மணிஆர்டர் சேவைகள் நிறுத்தப் பட நாள் குறித்தாயிற்று.அதை செய்திகளில் கேட்டு விட்டு என்னால் உங்களுடன் பேசாமல் இருக்க இயலுமா?தந்திச் சேவையும் இப்படி ஒரு நாள் திடீரென நின்று போனது.அஞ்சலகமே இல்லாது போகுமா,தெரியவில்லை. ஆனால் இன்டர்நெட் சென்றடையாத குக்கிராமங்கள் இன்னும் உள்ளன.அவைகள் என்ன செய்யும் இதெல்லாம் எனக்கு விவரம் தெரியவில்லை.இது போன்றதொரு சேவையின் முடிவு,காணாமற் போன பல விஷயங்கள் மாதிரி மனதைத் தொடுவதால் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணுகிறேன்.மற்றபடி என்ன செய்வது?நம் பேரப் பிள்ளைகளிடம் எங்க காலத்தில் மணி ஆர்டர் என்று ஒன்று இருந்தது தெரியுமா என்று சில வருஷங்கள் கழித்துக் கதை பேச வேண்டியதுதான்.
சில செய்திகள் சேகரித்தேன்.130 வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்து வரும் சேவை.ஆனால் eM O ,i M O ஆகியவை உண்டாம். Electronic money order ,Instant money order. உண்மையில் நம் வேலை இன்னும் எளிதாக்கப் பட்டுள்ளது.என்ன personal touch கொடுக்க நாலு வரி எழுதுவோமே அது முடியாது.standard message தான்.அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.கைபேசி இல்லாத மக்கள் ரொம்பக் குறைவான பேர்தான்.விஷயத்தைச் சொல்லி விட்டு பணத்தைeM O செய்ய வேண்டியதுதான்.இதுவும் அஞ்சலகம் சென்றுதான் செய்ய வேண்டும் ஆதலால் பொதுமக்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை.
மணி ஆர்டரைக் கொஞ்சம் மறந்து விட்டு மனிதர்களுக்கு வருவோம்.மணிஆர்டர் போல்தான் மனிதர்களான நமக்கும் ஒரு நாள் குறிக்கப் பட்டுள்ளது.மனிதன் குறித்த நாள் தெரிந்து விடுகிறது.இறைவன் குறித்த நாள் மறைபொருளாய் உள்ளது.முடிவு உண்டு என்று தெரிந்தும் தெரியாதது போல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதது போல் நடந்து கொள்கிறோம்.நான் எனக்கேதான் சொல்லிக் கொள்கிறேன்.அதை உங்களிடம் பகிர மட்டுமே செய்கிறேன்.செய்ய வேண்டியவை இன்னும் எவ்வளவோ உள்ளன..Miles to go before I sleep ன் தமிழாக்கம் மாதிரி தெரிந்தால் நான் என்ன செய்ய?Robert Frost நினைத்தது போல நாமும் நினைக்கக் கூடாதா? ஒவ்வொரு வினாடியும் உபயோகமாய்ச் செலவழிக்க வேண்டியதே.திரும்பிப் பார்ப்பதற்குள் நாட்கள் கடந்து போய் விடும்.அனாவசியமாக யோசிக்க,விவாதிக்க நேரம் இல்லை.எந்த விஷயத்திற்கும் மனச் சோர்வடைவதும் தேவையற்றதே.Depression kills a person . ரோஜாச் செடியின் முள் போல எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை? நாத்திக வாதம் பேசுவோர் கூட மறுக்க இயலாத ஒன்று உண்டென்றால்,நமக்கு வாழ்க்கை அளித்துச் செல்லும் நல்ல,மற்ற எதற்கும் நாம் பொறுப்பில்லை.ஏதோ நமக்கப்பாற்பட்ட சக்தியால் நடத்தப் படுகிறோம்.அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது.இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது.அவன் தடுப்பதை வேறு யாரும் கொடுக்கவும் முடியாது. பின் எதற்கு சஞ்சலம்?
நமக்கு நடக்கும் நல்லதிற்கு நாமே காரணம் போல ரொம்பக் குதூகலிக்கவும் தேவையில்லை.அதிகப் படியான சந்தோஷம் வருத்தம் இரண்டும் வாழ்வின் சமநிலையை பாதிக்கவே செய்கின்றன.மண்ணாந்தை மாதிரி உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டாம்.ஆனால் உணர்சிகளே உருக் கொண்டது போலும் நடந்து கொள்ள வேண்டாம்.நாலணா காயினை, தந்தியை, இதோ ,மணி ஆர்டரை ,கடிதம் எழுதுவதை, பெண்கள் பாவாடை தாவணியை ,கல்லுரல், அம்மியை, விறகடுப்பை, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வருவதை இன்னும் எத்தனை எத்தனை விஷயங்களைச் சவுகரியமாய் மறந்தாயிற்று? ஏன் மறந்தோம்?இப்போ அது தேவை இல்லை.அதன் இடத்தை இட்டு நிறப்ப வேறொன்றுள்ளதால்.அதே போல தேவை இல்லாதவை வாழ்க்கையில் இருந்து தானே போய் தேவையானது எஞ்சி நிற்கிறது.ஒன்று நமக்குத் தேவையா இல்லையா என்ற முடிவை இறைவன் நம்மிடம் விடுவதில்லை.அவனிடமே வைத்திருக்கிறான்.சில சமயங்களில் அது நம்மை வருத்துகிறதுதான்.நாம் ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே? நம்முடையது very very limited vision . கண்டிப்பாய் அவனது தீர்ப்புதான் நம்முடையதை விடச் சரியாக இருக்கும்.அதனால் நல்லது நடக்க வேண்டும் என்பதை விட,நடப்பதெல்லாம் நல்லதற்கே இருக்கட்டும் என்பதே சரியான பிரார்த்தனை.அணுகுமுறையும்.
இன்று இதை எழுத என்ன காரணம்?சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்.சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்.நேற்று நான் எஜமான் (எஜமானி?)ஸ்தானத்தில் இருந்து சற்றே இறங்கி என் பேச்சை எனக்கு எஜமானாக விட்டுவிட்டேன்.இப்படித்தான் பலநாள் கஷ்டப் பட்டு சேர்த்ததை (சேர்த்த நல்ல அனுபவங்கள்,composure ,I mean ) ஒருநாளில் ,சிலவேளை ஒரு நிமிடத்தில் இழந்து விடுகிறாற் போல் ஏதான நடந்து விடும். அதன் விளைவு மனச் சோர்வு.அதன் விளைவு எழுத்து. surf excel விளம்பரத்தில் கறை நல்லதுதான் என்பது போல் எழுத்து நல்லதுதானே? அப்போ,எழுது முன் ஏற்பட்டு எழுதிய பின் மறைந்த மனச்சோர்வும் நல்லதுதான்.அதான் முன்னமே சொன்னேன் நடந்த எல்லாம் நன்றே.Bye Bye
ரஞ்ஜனி த்யாகு

Mother Protects
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக