தமிழ்ப் புத்தாண்டு மன்மத வருஷம் பிறக்கப் போகிறது. (.இன்னும் சித்திரைத் திருநாளைத்தான் வருடப் பிறப்பாய் எங்கள் வீட்டில் கொண்டாடுகிறோம்.) ஆனால் தமிழ் மொழி வரும் வருஷங்களில் எப்படி இருக்கப் போகிறது? "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" என்ற பாரதியார் " மெல்லத் தமிழ் இனிச் சாகும்" "என்றும் கூறி விட்டார்.அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துப் போகாத Indian Diaspora இந்த அழிவிற்கு ஒரு முக்கியக் காரணம்..70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுவதாய் ஆய்வு கூறுகிறது.அதிக மக்களால் பேசப் படும் மொழி வரிசையில் 18வது இடத்தில் உள்ளது.ஆனால் இப்போது எங்கள் குடும்பத்தையே எடுத்துக் கொண்டால் எங்களுக்கு அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு யாருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.இந்தியாவிலேயே உள்ளவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.ஆனால் ஆங்கிலத்தில் இன்னும் தெளிவாகப் பேசுகிறார்கள்.
ஆங்கிலம் பலபேருடன் தொடர்பு கொள்ள மிகவும் அவசியம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. உலகின் Lingua Franca ஆங்கிலம்தான்..But its effect on regional languages is bad .எந்த விதத்திலும் ஆங்கிலத்தின் துணை இல்லாமல்தானே தமிழ் வளர்ந்தது?வாழ்ந்தது?ஆங்கிலம் மட்டுமே மேன்மையானது என்றால் பிற மொழிகள் இந்நேரம் காணாமல் போயிருக்கும்.நம் கிராமங்களில்,நகர்ப் புறங்களிலும் கூட இன்னும் தமிழ் உள்ளது.ஆனால் அவர்களில் பலர் தமிழ் வெறியர்களாகி ஆங்கிலத்தை ஒரு வெறுப்புடன் நோக்குகிறார்கள்.Scientific principles ,mathematics ,engineering எல்லாவற்றையும் விளக்க ஆங்கிலத்தை அடித்துக் கொள்ள வேறு மொழி உண்டா என்ன?தாய் மொழி,ஆங்கிலம் இரண்டுமே முக்கியமென்ற புரிதல் இல்லை என்பதுதான் பிரச்சினை..என்னைக் கேட்டால் அரசுப் பள்ளிகள் எல்லாவற்றையும் கூட ஆங்கில மீடியமாய் ஆக்கி விட்டு,தமிழைக் கட்டாயப் பாடமாக வைக்கலாம்.தமிழ் மூலம் (origin ) உடைய பெற்றோர்கள்அடுத்த தலைமுறைக்குகட்டாயம் தமிழ் சொல்லித்தரவேண்டும்.இரண்டு மொழிகளும் ஒன்றை ஒன்று compliment பண்ணிக் கொள்ள வேண்டும்.ஏனெனில் ஒரு மொழி அழிந்தால் culture ம் சேர்ந்து அழிகிறது.
வரும் தலைமுறை பற்றித்தான் பேச்சே.
ஒரு மொழி அதன் சுத்தத்துடன் அடுத்த தலைமுறையை அடைய வேண்டும்.இப்போதுள்ள குழந்தைகள் திரைப்படங்களிதான் தமிழ் கேட்கிறார்கள்.திரைப்பட வசனங்கள் தமிழை வளர்க்கிறதாகத் தோன்றவில்லை.ஒரு நகைச்சுவை நடிகரின் வசனங்களில் கூட சென்சார் போர்ட் வெட்டிய வசனங்கள் இடம் பெறுவதை பார்க்கிறோம்.தமிழ்ப் பாடல்களிலும் சகஜமாய் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு.வைரமுத்து போன்ற நல்ல கவிஞர்கள் பாட்டுக் கேட்கும் போது கூடபாட்டின் இனிமை,பாடியவர் யார் இசை அமைத்தவர் யார் என்பதெற்கெல்லாம் பிறகே யார் எழுத்து என்று கேட்கிறோம்.அதிக சத்தத்துடன் போடப்படும் மெட்டுக்கள் வார்த்தைகளை கேட்க இயலாது செய்து விடுகின்றன. Then how can Tamil sustain through a medium like cinema ?
அதனால் ஓரளவு தமிழ் படித்த நாமெல்லாம் ஏதாவது செய்ய வேண்டும்.இல்லை என்றால் வள்ளுவரும் பாரதியாரும் தமிழ் வளர்த்த எல்லோரும் இரண்டாம் முறையாய் இறந்து போவார்கள் .இன்னொரு பாரதி பிறக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டாமா? இணையதளத்தில் தமிழ்ப் பதிவுகள் இல்லை,ஆங்கிலம் அளவிற்கு.அதை அதிகமாக்க நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிக்கலாம்.ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துவதெல்லாம் சரிதான்.இந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் தெளிவாக உரையாடுவது முக்கியத் தேவையே.ஆனால் தமிழனாகப் பிறந்திருந்தால்,தமிழ்நாட்டில் வசிக்க வேண்டுமானால் தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்.பெற்றோர்" தமிழ் தெரியாது என்குழந்தைக்கு என்று கூறுவது பெருமையான விஷயம் என்ற நினைப்பைக் களைந்தெறிய வேண்டும்.அது " என் அம்மா யார் எனவே எனக்குத் தெரியாது " எனச் சொல்வது போல வருந்த வேண்டிய ஒன்று.என்ன செய்யலாம்?
முக்கியமான பின்குறிப்பு : இந்தக் கருத்துக்கள் என் மகன் கார்த்திக் இன்று காலை உணவு வேளையின் போது என்னிடம் பகிந்து கொண்டவை. நாங்கள் இன்னும் ஆழமாய்த் தமிழ் கற்க அவனைத் தூண்டவில்லை என்பதும் அவனது குற்றச் சாட்டு. இந்த விஷயம் அவனது ஆங்கில blog ல் பகிரப் படுவதை விட ,தமிழில் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்ற அவன் எண்ணத்தின் வடிவமே இந்தப் பகிர்வு.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக