சற்றுமுன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பினோம்.இப்போதெல்லாம் திருமணங்கள் சென்று வருவது பெரிய excitement ஐ ஏற்படுத்துவதில்லை.இப்போதெல்லாம் என்பது சரியா என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.சிறு வயது முதலே திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மேலேழுந்தவாரியாய் உண்டாகும் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவிர வேறு மாதிரியான ஒரு உணர்ச்சியே மனதில் மேலோங்கி இருந்து வந்ததாய் உணர்கிறேன்.(சந்தோஷம் என்று குறிப்பிடுவது கூட மாமா சித்திகள் எல்லோரையும் சேர்த்து ஓரிடத்தில் பார்க்கலாம் என்பது மட்டுமே.வேறு எதுவும் இல்லை.) இந்த write up தெளிவற்று இருப்பதாய் நீங்கள் நினைக்கவும் கூடும். மனம் நினைப்பதை உண்மையாய் எழுதினால்தான் தெளிவு பிறக்கும்.ஆனால் உண்மையை சற்று refined ஆகத்தானே வெளியிட முடிகிறது?அந்த முயற்சியில் தெளிவு காணாமல் போய் விடுகிறது.
திருமணங்களில் பிடிக்காதவற்றைப் பட்டியலிடுகிறேன்.முதலில் ஆடம்பரம்.அதனால் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்படும் செலவு.ஆடம்பரமாய் திருமணம் நடத்த என்ன அவசியம்?உலக வழக்கம் என்பது வெட்டிப் பேச்சு.எளிமையான திருமணங்கள் நடத்த ஏன் தயக்கம்?பிறருக்கு தங்கள் பண பலத்தைக் காண்பிக்கவா குழந்தைகள் கல்யாணத்தை நடத்துகிறோம்?கல்யாணத்திற்கு ஒரு பெண் ஒரு பையன் பெற்றோர்கள்தானே முக்கியம்?சரி ஊருடன் கூடி வாழணும் என்று தத்துவம் பேசுவார்கள்.ஊரை கூப்பிடுங்கள்.But எத்தனை வேளை சாப்பாடு போடுவீர்கள்?
உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் கழிவாய் வெளியேறப் போகும் விஷயத்திற்கு எத்தனை லக்ஷங்கள் செலவழிப்பீர்கள்?அடுத்து புடவை நகை.இந்தக் கால ஜீன்ஸ் யுவதிகள் முகூர்த்த நேரம் மட்டும் கட்டி பின் தொடவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் 25000த்திற்கு முகூர்த்தப் புடவை வாங்க வேண்டும்?மாப்பிளை வீட்டு pressure என்பது கதை.அப்படி ஒரு புகுந்த வீடு தேவையா நம் பெண்ணுக்கு என்று ஏன் யோசிப்பதில்லை யாரும்?
இப்படிப் பேசினால் பெண்ணை நாமே வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தோன்றும்.அதிலும் எதுவும் தப்பில்லை.கல்யாணம் நடத்துவதும் பண்ணிக் கொள்வதும் மட்டும்தான் சாதனையா என்ன?கிருஹஸ்தாச்ரமம் சந்யாசாச்ரமம் என்று இரண்டுதான் உண்டு.சந்யாசியும் ஆகாமல் கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் இருப்பது மாபாதகம் என்று பேசுவதும் ஏனோ தெரியவில்லை.சின்ன வயதிலேயே உனக்கு இதெல்லாம் தோன்றி விட்டதா என்று கேட்கிறீர்களானால் இல்லை.அது வேறு கதை.பெண்ணை மட்டும் திருமணம் ஏன் பெற்றோரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பது என் சிறிய வயது மனதில் இருந்து கொண்டே வருத்திய கேள்வி.இந்த எண்ணம் தோன்றவும் ஒரு குறிப்பிட்ட வயது ஆனது.At least பெண்தான் இடம் பெயர வேண்டும் என்ற உலக வழக்கம் தெரிந்த பின்தானே எண்ணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? திருமணத்தின் நிறைவில் ஒரு குடும்பம் குதூகலித்துக் கொண்டு [கண்ணில் இட்ட மை கரைய அழுது கொண்டு, கலக்கத்துடன் நேற்று வரை யார் எனவே தெரியாத ஒருவன் பின்னால் வரும்] பெண்ணை கடத்துவது போல் கூட்டிச் செல்ல அத்தனை சுமைகளையும் ஏற்றுத் திருமணத்தை நடத்தி முடித்த பெண்ணின் பெற்றோர் பெண் அங்கே போய் எப்படி நடத்தப் படுவாளோ என்ற கலக்கத்துடன் வழி அனுப்பும் காட்சிகள் I have hated .
இவை எல்லாம் சேர்ந்து ஒரு mixed emotions தான் இன்று வரை திருமணங்கள் சென்று வந்தால் எனக்கு ஏற்படுகிறது.பட்டுப் புடவைகளும், பகட்டும், சினிமாப் பாடல்களின் உரத்த சப்தமும், வீணாகும் உணவும் ,அனாவசியமாய் மலர்ச்செண்டுகள் பெருமைக்காக அளிக்கப் பட்டுத் தூக்கி எறியப் படுவதும் ,நூற்றுக் கணக்கில் க்ளிக் செய்யப் படும் புகைப்படங்களும், மற்ற நாள்களில் ஏன் என்று கூடக் கேட்காத உறவுகள் சும்மாவேனும் அந்த இரண்டு நாட்கள் மட்டும் கட்டித் தழுவிக் கொள்வதும் மொத்தத்தில் உண்மையை விட நடிப்பே ப்ரதானமாக நடத்தப் படும் திருமணங்கள் வியப்பையும் சலிப்பையுமே உண்டாக்குகின்றன.இப்போது பையனின் பெற்றோர்கள்தான் பயப்படுவதாய் சொல்கிறார்கள்.பெண்கள் பையனின் பெற்றோர் பற்றிக் கேட்க,They are in the hall or on the wall எனக் கேட்கிறார்களாம்.உண்மையாய் இருக்கலாம்.ஆனால் நான் கேள்விப் பட்ட வரையில் திருமணங்களில் பையன் வீட்டார் வைத்ததுதான் சட்டம் என்பது போல்தான் உள்ளது..செலவுகளைக் குறைத்து,பகிர்ந்து கொண்டு நடத்தினால்தான் பெண் தருவோம் என ஒருவராவது சொல்ல மாட்டார்களா? இல்லை அவர்களே விரும்பித்தான் இந்த ஆடம்பரங்களுக்கு உடன்படுகிறார்களா?தூக்கம் கண்களைத் தழுவுகிறது.இன்று சென்று வந்த கல்யாணத்தால் இணையும் இருவரும் நன்றாக இருக்கட்டும் என்ற ப்ரார்த்தனையுடன் Good Night சொல்லிக் கொள்கிறேன்.எப்படியோ ரெண்டு பேரையும் மாட்டி விட்டாயிற்று.அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தால் மகிழ்ச்சி.மற்ற என் புலம்பல்கள் அவர்களுக்குத் தேவையற்றதே.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
http://www.kinindia.in
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//..ஆனால் உண்மையை சற்று refined ஆகத்தானே வெளியிட முடிகிறது.
முலாம் பூசாத பச்சை உண்மையை அப்படியே சொல்லிவிட்டால் கல்லடி படவேண்டியிருக்கும்.
But in practical it is easy to live as a single than to convince parents and majority society. Minorities suffer or not but always they will be suppressed. நாங்க கஷ்ட படுறோம், நீ மட்டும் நல்லா இருந்தா எப்படீங்கிற மனக் குமுறலால்தான்.
Please Watch Osho's view on Marriage and Children
https://youtu.be/5ocbZhRQS9I