செவ்வாய், 29 டிசம்பர், 2015

மழை நாள்கள் - சில நினைவுகள்-

இந்த வருடத்தின் கடைசி போஸ்ட் .எப்போதும் கடந்து விட்ட காலங்கள் இனிமையானவை என்கிறோம்.மெட்ராஸ் மழைக்குப் பின் எத்தனை சென்னைவாசிகளுக்கு இந்தசொற்றொடர் உண்மை எனத் தெரியாது.மேல்தட்டு கீழ்த்தட்டு மனிதர்கள் என்ற பாகுபாடுகள் எனக்கு இல்லை.எல்லாரும் மனிதர்கள்.ஆனால் சமூகத்தின் பார்வையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை மட்டும் பாதித்த இத்தனை வருட மழை போல் அன்றி மேல் தட்டு என்று சொல்லிக் கொள்பவர்களையும் திண்டாட  வைத்து உண்மையிலேயே தெருவில் நிறுத்தியது இந்த வருட மழை.ஆனால் மனிதர்களையும் மனிதத்தையும் அடையாளம் காட்டியது.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஓடி வந்து உயிர்களைக் காப்பாற்றியவர்கள் எத்தனை பேர் .உதவியவர்கள் எத்தனை பேர் .பாதிக்கப் பட்ட குடியிருப்புகளில் ஒன்றின் வாசி என்ற முறையில் என் அனுபவங்கள்.
தொடங்கினேனே தவிர முடிக்க கை வரவில்லை.வேலைகள்.பெண்களுக்கு சில சுதந்திரங்கள் உள்ளதா அல்லது அவற்றை எடுத்துக் கொள்ளவே அவர்கள் விரும்புவதில்லையா தெரியவில்லை.கட்டுப்பாடுகளுடன் வாழவே விரும்புகிற மனநிலையைக் கடவுள் பெண்ணுக்குள் வைத்தான்.ஆதாம் ஏவாள் காலம் தொட்டே.எந்த விஷயமும் கட்டுப் படுத்தாது என்று சொல்லிக் கொள்ளும் பெண்கள் கூட மனமூலையில் ஒரு குற்ற உணர்வாவது கொண்டே வாழ்ந்து முடிக்கிறார்கள்.எழுதுவது மிட்டாய் உண்பது போல் இனிமையானது.ஆனால் அந்த நேரத்தில் துணி மடிப்பேன் வீடு பெருக்குவேன் டாய்லெட் கழுவுவேன் மழை பண்ணின அட்டகாசங்களால் புரண்டு கிடக்கும் வீட்டை சரி செய்வேன் ஆனால் பத்து நிமிஷம் எழுதினால் மஹாபாவம் என்று யாரும் எனக்கு சொன்னார்களா என்ன!

சரி சுயபுராணம் கிடக்கட்டும்.இரண்டு செட் துணியுடன் படகில் ஏறிய போது இன்னும் 25 நாள் பொறுத்தே இந்த வீட்டிற்குள் வருவோம் என்ற எண்ணம் துளியும் இல்லை.அகதிகளைப் பற்றி எல்லாம் செய்தித் தாளில் படித்து விட்டு ஒரு உச் கொட்டி விட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்  விடுகிறோம்.பக்கத்து அபார்ட்மெண்ட் அகதி முகாம் போல் ஆனது.உணவு வழங்கப் பட்டது.தோசை இன்னும் முறுகலாக இல்லை என்று முணுமுணுப்பவர்கள் எல்லாம் அமைதியாக உப்புமாவும் ஊறுகாயும் சாப்பிட்டது அந்த கஷ்ட வேளையிலும் ரசிப்பிற்குரியதாய் இருந்தது.என்ன அடுத்த முறை மனைவி அம்மா ஆகியோரிடம் அனுசரணையாய்ப் பேச உப்புமா உதவி இருந்தால் சரி.உதவிகள் குவிந்தன.எந்த எதிர்பார்ப்பும் அற்று உதவியவர்கள் எத்தனை பேர்!தன் ப்ரச்சினை போல் நினைத்து கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது கருமமே கண்ணாயினார் என்பது போல் வேலை செய்தனர்.அந்த நன்றியை அதே ரீதியில் சொல்ல வாய்ப்புத் தருமாறு அவர்களுக்கு எந்த கஷ்டமும் வர வேண்டாம் என்று பிரார்த்திப்பது மூலம் மட்டுமே நன்றி சொல்ல இயலும்.மழை சொன்ன பாடங்கள் பற்றிய பகிர்வுகள் சிலவற்றுடன் இந்த போஸ்ட்டை முடித்தால்தான் அடுத்த கட்டம் போகலாம்.இதோ பாடங்கள்.

1 .நம்மால் மிகவும் குறைந்த பொருள்களுடன் வாழ முடியும்.

2 .எந்த சூழலிலும் வாழ்வு நடக்கும்.

3 .எந்த உணவையும் உண்ண இயலும்.

4 .டி வி ,தொலைபேசி இப்போது அத்தியாவசிய தேவை போல் ஆகி விட்டாலும் ,மொபைல் போன் உறவினர் நண்பர்களுடன் நம்மைப் பிணைத்து பேருதவி செய்கிறது என்பது உண்மையாயினும் ஓரிரு நாள்கள் அந்த சேவைகள் இல்லை எனில் எதுவும் நமக்கு ஆகிவிடாது.

5 .நம்மிடம் உள்ள உடைகளும் ஆடம்பர பொருள்களும் தேவைக்கு அதிகமாக நாம் வைத்துள்ள சொத்துக்களே.

6 .பணம் உள்ளது.ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பது இயல்பே.வைத்துக் கொள்வோம்.இன்னும் இல்லையே மற்றவர் அளவு இல்லையே என்ற ஏக்கங்களாவது தவிர்க்கப் பட வேண்டியவையே.

7 .மற்றவர் காட்டும் நல்ல தன்மையை ஆத்மார்த்தமாய் உணர வேண்டும்.சாமார்த்தியமாக சுயநலத்துடன் இன்னும் இன்னும் எதிர்பார்த்து அவர்களை சங்கடப் படுத்தி விடக் கூடாது.

8 .யாரிடம் உதவி பெறலாம் என்பதைக் கண்டிப்பாக பகுத்துணர வேண்டும்.

இன்னும் எவ்வளவோ.மறுபடி வந்து கூட்டிற்குள் அடைந்தாயிற்று.பென்சில் பதிவுகளாய் அழிந்து போகாமல் பேனா பதிவுகளாய் அனுபவங்கள் இருந்தால் நன்று.இந்த மழைக்குப் பின் என்னிடம் பேசிய தோழர்கள் சிலர் தாங்கள் குறிப்பிடத் தக்க மாதிரி எதுவும் பண்ணவில்லையே பலர் ஓடி ஓடி செய்ததைப் பார்த்த போது சற்று கூச்சமாய் இருந்தது என்றார்கள்.அந்த எண்ணம் தேவை அற்றது.நம் இயல்பு வேறுபட்டதாக இருக்கலாம்.வெளிப் பார்வைக்கு ஓடிக் கொண்டு உள்ளே நான் செய்கிறேன் என்ற ஈகோ தலைதூக்கினால் பலன் இல்லை.மனமும் செயலும் ஒன்றுபட்டு செய்யக் கூடியவற்றை செய்து கர்மம் புரிதலே இனிது.நன்று.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பார்வைகள் --பல கோணங்கள்

நாம் உலகத்தைக் கூர்ந்து பார்க்கிறோம்.சிலர் நம்மையே பார்த்துக் கொள்வதையும் செய்கிறோம்.ஒருவரின் பார்வை மற்றவரது போல் இருப்பதில்லை,அவர்கள் ஈருடல் ஓருயிர் போல நெருக்கமானவர்களாய் இருப்பினும்.யாரும் மற்றவருக்காக கருத்துக்களை மாற்றிக் கொள்வதும் இல்லை.In English we say putting yourself in others shoes.மற்றவர் கோணத்தில் இருந்தும் பிரச்சினைகளை அணுகுவது.அது சாமானியமான காரியம் இல்லை.பொறுமை முயற்சி எல்லாமும் தேவை.Sometimes we will compromise saying it is better to endure than trying to cure.இதற்கு எல்லாவற்றையும் அதிக முக்கியத்துவம் கொடுத்து குழப்பிக் கொள்ளாமல் அதனதன் போக்கில் எடுத்துக் கொள்வது ஒன்றே வழி.சின்னதாக ஒரு வேண்டாத எண்ணம் மனதில் புக முயற்சிப்பது தெரிந்தாலே உடனடி 144 போட வேண்டியது அவசியம்.

உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் அதிசயம்தான்.நாம் சினிமா பாடல் வரிகளை சில நேரம் ரொம்ப சாதாரணமாய் எடுத்துக் கொள்கிறோம்.இப்போதும் மிக அழகிய பாடல்கள் உண்டு.நேற்று பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம் பாட்டுக் கேட்டேன்.கவிஞர் வைர முத்துவின் பேனாவைக் கடன் வாங்கி வந்தால் நமக்கும் அப்படி எழுத வருமா என அதிசயமாக இருந்தது.எல்லாம் அதிசயம்தான்.தாஜ்மஹால் மட்டும் அல்ல.Thoughts பற்றி அரவிந்த அன்னை எழுதிய இரண்டு பகுதிகள் இன்று படித்தேன்.மனதின் ஆழங்களில் உள்ளதை எல்லாம் என் முன்னால் யாரோ தோண்டி எடுத்து வைத்து விட்டது போல அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.இன்று நவம்பர் 17 ம் தேதி அன்னையின் மஹா சமாதி தினம்.மனம் தனியே பிரிந்து அரவிந்தாஸ்ரமத்தின் உள்ளே சென்று மலர்க் குவியலால் மூடப் பட்ட ஸ்வாமி அரவிந்தர் அன்னை சமாதியில் தஞ்சம்.அதிசயங்களுக்கும் ஆஸ்ரமத்திற்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதா?சரிதான்.தொடர்பு உள்ளது.சொல்ல முயல்கிறேன்.அதி வேகமான எண்ணங்கள் நினைவுகள்,அவற்றை உள்ளடக்கிய சற்று நிதானப் பட்டு விட்ட உடல்,வயது,டைப் செய்வதில் குறைந்த திறமை இவற்றை வைத்துக் கொண்டு இவ்வளவுதான் பேச முடிகிறது.

நினைவுகள் என்னைப் பொறுத்த மட்டில் actions ஐ விடவும் சக்தி வாய்ந்தவை.நல்ல,தீய நினைவுகள் இரண்டுமேதான்.நல்ல நினைவுகள் நடக்க இயலாது என்பவற்றைக் கூட நடத்தி விடும் சக்தி வாய்ந்தவை.அதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள்?நினைவு என்றால் தீவிரமான நினைவு.மனதில் அப்பப்போ கடந்து செல்லும் சாதாரண மேலோட்டமான நினைவு அலைகள் அல்ல.நம் நினைவுகளை கவனிக்க வேண்டியது மிக அவசியம்.எண்ணங்களின் முக்கியத்துவம் பற்றி தம்மபதம் கூறுகிறது,ஒரு விரோதி நமக்கு செய்வதை விட நம்மை சுத்தமாக வெறுக்கும் ஒருவர் நமக்கு செய்வதை விட அதிகமான தீமை ஒரு misdirected thought ஆல் நமக்கு விளைகிறது.அதே போல ஒரு well directed thought செய்யும் நன்மையை வேறு யாரும் நமக்கு செய்யவும் முடியாது.

We are contaminated each day each minute.எல்லா நினைவுகளும் மனதின் ஒரு craving ஐயே -(சரியான தமிழ்ப் பதம் கிடைக்கவில்லை) வெளிப் படுத்துகிறது.தேடல் என வேண்டுமானால் கூறலாம்.இதில் இருந்து வெளி வரவே வேண்டும்.ஒரு நாளில் நடப்பதல்ல இது.To fight against thoughts,it is necessary to receive them first,to admit them,deliberately allow oneself to be contaminated, absorb the sickness and try to destroy the deadly germ by healing oneself.மனதில் நடக்கும் ஒரு போர் இது.தீவிரமான போர் புரிதலே வெற்றி தரும்.ஒவ்வொரு முறை யாரையாவது எதையாவது தவறாக எண்ணும் temptation வரும் போதெல்லாம் அல்லது தேவை அற்றதோ என்ற tag தாங்கி வரும் எண்ணங்கள் வரும் போதெல்லாம்  நம் மனதில் சிறுக சிறுக சேர்த்து வைத்த pure disinterested thoughts கொண்டு அதை தூக்கிப் போட முயல வேண்டும்.நம் மனதின் பரபரப்பையும் கவலைகளையும் பயங்களையும் இந்த முயற்சி எந்த அளவு அமைதி கொண்டு replace செய்து விடுகிறது என்று ஒரு முறை உணர்ந்தால் தயங்காமல் வேலையை ஆரம்பித்து விடுவோம்.

ஒவ்வொரு மனமும் அதன் எண்ணங்களும் அதிசயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நம் கணிப்புகள் எவ்வளவு கனிவற்றவை என்பது நமக்கே தெரியும்.அது அறியாமைதான்.ரொம்ப வருந்த வேண்டாம்.திருத்திக் கொள்ள முயன்றால் போதும்.மற்றவர் பற்றி அறியும் திறன் நமக்கு இல்லை என்பதை மறுபடி மறுபடி நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.மற்றவரிடம் நாம் காணும் குறைகளை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் எது நம்மை கோபப் படுத்துகிறதோ அது உள்ளுக்குள் கண்டிப்பாக நம்மிடமும் இருக்கும்.நம் மன அழுக்குகளையே பெரும்பாலும் நாம் வெளியே பார்க்கிறோம்.சலவை செய்த வெள்ளைத் துணி போல அப்பழுக்கற்று மனம் இருந்தால் யாருடைய குறைகளும் தெரியாது.யாரையும் குறை சொல்லத் தோன்றாது.ஒன்று நல்லது அல்லது கெட்டது எனத் தீர்மானிக்கும் அறிவு பெற்றுள்ளோமா?வாய்ப்பே இல்லை.மனிதனுக்கு அதைத் தீர்மானிக்கும் அறிவு இல்லை.எல்லாம் relative .எனக்கு ஒன்று சரி.அது உங்கள் பார்வையில் தப்பாக இருக்கலாம்.

போஸ்ட் நீள்கிறது.இப்போதைக்கு அவரவர் வேலையை எண்ணங்களைப் பார்ப்போம்.நன்றாக வாழ வேண்டும் என்றால் சரியாக எண்ண வேண்டும்.ஒரே வழியில் சென்றடையும் ஊர் போல உண்மைக்கு ஒரு வழிதான்.வாய் மொழியாகவும் உடல் மொழியாகவும் வெளிப் படும் முன்னே பிறந்து விடுவதால் நினைவே பெரிது.மழை வெள்ளத்தில் சென்னை மிதந்து கொண்டுள்ளது.வெளியே வந்து எட்டிப் பார்க்கிறோம்.நம் திட்டங்களைப் பாழாக்கி விட்டது,துணி காயாது,அலுவலகம் போகும் முன் நனைந்து விடுவோம் என்பது போன்ற எண்ணங்கள்தான் முதலில் நம்மை ஆக்கிரமிக்கின்றன.மழை ஒரு இயற்கை நிகழ்வு.ஆனால் நம் மனம் வேறு மிக முக்கியமான எதுவும் நம்மை ஆக்ரமிக்காத வரை இந்த சிறிய நிகழ்வு அதன் சாதக பாதகங்களைப் பற்றியே வட்டமிடுகிறது.இப்படித்தான் மனித வாழ்நாட்கள் கடந்து போகின்றன.இவற்றைஎல்லாம்தான் thoughts என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இவை எல்லாம் தெளிவற்ற தேவையற்ற mental agitations என்ற category ல்தான் அடங்கும்.கஷ்டமாக இருப்பினும் மிக சாதாரணமான இந்த நினைவுகள் இல்லாமல் மூளையைக் காலியாக வைத்துக் கொண்டால்தான்,உண்மையான thought process ஏற்படும்.நம்முடைய weaknesses ஐ சரி என்று justify பண்ணிக் கொள்வதை நிறுத்த வேண்டும்.  We shall have a second part.I have ended abruptly.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 7 நவம்பர், 2015

இந்த வருஷம் தீபாவளி

வருஷம் பூர ஒவ்வொரு நாளுக்கும் ஏதேதோ பெயர் கொடுத்து கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.வாழ்க்கையே celebration தான் என்பது போல.அது உண்மையும் கூட.அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதிலும் கூன் குருடு செவிடு நீங்கி ஒரு பிறவி அடைதல் அதனினும் அரிது எனும் போது எல்லா நாள்களுமே கொண்டாட வேண்டியவைதான்.இந்த வருஷம் தீபாவளி அன்று உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள எண்ணினேன்.முடியவில்லை.நான் எழுதினாலும் அன்று நீங்கள் படிக்க முடிய வேண்டும் அல்லவா?சரி உணர்வுகளின்வேகம் குறையும் முன் எழுதலாமே என்பதால் மதிய குட்டித் தூக்கத்திற்கு " டா டா "காட்டி ஆயிற்று.

நம் இளைய வயது தீபாவளியின் நினைவுகள் மனதை வருடிப் போவதை மறுக்க மாட்டேன்.ஆனால் இறந்த காலத்தில் மனதை அடிக்கடி கொண்டு நிறுத்துவது தேங்கிய நீர் போல காலம் செல்ல செல்ல மணம் மாறும்.எதற்கு?நல்ல நினைவுகளே ஆனாலும் இறந்த காலம் பற்றி யோசிக்க சில நிமிடங்களுக்கு மேல் செலவழிப்பது சந்தோஷம்  சங்கடம் எது தரினும் விரயமான நேரத்தைத் திருப்பித் தராது.நம் அனுபவங்களே எழுத்து.என் இவ்வருட தீபாவளி  அனுபவம் இது.If you are able to identify yourself with me I am happy.If not just read in a very casual manner as you will see an episode of a television mega serial.

வழக்கம் போல் கங்கா ஸ்நானம் முடித்து நமஸ்காரம் பண்ணி ஆசி வாங்கிவர என் அம்மா வீட்டிற்கு சென்றோம்.அந்த நாள்களில் என்னை என் தம்பி தங்கையைக் கூட்டிக் கொண்டு கடை வீதி உலா சென்று எங்கள் கை போன திசையில் சென்று  நாங்கள் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்த அப்பா கட்டிலில் ஓரமாய் பூனைக் குட்டி போலப் படுத்திருந்ததைப் பார்த்த போது கண்ணில் புறப்பட யத்தனித்த கங்கையை ,"தீபாவளிதான் ஆனாலும் குளிக்கும் போதுதான் வந்து விட்டாயே இப்போ எதற்குக் கண் வழி வர யத்தனிக்கிறாய் உள்ளே போ"  என்று கூறி விட்டேன்.கங்கை கண் வழி வெளிப்பட்டால் அந்த அறையிலேயே மௌனத் தவம் புரியும் என் அம்மாவையும் அல்லவோ அது பாதிக்கும்?அம்மா இரும்பு மனுஷிதான்.ஆனால் சூரியகாந்தி பூ போல துணையை சார்ந்து தன் தேவைகளை நிர்ணயம் செய்து கொண்ட இந்தியப் பெண்தான்.

ட்யூஷன் பெண்களைப் பார்க்க தலையை brush and iodex கண் மை கொண்டு டை பண்ணி மடிப்பு கலையாத வெள்ளை வேஷ்டி சட்டையுடன் எப்போவும் ட்ரிம் ஆகவே நாங்கள் பார்த்த அப்பாவா  இது? பாட்டி அத்தையுடன் சேர்ந்து முகத்தில் சோர்வே தெரியாமல் அல்லது இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வண்டியை இழுத்த அம்மாவா இது ?  தினமும் மனதில் ஒரு பாட்டு காரணம் இன்றி உட்கார்ந்து கொள்ளும்.இன்று என்ன தெரியுமா?"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்" .துடுப்பும் பாரமாகிப் போன ஓடமாக நாமும்தானே மாறுவோம் என்றிருந்தது.

பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம்.என் தோழி ஒரு குறும் செய்தி அனுப்பினாள் .நாம் விரும்பும் மதிக்கும் ஒருவருக்காக நேரம் தருவது ரொம்ப உயர்வாம்.ஏனென்றால் நம்மால் திரும்பிப் பெற இயலாத ஒன்றை அவர்களுக்காக செலவு செய்வதால்.பல நாள்களாக என் அப்பா ஓரிரு வார்த்தை தவிர பேசுவதில்லை.என்னை உறுதியாகத் தோளில் இள வயதில் தூக்கி இப்போ மெலிந்து பஞ்சு போல் உள்ள அப்பாவின் கைகளைப் பிடித்து "இன்னிக்கு தீபாவளி இன்றாவது ஏதான பேசுப்பா" என்ற போது நிமிர்ந்து பார்த்து அப்பா புரிந்த புன்னகையும் அதன் reaction ஆக அம்மா முகத்தில் ஒரு மணித்துளி தோன்றிய மத்தாப்பூ வெளிச்சமும்தான் இந்த தீபாவளி special எனக்கு. இன்னும் சில சிறப்புகளும் உண்டு.மனதில் தித்திக்கும் அவை நேரம் வரும் போது எழுத்திலும் வரும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 4 நவம்பர், 2015

உணர்வுகளில் நிதானம்

ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்.மகிழ்ச்சியாக உள்ளது.எத்தனை மகிழ்ச்சி?அதுதான் இந்த போஸ்ட்டின் அடிநாதம்.மிதமான உணர்வுகளின் தேவை பற்றி இன்று ஏனோ மனம் யோசிக்கிறது.பல உணர்வுக் கலவைகளின் சங்கமமாக உள்ள நாம் தீவிரமான எண்ண ஓட்டங்களால் அலைக்கழிக்கப் பட்டே நாளின் வாழ்வின் பெரும் பகுதியைக் கழிக்கிறோம்.இன்பமோ துன்பமோ நவரசத்தில் வேறெந்த ரசமோ எதுவாயினும் அது கட்டுக்குள் இருக்க எது வழி?அதன் தேவை என்ன?ஒரு இடைச் செருகல்.ஸ்வாமி அரவிந்தரும் அரவிந்த அன்னையும் அருளிய உரைகளில் இருந்து சிலவற்றைத் தமிழ்ப் படுத்தி இனி நான் எழுதப் போகும் எல்லா போஸ்ட்டிலும் ஒரு பகுதி இருக்கும்.Reference எந்தப் புத்தகம் என்று கடைசியில் குறிப்பிட்டு விடுகிறேன்.ஒரு சில நாட்கள் உணர்வுபூர்வமாக ஏதும் பேசுவோமே?

 ஒவ்வொருவருக்கும் ஒரு inner poise இருக்கிறது.அதாவது மனதிற்குள் ஒரு சம நிலை.ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயரும் போது அநேகமாக எப்போதும் சிலபடிகள் கீழே இறங்கி மறுபடி மேலே வருகிறோம்.அது பெரு மாற்றம்.அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.கீழே வரும் வேகத்துடன் மேல் எழுகிறோமா அல்லது பழைய சில நல்ல முன்னேற்றங்களைக் கீழே தள்ளும் அளவு பின்னால் போய் விடுகிறோமா என்பது அமைதியாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.வாழ்க்கையில் ஒன்றின் இடத்தை மற்றொன்று ஆக்கிரமிப்பது நடந்து கொண்டேதான் உள்ளது.ஆனால் விதி விலக்காக இருப்போரும் உண்டு.அவர்கள் எல்லாவற்றையும் மனதில் தனித் தனித் தீவுகளில் வைத்திருப்போர்.மனிதன் கண்டு பிடித்த கணினியே கணக்கற்ற விஷயங்களை மெமரியில் எந்தக் குளறுபடியும் இன்றி வைத்துக் கொள்ளுமானால்,அதைக் கண்டு பிடித்த மனித மனமும் மூளையும் குழம்பலாமோ?வாழ்க்கையைப் படிப்பதாகச் சொல்லிக் கொள்கிறோம்.அதில் எல்லாம் என்ன பலன்?முதலில் படிக்க வேண்டியது நம்மைத்தான்.நம் செயல்பாடுகளின் காரணங்களே நமக்கு மறை பொருளானால் உலகம் பற்றிய ஆராய்ச்சி துல்லியமாக எப்படி இருக்க இயலும்?

எது நம்மை மிகவும் சோர்வடையச் செய்கிறது சொல்லுங்கள்?எதெல்லாம் பயனற்றதோ அதெல்லாம்.மாற்றிச் சொல்ல வேண்டுமானால் நாம் எந்த விஷயங்கள் பற்றி ஆயாசம் அடைகிறோமோ அவை அனைத்தும் யோசனை இன்றி விலக்க வேண்டியவை.அளவுக்கு மிஞ்சும் எல்லாம் நஞ்சுதான்.வருத்தம் சுகம் இன்பம் சோகம் எல்லாவற்றையும் மிதமாக எடுத்துக் கொள்வது மனப் பழக்கமே.முதலில் நாம் அவற்றிற்கு தலைவனாக விளங்குவது.பிறகு அதை வெளிப் படுத்துவது.இதை ஒரு அறிவுரை மாதிரி நான் பேசவில்லை.உங்கள் அனைவருடனும் செய்யும் உரையாடலாக மட்டுமே நினைக்கிறேன்.நம் நினைவுகள் நம்பிக்கைகள் மட்டுமே நமக்கு சொந்தம்.அவை வடிவம் பெறுவதோ பொய்த்துப் போவதோ கடவுள் செயல்.கடவுளின் கருவியாகப் பயன்படப் போகிறவர்கள் பங்கும் அதில் உண்டு.உடல் அணுக்களில் அமைதி சீரான ஸ்வாசம் உயரே மட்டுமே உள்ள எண்ணங்கள் இவை யாவும் சேர்ந்ததே அமைதியான பொழுதுகள்.மனிதனின் அடிப்படைக் குணம் ஆனந்தமே.பாலில் சிறு துளி டிகாக்க்ஷன் சேர்த்து காபி என்று ஒரு குழம்பிய பானம் தயாரிக்கிரோமே அது போல சின்ன வேண்டாத ஒரு எண்ணம் கூட நம்மை சமநிலை இழக்கவே வைக்கும்.சிவசங்கரி அவர்கள் சொன்னது போல் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது?

ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி விடலாம்.ஆனால் புலியிடம் நம் பாச்சா பலிக்காது.ஏன் ?அது கொடிய விலங்கு.அதனிடம் நல்லதை எதிர்பார்த்துப் பலனில்லை.அதனிடம் இருந்து தப்ப அதை அழிக்கவே வேண்டும்.ஆனால் சிறிது பொறுமையும் முயற்சியும் இருப்பின் முரட்டுக் குதிரையும் நம் வசப் படும்.மனிதனுள்ளும் அது போல கட்டுப் படுத்த கஷ்டம் போலத் தோன்றும் எண்ணங்கள் உண்டு.ஆனால் அவை புலி அல்ல.முரட்டுக் குதிரையே.கடிவாளம்தான் தேவை.அதை நாமேதான் போட்டுக்  கொள்ள வேண்டும்.ஆனால் கட்டுப்பாடு பொறுமை என்ற சொற்கள் எல்லாமும்  கூட சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியவை.அதற்கெல்லாமும் அளவு உண்டு!எல்லாமே எப்படியும் இருக்கட்டும் ,நான் அமைதியே காப்பேன் என்பது என் அளவில் weakness தான்.கங்கை வெள்ளம் செம்புக்குள் அடங்காதல்லவோ?காற்றுக்கு ஏது வேலி ?கடலுக்கு ஏது மூடி?நான் சொல்லவில்லை.கண்ணதாசன்தான் சொன்னார்.கட்டுக்குள் அடங்கின காட்டாற்று  வெள்ளமாக இருப்போமே? பேசுவோம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மதுரை அரசாளும் மீனாக்ஷி

நேற்று மதுரை சென்று திரும்பினோம்,ஒரே நாளில்.ரைட் சகோதரர்கள் உபயம்.மனதில் கோடீஸ்வரராகவும் இக வாழ்வில் நான்கு இலக்க பணப் புழக்கத்தை அறியா எளிய மனிதராகவும்  வாழ்ந்து மறைந்த என் உயிர்த் தாத்தா ராமநாத சாஸ்த்திரிகள் வம்சத்தில் வந்த நான் ஒரு நாள் விமானப் பயணம் செய்வோம் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.இந்த போஸ்டின் High Light தாய் மீனாக்ஷி என்பதால் இந்தத் தலைப்பு.ஆனால் இது ஒரு பயண அனுபவமே.Flight ஐ நான் ஒரு airbus என்றுதான் எப்போதும் கூறுவேன்.மற்ற போக்குவரத்து சாதனங்களின் வேகத்தை விட அதிகமாயும் மனதின்எண்ண ஓட்டத்தை விட மெதுவாயும் செல்லும் என்பது தவிர பயணம் பற்றிக் கூற என்னைப் பொறுத்த மட்டில் அதிக விஷயம் இல்லை.ஆனால் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பஞ்சுப் பொதியாய் நுரை நுரையாய் விரவி இருக்கும் மேகக் கூட்டத்தைப் பார்க்கும் போது மனம் சட் என்று உள்ளே போகிறது.பிரபஞ்சத்தின் எத்துணை சிறு துளி நாம்! நாம் உலக வாழ்வில் சந்திக்கும் அனைவரும் தொடர்பில் உள்ள அனைவரும் நம்மை விட்டு மறைந்து போன நம் பாசத்திற்குரிய நம் forefathers ம் நாமும் ஆத்மாவாக அந்த மேகங்கள் நடுவில் இருந்து வந்து மறுபடி அதில்  ஒன்றியவர்கள்தானா? இது போன்ற போக்குவரத்து எத்துணை பிறவிகள் தொடரும்? எப்போது நிரந்தரமாக அங்கேயே தங்கும் வரம் பெறுவோம்?பகவான் க்ருஷ்ணரைத் தவிர யார் பிறப்பின் ரகசியம் அறிவார்? எந்த ஆத்மாவுடன் ஒரு பிறவியில் தொடர்பில் இருக்கப் போகிறோம் என்பதை நம் ஆத்மா தீர்மானிக்கிறதா அல்லது அந்தத் தீர்மானம் ஒரு ஆன்மாவிற்குக் கடவுளால் வழங்கப் பட்டு பூமிக்கு வருகிறோமா? "காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்றல்லவோ பட்டினத்தார் பாடினார்? அப்படி என்றால் உலக வாழ்வை எவ்வாறு நடத்துவது சரி?பயண நேரம் முழுதும் என் முன்னோர்கள் யாரும் எங்குமே போகாது வான வெளியில்,என்ன நமக்கு சற்று மேலே சுற்றிக் கொண்டுள்ளார்கள்,நேரம் வந்தால் மறுபடி ஒரு கர்பவாசம் செய்ய வரத்தானே போகிறார்கள் என்று தோன்றிய வண்ணமே இருந்தது.

இதை என் பக்கத்தில் அமர்ந்திருந்த என் மகனிடம் பகிர்ந்து கொண்டேன்."ரொம்ப feel பண்ணாதேம்மா .உன் தாத்தா இதே flight ல் jeans T shirt சகிதம் நமக்குப் பின்னாலேயே கூட உட்கார்ந்து வராரோ என்னமோ "என்றான்.Flight இறங்கும் போது மனமும் மேகக் கூட்டத்தில் இருந்து விடுபட்டு அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களுக்குத் தாவியது.அதற்கு  நமக்கு அடுத்த தலைமுறை மாதிரி யாரும் உதவ முடியாது.

தூங்கா நகரம்.மக்கள் தொகை ,ஜன நெருக்கடி அதிகம்.எல்லாம் மீனாக்ஷி ஆட்சி.சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து போகும் மக்கள்.மதுரை மல்லி.சில க்ஷேத்ரங்கள் பற்றி கடவுள் அழைப்பு இருந்தாலன்றி அந்த மண்ணை மிதிக்கவும் இயலாது எனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். எந்தப் புனிதத் தலத்திற்குத்தான் அந்த வார்த்தை பொருந்தாது?இதோ தெரு முக்கில் உள்ள வேம்புலித் தாயை அவள் அழைத்தாலன்றி தரிசனம் செய்ய முடியுமா என்ன? நேற்று மீனாக்ஷி கருணை மிகக் கொண்டு அழைத்தாள் .செல்ல முடிந்தது.மக்கள் வெள்ளம்தான் எப்பவும் கோவிலில்.மதியம் குறைந்த நேரம்தான் அம்மனுக்கு rest .நடை 4 மணிக்கே மறுபடி திறக்கப் படுகிறது.சும்மா பள்ளிக் கட்டுரை போல எழுதிக் கொண்டிருப்பதாய் நினைக்கிறீர்களா?அதுதான் இல்லை.இதற்கு மேல் எழுத்தில் வெளிப் படப் போவது மனசு.

தர்ம தரிசனத்திற்காக எளிய மக்கள் சிவனே (மீனாக்ஷியே என்று வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள்) என்று கால் கடுக்க நிற்கிறார்கள்.ஆனால் பணம் படைத்தவர்கள் 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு 90 சதவிகித மக்களை முந்திக் கொண்டு மூலஸ்தானத்திற்கருகில் சென்று விடுகிறார்கள்.அதற்கும் அரை மணியாவது க்யூவில் நின்றே ஆக  வேண்டும் என்பது வேறு கதை.நாங்களும் flight ஐ miss பண்ணி விடுவோம் என்ற போலி சமாதானம் சொல்லிக் கொண்டு அதே தவறைச் செய்தோம்.உண்மையில் தரிசனம் செய்யணும் என்றால் அவசரமாகப் போகக் கூடாது.யார் இந்தக் காசு வாங்கிக் கொண்டு தரிசனம் செய்விக்கும் முறையைத் தோற்றுவித்த மஹானுபாவர் தெரியவில்லை.இதோ அருகில் வந்து விட்டோம்.இரண்டடி உயரத்தில் ரம்யமாக சக்தியின் உருவமாக விளக்கின் ஒளியில் அருளை அள்ளி வழங்கிக் கொண்டு மதுரைக்கு மட்டுமா உலகிற்கே அரசியாய் நின்று கொண்டிருக்கும் மீனாட்சியைத் தரிசித்த கணம் ,இந்தத் தரினத்திற்காக எது செய்தால்தான் என்ன என்றுதான் தோன்றியது.ஆனால் அவள் நம் எல்லோருக்கும் தெய்வம் அல்லவா? ஒரு அரசன் கட்டிய நிஜக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னால் வர முடியாது என்று சிவபெருமான் கூறி அருளின கதை நமக்குத் தெரியாதா?ஏன் அப்படிச் சொன்னார்?பூசல நாயனார் கட்டின மனக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அதே திருநாளில் செல்ல வேண்டும் என்பதற்காக.தந்தைக்கே அந்தப் பரிவு என்றால் மீனாட்சித் தாய்க்கும் அந்தப் பரிவு எளியவர் மேல் இருக்காதா என்று தோன்றியது.ஆனால் பணம்  தன் வேலையைக் காட்டாது எல்லோரும் அவள் கடைக் கண் பார்வை பெற என்ன வழி?

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

புதன், 30 செப்டம்பர், 2015

வாட்சப் கலாட்டா

வாட்சப் கலாட்டா 


நேற்று ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன்.அட உண்மையாவே இத்தனை நாள் என்னிடம் அது கிடையாதுங்க.ஸ்மார்ட்டாக இல்லாதவர்களுக்குதான் போனாவது ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும்  என்று வாதாடி வந்தேன்.கீ பேட் ஆக்டிவ் என்று ஒளிரும்  விரல் நீளம் இருந்த என் பழைய போன் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் பளபள என ப்ரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்த நகரின் ப்ரதான சாலையில் இருந்த ஒரு மொபைல் போன் கடைக்கு அரை மனதாகப் பயணப் பட்டேன் .குடும்ப சகிதமாய்.எனக்குதான் ஸ்மார்ட் போன் சமாச்சாரம் ஒன்றும் தெரியாதே.மேலான ஆலோசனை வழங்க, கார்ட் தேய்க்க, என் கணவர்,மகன் எல்லாம் வந்தால்தானே சரிப் படும்?அது ஒரு மாய உலகம் என அறிந்தும் நாமாவது பொறியில் சிக்குவதாவது என்ற இறுமாப்பில் 4000 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா என்றாலும் போனே வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று வழக்கம் போலப் புலம்பிக் கொண்டே இருந்தேன்.அவர்களும் வழக்கம் போல  நமட்டுச் சிரிப்புடன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாது மோடி கவர்மெண்ட்டின் சாதனைகளையும் செவ்வாய் க்ரஹத்தில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது பற்றியும் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.

கடையில் வாங்க வந்தது ஸ்மார்ட் போன் என்றதுமே உபசரிப்பும் பலமாகியது.வித விதமான மாடல்கள் காட்டப் பட்டன.என் கணவரும் மகனும் கடைக் காரரிடம் எனக்குப் புரியாத, போனுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் சொல்லி ஏதோ கேட்டபடி இருக்க கடைப் பையன் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.கடைசியில் எனக்கு உகந்தது என என்னைக் கேட்காமல் அவர்களே முடிவெடுத்து  தேர்ந்தெடுத்த ஒரு மாடலைக் காட்டி "பில் போடுப்பா"என்றனர்.அப்போதுதான் நான் திடீரென முழித்துக் கொண்டு,"என்னப்பா எத்தனை ஆகிறது?"என்றேன்."ஜஸ்ட் 11000மா எதுவும் சொல்லிடாதே.கொடுக்க வேண்டியது கொடுத்தாதான் க்வாலிட்டி இருக்கும் .உன் நேரமே எவ்வளவு சந்தோஷமாகப் போறது பாரேன் உனக்கு இஷ்டமானவர்களோட எப்பவும் தொடர்பிலேயே இருக்கலாம்."என்று மகன் கூறியதை தலையை ஆட்டி வேகவேகமாக ஆமோதித்தார் என் கணவர்.ஏனென்றால் அவருக்கு இந்த டீல் சீக்கிரம் முடிந்தால்தான் காலாகாலத்தில் தன்  போனை நோண்டப் போக முடியும்.வீட்டில் நம்முடன் எப்போதும் தொடர்பிலேயே உள்ளவர்களை விட போன் தொடர்பு அதிக சந்தோஷம் தரும் என்ற பேருண்மையை ஸ்மார்ட் போனுடன் சேர்த்தே விற்பனை செய்கிறார்கள்  போலத் தோன்றியது.

அடுத்து போனில் உள்ள அப்ளிகேஷன்சைக் கற்பிக்கும் படலம் தொடங்கியது.மிகுந்த ஆர்வமுடன் மாற்றி மாற்றி ஒரு பாடத்திட்டத்தின் ஒரு மாத பாடத்தை ஒரு நாளில் வகுப்பு எடுப்பது போல என் காதில் ஓதினார்கள்.நானும் நன்கு புரிந்த மாதிரி  பூம் பூம் மாடு போலத் தலையை ஆட்டி வைத்தேன்.மறு நாள் அவசரமாய் வேலைகளை முடித்து விட்டு போனுடன் சவுகரியமான இடம் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டு புது விளையாட்டு பொம்மையை ஆராயும் குழந்தையின் ஆர்வத்துடன் ஒரு விரலால் ஸ்வைப் செய்தேன். போன்  கம் மென்றிருந்தது . பல முறை முயன்று விட்டு , கணவருடைய அலுவலகத்திற்குப் பேசிப் பயனில்லை,மீடிங்கில் இருக்கிறேன் என்ற ஒரே பதில்தான் வரும் என்பதால் பக்கத்து வீட்டு சுபாவிடம் முதல் பாடம் கற்றேன்.அவளே பெரிய மனது பண்ணி வாட்சப் பயன்படுத்தவும் சொல்லித் தந்தாள்.லிஸ்டில் தேடி என் நெருங்கின கல்லூரித் தோழியைப் பிடித்து முதல் செய்தி அனுப்பினேன்.எங்களுக்குள் நடந்த செய்திப் பரிமாற்றம் பின்வருமாறு.

நான் :  உமா,எப்படி இருக்கே?நான் வாட்சப்ல இருக்கேன்.இனி அடிக்கடி பேசலாம்.
உமா: ஏன் இன்னும் ஒரு வருஷம் கழித்து போன் வாங்க வேண்டியதுதானே?சரி சரி க்ரூப்ல உன்னை சேத்துடறேன்.நீ எங்க இருக்கே?என்ன பண்றே?
நான்:...................................
உமா:இன்னும் அதே மாதிரி சோம்பேறியாதான் இருக்கியா?ஏதான கேட்டா எட்டு தடவை யோசிச்சுதான் பதில் சொல்லுவியா?
 நான்:ரொம்ப தாங்க்ஸ் உமா .
(கவனிக்க.இந்த தாங்க்ஸ் அவள்   என்னைக் குழுவில் இணைத்ததற்கு.சோம்பேறி என்ற பட்டம் கொடுத்ததற்கல்ல .)
உமா:என் ஹஸ்பெண்ட் டாக்டர்.உன் கணவர் என்ன பண்றார்?
நான்: ...........................................
உமா:எத்தனை பசங்க?என்ன படிக்கிறாங்க?
நான்: அவங்க லாயர்
(தெரிந்திருக்கும்.இது முந்தைய கேள்விக்கு பதில்)
உமா:நீ வேலை பார்க்கறியா?நான் அஞ்சு வருஷத்திற்கப்புறம்  வேலையை விட்டுட்டேன்.
நான்:ஒரே பையன் டென்த் போறான் .

என்னால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை.டைப் செய்வதை நிறுத்தி விட்டு போனில் அழைத்தேன்.வள்ளென்று விழுந்தாள்.தோழிகள் தவிர யார் அந்த உரிமை எடுத்துக் கொள்ள இயலும்?
"டைப் பண்றதை நிறுத்தறச்சே பை சொல்லணும்ங்கற பேசிக் கர்டசி கூடத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்குடி ஸ்மார்ட் போன் ?நீ அப்பப்ப பேசு அதுவே தேவலை வாட்சப் வராதே.தாங்கலை"
அவள் சரியாகத்தான் சொன்னாள் எனத் தோன்றியது.
நீண்ட கடிதங்களிலும்,ஓரளவு இ மெயிலிலும் கூடத் தெரியும் நெருக்கம் இந்தக் குறும் செய்திகளில் இல்லை என்று தோன்றியது.இன்னும் சில நாட்களில் உமாவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து என்னால் இது போன்ற பரிமாற்றங்கள் செய்து கொள்ள முடியலாம்.ஆனால் முதல் வரியில் கேட்ட கேள்விக்கான பதிலை கடைசி வரிக்கு வருவதற்குள் மறந்து மீண்டும் அதையே கேட்கிறார்கள்.அர்த்தமற்ற நேர விரயம் அல்லவா?தொழில் நுட்பத்திற்கு எதிரி போல என்னை சிலர் பார்ப்பதுண்டு.நான் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியே அடைகிறேன்.ஆனால் அது இன்னும் உபயோகமான விஷயங்களுக்கு உதவலாமே தவிர ,"நீ எத்தனை மணிக்கு குளித்தாய்?என்ன கலர் உடை அணிந்திருக்கிறாய்?"என்பது போன்ற அல்ப விஷயம் பேச அல்ல.
மொபைல் போனை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க இயலாது.தூங்கக் கூட முடியாது என்றால் அதற்கு அடிமையானதாகத்தானே அர்த்தம்?சில மணித் துளிகள் அடிமைப் பட்டதே மூச்சுத் திணற வைத்து விட்டது.நாள்பட்ட அடிமைத் தனம் போதைப் பழக்கத்திற்கு ஒப்பானது.வெளியில் வர முயற்சி தேவை.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS

சனி, 26 செப்டம்பர், 2015

எது துறவு?


இன்று , ஒரு விஷயம் படித்தேன். "விரும்புவதை விடுவது மட்டும் துறவறம் அல்ல. விரும்பாததை ஏற்றுக் கொள்வதும் துறவறம்தான்".  எனக்கு, அது ஒரு மிக நல்ல செய்தியாக, அடுத்த கட்டுரையின்  துவக்கமாகப் பட்டது. நாம் அனைவரும் துறவிகள்தானோ என்று தோன்றுகிறது. பிறந்த நாள் முதல், விரும்பாத விஷயங்களை எதிர்கொள்ளத் துவங்கி விடுகிறோம்.  அத்தனை நாள் கருவில், எந்த  வேலையும் செய்யாது, சுகமாக, அம்மா மூலம் உடலையும் உயிரையும் வளர்த்துக் கொண்டிருந்த குழந்தை, பால் குடிக்க தன்  சிறு வாயை   அசைத்து  வேலை செய்யத் தொடங்குகிறது. ரொம்பப் பிடித்து அதைச்  செய்யுமா,  இல்லை ஆயாசமாக இருப்பதால்தான் அழுகிறதா?  குழந்தை வளர வளர, அதன்  பிரச்சினைகளும் வளர்கின்றன. நடக்கத் தொடங்கும் வரை , அது தவழ்கிறதே ,எத்தனை கஷ்டம் தெரியுமா?காலை நாள் பூர உதைத்து,  அது செய்யும் உடல் பயிற்சி நாம் செய்தால் எல்லோரும் 50 kg தாஜ்மகால்தான்.இன்னும் கொஞ்சம் ஆழமான விஷயங்களுக்கு நகர்வோம்.

பள்ளி செல்லத் தொடங்கின உடனேயே,  இருமைகள் நிறைந்த உலகினுள், குழந்தை தூக்கி வீசப் படுகிறது.  நன்மையையும் தீமையும் நிரம்பின உலகு. பள்ளிக் கல்வி பற்றிக் கூற முற்படின்,  அது வேறு விவாதம். மதிப்பெண்களால் மட்டுமே ஒரு குழந்தையை எடைபோடும் தவறை நம் பாடத்திட்டம் செய்வதால்,  சுயத்தைத் தொலைத்து,  கடனே என்று கடமை ஆற்றும் நம் செல்வங்கள்! காலை வேளையில், "பள்ளி வாகனம்"என்று எழுதிக் கொண்டு அளவுக்கதிகமாக  மாணவர்களைச்  சுமந்து செல்லும் ஆட்டோக்களை ஒரு நாள் சாலை ஓரம் நின்று உற்றுப் பார்ப்போம். துறவிகள் முகங்களிலும் காண இயலாத ஏதோ ஒன்றை,  நான் அந்த முகங்களில் பார்க்கிறேன்.

வாழ்க்கை நல்லதும் கெட்டதும் சேர்ந்ததே. இளம் வயதில்,  நமக்கு உள்ள நல்ல குணங்கள்,  வயது ஏற ஏற,  போர்க் குணமாவது ஏன் என யோசிப்பது அவசியம். விரும்பின விஷயங்களைத் துறப்பது பெரிய கஷ்டம் இல்லை. பல காரணங்களால் அவை துறக்கப் படலாம். அவற்றில் முதன்மைக் காரணம் விரும்பினது கிடைக்க வாய்ப்பில்லை என்பது.  பொருள்களுக்கு மட்டும் அல்ல. மனித உறவுகளுக்கும் இதே விதிதான்.  நாம் விரும்பும் விஷயங்கள் காலகட்டத்திற்கேற்ப மாறுபடும். ஒரு புது விருப்பம் பழையதின் இடத்தை ஆக்ரமிக்கும் போது,  பழையது தானாகக் காணாமல் போகிறது. நாம் ஒன்றை அல்லது ஒருவரைத் துறக்கிறோம் என்று சொல்வதை விட துறக்கப் படுகிறோம் என்பதே சரி. முதலில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் பழகிப் போகும்.

ஆனால்,  விரும்பாததை ஏற்றுக் கொள்வது என்று  ஒரு விஷயம் உள்ளது பாருங்கள்,அது வாழ்க்கைப் பாடம்தான். மனதில் துணிவு, நம்பிக்கை,  இறைவனிடம் அல்லது நமக்கு மேற்பட்ட சக்தியிடம் முழுமையான சரணாகதி அடைதல், எல்லா சூழலிலும் ஒளிந்து கொண்டிருக்கும் சிறு நல்லதையாவது தேடிக் காணும் தன்மை, இறைவன் அவரவர் தாங்கும் சக்திக்கு மேற்பட்ட கஷ்டங்களைத் தராத அளவு கருணை கொண்டவன் என்ற உறுதியான எண்ணம், மற்றவர் பார்வையும் நம் பார்வையும் ஒரே போல் இருக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற எதிர்பார்ப்பு அற்று இருத்தல், அடி வாங்கினால் மறு கன்னத்தைக் காட்டாவிட்டாலும் திருப்பி அடிக்க சமயம் எதிர்பார்த்து மற்றவரைக்  காயப் படுத்தாதிருத்தல், நாம் விரும்பாவிடினும்,  அமைதி ஏற்படும் பொருட்டு  ஒன்றைச்  செய்தால்,  அன்று உலகம் சுற்றுவதை நிறுத்தி விடப் போவதில்லை என்ற தெளிவு ---இது போலப்  பலவும் சாத்தியமானால்தான்,  விரும்பாதவற்றை ஏற்க முடியும்.

எதற்கு விரும்பாததை ஏற்கணும் என்ற கேள்வி மனதில் தங்குவது ஞாயமே. எனக்கும் அது உள்ளது. அதற்கு சரியான பதில் என்னால் கூற முடியவில்லை. ஓரளவு ஒத்துக் கொள்கிறார் போலச்  சொல்கிறேன். இப்போது விரும்பாமல் ஏற்றுக் கொள்ளும் ஒன்று,  எதிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கலாம். நம் போன்ற மனிதர்களுக்குத் தொலைநோக்கு கிடையாது.  சிறு வட்டத்திற்குள் இருந்து யோசித்து, நாம் எடுக்கும் முடிவால்,  நீடித்து நன்மை தந்திருக்கக் கூடிய எதையேனும் இழக்க வாய்ப்புண்டு. மேலும்,  குரங்கு போன்ற மனித மனம்,  இன்று விரும்பாததை,  நாளையோ மறுநாளோ விரும்பலாம்.    கேள்விதானே மனசில் நிற்கிறது?  பாரதியார் தன்  வசனகவிதையில், "இவ்வுலகம் இனியது என்று தொடங்கி, சாதல் இனிது" என முடிக்கிறார். நல்லதல்லாத எதையும் அவரால் பார்க்க இயலவில்லை.  ஒரு மராத்தான் ஓடி முடிக்க,  ஒற்றை அடி  முதலில் வைக்கத்தானே வேண்டும்?  எல்லா முயற்சிகளுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டும். துறவு குறித்த ஆரம்ப பாடத்தை யோசிப்போம்.   விரும்புவதை விலக்கும் துறவியாய் இருப்பதை விட, விரும்பாததை சகித்துக் கொள்ளும் துறவியாக இருக்கலாமே?

ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS

வியாழன், 24 செப்டம்பர், 2015

பாரதி என்றொரு மஹா கவி


செப்டெம்பர் மாதம் பாரதியை அந்த மஹா கவியை நினைவு கூராது 25 நாள்களை ஓட்டினால் அது தவறல்லவா?எனவேதான் இந்த அவசர போஸ்ட் .வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது என்று கண்ணதாசன் சொன்னாலும் சிலர் தங்கிவிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் என்னால் தவிர்க்க முடிவதே இல்லை.உங்களுக்கு எப்படி?ஒரிஜினலான எழுத்து என்று ஒன்று உண்டா அல்லது எழுதும் போது மனதில் எட்டிப் பார்க்கும் பாரதியையும் கண்ணதாசனையும் இன்னும் பிற great souls ஐயும் தான் நம்முடைய வறுமை நிரம்பின சொற்களால் மறுபடி வெளிப் படுத்துகிறோமா ?பாரதியின் ஒவ்வொரு கவிதையையும் ஒரு போஸ்ட்டில் நினைவு கூர்ந்து அது பற்றிப் பேசினால்,நமக்கு இன்னும் எத்தனை பிறவி தேவை பேசி முடிக்க?இன்று என்னைத் தொட்ட கவிதைகளில் ஒரு சில மட்டும் நினைவுகளுக்குத் தீனி போட .

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ,நாலு வரியில் தற்போது பலர் செய்து கொண்டிருக்கும் motivational talks எல்லாவற்றிற்கும் முன்னோடியானதொரு கவிதை.முழுக் கவிதையைத் தேடித் படிக்கும் சிரமத்தைத் தமிழ் அறிந்த எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என்பதால் கவிதையை என் போஸ்ட்டில் repeat செய்ய வேண்டாம் என்று எண்ணுகிறேன்.ஒரு அக்னித் துண்டத்தை காட்டின் மூலையில் வைத்தால் காடு முழுதும் வெந்து போகிறது.தழலின் தன்மையில் சிறியது,பெரியது உண்டா என்று கேட்கிறார்.இதைப் பலவாறாகப் பொருள் படுத்தலாம்.மனதின் ஓரம் தோன்றும் aspiration ஐக் குறிப்பதாக நான் எண்ணுகிறேன்.நம் அனைவருள்ளும் progress க்கான பொறி  உள்ளது.அது உண்மையில் அக்னி அளவு தீவிரத்துடன் இருப்பின் நம்மை முழுதும் ஆக்ரமிக்கும். உயர்த்தும். Desire ம் அத்தன்மையதே.எப்படி aspirations நம்மை ஆக்குமோ அப்படி ஆசை என்ற சிறு பொறியும்" நாம்" எனும் அழகிய வனத்தை நொடியில் அழிக்கும்.இதைத்தான் இன்று எல்லாப் பெரியவர்களும் வேறு மொழியில் சொல்கிறார்கள்.

There is a thin line which separates need and desire.We need great sincerity to  know that.உலக வாழ்வை நாம் தொடங்குவதற்குப் பின்புலத்தில் இருப்பதே ஆசைதான்.ஒரு நிகழ்வு தீவிரமான vibration உண்டாக்கினால் அது ஆசையால் விளைவதே.ஒரு நாளில் சித்தார்த்த புத்தர் ஆக  முடியாது.யோகம் செய்பவர்களுக்குத் தேவைகளும் இருப்பதில்லை. நம் போன்றவர்கள் ஆசைகளையாவது நம் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது ஒரு தேவை!!இப்படி வேறெங்காவது தாவுவது என் வழக்கம் ஆகிப் போய் விட்டது.அக்னிக் குஞ்சை பாரதி "ஆக்கும் aspiration "என்றாரா "அழிக்கும் ஆசை" என்றாரா அவரே அறிவார்,ஆனால் பொருள் பொதிந்த கவிதை.

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்ற பாடல்.பொன் புகழை மட்டும் விரும்புபவர்கள் கவலை அற்று இருப்பது எப்படி?நான் அப்படித்தான் இருக்கிறேன்.ஆனாலும் என்னைக் கவலை தின்னாது காப்பாற்றுவாயா என்பது  அரற்றுகிறார் போல இல்லை?வேண்டாத எண்ணங்களும் அச்சமும் குடி புகுந்த என் மனதில் நீ புகுந்து அவற்றைக் கொன்று போடு என்கிறார்.எல்லாம் என் செயல் என்று எண்ணும் என் மூட மனதில் வெளிச்சம் தா .அனைத்தும் உன் செயல் என்ற வெளிச்சம் தா என இறைஞ்சுகிறார்.எத்தனையோ துன்பமான,சோர்வான சூழ்நிலையில் இருந்தும் அவை எதுவும் எனக்கில்லை ,ஏன் என்றால் அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட உன்னையல்லவோ சரணடைந்து விட்டேன் என்பது என்ன மாதிரியானதொரு simple and great belief !!கண்ணம்மா என் குலதெய்வம் என்ற பாடல்.நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக என்பது கடைசி வரி.

செப்டெம்பர் மாதம் என்று தொடங்கியது போஸ்ட்டிற்கு ஒரு தொடக்கம் வேண்டியே அன்றி வேறில்லை.பாரதியார் தொடாத எதையும் தமிழில் எழுதுவது சாத்தியமா தெரியவில்லை.இரண்டு பாடல்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால் போஸ்ட் நீளும்.ஒரு நாளின் பெரும் பகுதியை நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும் செய்தே ஆக  வேண்டிய வேலைகள் ஆக்கிரமிக்கின்றன.அப்போது பளு தெரியாமல் இருக்க நினைவுகளைத் துணைக்கழைப்போம் அல்லவா?அந்த நினைவுகளில் ஒரு பாரதியார் பாடல் வந்து உட்காருவது ஒரு புது உற்சாகம் தருகிறது.சந்தோஷங்கள் infectious தானே?அதனால் இந்த பகிர்வு.நாளை பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 12 செப்டம்பர், 2015

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் இடையூறின்றி இனிது முடிய எல்லோரும் பிரார்த்திக்கும் முழுமுதற் கடவுள் பிள்ளையார்.நாம் இந்த அவசர யுகத்தில் வணங்கிச் செல்லும் விதத்தில் எளிமையாகக் கோவில் கொண்ட ஒரே தெய்வம் அவர்.எந்த வழி சென்றாலும் கூப்பிடு தூரத்தில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது தமிழகத்தின் தனிச் சிறப்பு.ஆனை  முகத்தோன் அம்பிகையின் திருமேனி மஞ்சளில் இருந்து தோன்றியவர்.அன்னைக்குக் காவல் இருந்து அப்பனை எதிர்த்து அதன் பலனாக சிரம் இழந்து மீண்டும் தந்தையின் கரத்தால் வேழமுகம் பெற்றவர்.கணங்களின் தலைவனாய் விளங்குவதால் கணநாதர்.செல்வமும் ஞானமும் நல்குபவர்.சரி,ஞானம் என்றால் என்ன?அறிவியலை விஞ்ஞானம் என்கிறோம்.ஆன்மிக அனுபவத்தை மெய்ஞானம் என்கிறோம்.இரண்டிற்கும் என்ன தொடர்பு?அல்லது என்ன வித்தியாசம்?அது பற்றிய சிறு விவாதம்தான் இன்னும் சில மணித்துளிகள் நாம் செய்யப் போவது.இது சற்றே பெரியதொரு topic .ஓரளவு அனுபவம் பெற்று ,தகுதியும் பெற்றால்தான் விளக்கவும் விளங்கிக் கொள்ளவும் முடியும்.நான் கூறப் போகும் விஷயங்கள் புத்தகங்கள்,internet ல் இருந்து சேகரித்த தகவல்கள்தான்.பெரியவர்கள் கருத்துப் பிழைகள் ஏதேனும் கண்டு பிடித்தால் முடிவில் தெரிவித்தால் திருத்திக் கொள்வேன்.

இந்து சமயம் எப்போது உருவானது?அதற்கு செப்டம்பர் 17ம் தேதி என்பது போல நாள் சொல்ல முடியாது.மகான்கள் கடவுளை நோக்கி நடந்த பாதையை அடிப்படையாய்க் கொண்டு உருவானதே அது.சமய உண்மைகள் ஆழம் நிறைந்தவை.இப்போது எதை எடுத்தாலும் விஞ்ஞானப் படி அது சரியா என ஆராய்கிறோம்.ஆனால் அந்த விஞ்ஞானமே சரியா?எது சரி எது தவறு?ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று சரி.உதாரணத்திற்கு ஒரு விஷயம் எடுத்துக் கொள்வோம்.மருத்துவர்கள் ஒரு மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.சில காலம் பழக்கத்தில் இருந்த பின் அவர்களே அதன் sideeffects மிகவும் தீவிரமாக உள்ளதாய்க் கூறி அதை ban செய்து விடுகிறார்கள்.விஞ்ஞானம் அறிவு பூர்வமானது.ஆனால் ஒரு கண்டுபிடிப்பைத் தவறாக்கி மற்றொன்று அந்த இடத்தை ஆக்ரமிக்கும் போது விஞ்ஞானம் குருடாகிப் போகிறது.விஞ்ஞானி முட்டாளல்ல.ஆனால் பல நேரம் விஞ்ஞானம் என்ற பெயரால் மதத்தைக் கொச்சைப் படுத்துவது தவறு.மூட நம்பிக்கைகள் வைத்துக் கொள்வது அதனினும் தவறு.சமயம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியது.ஒரு கோவிலின் அமைப்பையே எடுத்துக் கொண்டால் ஆகம விதிகளின் படி கட்டப் பட்ட ஆலயங்களில் விஞ்ஞானத்தின் பங்கு என்ன என்று அறிந்து கொள்ளலாம்.

நம் உடல் ஒரு ஆலயம்.வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும் சேர்ந்த ரத்தம் உடல் முழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.செம்மண்ணும் சுண்ணாம்பும் பூசப் பட்ட மதில் சுவர் கொண்ட ஆலயத்தில் கர்பக்ருஹத்தில் கடவுள் வீற்றிருக்கிறார்.கர்ப க்ருஹத்தின் மேல் உள்ள பகுதியை விமானம் என்கிறோம்.crane எல்லாம் இல்லாத காலத்தில்,விமானத்தின் மேல் வைக்கப் பட்ட கல் சாரம் கட்டி மேலே ஏற்றப் பட்டது.கோவில் தூண்கள் எப்படி நின்றன?சிமெண்ட் இல்லை என்றால் எது இணைப்புக்குப் பயன் படுத்தப் பட்டது?அன்றும் விஞ்ஞானமும் கணக்கும் உண்டு.மூதாதையர்கள் முட்டாள்கள் அல்லர்.சமூக சிந்தனையுடனும் கோவில்கள் கட்டப் பட்டன.உயரமான கோபுரங்கள் ஊர் நன்மை கருதி வடிவமைக்கப் பட்டவையே.பொருள்கள் கோபுரங்களில் வைத்துப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன.வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போது மக்களையும் பொருள்களையும் பாதுகாக்க உயர்ந்த கோபுரங்கள் உதவின.

ஒரு சூப்பர் மார்கெட்டில் பொருள் அடுக்குவது போல் இஷ்டப் படி ஆலயம் எழுப்ப இயலாது.அந்தக் கட்டமைப்பிற்கு பொருள் உண்டு.கர்பக்ருஹம் நம் கபாலம் போல.அங்கு இறைவன் ஆற்றல் உள்ளது.கோவில் கொடிமரம் முதுகுத் தண்டு போல.கீழே உயிராற்றலின் ஆக்க சக்தி குண்டலினி சுருண்டு படுத்துள்ளது.குண்டலினி அங்குள்ள வரை உலக சிந்தனைகளே இருக்கும்.அதைக் கபாலத்திற்குக் கொண்டு வர வேண்டும்.சரீரத்தைக் கடந்து நிற்றல் வேண்டும்.ஜீவன் சிவனாக வேண்டும்.அதைத்தான் கொடிமரம் கடந்து சென்று கர்பக்ருஹத்தில் உள்ள இறைவனைத் தரிசிப்பதற்கு ஒப்பிடுகிறோம்.திருஅண்ணா மலையில் கிரிவலம் செய்வோர் ஒரு ஆன்மிக அனுபவம் அடைகிறார்கள்.கிரிவலப் பாதை முழுவதும் மூலிகை மரங்கள்.அந்தக் காற்றை சுவாசிப்பதில் உள்ள நன்மை கருதி கிரிவலம் செய்வோரும் உண்டு.சமய நம்பிக்கைகளும் விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று compliment செய்து கொள்ளும் தருணங்கள் இது போல் பல உண்டு.பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுகிறோம்.அருள் வேண்டி.தலையில் நெற்றிப்பொட்டில் இரண்டு பக்கமும் குட்டிக் கொள்வதை science super brain yoga என்றழைக்கிறது.சூரிய நமஸ்காரம் தரும் பலன்களுக்கும் விஞ்ஞானிகளும் சமயவாதிகளும் கூறும் விளக்கங்கள் வேறே தவிர அது எத்துணை நன்மை பயப்பது என்ற கருத்தில் மாறுபாடில்லை.

விஞ்ஞானிகள் மெய்ஞானிகளின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் விஞ்ஞானிகளுக்கு ஒரு விஞ்ஞான உண்மை உதயமாவதோ மெய்ஞானிகளுக்கு கடவுள் பற்றிய பேருண்மை உணர முடிவதோ அவர்கள் தன்னை இழந்த கணத்தில்தான் நடக்கிறது.அறிவியல் அறிந்த எல்லோரும் ஆர்கிமெடிசை அறிவார்கள்.ஆர்கிமெடிஸ் என்ன கண்டு பிடித்தார்?ஒரு பொருள் ஒரு திரவத்தில் மிதக்க வேண்டும் என்றால் அதன் எடை அதனால் வெளியேற்றப் படும் திரவத்தின் எடைக்குச் சமமாக இருத்தல் வேண்டும்.இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் நவீனக்  கப்பல்கள் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஒரு நாள் குளித்துக் கொண்டிருந்த போதுதான்  ஆர்கிமேடிசுக்கு இந்த அறிவியல் உண்மை உரைத்தது.உடனே அவர் யுரேகா யுரேகா என்று கத்திக் கொண்டு குளியலறையை விட்டு  வெளியே ஓடி வருகிறார். உடம்பில் ஒட்டுத் துணி இல்லை.தன்  பற்றிய பிரக்ஞை அற்றவர்கள்தான் துணி இல்லாமல் வெளியே வருவார்கள் அல்லவா?பிரக்ஞை அற்ற நிலையில்தான் அவருக்கு ஒரு அறிவியல் தத்துவம் உதித்தது.மெய்ஞானிகள் நிலையும் அதுவே என்பது சொல்லி விளங்க வைக்க வேண்டியதில்லை.அவர்கள்" தான் என்ற பிரக்ஞையை விட்ட போதுதான் பேருண்மைமையாம் கடவுளை அறிகிறார்கள்.விஞ்ஞானமும் மெய்ஞானமும் சந்திக்கும் புள்ளி அதுவே.   "விஞ்ஞானம் உண்மை என்றால் மெய்ஞானம் பேருண்மை.கோவிலில்பயன்படுத்தப் படும் பூக்கள்,நெய் விளக்கு,சந்தனம்,பன்னீர் ,பத்திப் புகை எல்லாம் ஒரு positive energy தரும் பொருள்கள்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

வேதகால ரிஷிகள் மூன்று விதமான அக்னி பற்றி அறிவார்கள்.ஒன்று ordinary fire -ஜடஅக்னி ,இரண்டாவது electric fire-மின்சாரம் ,மூன்றாவது solar fire .நவீன விஞ்ஞானம் முதல் இரண்டு அக்னியையே அறிந்திருந்தது.The fact that an atom is like a solar system could lead them to the 3rd discovery.அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்என்று சொல்லப் பட்டிருக்கிறது.அணுசக்தி பற்றிய அறிவு ஆதிகாலம் தொட்டே இருந்துள்ளது.கணித மேதை ராமானுஜன் கூறுகிறார்,"An equation for me has no meaning unless it expresses a thought of God." ஆழ்மனதில் மெய்ஞாநிகளாய்  இருப்பவர்களே விஞ்ஞானியாகப் பரிணமிக்கிறார்கள்.உண்மையான மெய்ஞாநிகளுக்குப் புலப்படாத விஞ்ஞான உண்மைகள் இல்லை.

பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் விஞ்ஞானத்துடன் கொண்ட தொடர்பை ஒரு முறை நினைவு கூர்ந்து விட்டு உரையை முடித்துக் கொள்ளலாம்.மத்ஸ்யாவதாரம்.மீன்.கடல் வாழ் உயிரினம்.கூர்மாவதாரம் ஆமை.நீரிலும்,நிலத்திலும் வாழ முடிந்த உயிரினம்.வராஹ அவதாரம் Complete transition from water to land.நரசிம்ஹ ம்.பரிணாம வளர்ச்சியில் அடுத்த,பெரிய வளர்ச்சி.வாமன அவதாரம்.முழுமையாக evolve ஆகாத குள்ள மனிதன்.பரசுராமர்.காட்டில் வசித்த,ஆயுதங்களைக் கையாளும் திறமை பெற்ற மனிதன்.ஸ்ரீ ராமாவதாரம்.பல கலைகளில் தேர்ச்சி பெற்ற சமூக வாழ்வின் முக்கியத்துவத்தைக் காட்டின அவதாரம்.இன்னும் கறைபடாத மனிதனை,வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை பெற்ற மனிதனைக் காட்டிய அவதாரம்.ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமாம் பூர்ணாவதாரம்.அரசியல் வாழ்வின் தன்மையை உலகிற்கு உணர்த்திய ,குழப்பங்கள்,பேராசை நிறைந்த மனிதர்கள் படும் பாட்டை உணர்த்தி,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய அவதாரம்.அடுத்து புத்தர்.உள்  நோக்கிய பயணம் மேற்கொண்டு இன்னும் உயர் நிலைக்குச் சென்ற மனிதனைக் காட்டின அவதாரம்.கடைசியாகக் கல்கி.Destruction.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையே.பிரித்துப் பார்க்க இயலாதவை.இது போன்றதொரு இன்னுமோர் இனிய நாளில் மேலும் பேசுவோம்.கடல் மணலை எண்ணுவது போல ஒரு பிரயர்த்தனமாகவே அது அமையும்.I thank you all very much for your patient listening.

MOTHER PROTECTS


செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஐந்தாவது சக்கரம்



Being a fifth wheel to the coach என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.சில முறை அல்லது பல முறைகள் அப்படி உணர்ந்தும் இருக்கலாம்.நான்கு சக்கரங்களில் ஓடும் ஒரு வண்டிக்கு ஐந்தாவது சக்கரத்தால் எப்படிப் பலன் இல்லையோ அது போல ஒரு இடத்தில் ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதரின் தேவை இல்லாத போது அப்பொருள் அல்லது மனிதரை ஐந்தாவது சக்கரம் என அழைக்கிறோம்.ஆனால் ஐந்தாவது சக்கரம் உணர்ச்சி அற்றது.ஐந்தாவது சக்கரம் போல் நடத்தப் படும் மனிதன் ஜீவன் உள்ளவன்.சமீப நாட்களில் எனக்கு மிகவும் நெருங்கிய சிலர் தாம் வாழ்வில் ஒரு ஸ்டெப்னி போல, உயிரற்ற பொருள் போல் நடத்தப் படுவதாய் வருந்தியது என்னை மிகவும் சங்கடப் படுத்தியது.யோசிக்கவும் வைத்தது.

அது போல் வருந்தும் எல்லோருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன்.மற்றவர் நம்மை அப்படி நடத்துகிறார்களா அல்லது அது  நம் மனப் பிரமையா என்ற ஆராய்ச்சிகளைப் புறம் தள்ளுங்கள்.நம் விருப்பம் அற்று நம்மை யாரும் அப்படி நடத்துவது சாத்தியம் இல்லை.ஐந்தாவது சக்கரமாய் உணராமல் இருப்பதில்தான் சூட்சுமம் உள்ளது.  இயல்பாய் வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.அனாவசியக் கவலைகளும்,  நமக்கு அவசியம் அற்ற எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அற்று இருப்போம்.ஒரு பயணத்தில் திடீரென ஒரு டயர் பழுது பட்டால் ஐந்தாவது சக்கரம் இல்லாது போனால் என்ன ஆகும்?திண்டாடிப் போவோம்.வாழ்க்கைப் பயணமும் அது போலத்தான்.

எல்லா நிகழ்சிகளையும் பல விதமாக நோக்கலாம்.எதிர்மறையாக நோக்குவது நம்மை வருத்தும். "நான் யாருக்காகவும் எப்போதும் உதவத் தயாராக உள்ள ஐந்தாம் சக்கரம்.நான் இல்லாது போனால் என் சுற்றமும் நட்பும் திண்டாடிப் போகும்"  என்று மாற்றி யோசித்துப் பாருங்கள். கார் டிக்கியில் கம்மென்று கிடக்கும் ஸ்டெப்னி பல பயணங்களில் சும்மாதான் இருக்கிறது.ஆனால் தேவை வந்து விட்டால் அதனால் அல்லவோ பயணம் நல்ல விதமாய் முற்றுப் பெறுகிறது?சிறு வட்டத்திற்குள் இருந்து வருந்துவதல்ல வாழ்க்கை.தீதும் நன்றும் பிறர் தர வாரா.நான் யாருக்கும் தேவை அற்றவள் எனத் தயவு செய்து நினைத்துக் கொள்ளாதீர்கள் என் அன்பு சினேகிதிகளே.தேவை இல்லாமல் ஒரு புழுவைக்  கூட இறைவன் படைக்கவில்லை.பயனற்ற வாழ்வு,அர்த்தமற்ற வாழ்வு என்றும் ஏதும் இல்லை.

ரஞ்ஜனி த்யாகு

Appeared in September 2015 issue -Manjula Ramesh's snehidhi

MOTHER PROTECTS

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஆன்மீக நாட்டமும் சமூக அக்கறையும் ------- ​ எங்கே குழப்பம்?

Spiritual என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ்ப் பதம் ஆன்மிகம் என்று கொள்ளலாமா?சமயம் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் பேச முற்படுவது குருமஹராஜ் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினது போல் உப்பு பொம்மை கடல் ஆழம் காணச் செய்த முயற்சியே.நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது.இயற்கைச் சூழலில் மனம் ஒன்று பட்டு இருந்த அனுபவத்தை நண்பர் ஒருவர் வர்ணித்து இருந்தார்.பறவைகளும் விலங்குகளும் தத்தம் வேலையைப் பார்த்துக் கொண்டு ஆனந்தமாய் சுதந்திரமாய் இருப்பதாகவும் நாம் அதாவது மனித இனம் அவ்வாறு இல்லை என்பதே அந்த எழுத்தில் தொனித்த செய்தி.மேலும் சுற்றுப் புறம் வளமாக இருக்க எல்லா உயிரினமும் அளிக்கும் பங்கும் அதிகம் மனிதன் அதே சுற்றுச் சூழலை மாசு படுத்தச் செய்யும் பங்களிப்பும் அதிகம் என்பதெல்லாம் அவர் வாதம்.இது ஒரு செய்தியாக மட்டும் இருந்திருந்தால் படித்து விட்டு விட்டிருப்பேன்.ஆனால் ஆன்மீக நாட்டம் என்ற சொல் குறுக்கிட்டதே இதை எழுதத் தூண்டியது.

விதி வலிமையானது.கடவுளிடம் கொள்ளும் இடையறா சிந்தனை விதியின் வலிமையைக் குறைக்கும் ஆனால் முழுதும் மாற்றாது. நான் சொல்வது சில்லரையான விஷயங்களை விதி என்ற சொல்லில் அடக்குவதல்ல.நம் பிறப்பு,சூழ் நிலைகள் ,தானாக ஏற்படும் உறவுகள் போன்ற பொதுவான விஷயங்களை மட்டுமே.ஏன் இந்த நாட்டில்,இந்தப் பெற்றோருக்கு,ஏழையாக அல்லது பணக் காரனாகப் பிறக்கிறோம் ஏன் சிலருக்குப்  பிறப்பு முதலே உள்நோக்கும் பாவம் வருகிறது பிறர் ஏன் superficial ஆகவே வாழ்வை வாழ்கிறார்கள் என்பதெல்லாம் நம்மால் அறிய முடியாதவைதானே?அது மட்டுமல்ல.ஒவ்வொரு நிகழ்வுமே நமக்கு மேற்பட்ட சக்தியால் நடக்கிறது என்பதே ஆன்மீகவாதிகளின் கோட்பாடு.மதி விதியை வெல்லுமானால் சமயத்தில் அதை அருள்பவனும் இறைவனே என்றுதான் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர்களால் நினைக்க இயலும்.

சமூக அக்கறை தேவைதான்.நம்மை முதலில் மாற்றிக் கொள்வதுதான் செய்ய முடிந்த சுலபமான செயல்.பின் மற்றவரை influence செய்ய முயலலாம்.ஆனால் அதை எந்த அளவு கொண்டு செல்ல முடியும் என்பது நம் கையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.அதற்காக உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் எல்லாம் தேவை இல்லை என வாதம் புரியவில்லை.அவரவர்க்கு ஒரு கடமை உள்ளது.சிலர் உலகில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்கள் அந்த mission உடன் உலகிற்கு வந்துள்ளார்கள் என்று பொருள்.ஸ்வாமி அரவிந்தர் அனைத்தயும் அன்னையிடம் ஒப்படைத்து விட்டு வெகு சீக்கிரமே பொது வாழ்வில் இருந்து விலகி விட்டார்.குரு மஹராஜ் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அவதாரம் சொல்லும் செய்தி வேறு.ஸ்வாமிஜி விவேகானந்தர் அவதாரம் சொல்லும் செய்தி வேறு.அதே போல் சமூக அக்கறை வேறு .உலகம் ஒழுங்காக இல்லையோ என்ற கவலை வேறு.

Rhythm தவறாமல்தான் உலகில் அனைத்தும் நடக்கின்றன.ஆனால் தவறான மனிதர்களும் உலகில்  உள்ளார்கள்.திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல வெளியில் இருந்து யார் என்ன சொன்னாலும் அந்தந்த மனிதன் மனதில் ஒரு பல்ப் எரிய வேண்டும்.அப்போதுதான் நல்லது நடக்கும். அதற்கு அவன் கர்ம வினையே காரணம்.பறவை போல் சுதந்திரமாய் இருக்க ஏன் மனிதனால் இயலவில்லை என்றும் நண்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.பறவையாவது சிந்திப்பதில்லை.மனிதன் சிந்திக்க முடிந்தவன்.ஒரு சூழ்நிலைக்கு நாம் அடிமை என்ற எண்ணம் நம்மை அடிமையாக்குகிறது.அதே சூழ்நிலைக்கு நாம் எஜமான் என நினைத்தால் நாம்தான் Boss .எண்ணங்கள்தான் காரணம்.

எளிய விஷயங்கள் ஒரு பிரமிப்பு ஏற்படுத்துவதையும் உண்மையில் பிரமிக்கத் தக்க விஷயங்கள் குடத்துள் இட்ட விளக்கு போல் அமைதியாய் இருப்பதையும் பல முறை வாழ்வு நமக்குக் காட்டி இருக்கும்.நம் மனம் மொழி செயல்கள் ஒன்று பட்டு Let us just live .நாம் மற்றவர்களை விட எந்த விதத்திலும் நம்மை உயர்வாக நினைப்பது ஒரு அறியாமையே.மிக அதிக உயரத்தைத்  தொடும் போதுதான் மனித மனதின் சாதாரண ஆசா பாசங்களைக் கடந்த போதுதான் நம்மை சுதந்திரமானவன் என்று நினைத்தாவது கொள்ளலாம்.சாதாரண சமூக விதிகளின் படி மிகவும் நேர்மையாளராக,reasonable ஆக இருப்பவர்கள் நம்மை அறிவு ஜீவிகள் என எண்ணிக் கொள்கிறோம்.நம் அதீத அறிவு என்று நாம் எண்ணுவது ஒரு மாயையே.எண்ணங்களின் சங்கமம் debate என்றுஅறியப் படுகிறது.அதில் பெரும்பாலும் ஒரு பகுதியே உண்மையாக உள்ளது.வாதம் புரிவதில் வல்லவர்கள் இது போன்ற கருத்துப் பரிமாற்றங்களில் வெற்றி காணலாம்.அந்த வெற்றியால் நாம் சொன்னது சரி என எண்ணியும் கொள்ளலாம்.ஆனால் மற்றவர் சொன்னது உண்மைக்கு நெருங்கினதாக இருக்கும் பட்சத்தில் அதை யோசிக்கும் வாய்ப்பைக் கூட இழந்து விடுகிறோம்.அறியாமை நிறைந்த,எதிர்பாராதவை எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ள இந்த உலகில்  ஒரு துளி உண்மை wisdom இறைவனால் அருளப் பட்டால் அது ஒரு சமுத்திரத்திற்குச் சமம்.
ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS

புதன், 29 ஜூலை, 2015

சந்திப்புகள்-ரயில் பயணங்கள்-நிஜங்கள்

ப்ரயத்தனம் எடுத்துக் கொண்டு நிகழும் சந்திப்பு ஒரு வகை.தானாக நிகழ்வது இரண்டாவது வகை. ப்ரயத்தனப் பட்டு ஏற்படுத்திக் கொள்ளும் சந்திப்புகளில் நாம் கவனமாக இருக்க முடியும்.சந்திப்பு சந்தோஷமாக முடியலாம்.சங்கடங்களிலும் கொண்டு விடலாம்.,நாம் கவனமாகத் தேர்ந்தெடுத்த பின்னும்.ஆனால் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டு சொல்வது போல் அதில் யார் குற்றமும் இல்லை.தானாக நிகழும் சந்திப்புகள் நீண்ட காலம் தொடரும் நட்பாவதும் நடக்கலாம்.சென்ற போஸ்ட்டிற்கு பதில் அளித்த நண்பர் ஒருவர் நம்பிக்கை என்பது என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்."எது நம்பிக்கை ,கடவுள் உள்ளார் என்பதா இல்லை என்பதா ,குழந்தைகளுக்கு மனதில் நம்பிக்கை உணர்வை எவ்விதம் தூண்டுவது,அறிவியலும் தத்துவமும் நம்பிக்கை பற்றி விளக்க முடியுமா "என்று கேட்டுள்ளார்.அந்தக் கேள்விகளும் நேற்று நிகழ்ந்த சந்திப்புமே இந்த போஸ்ட்டிற்கு துவக்கம்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நபரை சந்திப்பது வேறு யாரையோ பார்ப்பது போல்தான் என்று தோன்றுகிறது.வெளித்தோற்றத்தைப் புறம் தள்ளி விடுவோம்."நீ துளியும் மாறவில்லை" என்பது பொய் போலத்தான் என் மனம் நினைக்கிறது.போகும் ஒவ்வொரு ஆண்டுடனும் வயதும் போகும் போது அதெப்படி மாற்றம் நிகழவில்லை என்று கதை சொல்லலாம்?ஐந்து வயதில் இருந்த நானும் நீங்களும் இறந்து விட்டதுதானே நிஜம்?சில நாட்கள் முன்னம் நானும் இந்தப் பொய்யை உண்மை என நம்பிக் கொண்டுதான் இருந்தேன்.உடனே நம் மனது மாற்றம் என்பதைக் கெட்ட மாற்றம் எனப் பொருள் படுத்தி யோசிக்கக் கூடாது.It may be change for the better.நட்பும் நம்பிக்கையும் தொடர்புடையவவை.கொஞ்சம் நம்பிக்கை பற்றிப்பேசி விட்டு இரண்டையும் தொடர்பு படுத்தலாம்.

நம்பிக்கைக்கு definition கொடுக்க இயலாது.எது அன்றி வாழ்க்கை இல்லையோ அது நம்பிக்கை.அதைக் கடவுள் மேல் வைக்கலாம்,தன் மேலே வைத்துக் கொள்ளலாம்,தான் சார்ந்துள்ள தன்னைச் சார்ந்துள்ள பேர் மேல் வைக்கலாம்.அது ஒரு பற்றுக் கோடு . நம்பினோர்க்கு அவர் சாமி.நம்பாதவர்களுக்குக் கல்.Philosophical ஆக sound பண்ணாமல் faith பற்றி விளக்கம் கூற முற்பட்டால் நான் தோல்வியே அடைவேன்.இறையிடம் கொள்ளும்,தன்னிடமே கொள்ளும் நம்பிக்கை தவிர வேறு எதன் மீது வைக்கும் நம்பிக்கையும் ஒரு நாள் இல்லையேல் ஒரு நாள் மனம் புண் படுவதில்தான் முடியும். நேர விரயம் தவிர வேறில்லை.

மௌனம் ஒரு மொழி.உயர்ந்த மொழியும் கூட.உரையாடலில் இருவர் பங்கு உள்ளதால் ஒத்த எண்ணங்கள் அற்ற போது அது நிஜ அர்த்தத்தை இழந்து அனர்த்தமாகி விடுகிறது.அக்னிக்குக் கொடுக்கப் படும் பொருள்களை அது வேக வேகமாய் விழுங்குவது போல் மொபைல் போனை சார்ஜ் செய்ய இணைத்தால் அது அதி வேகமாய் சார்ஜ் ஆவது போல் பேசப் பேச விஷயங்கள் பல பரிமாணங்களில் வளர்கின்றன.ரயில் பயணங்களில் நிகழ்வது போன்ற சந்திப்புகளில் எதிர்பார்ப்பும் இல்லை.ஏமாற்றமும் இல்லை.எல்லா சந்திப்புகளையும் ரயில் சந்திப்பு போன்று எளிமையாக ஆக்கிக் கொள்ளலாமே?வாழ்க்கை ஒரு ரயில் பயணம்தான் அல்லவா?நம் ஸ்டேஷன் வந்தால் இறங்கப் போகிறோம்.நம்முடன் தொடர்பில் உள்ள எல்லாரும் நிஜத்தில் ரயில் சிநேகங்கள் தவிர வேறில்லை.காலம் முன்னும் பின்னும் நீண்டு கிடக்கிறது.சிலர் நம்முடன் ஒன்றாக ஏறி ஒன்றாக இறங்குகிறார்கள்.எவ்வளவு சிநேகமாய் இருப்பினும் சில சமயம் இறங்கும் நேரம் வந்து விடுகிறது,யாரேனும் ஒருவருக்கு.அப்படி இறங்குபவர்களை நம்பிக்கை துரோகி என்று அழைக்கிறோமா?பின் நிஜத்தில் மட்டும் ஏன் அனாவசியமாய் faith என்று பெரிய வார்த்தைகள் கூறி பயணத்தின் இனிமையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

சற்றே வெளி வந்து எட்டிப் பார்த்து சொல்ல நினைத்ததை சொல்லி விட்ட இந்த நத்தை மீண்டும் சொல்லத் தூண்டும் விஷயம் கிடைக்கும் வரை உள்ளே செல்கிறது.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 27 ஜூலை, 2015

சிவபெருமான் மேல் காதலாகி கசிந்துருகி ஒரு கிரிவலம்

சிவபெருமான் மேல் காதலாகிக் கசிந்துருகுவோர்க்கே கிரிவலம் செய்யும் பாக்கியம் அமைகிறது.உடற்பயிற்சிக்காக,மூலிகைக் காற்றை சுவாசிக்க என்று வேறு காரணங்கள் கற்பித்துக் கொண்டு கிரிவலம் செய்வோரும் அவன் மேல் மனம் கசிந்து போகாமல் இருப்பது சாத்தியமில்லை.நினைத்தாலே முக்தி அருளும் தலமாம் திருவண்ணாமலையில் கால் பதிக்கும் போதே ஒரு அமைதி நம்மைச் சூழ்கிறது.எங்கு திரும்பினும் லிங்க மயம் .லிங்க வடிவம் பற்றி ஒன்று கூற விருப்பம்.பிள்ளையார் வடிவத்திற்கும் லிங்க வடிவிற்கும் மனதை ஒருமுகப் படுத்தும் சக்தி அதிகம் உள்ளதாய் எப்போதும் தோன்றும்.ஒரு ராமர் படத்தையோ லக்ஷ்மி படத்தையோ காலண்டரில் அல்லது வேறு இடங்களில் பார்க்கும் போது என் .டி .ஆரோ நயன்தாராவோ மனதில் சில சமயம் எட்டிப் பார்ப்பதுண்டு.சில பெண்களைப் பார்த்து "அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கிறாய் "என்று பொய் சொல்வோம்.ஏதோ அந்த தெய்வத்தை ஒரு தடவை பார்த்து வந்தார் போல் .வரலக்ஷ்மி விரதம் பூஜை செய்யும் போது சம்பந்தம் அற்று அந்தப் பெண் முகம் மனதில் நிழலாடும்.லிங்க வடிவில் சிவனைத் த்யானிக்க இந்த பிரச்சினை இல்லை.

கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் சிறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன.வலம் வருவோர் அநேகமாக எல்லா லிங்கங்களையும் தரிசித்துச் செல்கிறார்கள்.இந்திர  லிங்கம் முதலாவது. ஈசான லிங்கம் கடைசி.அண்ணாமலையார் திருக் கோவில் வாசலில் தொடங்கி அதே இடத்தில் முடிக்க வேண்டும்.14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையின் நீளம்.வேறு விஷயங்களுக்கு வருவோம்.டாகுமென்ட்ரி மாதிரி ஒலிக்கிறது.

நம் மனதிற்குள் ஏற்படும் பதிவுகளை நம் விருப்பப் படி interpret செய்து கொள்ளலாம்.இதில் சொல்ல வருவது அந்த ஐந்தரை மணி நேரம் நான் அடைந்த உணர்வுகள்.கிரிவலம் மேற்கொள்ளும் பாக்கியம் பெற்ற உங்களில் பலர் இன்னும் உயர் நிலையில் இருந்து யோசித்திருக்கலாம்.முதலில் நந்திகேஸ்வரர்.பல நந்திகள் வழி பூர.எல்லாம்,எந்த மூலையில் இருந்தாலும் அண்ணாமலையாரை நோக்கிக் கொண்டிருக்கின்றன.நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதில் அவனை மட்டுமே நினை என்பதைத்தான் அவை உணர்த்தின.கிரிவலத்தை அதி காலை அல்லது அந்தி மங்கும் வேளையில்தான் பொதுவாகத் தொடங்குகிறார்கள்.இல்லையென்றால் very simple .கால் சுடும்.திருவோடு மட்டும் உடைமையாய்க் கொண்ட பக்கிரிகள் பலர்.எல்லோரும் இறையுடன் ஒன்றினவர்களா தெரியாது. ஆனால் வேறு ஓர் உலகம் உள்ளது.அவர்களில் சிலர்  realised  souls ஆக இருக்கலாம்.திருவோடு சுமந்து திரிய வேண்டாம்.But பணம் பண்ண அலையவும் வேண்டாம்.எது வசதி?ஒவ்வொருவருக்கு ஒரு பொருள் .தேவைகள் --அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியாகாத பேரைக் கொண்ட பூமியில் ஆசைகளுக்கு வரையறை வகுத்துக் கொள்ளவில்லை என்றால் சிவன் நினைவு எப்போ வரும்?

இயற்கையுடன் ஒன்றின நிலை.முழு அமைதி.இயற்கை அன்னை கடவுள்தானே.சுற்றுப்புறம் முழுமையும் பிரபஞ்சம் முழுதும் ஒம்காரத்தால் நிரம்பி உள்ள உணர்வு.பேசத் தோன்றுவதில்லை. சும்மா இரு சொல்லற என்பது எத்துணை உண்மை! இது மாதிரி இன்னொரு ஐந்து மணி நேரம் வாய்க்க இன்னும் எத்தனை நாள் காக்க வைக்கப் போகிறாய் பெருமானே என்று தோன்றாமல் கிரிவலத்தை முடிப்பது சாத்தியம் இல்லை.இடு காட்டின் வழி நடந்துதான் ஈசான லிங்கத்தை அடைகிறோம்.சமரசம் உலாவும் இடமாம் இடுகாடு தாண்டி ஈசான லிங்கத்தை தரிசிக்கும் வினாடி மார்க்கண்டேயன் போல் போய்த் தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது.மன ஏக்கம் கண்ணீராய் வெளிப் படுகிறது.இந்த உலகமும் உறவுகளும் அந்தஏக்கத்தைப் போக்க முடியுமா என்ன? மேலே எழுத வரவில்லை.மறுபடி பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 23 ஜூலை, 2015

கண்ணன் வருவான்



நம்முடையது ஒரு கர்ம பூமி.நமக்கென விதிக்கப் பட்ட கர்மத்தை அசராமல் செய்வதே நாம் செய்யக் கூடிய மிக உயர்ந்த செயலாக இருக்க இயலும்.யாராலும் கட்டுப் படுத்த இயலாத மனிதன் சுதந்திரமானவன்.சென்ற மாதம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றோம்.இயன்றால் ஒரு முறை சென்று வருவது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாய் அமையும் இயற்கையை ரசிக்கும் அனைவருக்கும்... சுதந்திரம் என்பது என்ன மாதிரியானதொரு அனுபவம் எனத் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கும்.மனம் சென்ற திசையில் பயணிப்பதல்ல சுதந்திரம். எல்லாம் கழன்று மனம் அடங்கிய நிலை அது.

இந்த போஸ்ட் எழுதத் தொடங்கிய மனநிலை வேறு.சில சமயம் தொடர்ந்து எழுத இயலாது ஏதோ குறுக்கிட்டு விடுகிறது.எல்லாவற்றில் இருந்தும் விடுபட்டு நிச்சலனமாக இருக்க விரும்புவோர் மற்றவர் அப்படி இருப்பதையும் ரொம்ப மதிக்கவே செய்கிறார்கள்.ஆனால் அதை வெளிப் படுத்தக் கூடச் செய்யாது இருப்பதே நன்று என்று இன்று புரிந்தது.Familiarity breeds contempt என்பது உண்மைதான்.மிகவும் பழகிய ஒரு நபரிடம் ,'நாம் ஒருவரை ஒருவர் அனாவசியமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டாம்.எப்போது இயல்பாகப் பேச வேணும் என்று தோன்றுகிறதோ அப்போது வாய் மொழியாகவும் மற்ற நேரம் டெலிபதியாகவும் பேசுவோம்' என்ற பொருள் பட சில வார்த்தைகள் கூறி விட்டேன். ஆத்மார்த்தமாக,அப்பாவியாக ஏதேனும் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் நடந்தது.யாரையும் பிணைக்க விரும்பாத யாராலும் பிணைக்கப் படவும் விரும்பாத நிலைக்கு வந்து விட்டிருந்தால் இதைப் படிக்கும் உங்களுக்கு என் மன ஓட்டம் புரியும்.

நாம்தான் வம்புகளை விலை கொடுத்து வாங்குகிறோம்.நம் அமைதியைக் கெடுத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுகிறோம்.விதிக்கப் பட்ட கர்மத்தை செய்தால் போதும்.மற்றதெல்லாம் தானே நடக்கட்டும்.நாமே தேடிச் சென்று அடையும் இலக்குகளை விட இறைவன் வழி நடத்துவதால் சென்றடையும் இலக்குகளே சரியாய் அமைகின்றன.திரௌபதி துகிலுரியப் பட்ட போது புடவையைக் கையால் பிடித்து கொண்டிருந்த வரை வராத கண்ணன் இரண்டு கையையும் அவள் மேலே தூக்கியவுடன் ஓடி வந்தானல்லவா?நாமும் எல்லாம் கண்ணனாலே என்று நினைத்துக் கொள்வோம்.எல்லோருக்காகவும் கண்ணன் வருவான்.அமைதியும் அருள்வான்.

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

செவ்வாய், 7 ஜூலை, 2015

சொல்ல மறந்த கதைகள்

எல்லோர் வாழ்க்கையிலும் சொல்ல மறந்த கதைகள் உண்டு .சிலர் இது போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத ஆராய்ச்சிகள் செய்யாது நிம்மதியாக இருப்பது உண்டு.சிலரால் அது முடியாது.முடியாதென்றால் முடியவே முடியாது என்று பொருள்.அவர்கள் மனம் சிறு வயது முதல் ஆசையாகச் சேகரித்த பல சிறு கதைகளால் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.அதைக் கேட்க ஆள் வேண்டும் அல்லவா?இந்த அவசர யுகத்தில் யாருக்கு அதற்கு நேரம் உள்ளது,சொல்லுங்கள்!அவர்கள் மன எழுச்சியின் வெளிப்பாடுகளே டயரிகள்,blogs ,ஓயாத பேச்சுகள்.

கதை கேட்க எல்லோருக்கும் பிடிக்கும்.ஆனால் அது அவர்கள் மனதுக்கு நெருங்கினதாய் இருக்க வேண்டும்.தன்னை கதையின் ஏதோ ஒரு நிகழ்வுடன் identify பண்ணிக் கொள்வது முடியும் எனில் அந்தக் கதை பிடிக்கிறது.நேற்று 30 வருஷங்களாய்த் தேடின ஒரு நட்பை முகநூலில் பிடித்தேன்.பி.எஸ்.ஜி.கல்லூரியின் ஒவ்வொரு மரமும், கணினி அறிமுகமாகிக் கொண்டிருந்த நாட்களில் பிரம்மாண்ட கணினி முன் அவள் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ,சம்பந்தமே இல்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்டில் போய் சிவனே என்று காத்திருந்ததும்  இப்போது போல் அன்றி ஆண்களே அதிகம் இருந்த கல்லூரியில் ஒரு வித மிரட்சியுடன் ஆனால் சீனியருடன் போகிறேன் என்று ஒரு பாதுகாப்பு உணர்வுடன் கல்லூரி கேண்டீனில் குடித்த  காபியும் கோயம்புத்தூரின் விசாலமான சாலைகளும் அன்னபூர்ணா கௌரிசங்கரும் அமைதியான ஞாயிறு காலைப் பொழுதுகளில் ஒரு தூக்கப் போர்வை போர்த்திக் கொண்டு விடியும் பெண்கள் விடுதியும் அவ்வப்போது ஞாபகங்களில் தலை நீட்டிப் போவதுண்டு.

சிறிய வயதில் ,ஏன் வயதானாலும் கூட பலருக்கு மாறாதது மாற்றம் என்ற புரிதல் வருவதில்லை.இளமைக் காலங்களில் நம் வாழ்வு ஓடிய ஊர்களுக்கு இப்போது போனால் எவ்வளவு அந்நியமாய் உணர்கிறேன் தெரியுமா?எல்லாம் மாறிப் போயுள்ளது.நாம் வாழ்ந்த தாத்தா கட்டிய வீடும் படித்த பள்ளியும் விளையாடின வீதிகளும் காலால் நடந்தே தேய்த்த சாலைகளும் "ஓ ,அது நானல்ல அதையா இங்கு தேடுகிறாய் "என்று எகத்தாளமாய்க் கேள்வி கேட்கின்றன.அது சில சமயங்களில் ஒரு சிறு வலி உண்டாக்கும்.இடங்கள் நம்மை அன்னியமாக உணர வைத்தால் உண்டாகும் வருத்தத்தை விட இனிமையானவர்களாய் இளமையில் நாம் கொண்டாடியவர்கள் நம்மை யாரோ போல் பார்த்தால் உண்டாகும் வருத்தம் அதிகம்.

நேற்று நீண்ட காலமாய்த் தொடர்பில் இல்லாத ஒரு நட்பைத் தொலைபேசியில் அழைக்க நேர்ந்தது."நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று ஆரம்பித்த உடன் ,"என்ன!நீங்களா?என்னை எப்படிக் கூப்பிடுவோம் என்று கூட உனக்கு மறந்து விட்டதா? "என்று மறுமுனை வள்ளென்று விழுந்தது.எப்படி சில பேர் பணம்,பதவி எது வரினும் தம்மை மாற்றிக் கொள்வதில்லை என்ற எண்ணம் சுகமாய் இருந்தது..முகநூலில் முப்பது வருஷம் சென்ற பின் கிடைத்து "Friend request "(!!!!) போட்டு மறுபடி friend ஆன என் தோழி கேட்டாள் ,"What have I done to you,?You still have so many fond memories?" என்னிடம் பதில் இல்லை.நிகழ்கால ஓட்டத்தை தடை செய்யாத,ஆனால் நிதானிக்க உதவும் ஒன்று நல்ல நட்பல்லவா ?வாழ்வின் இரு நிமிடங்கள் ஒன்று போல் இருப்பதில்லை.Somewhat apologetically I told her "I am not as nagging as before.So don't think I will bother you too much". You know what reply I got! "How many of us will have the  privilege of listening to your nagging.I am one among the few lucky ones !"

நினைவிற்குப் பிடித்த கதைகள் இன்னும் பல உண்டு.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS

சனி, 6 ஜூன், 2015

உறவுகள்

பூமித் தாயின் மடியில் வந்து விழுந்த கணம் முதல் நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் உறவுதான்.எல்லாரும் உறவுதான்.நம் பிறப்பு விளைவது ஒரு புனிதமான உறவால்.நாம் கர்பக்ருஹத்தில் 9 மாதம் குடி இருக்க ஜீவித்திருக்க முடிவது அம்மா என்ற இணையற்ற உறவால் . மனத்தகத்து ஆத்மாவாய் வீற்றிருக்கும் இறைவனுடன் ஏற்படுவது ஒரு  உறவு, இயற்கை அன்னையுடன் ஏற்படுவதொரு உறவு ,நமக்குப் பிறவி தந்தவர்களுடன் ஒரு உறவு ,நம் உடன்பிறப்புகளாக இறைவன் அனுப்பி  வைத்துள்ள ஜீவன்களுடன் ஒரு உறவு ,நாம் தேர்ந்தெடுக்கும் துணையுடனொரு உறவு ,நம்மைக் கருவியாக்கி ஆண்டவன் விளையாடியதால் பூமிக்கு வர சந்தர்ப்பம் பெற்ற நம் உயிரினும் இனிய நம் குழந்தைகளால் ஒரு உறவு,நம் அறிவுக் கண் திறக்கும் ஆசானுடனொரு உறவு ,வாழ்வு முழுதும் எதிர்பார்ப்பே அற்றுக் கூட வரும் நண்பர்களால் ஒரு உறவு என என்னைச் சுற்றிலும் மிக அழகிய உறவுகளே இருக்கக் காண்கிறேன்.பின் எந்த நேரம் ஒரு திருடன் போல் நமக்குள் மனச் சஞ்சலங்கள் நுழைகின்றன?எந்த வயதில்?நமக்குத் தெரிந்து அது நடக்கிறதா?அல்லது தெரியாமல் நடக்கிறதா?அதற்கு வேறு யாரும் காரணமா,நாமேதானா? ஒருவரை வெறுக்கலாம் என யார் சொல்லித் தருகிறார்கள்?குட்டிக் குழந்தை யாரைப் பார்த்தாலும் சிரிக்கிறதே?அந்த சிரிப்பு எப்போது மாறுகிறது?அதில் எப்படி விஷம் கலக்கிறது?

யாரையும் வெறுக்காமல் ,எந்த மனத்தாங்கலும் கொள்ளாமல் நீரோட்டம் போல வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு வாழ்ந்து முடித்தவர்கள் இருக்கிறார்கள்.அப்படி ஒருவரை சந்திப்பதே அபூர்வம்.அவருடன் சில ஆண்டுகளாவது தொடர்பில் இருந்திருந்தால் அது பாக்கியம்.என் பெரிய பாட்டி(என் அம்மாவின் அம்மா)அப்படி ஒரு அதிசயப் பிறவிதான்.என் மாமா தன்  மெயிலில் Negative affinity என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார்.முரண்பட்ட கருத்துக் கொண்ட அந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து உருவான சொல் தொடர் மிக அழகாக இருந்தது.Affinity என்பது ஒரு ஈர்ப்பு.சிலரிடம் அது நமக்கு ஏற்படும்.Negative affinity க்கு எதிர்மறை ஈர்ப்பு எனப் பொருள் கொள்ளலாம்.அது  யாரிடமும் ஏற்படாதிருந்தால் நலம். ஆனால் பொதுவாக மற்றவர் செயலுக்கு எதிர் வினையாகவே நாம் பெரும்பாலும் ஒருவர் மேல் விருப்பையும் வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறோம்.

சிலர் மிகச் சுலபமாக மற்றவர் பற்றி எடை போடுவதும் கருத்து ஏற்படுத்திக் கொள்வதும் அதை மிகக் கடுமையாய் வெளிப் படுத்துவதும் ஏன் புரியவில்லை. Casual ஆக நாம் பயன்படுத்தும் இன்னொரு வாக்கியம்,'தப்பா எடுத்துக் கொள்ளாதே'.தப்பாக ஏதோ இருந்தால் தப்பாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.குற்ற உணர்ச்சி உள்ளவர்கள்தான் அடிக்கடி எந்த கட்டுப்பாடும் அற்று பேசிவிட்டு மற்றவரிடம் தவறாக நினைக்க வேண்டாம் என வேண்டுகிறார்கள்.சரியான எண்ணங்கள் கொண்ட ஒருவரை ஏன் தவறாக நினைக்கப் போகிறோம்?சரி, ஏன் தவறாக யோசிக்க வேண்டும்? மனதுகளைப் படிக்கும் சக்தி அற்று உள்ள நாம் எதற்காக ஊகங்கள் செய்து கொள்ள வேண்டும்?எளிமையாக,பறவை போல லகுவாக இருந்து விட்டுப் போகலாமே?யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றெல்லாம் ஏட்டில் படிக்கிறோம்.ஆனால் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்ட எண்ணங்களுடன்தான் அடுத்தவரை அணுகுகிறோம்.Preconceived notions,we say in English.தவறு மற்றவரிடம் இல்லை.அவரவர் மனதில் இருக்கிறது.Let us just get out of wrong thinking.உலகமும் உறவுகளும் எவ்வளவு அழகானவை என விளங்கும்.நாம் வாழ்வதை அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது.யாரையும் தவறாகவே நோக்காத பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தைகள் better persons ஆக இருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆனால் அதைத் தாண்டி peer pressure ,outside influence எல்லாம்தான் உள்ளது.தினம் சில நொடிகள் உள் நோக்கிய பயணம் செய்வதும் பெருமளவில் உதவும்.Let us not go to bed any day with an argument unsettled.அதே போல் மழைக்குப் பின் பளிச்சென வெளிவாங்கும் நிர்மலமான வானம் போன்ற தெளிந்த மனதுடன் ஒவ்வோர் நாளும் துயில் எழுவோம்.நன்றாகப் பூட்டிய இடத்தில் திருடன் நுழைய முடியுமா?தவறான எண்ணங்கள் நுழைய முடியாது தாழிடப் பட்ட மனத்தில் கீழான எண்ணங்களும் நுழைய முடியாதுதானே?

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects 

புதன், 3 ஜூன், 2015

Communication

இது சென்ற போஸ்டின் தொடர்ச்சி.அனாவசியமான பேச்சுகளைத் தவிர்ப்பது பற்றிய என் கருத்துக்கு இரண்டுதோழர்கள்  இரு வேறு கருத்துக்கள் கூறி உள்ளனர்.சிறப்பாக மனதில் உள்ளதை சொல்லத் தெரிந்தவர்,அதை நன்கு கேட்கக் கூடியவர்,பேசப் படும் உயர்ந்த கருத்துக்கள் ,பேசப் படும் சூழ்நிலை இவையெல்லாம் சரியாக அமைந்தால் அது நல்ல communication,அது போன்ற உரையாடல்கள் அவசியமே  என்று ஒருவரும் எப்படி இருந்தாலும்வார்த்தைக் குறைப்பு நலமே என்று இன்னொருவரும் சொல்கிறார்கள்.முதல் கருத்துப் படி நல்ல உரையாடல்  நடக்கிறதா என்றால் என்னளவில் இல்லை என்பதே பதில்.கேட்பவர்கள் மிகக் குறைவான பேர்தான்.கேட்கப் படுவதை விரும்புவோர் எண்ணிக்கையே அதிகம். பயனற்ற செய்திகளை  விடுத்து வேறு விஷயம் மட்டும் பேசுவோர் பல சமயங்களில் வேற்று க்ரஹ மனிதர்கள் போல் நோக்கப் படுகிறார்கள்."இன்று என்ன சமையல்,உன் பையன் எப்படி இருக்கிறான்,உன் பெண் புக்ககத்தில் எப்படி உள்ளாள் ,அலுவலகத்தை நேரத்தில்  சென்றடைந்தீர்களா ,ஏன் உங்களுக்கப்புறம் வேலையில் சேர்ந்தவருக்கு   முதலில் ப்ரமோஷன் வந்தது "இதெல்லாம் விட்டால் பேச வேறு ஏதும்  இல்லையா என்ன?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவதொரு கற்பனை பதில் சொல்லிப் பாருங்களேன்.அந்த பதில் எதுவானாலும் கேள்வி கேட்டவருக்கு அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.அப்போ அந்தக் கேள்விகளின் அர்த்தம்தான் என்ன?

தப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்ளப் படும் மற்றொரு விஷயம் நகைச் சுவை.நாலு பேர் உட்கார்ந்து பேசினால் எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு செய்தியோ விமர்சனமோ பரிமாறிக் கொள்ளப் பட்டால்,அது சிரிப்பையும் வரவழைத்தால்  அதன் பேர் நகைச் சுவை.மற்றதன் பேர் கிண்டல்.அது தவிர்க்கப் பட வேண்டியதே. .மற்றவரின் அந்தரங்கங்களை ஐ விமர்சித்து அதை ஒரு ஜோக் போல எண்ணி  சிரிப்பதெல்லாம் நன்றாகவா உள்ளது?.எப்படி நல்ல communication வளரும்?அடுத்தது-ஒருவர் நமக்குக் கூறும் செய்தியை கண்டு கொள்ளாமல் இருப்பது  அல்லது உணர்ந்தாலும் அதைப் பற்றி அலட்சியம் காட்டுதல்.இதை எல்லாம் எழுதினால் சம்மந்தப் பட்ட நபர்கள் வருந்துவார்களோ என்று எண்ணுகிறேன்,ஒரு சமயம் அவர்களிடம் இந்தக் குணங்கள் இருப்பின்.ஆனால் சொல்லத்தான் விரும்புகிறேன்.ஒரு செயல்  உண்டென்றால் அதற்கு விளைவு உண்டு-ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு பதில் உண்டு  என நினைத்தே பேச விரும்புபவர்களிடம்  பொதுவாக தொடர்பு கொள்வோம். Basic courtesy demands that acknowledgement.நீங்கள் அது போல் நினைக்கவில்லையா? Here again I don't mean the feedback you could give to the stuff I write in my blog.தினப்படி நாம் செய்து கொள்ளும் சாதாரண உரையாடல்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.நேரம் இல்லை,ஞாபகம் இல்லை என்பது indifference ஐயே காட்டுகிறது.நிமிர்ந்து நோக்காமல் பேசுவது,கண்ணைப் பார்க்காமல் பேசுவது ,உதட்டளவிலேயே எப்போதும் பேசுவது தொலைபேசி அழைப்புகள் அலைபேசி,மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகளை receive செய்வது மட்டுமே நம் வேலை என்ற நினைவு எல்லாம் நல்ல உரையாடல் நிகழத் தடையே.அர்த்தமற்ற ஆயிரம் செய்திப் பரிமாற்றங்கள் 24 மணி நேரமும் smart phone மூலம் நடக்கும் உலகில் உண்மையான உபயோகமான communication க்கு நேரம் கிடைக்காதுதான்.

இந்த ஒரு சில மாதங்களில் பல முறை யோசித்து விட்டேன் சிலருடன் நானே சென்று உரையாட முயல்வது  அவசியம்தானா என்று.சரி ,உரையாடுவது நம்மை இன்னும் யோசிக்க  வைக்கும் வேறொருவரின் பார்வை எப்படி இருக்கிறது என்று தெரியும் என்பதெல்லாம்தான் பேச்சின்  நோக்கம்.எனக்குத் தெரிந்த ஒருவர், அவரிடம் என்ன பேசினாலும்  " இல்லேம்மா " என்றுதான் மறுமொழி கூறத் தொடங்குவார்.எதற்கும் மாற்றுக் கருத்தே அவரிடம் இருக்கும்.ஒட்டிய பேச்சே கிடையாது.அதாவது பரவாயில்லை.Indifferent ஆக இருப்பது இன்னும் மோசம்.எத்தனையோ பேர்களில் ஒருவர் வேண்டுமானால் நம் அலை வரிசையில்
 இருக்கலாம்.பேசலாம்.எல்லோரையும் ஒரே மாதிரியான உரையாடல் interest பண்ணுவதில்லை.அதில் ஆச்சரியமும் இல்லை.ஆனால் நம்மை எந்த மாதிரியும் சலனப் படுத்தாத செய்திகள் பற்றியும் நம் அறிவிற்கப்பாற் பட்டவை பற்றியும் என்ன பேசுவது?எதற்காகப் பேசுவது?அதனால்தான் தோன்றுகிறது,communication தேவையா என்று.ஐந்து நிமிட உரையாடலானாலும் (எல்லா வகை communication ஐயும் உள்ளடக்கியது உரையாடல் என்ற வார்த்தை) அது நம்மை சிந்திக்கத் தூண்டினாலோ மகிழ்ச்சியளித்தாலோ அன்றி பேச்சு அல்லது எந்த உருவில் செய்யும் உரையாடலும் வீணே.

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects


வியாழன், 14 மே, 2015

எழுத்து



மே மாதத்தின் முதல் எழுத்து.சென்ற வாரம் சற்றே slow ஆகி விட்டேன்.Blog எழுதுகிறேனா எல்லோரையும் வாக்குவாதத்திற்கு அழைத்து அதில் இன்பம் காண்கிறேனா என்று சந்தேகம் வந்து விட்டதே காரணம்.கருத்துப் பரிமாற்றங்கள் பலன் தரும் செயலா ,தெரியவில்லை.பொதுவாக யாரும் சொல்லி நம் எண்ணங்களை மாற்றிக் கொள்ள மனித மனம் விரும்புவதில்லை.இந்த வாழ்க்கையின் goal இதெல்லாவற்றையும் விடப் பெரிய ஏதோ ஒன்று.எப்படிப் பட்ட வாழ்வு வாழ்பவரும் கடைசியில் அடைய வேண்டிய -- விரும்புகிற இலக்கு ஒன்றுள்ளது.அதற்கு நம்மைத் தயார்ப் படுத்துவதாக நாம் புரியும் மற்ற செயல்கள் இருக்கலாமே அன்றி காலம் வெட்டியில் கழிந்து விடக் கூடாது.இது எனக்கு நானே எழுதிக் கொள்ளும் கடிதம் போலத்தான்.Sustained interest ஒரு விஷயத்தில் வைத்துக் கொள்வது எத்துணை சாத்தியம் .?எழுதுவது கூட அப்படித்தான் என்று உணர்கிறேன்.வைரமுத்து மாதிரி,வாலி மாதிரி நினைத்தால் எழுத முடியும் வரம் வாங்கி வருபவர்களுக்கு தினம் சொல்ல ஏதோ செய்தி உள்ளது.ஆனால் சாமானியர்களுக்கு?எழுத வேண்டும் என duty மாதிரி செய்தால் ஒன்றும் எழுத வராது.மேலும் தான் என்ற எண்ணத்தை அவ்வளவு சுலபமாகக் கடக்க முடிவதில்லை. முயற்சிப்பதாய் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.எனக்கு நானே எழுதிக் கொள்வதாய் சொன்னாலும் யாரேனும் படித்துக் கருத்து சொன்னால் சந்தோஷமாகத்தானே இருக்கிறது?யார் படிக்கப் போகிறார்கள் அப்படியே படித்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற நினைப்பு கொஞ்சம் என்னை நிதானப் படுத்தி விட்டது எனலாம்.(படித்து விட்டு என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு சிலர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)

வெளியிலே தெரியும் பெரிதாகப் பேசப்படும் வெற்றிகள் தவிர நம்மை நாமே வெற்றி கொள்ளும் செயல் ஒன்றுண்டு.Aurobindo Mother says" Controlling a desire gives more satisfaction than satisfying it". மேலே குறிப்பிட்டது போல் self love உணவு,உடைகள் மீது உள்ள பற்று ,எல்லாமே மனதின் மூலையில் உள்ள desires தான்.நேற்று வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன்,இப்போதிருப்பதை விடவும் கொஞ்சம் consciousness அதிகம் பெற்று  அடுத்த படிக்கு செல்ல விரும்புவோரின் அடிப்படை தகுதி என்று எதைக் குறிப்பிடலாம்?எனக்குத் தோன்றியது எதற்கும் மனச் சோர்வடையாததொரு நிலை. இது கஷ்டம் போல் தோன்றினாலும் ப்ரயத்தனத்தால் அடையக் கூடியதுதான்.ஆனால் என் தம்பி சொன்ன பதில்தான் சரி போல் தோன்றியது.Avoiding unnecessary communication என்றான்.வார்த்தைகள் குறைய உடல் மொழி நிதானமாகிறது.அது மனத்தையும் கண்டிப்பாய் அமைதியாக்குகிறது.இதெல்லாம் நடந்தால் மனச் சோர்வு தானே மறைகிறது,எனவே நீ சொன்னது நாலாவது step என்றான்.எல்லா வழி communication க்கும் இது பொருந்தும்.மின்னஞ்சல்,குறும் செய்திகள்,வாட்சப் ,முகநூல் எல்லாம்தான்.இந்த வாரம் Hindu Open Page ல் வாட்சப் பற்றி ஒருsenior citizen எழுதியதைப் படிக்கச் சொல்லி நண்பர் கூறினார்.அவ்வளவு எதார்த்தமாக இருந்தது அந்த எழுத்து.ஒரு நாளில் நூற்றுக் கணக்கான ,அதிகம் அறிமுகமற்ற மனிதர்களுக்குக் கூட ஏதேதோ செய்திகள் வாட்சப்பில் அனுப்பிக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் கடிக்காத குறையாய்ப் பேசுகிறோம்.

வாழ்வின் முதல் 10 வருடங்கள் அறியாக் குழந்தைப் பருவத்திலும் அதிக நாள் வாழ்ந்தால் கடைசி காலங்கள் நினைவுகள் மங்கியும் செலவாகிறது.எண்பதுகளில் உள்ள என் பெற்றோருடன் 6 நாள்கள் இருந்து வந்தேன்.I must say it is a spiritual experience.தான் வைத்ததே சட்டம் என்றிருந்த என் அப்பா" நான் இப்போ என்ன செய்ய?குளிக்கவா சாப்பிடவா" என்று கேட்பதும் நடை பழகும் குழந்தையின் தடுமாற்றத்துடன் என் அம்மா நடப்பதும் பார்த்து மனத்தின் ஓசைகள் அடங்கி விட்டதாய் உணர்கிறேன்.நேற்று சந்தித்து வந்த -கீழே விழுந்து முகமெல்லாம் அடி பட்டுக் கொண்டிருந்த ,நண்பரொருவரின் அப்பா.எப்படி வயதானால் ஒவ்வொன்றாய் கழன்று போகிறது?ஆனால் இதையெல்லாம் பார்ப்பது வாழ்க்கையை அணுகும் முறையைக் கற்பிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்..There is nothing to get depressed.நேபாளில்,சுனாமி தாக்கிய போது -புஜ் பூகம்பத்தின் போதெல்லாம் எத்தனை மரணங்கள்?அது போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிலும் சிக்காமல்,வறுமை போன்ற கொடுமைகள் இல்லாது நம் பெற்றோர் 80 வயதைக் கடந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி.

A mental preparation is needed to face the evening years of life.அது இல்லாது போனால் நமக்கும் கஷ்டம்.நம்மைக் கவனித்துக் கொள்வோருக்கும் கஷ்டம்.வாழ்க்கை எல்லாவற்றையும் balance செய்யத் தெரிந்தவர்களுக்கே .ஒவ்வொரு நிகழ்வையும் உணர்வு பூர்வமாக மட்டும் இல்லாது தள்ளி வைத்துப் பார்ப்பவர்களுக்கே.நாம் active ஆக இருக்க வேண்டிய காலத்தை எல்லாம் கவலைகளில் மூழ்கடித்து விட்டால் வயது முதிர்ந்த பின் வரக் கூடியதல்ல மன அமைதியும் மன முதிர்ச்சியும்.அதைத்தான் பாரதியார் நின்னைச் சரணடைந்தேன் பாடலில் சொல்கிறார்.நாம் கவலைப் படும் பல விஷயங்கள் நடக்காது போகலாம்.நடந்தே தீரும் என்ற விஷயங்கள் நேரும் வரை கவலைகளை ஒதுக்கி வைக்கலாம்.மேயின் முதல் எழுத்தே கடைசியும் ஆகிப் போனது.பேசுவோம்...

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects

புதன், 13 மே, 2015

எது வெற்றி?

நம் நாட்டில் மருத்துவ வசதிகள் பெருகியதால்,வாழும்  சராசரி வயது உயர்ந்துள்ளது.முக்கியமாக சென்னையில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் உலகத்தரம்  வாய்ந்தவை.ஆனால் சராசரியாய் வாழும் வயதை மட்டும் உயர்த்தி என்ன பலன்? முதியவர்கள் எந்த அளவு கவனித்துக் கொள்ளப் படுகிறார்கள் ,கவனித்துக் கொள்ளா விட்டால் கூடத் தேவலை. துரத்தப் படாமல்  அலட்சியப் படுத்தப் படாமல் இருக்கிறார்களா என்பதே நம் முன் உள்ள கேள்வி.நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்த்தால்தான் தெரியும்.ஒரு நோயைக் குணமாக்குவது மருந்தும் மருத்துவரும் மட்டும் இல்லை.அன்பு ; நெருங்கியவர் காட்டும் அக்கறை;

இப்போது கல்யாணத்திற்கு இருக்கும் பெண்கள் பையனின் பெற்றோர் பற்றி என்ன கேட்கிறார்களாம் தெரியுமா? Are they in the hall or on the wall (உங்களுக்குச் சட்டெனப் புரிகிறதோ,  எனக்கு முதலில் புரியவே இல்லை) உன் பெற்றோர் உயிருடன் உள்ளார்களா அல்லது படமாய் சுவற்றில் தொங்குகிறார்களா என்று அர்த்தமாம்.அதிர்ச்சியாக இல்லை? நாத்தனார்கள் பற்றிக் கேட்க ,ராகு கேது உண்டா என்று கேட்கிறார்களாம்.இவர்களுக்குத் தாமும் இன்னொரு பெண்ணுக்கு ராகு கேதுதானே நம் பெற்றோரை பற்றியும் நமக்கு வரப் போகும் அண்ணி இதெல்லாம் கேட்கக் கூடும் என்று தோன்றாதா? இதெல்லாவற்றிற்கும் எது காரணம்?தன்  பற்று.சுயநலம்.இந்தப் பெண்களெல்லாம் அம்மாவானால் என்ன மாதிரியான தலைமுறை உருவாகும்?

பலரால் பலமுறை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப் பட்ட செய்திதான்.விசாலமாக மனதை ஆக்கிக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.ஒரு குழந்தை கலாசாரப்படி வளரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே அனுசரித்துப் போகும் குணம் இல்லை.பெற்றோர் தூபம் போட்டு விடக் கூடாது  ராணி மாதிரி பெண்ணை வளர்த்தோம். அவளை அனுசரித்துப் போற மாதிரி பையன் வேணும் ,குடும்பம் வேணும் என்று எப்போது பார்த்தாலும் ஒரு பக்கமாகவே பேசாமல்,என் பெண் எல்லாரிடமும் அன்பாக அனுசரணையாக இருப்பாள் என்று முதலில் சொல்லி மாப்பிள்ளை தேடுவோர் எத்தனை பேர்?

முதியோர் இல்லங்கள் பெருகியதற்குக் காரணங்கள் பல.இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்கள்,வெளிநாடுகளுக்கு தொழில் காரணமாய் இடம் பெயர வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்ரசாதமே.கொடுக்கும் பணத்திற்குத் தக்கவாறு சேவைகள் அளிக்கப் பல  இடங்கள் உண்டு.ஆமாம்,தலைமாட்டில் டங் என்று காபி கோப்பையை வைத்துவிட்டு இந்தக் கிழத்திற்கு காபி கூடக் கையில் கொடுக்க வேண்டி உள்ளது என முணுமுணு த்துக்கொண்டே முதியவர்கள் மனதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வலிக்க வைப்பதற்கு பதில் அவர்கள் நிம்மதியாக ஓரிடத்தில் இருக்க விட்டுவிடலாம்.ஆனால் அந்த முடிவு பெரியவர்களுடையதாய் இருக்கலாமே தவிர மகனுடையதாய் இருந்து விடக் கூடாது.

பெரியவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க முடியும், கோவிலுக்குச் செல்ல முடியும்,ஆனால் தன் சாப்பாட்டைக் கூடப் போய் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று மருமகளை ஒரு வேலையாள் போல நடத்தினால் தவறுதான்.மேலும் உள்ளார்ந்த அன்புடன் நடந்து கொண்டால் அது செயல்பாடுகளில் கண்டிப்பாய் தெரியும்.முடிந்த சிறிய உதவிகள் செய்யலாம்.பணமும்  பிரிவினைகளுக்கு ஒரு காரணம்.நாங்கள் போன பிற்பாடு எல்லாம் மகன்தானே எடுத்துக்கொள்ளப் போகிறான் என்று முதியவர்கள் பேசுகிறார்கள்.அது மிகத் தவறான வாதம்.இருக்கும் போது அன்பை வெளிப் படுத்துவது போல் சிறுசிறு அன்பளிப்புகள் கொடுக்கலாம்.அதுவும் மகன் செலவுகளை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்து பெற்றோர் பணம் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது கசப்புகளையே வளர்க்கும்.


ஒரே பிள்ளையானால் சரி.ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவர்கள் தன் குழந்தைகளுக்குள்ளேயே காட்டும் வித்தியாசமும் பிரிவுகளுக்குக் காரணம்.பெற்றோருக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்.அதிகம் சம்பாதிக்கும் பையன்,  தன்  கருத்து தப்போ சரியோ அடித்துப் பேசத்தெரிந்த பையன்,  உள்ளே என்ன நினைத்தாலும் வெளியே பார்க்கும் போது குரலில் தேன் கலந்து அம்மா அப்பா என்று உருகும் பையன் ஆகியோரிடம்  அதிக நெருக்கம் காட்டி உண்மையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளாத பெற்றோரும் எல்லாரிடம் இருந்தும் விலகிப் போகிறார்கள்.மேலே குறிப்பிட்ட பிள்ளைகள் காரியவாதிகள்.அவர்கள் வாங்கிக் கொள்ள மட்டுமே செய்வார்கள்.செய்யும் அப்பாவிப் பிள்ளைகள் மனத்தையோ புண்படுத்தி விடுகிறார்கள். அதனால் யாரிடமும் ஒட்டுதல் இருப்பதில்லை.சாப்பாடு பற்றிய குறைகளும் உறவுகளைக் காயப் படுத்தும்.பல வருஷம் வேண்டியது சாப்பிட்டாயிற்று.அதற்காக ஒத்துக் கொள்ளாத பதார்த்தங்களைக் கூட வாயை மூடிக் கொண்டு விழுங்கச் சொல்லவில்லை.நம்மால் செய்ய முடியாத போது நமக்காக ஒருவர் செய்து தருவதை குறை சொல்லாது சாப்பிடலாம்.

 நிஜமான வயதிற்கேற்றவாறு நடந்து கொள்வது , பெரியவர்கள் வீட்டின் தூண்கள் போல,அவர்களால் நமக்கு உதவியே தவிர உபத்திரவம் அல்ல என்று இளைஞர்களுக்கு உணர்த்தலாம்.எதுவும் உறுதியாய்க் கூறவே முடியவில்லை. யார் சார்பாகவும் பேச முடியவில்லை.எல்லா வயதினரிலும் பக்குவப் பட்ட,படாத மனிதர்கள் உண்டு.சின்ன வயது முதலே வீட்டுப் பெரியவர்களிடம் நன்றாக நடந்து கொள்ளக் குழந்தைகளை பழக்குவது அவர்களை ஒரு நல்ல மனிதனாக்கும்.மாறாக பாட்டியையும் தாத்தாவையும் வெளியே தள்ளிய அம்மா அப்பாவைப் பார்த்து வளரும் மகன் தன் பெற்றோருக்கும் அதையே தருவான்.என் பெற்றோர் செய்யாததையா நான் செய்கிறேன் என்று தோன்றும்.பெண்கள் அம்மாவை பார்த்தே பாடம் கற்கிறார்கள்.தாயைப் போல் பிள்ளை.மாமியார் மாமனாரை விரட்டும் பெண்கள் தவறானவர்களோ என்னவோ அவர்கள் அம்மாக்கள் வளர்ப்பு தப்புதான்.எதற்கெடுத்தாலும் வாதம் புரிந்து எல்லோரையும் வெற்றி கொண்டதாய் நினைப்பவர்கள் வாழ்வில் தோற்று விடுகிறோம்.விட்டுக் கொடுத்து தினப்படி வாழ்வில் தோற்றுக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுகிறோம்.எது சரி?எது நல்லது?

ரஞ்ஜனி த்யாகு 

பின் குறிப்பு ; இந்த post எப்போதோ எழுதியது.நிறைய repetitions இருக்கும்.மே மாதம் இன்னும் எழுத ஆரம்பிக்காததால் இதை publish பண்ணினேன்.

MOTHER PROTECTS 

Appeared in June 2015 Manjula Ramesh's snegidhi







சனி, 25 ஏப்ரல், 2015

திருமணங்கள்-இரண்டாம் பாகம்

திருமணங்கள் பற்றிய என் கருத்துகளுக்கு சில மறுப்புகளும் சில ஒட்டிய கருத்துகளும் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளன.ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல வேண்டிய பதில் நீளமாய் உள்ளதால் இந்த இரண்டாம் பாகம் எழுதுகிறேன்.இதை உங்களுக்கு நான் அனுப்பும் பிரத்யேகக் கடிதமாய் கருதும் படி வேண்டுகிறேன்.என் கருத்துக்கு தீவிர மறுப்புத் தெரிவித்தவர்களுக்கு மனதில் இருந்து நன்றி.அது என்னை இன்னும் சிந்திக்கத் தூண்டுகிறது.

திருமணம் என்ற புனிதமான பந்தத்திற்கு நான் எதிரியல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்,please .ஆணுக்கும் பெண்ணுக்கும் நெறிப் படுத்தப் பட்ட ஒரு உறவை ஏற்படுத்தும் Marriage என்ற Institution ஐ கேலி பேச அந்த blog எழுதப் படவில்லை.ஸ்ருஷ்ட்டிக்காக கடவுளால் ஏற்படுத்தப் பட்ட ஒரு பந்தம் திருமணம்.அதற்கு எதிராகப் பேச அல்ப மானுடர்கள் நாம் யார்?நான் கூற வந்தது யாதெனில் திருமணத்தில் விருப்பம் இல்லாது இருப்பவர்களை விட்டு விடுங்கள்.விநோதமாக நோக்கும் அளவு அது ஒன்றும் கொலைக் குற்றம் அல்ல என்பதுதான்.ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டு திருமணத்தால் எந்த சுகமும் அடைய மாட்டோம் என்று நினைப்பவர்களை,திருமணம் பண்ணிக் கொண்டால் இரு தலைக் கொள்ளி எறும்பு போல் கஷ்டப் படுவோம் என்று ஊகித்து பயப் படுபவர்களை எல்லாம் வற்புறுத்தி" உன் பாட்டி உன் கல்யாணத்தைப் பார்த்துட்டுத்தான் போகணும்னு சொல்றா" என்றெல்லாம் blackmail பண்ணி திருமண பந்தத்தில் ஈடுபடுத்த அவசியம் இல்லை அல்லவா?அவ்வாறு pressure கொடுக்கப் பட்டு நடந்த சில திருமணங்கள் தோல்வி அடைந்ததைப் பார்த்து வருத்தம் அடைந்தே எழுதினேன்.ஆசையாக திருமணம் புரிய விரும்புபவர்கள் பண்ணிக் கொள்ளட்டும்.இணையும் இருவரில் ஒருவர் எண்ணங்கள் வேறு மாதிரியாய் இருந்தால் அவருடைய துணை வாழ்நாள் முழுதும் அன்றோ கஷ்டப் பட வேண்டி இருக்கும்?

அடுத்து செலவுகள் பற்றிய கருத்துக்கள்.செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.செலவு செய்யச் செய்ய பணம் சேரும்.பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதில்தான் கருத்து சொல்லி உள்ளேன்.ஆடம்பரத்துக்கு நான் எதிரிதான்.கல்யாணத்தில் முக்கியமான வைதிகச் சடங்குகளுக்கு செலவழிக்க மூக்கால் அழும் பலர் beautician க்கு ஆயிரங்களில் கொடுப்பது சரி என நீங்கள் நினைத்தால் ஆமாம்போடநான் தயாரில்லை.மைலாப்பூர் கபாலி கோவில் வாசலில் உட்கார்ந்து இருக்கும் ஏழை வைதிகர்களைப் பார்த்திருக்கிறீர்களா?அவர்களுக்கு சில ஆயிரம் அதிகமாகக்  கொடுத்தால் அவர்கள் கொள்ளைக் காரர்கள் என்பது போல் comment அடிக்கிறோம்.இதுவே கல்யாணமான அடுத்த வருடமே குண்டாகும் பெண்கள் தூக்கிப் பரணில் போடப் போகும் டிசைனர் பிளவுசுக்கு மறு பேச்சின்றி 4000 ரூபாய் கொடுக்கிறோம்.ஏதாவது பேசினால் டெய்லர் நேரத்துக்குத் தர மாட்டார் என்று பயம்.அப்படித்தானே?எனக்கு இதில் உடன்பாடு  இல்லை.

அடுத்து சாப்பாடு.கல்யாண சாப்பாடு போடுபவர்கள் எல்லாம் அன்னதானப் ப்ரபுவும் இல்லை.சாப்பிடுபவர்கள் ஒரு நல்ல சாப்பாட்டைக் கூடக் காணாது பஞ்சத்தில் அடிபட்டவர்களும் இல்லை.சாப்பிட உயிர் வாழ்கிறோமா இல்லை உயிர் வாழச் சாப்பிடுகிறோமா?உணவே மருந்து என்கிறார்கள்.பணம் படைத்த பாதிப் பேர்களுக்கு நினைத்தபடி சாப்பிட முடியாது ஆயிரம் health problems .மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் உண்மையா இல்லையா?இரண்டு நாளில் நாம் எட்டு வேளை சாப்பிடுவது மணப் பெண்ணின் அப்பா பர்ஸுக்கு நல்லதோ இல்லையோ சாப்பிடும் நம் வயிற்றுக்கு நல்லதில்லையே?இது common sense தானே?பாதிப் பெரியவர்களும் குழந்தைகளும் பல திருமணங்களுக்குப் பின் வயிற்று உபாதைகளுக்கு ஆளாவதைப் பார்க்கிறேன்.இருப்பவர்கள் செலவழித்தால் என்ன என்று என்னை சாடி இருக்கிறீர்கள்.இருப்பவர்கள் ஏன் இல்லாதவர்களுக்கு செலவு பண்ணக் கூடாது?எத்தனை பேர் திருமணத்தன்று ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ ஒரு முதியோர் இல்லத்திற்கோ ஒரு நாள் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்கிறோம்?அந்த இல்லங்களில் உள்ள முதியோர் திருமணத்திற்கு அழுது கொண்டே மொய் எழுத வரும் பலரை விட உங்கள் குழந்தைகளை இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்த்துவார்கள்.

Vegetable carving என்று ஒன்று இப்போதெல்லாம் வரவேற்பில் வைக்கிறார்கள்.அதன் தேவை என்ன என்று யாராவது சொல்லுங்களேன்?மலர்ச் செண்டு கொடுப்பது வெறும் ஸ்டைல் இல்லை என்று யாராவது சொல்லுங்கள்.யாரும் கேட்காது அவமதிக்கப் படும் கச்சேரிக் கலைஞர்களுக்கு கொடுக்கப் படும் பணம் அவசியமா சொல்லுங்களேன் .அர்த்தமற்ற காதைக் கிழிக்கும் சினிமாப் பாட்டு நிகழ்ச்சி எதற்காக?"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்லே ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிகிடலாமா" என்ற பெரும் தத்துவப் பாடல் முழங்க வேண்டிய இடம்தான் நீங்கள் எல்லாம் புனிதமாக மதிக்கும் கல்யாணம் நடந்த மேடையா சொல்லுங்களேன்.அதற்காக ஒரு கம்பெனியின் எம் டி வீட்டுத் திருமணமும் ப்யூன் வீட்டுத் திருமணமும் ஒரே மாதிரி நடக்குமா என்பீர்கள்.நடக்காது.நடக்கணும் என்று சொல்லவில்லை.ஆனால் எல்லோரும் மனித இனம்.சிவப்பு ரத்தமே உடம்பில் ஓடுகிறது எனும் போது சில விஷயங்கள் பொது அல்லவா?வரவுக்கு ஏற்றாற் போல் செலவழியுங்கள்.ஆனால் பெண்ணின் அப்பா எம் டி ஆனாலும் ப்யூன் ஆனாலும் மாப்பிள்ளைகளின் அப்பாக்கள் செலவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.Interestingly all the responses I got were from parents who don t have daughters .எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா?இதை எழுதின காக்கைக்குத் தெரியும்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

திருமணங்கள்

சற்றுமுன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பினோம்.இப்போதெல்லாம் திருமணங்கள் சென்று வருவது பெரிய excitement ஐ ஏற்படுத்துவதில்லை.இப்போதெல்லாம் என்பது சரியா என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.சிறு வயது முதலே திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மேலேழுந்தவாரியாய் உண்டாகும் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவிர வேறு மாதிரியான ஒரு உணர்ச்சியே மனதில் மேலோங்கி இருந்து வந்ததாய் உணர்கிறேன்.(சந்தோஷம் என்று குறிப்பிடுவது கூட மாமா சித்திகள் எல்லோரையும் சேர்த்து ஓரிடத்தில் பார்க்கலாம் என்பது மட்டுமே.வேறு எதுவும் இல்லை.) இந்த write up தெளிவற்று இருப்பதாய் நீங்கள் நினைக்கவும் கூடும். மனம் நினைப்பதை உண்மையாய் எழுதினால்தான் தெளிவு பிறக்கும்.ஆனால் உண்மையை சற்று refined ஆகத்தானே வெளியிட முடிகிறது?அந்த முயற்சியில் தெளிவு காணாமல் போய்  விடுகிறது.

திருமணங்களில் பிடிக்காதவற்றைப் பட்டியலிடுகிறேன்.முதலில் ஆடம்பரம்.அதனால் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்படும் செலவு.ஆடம்பரமாய் திருமணம் நடத்த என்ன அவசியம்?உலக வழக்கம் என்பது வெட்டிப் பேச்சு.எளிமையான திருமணங்கள் நடத்த ஏன் தயக்கம்?பிறருக்கு தங்கள் பண பலத்தைக் காண்பிக்கவா குழந்தைகள் கல்யாணத்தை நடத்துகிறோம்?கல்யாணத்திற்கு ஒரு பெண் ஒரு பையன் பெற்றோர்கள்தானே முக்கியம்?சரி ஊருடன் கூடி வாழணும் என்று தத்துவம் பேசுவார்கள்.ஊரை கூப்பிடுங்கள்.But எத்தனை வேளை சாப்பாடு போடுவீர்கள்?
உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் கழிவாய் வெளியேறப் போகும் விஷயத்திற்கு எத்தனை லக்ஷங்கள் செலவழிப்பீர்கள்?அடுத்து புடவை நகை.இந்தக் கால ஜீன்ஸ் யுவதிகள் முகூர்த்த நேரம் மட்டும் கட்டி பின் தொடவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் 25000த்திற்கு முகூர்த்தப் புடவை வாங்க வேண்டும்?மாப்பிளை வீட்டு pressure என்பது கதை.அப்படி ஒரு புகுந்த வீடு தேவையா நம் பெண்ணுக்கு என்று ஏன் யோசிப்பதில்லை யாரும்?

இப்படிப் பேசினால் பெண்ணை நாமே வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தோன்றும்.அதிலும் எதுவும் தப்பில்லை.கல்யாணம் நடத்துவதும் பண்ணிக் கொள்வதும் மட்டும்தான் சாதனையா என்ன?கிருஹஸ்தாச்ரமம் சந்யாசாச்ரமம் என்று இரண்டுதான் உண்டு.சந்யாசியும் ஆகாமல் கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் இருப்பது மாபாதகம் என்று பேசுவதும் ஏனோ தெரியவில்லை.சின்ன வயதிலேயே உனக்கு இதெல்லாம் தோன்றி விட்டதா என்று கேட்கிறீர்களானால் இல்லை.அது வேறு கதை.பெண்ணை  மட்டும் திருமணம் ஏன்  பெற்றோரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பது என் சிறிய வயது மனதில் இருந்து கொண்டே வருத்திய கேள்வி.இந்த எண்ணம் தோன்றவும் ஒரு குறிப்பிட்ட வயது ஆனது.At least பெண்தான் இடம் பெயர வேண்டும் என்ற உலக வழக்கம் தெரிந்த பின்தானே எண்ணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? திருமணத்தின் நிறைவில் ஒரு குடும்பம் குதூகலித்துக் கொண்டு [கண்ணில் இட்ட மை கரைய அழுது கொண்டு, கலக்கத்துடன் நேற்று வரை யார் எனவே தெரியாத ஒருவன் பின்னால் வரும்] பெண்ணை கடத்துவது போல் கூட்டிச் செல்ல அத்தனை சுமைகளையும் ஏற்றுத் திருமணத்தை நடத்தி முடித்த பெண்ணின் பெற்றோர் பெண் அங்கே போய் எப்படி நடத்தப் படுவாளோ என்ற கலக்கத்துடன் வழி அனுப்பும் காட்சிகள் I have hated .

இவை எல்லாம் சேர்ந்து ஒரு mixed emotions தான் இன்று வரை திருமணங்கள் சென்று வந்தால் எனக்கு ஏற்படுகிறது.பட்டுப் புடவைகளும், பகட்டும், சினிமாப் பாடல்களின் உரத்த சப்தமும், வீணாகும் உணவும் ,அனாவசியமாய் மலர்ச்செண்டுகள் பெருமைக்காக அளிக்கப் பட்டுத் தூக்கி எறியப் படுவதும் ,நூற்றுக் கணக்கில் க்ளிக் செய்யப் படும் புகைப்படங்களும், மற்ற நாள்களில் ஏன் என்று கூடக் கேட்காத உறவுகள் சும்மாவேனும் அந்த இரண்டு நாட்கள் மட்டும்  கட்டித் தழுவிக் கொள்வதும் மொத்தத்தில் உண்மையை விட நடிப்பே ப்ரதானமாக நடத்தப் படும் திருமணங்கள் வியப்பையும் சலிப்பையுமே உண்டாக்குகின்றன.இப்போது பையனின் பெற்றோர்கள்தான் பயப்படுவதாய் சொல்கிறார்கள்.பெண்கள் பையனின் பெற்றோர் பற்றிக் கேட்க,They are in the hall or on the wall எனக் கேட்கிறார்களாம்.உண்மையாய் இருக்கலாம்.ஆனால் நான் கேள்விப் பட்ட வரையில்  திருமணங்களில் பையன் வீட்டார் வைத்ததுதான் சட்டம்  என்பது போல்தான் உள்ளது..செலவுகளைக் குறைத்து,பகிர்ந்து கொண்டு  நடத்தினால்தான் பெண் தருவோம் என ஒருவராவது   சொல்ல மாட்டார்களா? இல்லை அவர்களே விரும்பித்தான் இந்த ஆடம்பரங்களுக்கு உடன்படுகிறார்களா?தூக்கம் கண்களைத் தழுவுகிறது.இன்று சென்று வந்த கல்யாணத்தால் இணையும் இருவரும் நன்றாக இருக்கட்டும் என்ற ப்ரார்த்தனையுடன் Good Night சொல்லிக் கொள்கிறேன்.எப்படியோ ரெண்டு பேரையும் மாட்டி விட்டாயிற்று.அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தால் மகிழ்ச்சி.மற்ற என் புலம்பல்கள் அவர்களுக்குத் தேவையற்றதே.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

On the nature of success

There have been numerous attempts to define success. This is what Wikipedia, arguably the largest online encyclopedia, has to say about success (1) - attainment of higher social status, achievement of a goal, the opposite of failure (in this particular order). The last of the three definitions seemed to be a rather queer way of defining success. This probably mirrors the popular perception that success is the  absence of failure. It is commonly acknowledged that success means different things to different people, though a good section of the Indian populace have pathetically narrow conceptions of success and betray an unwillingness and rigidity to expand their worldviews. The quintessential Indian parent has an unshakable faith in the infallibility of the IIT-MS_in_US and the IIT-IIM combinations in churning out "successful" individuals and it would be downright sacrilegious to suggest even the slightest deviation from this divine path. The rest of the post sketches my Utopian dream of an ideal perception of success.

J.K Rowling, the famous author and mother of the fictional boy wizard Harry Potter, expressed in one beautiful sentence the role of failure in life -  
"It is impossible to live without failing at something, unless you live so cautiously that you might as well not have lived at all – in which case, you fail by default."  (2)
A rigid dichotomy between success and failure governs societal perceptions. The human mind struggles to see success and failure in the same spirit. As Sri Aurabindo holds, reason divides and separates (3). In the womb of every failure is hidden the potentiality of a success, and behind every success lurks a failure that spurs greater success. Lives of giants attest this selfsame fact and there is even a tinge of melancholic euphoria (a beautiful phrase that I came across recently) associated with such stories - what sacrifices and apparent failures lie behind that phenomenal success! If only we could remove the veil of superficiality that envelopes our perceptions, to what great heights might not our minds soar!

In the following discussion it would be expedient to rope in the idea of travel and compare it with the road to success. Success is like a souvenir that you collect as you travel. Remember that you do not travel to procure souvenirs, nor do you stop travelling having pocketed a particularly costly one. You continue to travel not because you wish to buy more, but to explore further. The joy is in discovery. At each new destination you collect a new souvenir. Though you fondly cuddle your souvenirs in silent retrospection, it is the experience and learning that preceded the purchase that you respect the most. Incontrovertibly travel is loads more fun than the souvenir. Each time you look at it, your heart will skip a beat and your mind will undoubtedly rejoice at the great experience. What a  wonderful trip! Never will it proclaim, looking at the souvenir – what a great purchase this was, so lovely and much costlier than what my neighbour managed.

To conclude the analogy, travel as much as you wish, pick up many a souvenir on your way but let that not be your goal, for travel will then become a burden. The world has not seen a traveller who has had this as his goal, the reason being that each one who has succeeded knows how invaluable the path that led him to success actually is. He who knows not this profound secret has not tasted success or is under a trance: the magnificence of the treacherous souvenir beguiled him so much that he has permitted it to entrust him into the hands of complacence. Entrenched in his inflated ego, he flounders in the dark. Let the Divine find this wretched being and deliver him from the curse that he has wrought upon himself.

PS : Needless to say, I am quite aware that I would in all probability be tagged a hypocrite in days to come, at which point even I may not be able to deny that allegation. This piece has been addressed to my ideal self and the general reader may completely deny my ramblings. We shall agree to disagree.

Let thy will be done

பின் குறிப்பு : இந்த Post என் son கார்த்திக் எழுதியது.இதைத் தமிழ்ப் படுத்தவே முதலில் எண்ணினேன்.ஆனால் எழுதுபவர்களின் spirit , translation ல் miss ஆகிவிடும் என்பதால் அப்படியே publish செய்யப் பட்டுள்ளது.




செவ்வாய், 14 ஏப்ரல், 2015

Power Distance Index

பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அதிகாரம் எனப் பொருள் கொள்ளலாம்.ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கினால் அதிகாரம் தலைவனிடம் (சில வீடுகளில் தலைவியிடம்)உள்ளது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர்.வங்கியில் மானேஜர் ,தொழிற்சாலைகளில் மானேஜிங் டைரக்டர் நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் அல்லது அதிபர் இப்படி பட்டியல் தொடரும்.இந்த எழுத்து அதிகார வர்கத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் கீழே உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அலசலே.எதுவும் எழுத்தில் வர ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டும்.எனக்கு அந்தத் தூண்டுதலாய்  அமைந்த நிகழ்வு என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் தனி மனித வழிபாடும் எளிய மக்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களை அணுக இயலாது தவிக்கும் தவிப்பும் நம் நாட்டில் புதிதல்ல.கொஞ்ச நேரம் உற்று கவனித்து உலகைப்  பார்த்தால் நாம் அனைவரும் எழுத்தாளர்கள்தான்.


POWER DISTANCE INDEX என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் படும் சொல் தொடரைத் தமிழ்ப் படுத்துவதை விட PDI என்று குறிப்பிட்டுக் கொள்வோம்.ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை ஒட்டி அந்த நாட்டின் PDI அதிகமாகவோ குறைவாகவோ உள்ளது.நம் இந்தியாவின் PDI மிக அதிகம்.
U S A ன் PDI மிகவும் குறைவு.இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை?அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் இருக்கும் இடைவெளி அதிகம் உள்ள நாடுகள் PDI அதிகமுள்ள நாடுகளாய்க் கருதப் படுகின்றன.விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ,அரசியல்வாதிகள் நம் நாட்டில் கொண்டாடப் படுவது போல் வேறெங்கு கொண்டாடப் படுகிறார்கள்?மத குருமார்களைக் கூட ஒரு லெவலுக்குப் பிறகு நம்மால் நெருங்க முடியாது.உண்மையைச் சொல்லப் போனால் நாம் எதேனும் குறிப்பிட்ட Spiritual Belief வைத்துக் கொண்டிருந்தால் அதை மனதுடன் வைத்து கொள்வதே மேல்.ஒரு cult ல் நம்பிக்கை வைத்து மடத்திற்கோ கோவிலுக்கோ செல்பவர்கள் தலைமைப் பீடத்தில் உள்ளவர்களை நெருங்கக் கூட இடையில் உள்ளவர்கள் விட மாட்டார்கள்.எல்லாவற்றையும் துறந்தவர்களே இப்படி என்றால் மற்றவர் பற்றிப் பேச என்ன உள்ளது?

சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற கொள்கை நமக்குக் கிடையாது.அதிகாரம் சமமாக இல்லை- இருக்க முடியாது- அது தேவையும் இல்லை என்பது நம் கலாச்சாரம்.கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றையும் Boss உத்தரவின் படி செய்தே நமக்குப் பழக்கம்.வேலை கொடுப்பவர்களுக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நமக்கு இயல்பாகிப் போன ஒன்றே.தனக்கு ஒரு படி மேலே உள்ளவர்களை வேண்டுமானால் guidance க்காக அணுக முடியும்.அதற்கும் மேலே உள்ளவர்களைப் பார்ப்பதும் அரிதே.Work Life ல் மானேஜ்மெண்ட்டுக்கு பணிவான பணியாளர்களே தேவை.பழைய காலத்தில் நல்ல செய்தி கொண்டு வரும் பணியாளுக்கு ராஜா முத்துமாலை பரிசளிப்பது போல loyal ஆக உள்ளவர்களுக்கு incentive வழங்கப் படும்.கட்டுப் படுத்தப் படுவதை நம்மில் பலர் ரசிக்கிறோமோ இல்லையோ ஆனால் வெறுப்பதில்லை.ஏணிப் படியின் மேலே உள்ளவர்களுக்கு,கீழே உள்ளவர்கள் எதையும் சொல்லிப் புரிய வைப்பது மிகக் கடினம்.நம்முடையது Male dominated society ம் கூட.வீடுகளில் பொதுவாய் சிதம்பர ராஜ்ஜியம்,திருமணங்களில் பிள்ளை வீட்டுக்காரர்களின் domination .இப்போது எல்லாம் மாறிவருகிறது என்று சொல்கிறோம்.ஆனால் பெண்ணுடைய பெற்றோர்தானே வாழ்நாள் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவழித்துத் திருமணம் நடத்துகிறார்கள்?வீட்டில் இருந்து நாடு வரை அதிகாரம் செய்பவர்கள்,அதைக் கேட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.மாற்றம் வருமா தெரியாது.

நம்மை விடவும் PDI அதிகம் உள்ள நாடுகளும் உள்ளன.கொலம்பியா ஒரு உதாரணம்.பிரேசில் தென் கொரியா மெக்சிகோ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும்தான்.அமெரிக்காவிற்கு அடுத்தபடி அயர்லாந்த் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் PDI குறைவான நாடுகள்.இன்று ஒரு நண்பருடன் இது பற்றிப் பேச நேர்ந்தது.சமூகத்தின் மேல் நிலையில் அல்லது ஒரு குடும்பத்தின் தலைவனாய்  உள்ளவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களின் கருத்துக்களை முதலில் கேட்டறியும் வழக்கம் மஹாபாரத காலத்தில் இருந்தே இருந்து வருவதாய்க் கூறி ஒரு கதையும் கூறினார்.தர்மபுத்திரர் ஒரு முறை ஏதோ விஷயத்தில் கருத்து கூற வேண்டியிருந்த போது தம்பிகள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்பி முதலில் சஹாதேவனைக் கேட்டாராம்.ஏனென்றால் தான் ஏதாவது சொன்னால் அதை தம்பி தவறாயினும் மறுதலிக்க மாட்டான் ,அதனால் முதலில் அவன் சொல்வதைக் கேட்டறிவோம் என்ற எண்ணமாம்.என்னைப் பொறுத்த வரை High PDI உள்ள இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றிரண்டு தருமபுத்திரர்கள் இருந்தாலும் கீழே உள்ள சஹாதேவர்கள் அண்ணனுக்கு எது பிரியம் என்று ஊகித்து அறிந்து முடிந்தவரை அவனுக்குப் பிரியமானதையே தன் பதில் போல் கூறுவார்கள்.மன்னனுக்கு இடித்துரைத்த மந்திரிகள் இருந்திருக்கிறார்கள்.இப்போதும் கருத்துக்கள் கேட்கப் படுகின்றன.ஆனால் distinct ஆக அதிகார வர்க்கம் ஒன்றும் ஆமாம் போடும் வர்க்கம் ஒன்றும்தான் நான் கண்ட இந்தியாவில் உள்ளன.


எரிச்சல் உண்டாக்கும் அளவுக்கு PDI அதிகமே,நம் நாட்டில்.HERO WORSHIP ஹீரோக்களைத்தானே பண்ண வேண்டும்? அதற்குத் தகுதியானவர்களை மட்டுமா கொண்டாடுகிறோம்? மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம்?நெருங்கவே முடியாத அளவு நம்மை விட இன்னொரு ஜீவன் ஏன் உசத்தி? PDI குறைவான நாடுகள் என்ன கெட்டுப் போயிற்று? உண்மையில் நாம் மிக மதிக்கும் ஒருவரை நெருங்கித் தொடர்பு கொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? நம் நாட்டில் அப்படியே உல்டா.நமக்கு மனதுக்கு நெருங்கிய ஒருவரை நடுவில் உள்ள பலரைத் தாண்டி ஒருக்கால் நெருங்கினாலும் அவருடைய உண்மை முகத்தின் தரிசனத்தைத் தாங்குவோமா தெரியாது.இந்த topic நீளமானது.We shall have another part .Please reserve comments till then .(இது தவறாமல் கருத்து சொல்லும் என் dear friends க்கு )


ரஞ்ஜனி த்யாகு



MOTHER PROTECTS 

வியாழன், 9 ஏப்ரல், 2015

மறைவுக்கு நாள் குறிக்கப் பட்டுவிட்ட மணி ஆர்டர்

மணிஆர்டர் சேவைகள் நிறுத்தப் பட நாள் குறித்தாயிற்று.அதை செய்திகளில் கேட்டு விட்டு என்னால் உங்களுடன் பேசாமல் இருக்க இயலுமா?தந்திச் சேவையும் இப்படி ஒரு நாள் திடீரென நின்று போனது.அஞ்சலகமே இல்லாது  போகுமா,தெரியவில்லை. ஆனால் இன்டர்நெட் சென்றடையாத குக்கிராமங்கள் இன்னும் உள்ளன.அவைகள் என்ன செய்யும் இதெல்லாம் எனக்கு விவரம் தெரியவில்லை.இது போன்றதொரு சேவையின் முடிவு,காணாமற் போன பல விஷயங்கள் மாதிரி மனதைத் தொடுவதால்  கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணுகிறேன்.மற்றபடி என்ன செய்வது?நம் பேரப் பிள்ளைகளிடம் எங்க காலத்தில் மணி ஆர்டர் என்று ஒன்று இருந்தது தெரியுமா என்று சில வருஷங்கள் கழித்துக் கதை பேச வேண்டியதுதான்.

சில செய்திகள் சேகரித்தேன்.130 வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்து வரும் சேவை.ஆனால் eM O ,i M O ஆகியவை உண்டாம். Electronic money order ,Instant money order.  உண்மையில் நம் வேலை இன்னும் எளிதாக்கப் பட்டுள்ளது.என்ன personal touch கொடுக்க நாலு வரி எழுதுவோமே அது முடியாது.standard message தான்.அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.கைபேசி இல்லாத மக்கள் ரொம்பக் குறைவான பேர்தான்.விஷயத்தைச் சொல்லி விட்டு பணத்தைeM O செய்ய வேண்டியதுதான்.இதுவும் அஞ்சலகம் சென்றுதான் செய்ய வேண்டும் ஆதலால் பொதுமக்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை.

மணி ஆர்டரைக் கொஞ்சம் மறந்து விட்டு மனிதர்களுக்கு வருவோம்.மணிஆர்டர் போல்தான் மனிதர்களான நமக்கும் ஒரு நாள் குறிக்கப் பட்டுள்ளது.மனிதன் குறித்த நாள் தெரிந்து விடுகிறது.இறைவன் குறித்த நாள் மறைபொருளாய் உள்ளது.முடிவு உண்டு என்று தெரிந்தும் தெரியாதது போல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதது போல் நடந்து கொள்கிறோம்.நான் எனக்கேதான் சொல்லிக் கொள்கிறேன்.அதை உங்களிடம் பகிர மட்டுமே செய்கிறேன்.செய்ய வேண்டியவை இன்னும் எவ்வளவோ உள்ளன..Miles to go before I sleep ன் தமிழாக்கம் மாதிரி தெரிந்தால் நான் என்ன செய்ய?Robert Frost  நினைத்தது போல நாமும் நினைக்கக் கூடாதா? ஒவ்வொரு வினாடியும் உபயோகமாய்ச் செலவழிக்க வேண்டியதே.திரும்பிப் பார்ப்பதற்குள் நாட்கள் கடந்து போய் விடும்.அனாவசியமாக யோசிக்க,விவாதிக்க நேரம் இல்லை.எந்த விஷயத்திற்கும் மனச் சோர்வடைவதும் தேவையற்றதே.Depression kills a person . ரோஜாச் செடியின் முள் போல எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை? நாத்திக வாதம் பேசுவோர் கூட மறுக்க இயலாத ஒன்று உண்டென்றால்,நமக்கு வாழ்க்கை அளித்துச் செல்லும் நல்ல,மற்ற எதற்கும் நாம் பொறுப்பில்லை.ஏதோ நமக்கப்பாற்பட்ட சக்தியால் நடத்தப் படுகிறோம்.அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது.இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது.அவன் தடுப்பதை வேறு யாரும் கொடுக்கவும் முடியாது. பின் எதற்கு சஞ்சலம்?

நமக்கு நடக்கும் நல்லதிற்கு நாமே காரணம் போல ரொம்பக் குதூகலிக்கவும் தேவையில்லை.அதிகப் படியான சந்தோஷம் வருத்தம் இரண்டும் வாழ்வின் சமநிலையை பாதிக்கவே செய்கின்றன.மண்ணாந்தை மாதிரி உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டாம்.ஆனால் உணர்சிகளே உருக் கொண்டது போலும் நடந்து கொள்ள வேண்டாம்.நாலணா காயினை, தந்தியை, இதோ ,மணி ஆர்டரை ,கடிதம் எழுதுவதை, பெண்கள் பாவாடை தாவணியை ,கல்லுரல், அம்மியை, விறகடுப்பை, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வருவதை இன்னும் எத்தனை எத்தனை விஷயங்களைச் சவுகரியமாய் மறந்தாயிற்று? ஏன் மறந்தோம்?இப்போ அது தேவை இல்லை.அதன் இடத்தை இட்டு நிறப்ப வேறொன்றுள்ளதால்.அதே போல தேவை இல்லாதவை வாழ்க்கையில் இருந்து தானே போய் தேவையானது எஞ்சி நிற்கிறது.ஒன்று  நமக்குத் தேவையா இல்லையா என்ற முடிவை இறைவன் நம்மிடம் விடுவதில்லை.அவனிடமே வைத்திருக்கிறான்.சில சமயங்களில் அது நம்மை வருத்துகிறதுதான்.நாம் ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே? நம்முடையது very very limited vision . கண்டிப்பாய் அவனது தீர்ப்புதான் நம்முடையதை விடச் சரியாக இருக்கும்.அதனால் நல்லது நடக்க வேண்டும் என்பதை விட,நடப்பதெல்லாம் நல்லதற்கே இருக்கட்டும் என்பதே சரியான பிரார்த்தனை.அணுகுமுறையும்.

இன்று இதை எழுத என்ன காரணம்?சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்.சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்.நேற்று நான் எஜமான் (எஜமானி?)ஸ்தானத்தில் இருந்து சற்றே இறங்கி என் பேச்சை எனக்கு எஜமானாக விட்டுவிட்டேன்.இப்படித்தான் பலநாள் கஷ்டப் பட்டு சேர்த்ததை (சேர்த்த நல்ல அனுபவங்கள்,composure ,I mean )  ஒருநாளில் ,சிலவேளை ஒரு நிமிடத்தில் இழந்து விடுகிறாற் போல் ஏதான நடந்து விடும். அதன் விளைவு மனச் சோர்வு.அதன் விளைவு எழுத்து. surf excel விளம்பரத்தில் கறை நல்லதுதான் என்பது போல் எழுத்து நல்லதுதானே?  அப்போ,எழுது முன் ஏற்பட்டு எழுதிய பின் மறைந்த மனச்சோர்வும் நல்லதுதான்.அதான் முன்னமே சொன்னேன் நடந்த எல்லாம் நன்றே.Bye Bye 

ரஞ்ஜனி த்யாகு 

Mother Protects