திருமணத்தால் இணையும் இரண்டு பேரில் யாராவது ஒருவர் சற்றே more powerful ஆக இருக்கிறார்கள். என் எண்ணங்களின் வேகம் கைக்கு இல்லை.டைப் அடிப்பதும் slow ஆக உள்ளதால் மனதில் தோன்றும் பல எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கிடைப்பதில்லை.மனித மனங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தேவையோ இல்லையோ அவற்றை சுலபமாக நிறுத்த முடிவதில்லை. Emotional issues பற்றி எழுதுவது சிலர் ஆர்வம்.current affairs ,general things பற்றியும் எழுதலாமே என ஒரு கருத்து வந்ததால் யாமறிந்த மொழிகளிலே எழுதி கடும் விமரிசனத்திற்கு உள்ளானேன்.அதில் எது controversial என இன்னும் புரியவில்லை.current affairs சொல்லத்தான் பல ஊடகங்கள் உள்ளதே? Moreover I am not qualified enough to write such stuff .
Comfort-zone என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.நாம் சில இடங்களில்,சிலர் presence ல்தான் நாமாக இருப்போம்.எல்லார் கூடவும் எல்லா சூழ்நிலைகளிலும் இயல்பாய் இருப்பது வெகு சிலருக்கே சாத்தியம்.அப்படி ஒருவரை இது வரை சந்தித்ததாய் ஞாபகம் இல்லை.யாருடைய அருகாமை நம்மை இயல்பிலிருந்து மாற வைப்பதில்லையோ அப்படி ஒரு துணை கிடைப்பது வரம்.Spouse க்கு முன்னால் நடிக்க வேண்டியிராமல் தானாகவே இருக்கும் தைரியத்தைஒரு துணை தர முடிந்தால் உத்தமம்.கணவன் தன் கண்பார்வையில் இருந்து நகரவே கூடாது என்று முந்தானையில் முடிந்து வைத்துள்ள ,அவனைத் தன் குடும்பத்தில் இருந்தே அந்நியமாக்கி விடுகின்ற ஒரு பெண்ணைக் கதைநாயகியாய்க் கொண்ட ஒரு படம்தான் இதை எழுதத் தூண்டியது.அதில் என்ன சுகம் இருக்கும்? Supportive ஆன ஆண்கள் இல்லையென்றாலும் குடும்பம் நடந்து விடும்.ஆனால் பெண்கள் சண்டைக் குணத்துடன் இருப்பின் ஆண்கள் எதுவும் செய்ய இயல்வதில்லை.கல்யாணமான சில வருடங்களில் மனைவி தாய் ஸ்தானம் கொண்டு விடுகிறாள்.அவள் இன்றி அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.சர்வம் சக்தியே.சக்தியற்ற சிவத்திற்கு ஒன்றும் பவர் இல்லை. யாருடன் அதிகத் தொடர்பில் உள்ளோமோ அவர்களைச் சார்ந்தே மனித வாழ்க்கை சுழல்கிறது.தன்னுடன் வாழ்க்கை முழுதும் வரப் போகிறவன் அவனைச் சேர்ந்தவர்களுக்காக கொஞ்சம் நகர்ந்தால் என்ன? மனைவியின் சொந்தங்களை தன் சொந்தங்களாய் நினைப்பது அற்புதமான குணம்தான்.ஆனால் எந்த extent ற்கு ?அவளைத் திருப்தி செய்ய தன் பெற்றோரை உற்றோரை ரெண்டாம் பட்சமாக நினைக்கும் அளவிற்கா?
மனைவி முன்னால் சகோதரியிடம் பேசக் கூட பயந்த கணவர்கள் பாவம் இல்லையா? அப்படி என்ன possessiveness வேண்டிக்கிடக்கிறது?..கல்யாணத்திற்கு முன்னால் பெற்றோரை பாடாய்ப் படுத்தும் பெண்களுக்கு கல்யாணம் பண்ணிப் புக்ககம் போய் விட்டால் பெற்றோர் பாசம் பொங்கி வழிய ஆரம்பிக்கிறது.Blood is thicker than water என்பது பெண்களுக்கு மட்டும் சொல்லப் பட்டதா,அவனுக்கும் நாம் வரும் முன்னேயே ஒரு குடும்பம் இருந்திருக்கிறது. ஏற்கனவே, கல்யாணம் பல ஆண்களின் நிலைமையை தர்மசங்கடமாக்குகிறது.மத்தளம் மாதிரி ரெண்டு பக்கம் அடி வாங்கும் அப்பாவிகள்தான் ஜாஸ்தி.When you love something ,set it free If it comes back to you it is yours . (எங்கோ படித்ததுதான்.)இல்லையென்றால் it was never yours .Children grow or decay in spite of parents என என் மாமா ஒரு மெயில் போட்டிருந்தார்,ஆனால் நல்ல விதைகள் நல்ல பலனே தரும்.மறுபடி என் அப்பாவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை(.பெண்ணுக்கு மட்டும் அப்பாதான் ஹீரோ,எப்போதும்.அம்மாக்கொண்டு பையன்கள் கூட திருமணமானது முதல் முக்கால்வாசிப்பேர் மனைவி பக்கம்தான் .ஆனால் பெண்கள் தங்கள் பெற்றோரை விட்டுத் தருவதே இல்லை. son is a son till he gets a wife . Daughter is a daughter all her life ).
நான் படித்தது பெண்கள் பள்ளி. கல்லூரிப் படிப்பும் பெண்கள் கல்லூரியில் நான் படிக்க வேண்டும் என்ற என் அப்பாவின் நினைப்பு நடக்காமல் coeducation institution ல்தான் கல்லூரிப் படிப்பு அமைந்தது.My dad is very straight forward and he expected his daughters to be like that and he had great belief in us ஒரு விடுமுறையின் போது என் classmate ஒரு பையன் கோயம்புத்தூரில் இருந்து தன் ஊர் போக எங்கள் ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும்.அவனுக்கு எங்கள் ஊரில் இறங்கி என்னை,என் பெற்றோரை,பார்த்துப் போக ஆசை.பஸ் ஸ்டாண்டில் இறங்கி விட்டான்.முகவரி எல்லாம் எதுவும் அவனுக்குத் தெரியாது.ஊரில் வேறு யாரையும் தெரியாது.எப்போதோ என் அப்பா பணிபுரியும் பள்ளியின் பெயர் மட்டும் கூறியிருந்தேன் போலிருக்கிறது.நேராக அந்தப் பள்ளிக்குப் போய் விசாரித்திருக்கிறான்.சின்ன ஊர்தானே,யாரோ ஆசிரியர் என் அப்பாவை அடையாளம் காட்டி விட்டார்,அன்று என் அப்பா பள்ளியில் இருந்து மதியம் சாப்பிட வந்த போது அவனைத் தன் சைக்கிளின் பின்னால் உட்காரவைத்துக் கூட்டி வந்து உன் friend வந்திருக்கான்ம்மா என்று casual ஆக எங்களுடன் பேச உட்கார்ந்தது என் அப்பாவின் personality யை காட்டிய ஒரு நிகழ்ச்சி.
இப்போது உள்ள இளைஞர்கள் இதைப் படித்தால் கேலி பேசுவார்கள்.தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கட்டிப் பிடித்துதான் வெற்றியைக் கொண்டாட வேண்டுமா என தோன்றும். அந்த அளவு, எதுவும் தவறில்லை என்ற இன்றைய காலகட்டத்தில் நான் சொன்னது ஒருசாதாரண நிகழ்வே.ஆனால் 1979ல் பெண்கள் ஆண் நண்பர்களுடன் பேசுவதும் பழகுவதும் viceversa ம் taboo .எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் நாம் அன்பு செலுத்தும் ஒருவரின் பின்னாலேயே செல்ல வேண்டிய தேவை இல்லை.என் பெண்ணை எனக்குத் தெரியும் என்று என் அப்பா நினைத்தாற் போல் தன் கணவன் பற்றிப் பெண்கள் அறிய வேண்டும்.chess board ல் ஒவ்வொன்றிற்கும் ஓரிடம் உள்ளது அல்லவா?ஒன்றின் இடத்தில் இன்னொன்று இருக்க முடியாது.அது மாதிரிதான் வாழ்க்கை.மனைவி என்ற இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தாயிற்றே?பின் Why should the wife try to tie her man to the apron ?
இரட்டை மாட்டு வண்டி போல வாழ்வை இருவரும் சேர்ந்து இழுத்தால் சரியாக ஓடும்.அவரவர்க்கு அவர்கள் வளர்ந்த விதம் நெருக்கமானது.மனத்தைக் காயப் படுத்துவதற்காகக் குடும்பத்தைத் தாக்குவது, தன் கணவன் எடுப்பார் கைப்பிள்ளை என்று கண்டு கொண்டு தலையணை மந்திரம் ஓதுவது எல்லாம் refined people செய்யும் செயலல்ல.அதற்கெல்லாம் அசையாத supermen இருக்கிறார்கள்.மற்றவர்கள் பாவம்தான்.இதெல்லாம் சொல்வது சுலபம்.எல்லாம் சரியாக அமைந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று தோன்றுகிறதா?அப்படி bed of roses ஆக யார் வாழ்வும் இருக்காது.சந்திக்கும் சவால்கள் நம் பிராரப்த கர்மத்திற்கேற்ப மாறுபடும்.அவ்வளவே.கலீல் கிப்ரான் சொன்னது போல்,Let us be together like the pillars of the temple .Live and let live .மற்றவர் சுதந்திரங்களில் குறுக்கிடுவதை முழுமையாகத் தவிர்ப்பது போன்ற சுதந்திரம் நம் ஆன்மாவுக்கு எதுவுமில்லை.மற்றவர் என்ற சொல்லில் கணவன் மனைவி இன்னும் நெருங்கிய நெருங்காத அனைவரும் அடக்கம்.
ரஞ்ஜனி த்யாகு

Mother Protects
நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குThank you very much
பதிலளிநீக்குThank you very much
பதிலளிநீக்கு