங்களில் குறுக்கிடுவதை முழுமையாகத் தவிர்ப்பது போன்ற சுதந்திரம் நம் ஆன்மாவுக்கு எதுவுமில்லை.மற்றவர் என்ற சொல்லில் கணவன் மனைவி இன்னும் நெருங்கிய நெருங்காத அனைவரும் அடக்கம்.

ரஞ்ஜனி த்யாகு 

Mother Protects 

சனி, 4 ஏப்ரல், 2015

விருப்பஓய்வு (V R S )

எங்கள் குடும்ப வட்டத்திலும் தெரிந்த நண்பர்கள் மத்தியிலும் இப்போது விருப்ப ஒய்வு பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்துள்ளார்கள். முக்கியமாக ஐம்பது வயதைக் கடந்த ஆண்கள் ஓடியது போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். நம் நாட்டில் பொதுவாக பெண்களின் பிரச்சனைகள் பெரிது படுத்தப் படுவது போல் ஆண்கள் மனநிலை பற்றி நெருங்கினவர்கள் கூட யோசிப்பதில்லை. அது ஆண் பாவமாக்கும்ஆண் பாவமும் பொல்லாததே.

வேலை பார்க்கும் பெண்களைக் கொண்ட குடும்பங்களில் பெண்களின் சம்பளம் பெரும்பாலும் supporting salary ஆகவே உள்ளது. பொருளாதார நிர்பந்தம் இல்லாத பட்சத்தில் அவர்கள் நினைத்தால் வேலை பார்க்கலாம், இல்லை இருக்கவே இருக்கிறது சாக்கு. குழந்தை பராமரிப்பைக் காரணம் காட்டி வீட்டில் இருந்து கொள்ளலாம். ஆனால் இருபது +ல் குடும்ப பாரம் சுமக்கத் தொடங்கும் ஆண் ஐம்பத்து எட்டு வயது வரை நிற்காமல் ஓடுகிறான். பெண்களாவது மாமியார் மாமனார் என்ற வீட்டு உறுப்பினர்களான boss களை அனுசரித்துப் போனால் போதும். ஆனால் ஆண்கள், வேலை பார்க்கும் இடங்களில் எத்தனை பேரை அனுசரித்துப் போக வேண்டி உள்ளது! வெளியில் சென்று வேலை பார்த்தே ஆக வேண்டிய பெண்கள் நிலை டென்ஷன் நிறைந்ததுதான். ஆனால்  அவர்கள் சதவிகிதம் குறைவே.

"அரை மணி படுத்து எழுந்தால்தான் மதியம் காபி கூட போட முடியும்" என்று ஸ்டண்ட் அடித்து குட்டித் தூக்கம் போடுவதெல்லாம் ஆண்களுக்கு சாத்தியமா? இயலாமையே ஆண்கள் வீட்டில் சுப்பீரியாரிட்டியைக் காட்டிக் கொள்ள காரணம். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் கணவன் பற்றி சொல்லும் போது "அவர் எங்கள் வீட்டின் ஏடிஎம் மெஷின்என்றாள். மனைவி, மக்கள், பெற்றோர் எல்லார் தேவைகளையும் கவனித்து, ஆபிசரிடம்  டார்கெட் முடிக்கவில்லை எனத் திட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட, தூங்க மட்டுமே வீடு வரும் ஆண்கள் இறுக்கமாகவே இருப்பார்கள். அதைக் கிண்டல் செய்தால் எப்படி? "நான் செய்வது உடல் உழைப்பு. நாள் பூர சி ரூமில் அலுங்காமல் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து என்ன அதிகாரம் வேண்டிக் கிடக்கு "என்று சாடும் பெண்கள்  brain work, சமமாக, இன்னும் அதிகமாகவே கூட எனர்ஜியை உறிஞ்சும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டு நிர்வாகத்தை பெண்கள் கவனித்துக் கொள்வதால்தான் ஆண்கள் அமைதியாய் வேலை பார்க்க முடிகிறது என்பது சரிதான். ஆனால் அதற்குத்தானே திருமணம்.  "காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுத்தே" என்று பாரதி கூறவில்லையா? ஏடிஎம் மெஷினாகவும் நம் டிரைவராகவும் அவர்கள் எடுக்கும் இன்னும் பல அவதாரங்கள் பற்றி கொஞ்சம் கனிவுடன் நினைத்துப் பார்ப்போம்.

 ப்ரத்யேக நேரம் (personal time) வேண்டும் என்று விரும்புகிறது மனம். அது ஆண்களுக்கும் உண்டல்லவா? ஆணும் பெண்ணும் இயற்கையிலேயே மாறுபட்ட இயல்பினர். புத்தகம் வாசிப்பது, சமையல் கலை வகுப்புகள் செல்வது, சீரியல் பார்ப்பது, ஷாப்பிங் செய்வது, அரட்டை அடிப்பதெல்லாம் பெண்களுக்கான space என்றால், செய்தித்தாள் படிப்பதும் news channels மாற்றி மாற்றிப் பார்ப்பதும் நண்பர்களுடன் செலவிடும் நேரமும் ஆண்களின் personal space.
ஆனால் ஓய்வுக்குப் பின் வரும் நாட்களில் கணவன்மார்களை வீட்டில் வைத்து சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இத்தனை நாள் வீட்டை சுத்தமாய் மறந்து," கொக்குக்கு ஒன்றே மதி" என்பது போல் வேலை பார்த்து அவர்கள் குழந்தைகள் என்ன வகுப்பு என்பதைக் கூட மனைவியிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு தங்கள் உலகம் வேறென வாழ்ந்தவர்கள், திடீரெனக் கிடைத்த நேரத்தை என்ன செய்வதென்று அறியாமல் வீட்டையும் மனைவியையும் சுற்றிச் சுற்றி வந்து தொணதொணக்க ஆரம்பிக்கிறார்கள். மனைவியரோ எப்பவும் பிசி. கணவர்கள் இவ்வளவு நாள் காட்டிய பாரா முகத்தைத் திருப்பிக் காட்டவும் மனைவியருக்குத்  தோன்றலாம்.

இப்போதெல்லாம் வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபன் போல் ஓய்வை ஒரு உணர்வு பூர்வமான விஷயமாய் யாரும் பார்ப்பதில்லை. சாதுர்யமாய், வரும் காலத்திற்கு சேமித்து விட்டுத்தான் ஓய்வெடுக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் ஓய்வை நல்ல முறையில் கழிக்கத் திட்டமிடுதல் அவசியம். எப்படி சம்பாதிக்கவும் சாதிக்கவும் இளம் வயது ஏற்றதோ அது போல் ஆன்மிக நாட்டம் உருவாக்கிக் கொள்ளவோ எந்த உருப்படியான செயல் தொடங்கவோ கூட இளம் வயதே ஏற்றது. ஆனால் ஓடி ஓடி வேறு எதுவும் செய்யாமல் போயிருந்தாலும் Better late than never. அதனால்,"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பிய படி செல்லும் உடலை "பிரார்த்தித்துப் பெற்று, சின்ன வயதில் ஆசைப் பட்டு செய்யாமல் விட்டதை எல்லாம் செய்யலாம். ஒவ்வொரு நாளையும் காதலர் தினம் போல் கருதி, துணையுடன் பொழுதை அமைதியாகபயனுள்ளதாகக் கழிக்கலாம். விருப்ப ஓய்வு பெரும் நண்பர்களின் குடும்பங்கள் வளமாக வாழ உங்கள் "சினேகிதி"யின் பிரார்த்தனைகள்.

ரஞ்ஜனி த்யாகு 

ஏப்ரல் 2015 சினேகிதி இதழில்" ஆண் பாவம் பொல்லாதது " என்ற தலைப்பில் வெளிவந்துள்ள சிறு கட்டுரை 

Mother Protects

வியாழன், 2 ஏப்ரல், 2015

யாமறிந்த மொழிகளிலே

 தமிழ்ப் புத்தாண்டு மன்மத வருஷம் பிறக்கப் போகிறது. (.இன்னும் சித்திரைத் திருநாளைத்தான் வருடப் பிறப்பாய் எங்கள் வீட்டில் கொண்டாடுகிறோம்.) ஆனால் தமிழ் மொழி வரும் வருஷங்களில் எப்படி இருக்கப் போகிறது? "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்"  என்ற பாரதியார் " மெல்லத் தமிழ் இனிச் சாகும்" "என்றும் கூறி விட்டார்.அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துப் போகாத Indian Diaspora இந்த அழிவிற்கு ஒரு முக்கியக் காரணம்..70 மில்லியன்   மக்கள் தமிழ் மொழி பேசுவதாய் ஆய்வு கூறுகிறது.அதிக மக்களால் பேசப் படும் மொழி வரிசையில் 18வது இடத்தில் உள்ளது.ஆனால் இப்போது எங்கள் குடும்பத்தையே  எடுத்துக் கொண்டால் எங்களுக்கு அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு  யாருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.இந்தியாவிலேயே உள்ளவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.ஆனால் ஆங்கிலத்தில் இன்னும் தெளிவாகப்  பேசுகிறார்கள்.

ஆங்கிலம் பலபேருடன் தொடர்பு கொள்ள மிகவும் அவசியம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. உலகின் Lingua Franca ஆங்கிலம்தான்..But its effect on regional languages is bad .எந்த விதத்திலும் ஆங்கிலத்தின் துணை இல்லாமல்தானே தமிழ் வளர்ந்தது?வாழ்ந்தது?ஆங்கிலம் மட்டுமே மேன்மையானது என்றால் பிற மொழிகள் இந்நேரம் காணாமல் போயிருக்கும்.நம் கிராமங்களில்,நகர்ப் புறங்களிலும் கூட  இன்னும் தமிழ் உள்ளது.ஆனால் அவர்களில்  பலர் தமிழ் வெறியர்களாகி ஆங்கிலத்தை ஒரு வெறுப்புடன் நோக்குகிறார்கள்.Scientific principles ,mathematics ,engineering எல்லாவற்றையும் விளக்க ஆங்கிலத்தை அடித்துக் கொள்ள வேறு மொழி உண்டா என்ன?தாய் மொழி,ஆங்கிலம் இரண்டுமே முக்கியமென்ற புரிதல்  இல்லை என்பதுதான் பிரச்சினை..என்னைக் கேட்டால் அரசுப் பள்ளிகள் எல்லாவற்றையும் கூட ஆங்கில மீடியமாய் ஆக்கி விட்டு,தமிழைக் கட்டாயப் பாடமாக வைக்கலாம்.தமிழ் மூலம் (origin ) உடைய பெற்றோர்கள்அடுத்த தலைமுறைக்குகட்டாயம் தமிழ் சொல்லித்தரவேண்டும்.இரண்டு மொழிகளும் ஒன்றை ஒன்று compliment பண்ணிக் கொள்ள வேண்டும்.ஏனெனில் ஒரு மொழி அழிந்தால் culture ம் சேர்ந்து அழிகிறது.
வரும் தலைமுறை பற்றித்தான் பேச்சே.

ஒரு மொழி அதன் சுத்தத்துடன் அடுத்த தலைமுறையை அடைய வேண்டும்.இப்போதுள்ள குழந்தைகள் திரைப்படங்களிதான் தமிழ் கேட்கிறார்கள்.திரைப்பட வசனங்கள் தமிழை வளர்க்கிறதாகத் தோன்றவில்லை.ஒரு நகைச்சுவை நடிகரின் வசனங்களில் கூட சென்சார் போர்ட் வெட்டிய  வசனங்கள் இடம் பெறுவதை பார்க்கிறோம்.தமிழ்ப் பாடல்களிலும் சகஜமாய் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு.வைரமுத்து போன்ற நல்ல கவிஞர்கள் பாட்டுக் கேட்கும் போது கூடபாட்டின் இனிமை,பாடியவர் யார் இசை அமைத்தவர் யார் என்பதெற்கெல்லாம் பிறகே யார் எழுத்து என்று கேட்கிறோம்.அதிக சத்தத்துடன்  போடப்படும் மெட்டுக்கள் வார்த்தைகளை கேட்க இயலாது செய்து விடுகின்றன. Then how can Tamil sustain through a medium like  cinema ?


அதனால் ஓரளவு தமிழ் படித்த நாமெல்லாம் ஏதாவது செய்ய வேண்டும்.இல்லை என்றால் வள்ளுவரும் பாரதியாரும் தமிழ் வளர்த்த எல்லோரும் இரண்டாம் முறையாய் இறந்து போவார்கள் .இன்னொரு பாரதி பிறக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டாமா? இணையதளத்தில் தமிழ்ப் பதிவுகள் இல்லை,ஆங்கிலம் அளவிற்கு.அதை அதிகமாக்க நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிக்கலாம்.ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துவதெல்லாம் சரிதான்.இந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் தெளிவாக உரையாடுவது முக்கியத் தேவையே.ஆனால் தமிழனாகப் பிறந்திருந்தால்,தமிழ்நாட்டில் வசிக்க வேண்டுமானால் தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்.பெற்றோர்" தமிழ் தெரியாது என்குழந்தைக்கு என்று கூறுவது பெருமையான விஷயம் என்ற நினைப்பைக் களைந்தெறிய வேண்டும்.அது " என் அம்மா யார் எனவே எனக்குத் தெரியாது " எனச் சொல்வது போல வருந்த வேண்டிய ஒன்று.என்ன செய்யலாம்?


முக்கியமான பின்குறிப்பு : இந்தக் கருத்துக்கள் என் மகன் கார்த்திக் இன்று காலை உணவு வேளையின் போது என்னிடம்  பகிந்து கொண்டவை. நாங்கள் இன்னும் ஆழமாய்த் தமிழ் கற்க அவனைத்  தூண்டவில்லை என்பதும் அவனது குற்றச் சாட்டு. இந்த விஷயம் அவனது ஆங்கில blog ல் பகிரப் படுவதை விட ,தமிழில் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்ற அவன் எண்ணத்தின் வடிவமே இந்தப் பகிர்வு.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS