பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அதிகாரம் எனப் பொருள் கொள்ளலாம்.ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கினால் அதிகாரம் தலைவனிடம் (சில வீடுகளில் தலைவியிடம்)உள்ளது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர்.வங்கியில் மானேஜர் ,தொழிற்சாலைகளில் மானேஜிங் டைரக்டர் நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் அல்லது அதிபர் இப்படி பட்டியல் தொடரும்.இந்த எழுத்து அதிகார வர்கத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் கீழே உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அலசலே.எதுவும் எழுத்தில் வர ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டும்.எனக்கு அந்தத் தூண்டுதலாய் அமைந்த நிகழ்வு என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் தனி மனித வழிபாடும் எளிய மக்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களை அணுக இயலாது தவிக்கும் தவிப்பும் நம் நாட்டில் புதிதல்ல.கொஞ்ச நேரம் உற்று கவனித்து உலகைப் பார்த்தால் நாம் அனைவரும் எழுத்தாளர்கள்தான்.
POWER DISTANCE INDEX என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் படும் சொல் தொடரைத் தமிழ்ப் படுத்துவதை விட PDI என்று குறிப்பிட்டுக் கொள்வோம்.ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை ஒட்டி அந்த நாட்டின் PDI அதிகமாகவோ குறைவாகவோ உள்ளது.நம் இந்தியாவின் PDI மிக அதிகம்.
U S A ன் PDI மிகவும் குறைவு.இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை?அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் இருக்கும் இடைவெளி அதிகம் உள்ள நாடுகள் PDI அதிகமுள்ள நாடுகளாய்க் கருதப் படுகின்றன.விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ,அரசியல்வாதிகள் நம் நாட்டில் கொண்டாடப் படுவது போல் வேறெங்கு கொண்டாடப் படுகிறார்கள்?மத குருமார்களைக் கூட ஒரு லெவலுக்குப் பிறகு நம்மால் நெருங்க முடியாது.உண்மையைச் சொல்லப் போனால் நாம் எதேனும் குறிப்பிட்ட Spiritual Belief வைத்துக் கொண்டிருந்தால் அதை மனதுடன் வைத்து கொள்வதே மேல்.ஒரு cult ல் நம்பிக்கை வைத்து மடத்திற்கோ கோவிலுக்கோ செல்பவர்கள் தலைமைப் பீடத்தில் உள்ளவர்களை நெருங்கக் கூட இடையில் உள்ளவர்கள் விட மாட்டார்கள்.எல்லாவற்றையும் துறந்தவர்களே இப்படி என்றால் மற்றவர் பற்றிப் பேச என்ன உள்ளது?
சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற கொள்கை நமக்குக் கிடையாது.அதிகாரம் சமமாக இல்லை- இருக்க முடியாது- அது தேவையும் இல்லை என்பது நம் கலாச்சாரம்.கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றையும் Boss உத்தரவின் படி செய்தே நமக்குப் பழக்கம்.வேலை கொடுப்பவர்களுக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நமக்கு இயல்பாகிப் போன ஒன்றே.தனக்கு ஒரு படி மேலே உள்ளவர்களை வேண்டுமானால் guidance க்காக அணுக முடியும்.அதற்கும் மேலே உள்ளவர்களைப் பார்ப்பதும் அரிதே.Work Life ல் மானேஜ்மெண்ட்டுக்கு பணிவான பணியாளர்களே தேவை.பழைய காலத்தில் நல்ல செய்தி கொண்டு வரும் பணியாளுக்கு ராஜா முத்துமாலை பரிசளிப்பது போல loyal ஆக உள்ளவர்களுக்கு incentive வழங்கப் படும்.கட்டுப் படுத்தப் படுவதை நம்மில் பலர் ரசிக்கிறோமோ இல்லையோ ஆனால் வெறுப்பதில்லை.ஏணிப் படியின் மேலே உள்ளவர்களுக்கு,கீழே உள்ளவர்கள் எதையும் சொல்லிப் புரிய வைப்பது மிகக் கடினம்.நம்முடையது Male dominated society ம் கூட.வீடுகளில் பொதுவாய் சிதம்பர ராஜ்ஜியம்,திருமணங்களில் பிள்ளை வீட்டுக்காரர்களின் domination .இப்போது எல்லாம் மாறிவருகிறது என்று சொல்கிறோம்.ஆனால் பெண்ணுடைய பெற்றோர்தானே வாழ்நாள் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவழித்துத் திருமணம் நடத்துகிறார்கள்?வீட்டில் இருந்து நாடு வரை அதிகாரம் செய்பவர்கள்,அதைக் கேட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.மாற்றம் வருமா தெரியாது.
நம்மை விடவும் PDI அதிகம் உள்ள நாடுகளும் உள்ளன.கொலம்பியா ஒரு உதாரணம்.பிரேசில் தென் கொரியா மெக்சிகோ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும்தான்.அமெரிக்காவிற்கு அடுத்தபடி அயர்லாந்த் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் PDI குறைவான நாடுகள்.இன்று ஒரு நண்பருடன் இது பற்றிப் பேச நேர்ந்தது.சமூகத்தின் மேல் நிலையில் அல்லது ஒரு குடும்பத்தின் தலைவனாய் உள்ளவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களின் கருத்துக்களை முதலில் கேட்டறியும் வழக்கம் மஹாபாரத காலத்தில் இருந்தே இருந்து வருவதாய்க் கூறி ஒரு கதையும் கூறினார்.தர்மபுத்திரர் ஒரு முறை ஏதோ விஷயத்தில் கருத்து கூற வேண்டியிருந்த போது தம்பிகள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்பி முதலில் சஹாதேவனைக் கேட்டாராம்.ஏனென்றால் தான் ஏதாவது சொன்னால் அதை தம்பி தவறாயினும் மறுதலிக்க மாட்டான் ,அதனால் முதலில் அவன் சொல்வதைக் கேட்டறிவோம் என்ற எண்ணமாம்.என்னைப் பொறுத்த வரை High PDI உள்ள இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றிரண்டு தருமபுத்திரர்கள் இருந்தாலும் கீழே உள்ள சஹாதேவர்கள் அண்ணனுக்கு எது பிரியம் என்று ஊகித்து அறிந்து முடிந்தவரை அவனுக்குப் பிரியமானதையே தன் பதில் போல் கூறுவார்கள்.மன்னனுக்கு இடித்துரைத்த மந்திரிகள் இருந்திருக்கிறார்கள்.இப்போதும் கருத்துக்கள் கேட்கப் படுகின்றன.ஆனால் distinct ஆக அதிகார வர்க்கம் ஒன்றும் ஆமாம் போடும் வர்க்கம் ஒன்றும்தான் நான் கண்ட இந்தியாவில் உள்ளன.
எரிச்சல் உண்டாக்கும் அளவுக்கு PDI அதிகமே,நம் நாட்டில்.HERO WORSHIP ஹீரோக்களைத்தானே பண்ண வேண்டும்? அதற்குத் தகுதியானவர்களை மட்டுமா கொண்டாடுகிறோம்? மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம்?நெருங்கவே முடியாத அளவு நம்மை விட இன்னொரு ஜீவன் ஏன் உசத்தி? PDI குறைவான நாடுகள் என்ன கெட்டுப் போயிற்று? உண்மையில் நாம் மிக மதிக்கும் ஒருவரை நெருங்கித் தொடர்பு கொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? நம் நாட்டில் அப்படியே உல்டா.நமக்கு மனதுக்கு நெருங்கிய ஒருவரை நடுவில் உள்ள பலரைத் தாண்டி ஒருக்கால் நெருங்கினாலும் அவருடைய உண்மை முகத்தின் தரிசனத்தைத் தாங்குவோமா தெரியாது.இந்த topic நீளமானது.We shall have another part .Please reserve comments till then .(இது தவறாமல் கருத்து சொல்லும் என் dear friends க்கு )
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக